பங்காளிங்க..

Tuesday, May 31, 2011

உலகின் மிக ஏழைகள்

கட்சி தொடங்கிய பிறகோ அல்லது கட்சி வளர்ந்த பிறகோ தொடங்கிய தொலைக்காட்சி பல..


கலைஞர் குழுமம் - 4

கலைஞர் தொலைகாட்சி,
சித்திரம்
இசைஅருவி
செய்திகள்
ஜெயா குழுமம் - 4

ஜெயா 

ஜெயா பிளஸ்
ஜெயா மேக்ஸ்
ஜெயா மூவீஸ்

தமிழன்
விண்
ராஜ்

ஸ்டார் விஜய்

வசந்தம் - வசந்த குமார் 

மெகா  - தங்கபாலு னு பேசிக்கிறாங்க
கேப்டன் - கேப்டன் விஜயகாந்த்


குறள் - விஜய டி. ராசேந்தருன்னு சொல்லிக்கிறாங்க

 மக்கள்  - பாட்டாளி மக்கள் கட்சியா இருக்கலாமுன்னு கேள்விபட்டேன்...


எனக்கு தெரிஞ்சி இந்த வைகோ அண்ணாச்சி மட்டும்தான் இன்னமும் சேனலும் ஆரம்பிக்காம, கட்சியும் சரியா வளர்க்காம (பிழைக்க தெரியாத மனுசனா) "தேமே" னு இருக்காரு....   

சன் குழுமம்  - 20

சன் 
கே
சன் நியூஸ்
சன் மியுசிக்
சூரியா
ஜெமினி
சுட்டி
ஆதித்யா
சிண்டு
உதயா
உதயா நியூஸ்
ஜெமினி நியூஸ்
கிரண்
உதயா காமெடி
ஜெமினி காமெடி
 உதயா மியுசிக்
ஜெமினி மியுசிக்
குஷி
சூரியா நியூஸ்
சன் மூவீஸ்

இதுக்கு மேல கேபிள் டிவியிலே வர்ற காசெல்லாம் சுமங்கலி கேபிள் விசன் னு  ஒன்னு இருக்காம்ல, அதுக்கு போயிடுமாம்...
 
சாதாரணமா ஒரு டிவி வச்சுக்கிட்டு படம் போடுரவனுக்கே மாசம் 30000 கிடைக்குமாம், கேள்விபட்டிருக்கேன்...அதுல அவன் 5000 ரூபாய் வரி கட்டிடுவானாம்...
 
அப்படீன்னு இவங்களுக்கு ஒவ்வொரு டிவி யிலும் எம்புட்டு ரூவா வரும், எவ்வளவு வரி கட்டுறாங்க....

கலாநிதி மாறன் அண்ணாச்சிக்கு "ஸ்பைஸ் ஜெட்" னு வானத்துல ஓடுற வண்டி வேற இருக்காம்... அதை நேற்றுதான் நான் இணையதளத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டேன்...

இது தவிர என்னமோ 93.5 ஒரு ரேடியோ பெட்டி வேற இருக்குதாமே...

இது போதாதுன்னு தினகரன் பேப்பர் ஒன்னும், தமிழ் முரசு னு ஒரு பேப்பரும் வச்சிருக்காப்புல

 என்னமோ ஒன்னு குறையுதே? அஆங்.............வந்திடுச்சி...

"சன் பிக்சர்ஸ்" - மேலே சொன்னது எல்லாம் வருமானமே இல்லையாம், ரொம்ப கஷ்டபடுதாகலாம்,

அதுனால படம் எடுக்கலாமுன்னு முடிவு பண்ணி வேற வழியே இல்லாம இந்த முடிவிற்கு வந்திருக்காக.....
  
கலாநிதி மாறன் அண்ணாச்சி ஒரு பெரிய சாதனையாளர்தான் நான் ஒத்துக்கிறேன்...அதுக்காக எவனுமே வளர கூடாது, நான் மட்டும்தான் படம் எடுப்பேன்னு சொன்னா எப்படி,. உண்மையான பிசினஸ் மேன்னா போட்டியாளரை வளர விட்டு தானும் வளரணும்னு என் தாத்தா அடிக்கடி என் கனவுல வந்து சொல்வாரு....

போட்டிக்கு ஆளே இருக்க கூடாதுன்னு நினைச்சா எப்படி? இன்னிக்கு எத்தனயோ சூப்பரான கதையாசிரியர் எல்லாம் இருக்காக...அவுக கதை எப்படி இருக்குன்னு பார்க்கலாமுன்னா அதுக்கு வழியே இல்லை....

எப்படி தெரியும், டிவியிலே விளம்பரம் போட்டாத்தானே தெரியும், எங்கே பார்த்தாலும், சன் பிக்சர்ஸ் பெருமையோட வழங்குது, இல்லேனா கிளவுடு நைனு சந்தோசமா கொடுக்குதுனு  விளம்பரம் வருது...
(டிஸ்கி : எல்லாம் சுத்தமான தமிழ் பேருதான், சந்தேகம் இருந்தா ராமாயணத்துல தருமர் துரியோதனன் கிட்டே ரம்மி ஆடுறப்ப சொல்வாரு, பார்த்துகோங்க)
   
நம்ம மங்குனி அமைச்சரு, பனித்துளி சங்கரு, ஜாக்கி சேகரு, கவிதை வீதி சௌந்தரு அண்ணாச்சி எல்லோரும் சூப்பரா எழுதுராக, அவுகளை மாதிரி படைப்பாளியும் வெளியே வரணும் இல்லையா..

டிஸ்கி: ஐயோ, என்னை தவிர எல்லோருமே சூப்பராத்தான் எழுதுறீக, ஒரு உதாரணத்துக்கு தான் சொல்றேன், அதுக்கு உடனே மற்ற பிளாக்கர்கள் எல்லோரும் நமக்கு ஆப்பு வச்சிராதீக, பிறகு நான் உங்க பேரை சேர்க்கலைன்னு அண்ணா சமாதியிலே 3 மணி நேரம் உண்ணாவிரதம் உட்கார கூடாது...

Monday, May 30, 2011

பாட்டுல சூனியம்?

சங்கத்தமிழ் என்ற புத்தகத்தில் கருணாநிதியின் பாடல் வரிகள் -

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் யார் என்று யோசித்து பாருங்கள், ஒவ்வொரு வரியும் மிக சரியாகவே இருக்கின்றது. 

யாருக்கு சரியாக பொருந்தும், சரியான விடை கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க பரிசு கிடைக்கும்*....
 
* - சரியாக பதில் அனுப்பினால், உங்கள் பரிசு விரைவில் உங்கள் முகவரிக்கு வந்து சேரும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குலுக்கல் தேதி பிப்ரவரி 31 , 2012 .


சு.சாமியின் மனம் திறந்த பேட்டி

தேதி : - மே 30, 2011  
வணக்கம்,  
 
இது உங்கள் சு.சாமி, நான் பொதுவாய் வெளிப்படையாய் பேட்டிகள் கொடுப்பதில்லை, என்னை  மிகவும் வற்புறுத்தி கேட்பதால் என்   மனதில் தோன்றிய விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்...

இன்று இந்த கட்டுரையின் வாயிலாக உங்களை சந்தித்து பேசுவதில் எனக்கு பேரானந்தம்... நான் இப்போது சொல்ல போவதை நன்கு கவனியுங்கள்.....

நான் இதுவரை கண்டிராத ஒரு அதிசயம்....

இந்த மாளிகையை உருவாக்க என் தானயத் தலைவன் எத்தனை பாடு பட்டிருக்க வேண்டும்?...

இங்கே இருக்கும் ஒவ்வொரு அறையும் தனித்தனியே அமைந்திருந்தாலும் அது எத்தனை அழகாக உருவாக்கப்பட்டு உள்ளது தெரியுமா?.வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாளிகையை உருவாக்க எத்தனை ஊழியர்கள், எத்தனை நாட்கள் சிரத்தை எடுத்து இதனை செய்து முடித்திருப்பார்கள்...

அவர்கள் அனைவருக்கும் எனது கோடானு, கோடி நன்றியை அவர்களது பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன்....

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த மாளிகையை பார்க்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாளாவது தங்கி இருக்க வேண்டும்....  நான் அந்த மாளிகையில் இரண்டு முறை வெவ்வேறு அறைகளில் தங்கி இருக்கிறேன்.
 
அங்கே தங்குவதற்கு பணம் கிடையாது... ஏழைகளின் கோவில் அது என்றே சொல்லலாம், திருப்பதிக்கோ அல்லது தர்காவிற்கோ அல்லது வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதாக இருந்தால் கூட நீங்கள் சிறிது பணம் செலவழிக்க வேண்டும்...

இங்கே வருவதற்கு நீங்கள் சற்று உடல் உழைப்பை செலவழித்தாலே போதும், நீங்கள் இங்கே உடனடியாக வரலாம்....

இரவினில் இங்கே கிடைக்கும் ஒரு நிம்மதியான வாழ்க்கை, தூக்கம்,  அது எத்தனை கோடி கொடுத்தாலும் அங்கே உங்கள் வீடுகளில், சொகுசு பங்களாக்களில் இருக்காது....

மின்வெட்டு என்பது அறவே இல்லாத ஒரு வசந்த மாளிகை....கொள்ளையர்களின் அராஜகங்கள் அறவே கிடையாது....எல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் எங்களுக்கு குளுகுளுப்பாய் இருக்கும், எல்லோரையும் கடுமையாய் வாட்டும் குளிர் பனி, எங்களுக்கு தென்றலாய் சாமரம் வீசும்.

 தற்போது இங்கே மொத்தம் 530 அறைகள் இருக்கின்றது. இன்னமும் கட்டி கொண்டு பெரிதாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து அறைகளிலுமே மின்விசிறி, மற்றும் தொழைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றது. நீங்கள் ஆரம்பத்தில் ஒரு முக்கிய புள்ளியாகவோ, அல்லது ஒரு மகா பெரிய மேதையாகவோ இருந்திருந்தால் நீங்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்று உங்களுக்கு குளிர்சாதனப் பெட்டி கொண்ட அறையும் கொடுக்கின்றார்கள்...

ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியின் அடிப்படையில் அங்கே தங்கி கொள்ள அனுமதி உண்டு.

சைவம், அசைவம் என இரண்டுமே வழங்க படுகின்றது. ஐந்து நட்சத்திர விடுதியில் கிடைக்கும் தரத்தோடு உணவுகள் வழங்க படுகின்றது. முட்டை, சிக்கென், மட்டன் என்று வகை வகையாய் சமைத்து கொடுப்பார்கள்.

காரணம், ஒருவேளை நீங்கள் இடத்தை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் பல நேரத்தில் உங்களுக்கு சாப்பாடே கிடைக்காமல் போகும். அதற்காகவே உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகின்றது...

தயவு செய்து, வேலை இல்லாதோர், பெற்றவர்களை பிரிந்து தனியாக வாழ்பவர்கள், சாலையில் நடைபாதையில் படுத்து சிங்காரச் சென்னையை கெடுக்காமல், அழகாக இங்கே வந்து தங்கி கொள்ளலாம்.

அதற்கு நகரத்தில் ஆங்காங்கே இருக்கும் சிகப்பு கட்டிடத்தில் உங்களது பெயரையும், புகைப்படத்தையும் கொடுத்து பதிவு செய்தாலே போதுமானது.

ஒரு முறை இங்கே வந்து செல்பவர்களுக்கு திரும்ப திரும்ப வரத் தூண்டும்.

நான் இங்கே இரண்டு முறைதான் வந்திருக்கின்றேன், முதல் முறை வந்த போது  போதுமான வசதிகள் இல்லை. ஆனால் சமீபத்தில் நான் வந்த போது மிகவும் அற்புதமாய் இருந்தது, மனதிற்கு நிம்மதியாகவும் இருந்தது...

இங்கே இலவச தொழிற்கல்வி, சட்டக்கல்வி, சுயவேலை வாய்ப்பு திட்டம், கல்வித்திட்டம், என்று அனைத்து பிரிவுகளும் இருந்த இடத்திற்கே வந்து சொல்லி கொடுக்கின்றார்கள். நீங்கள் தொலைதூர கல்வி படிப்பதை காட்டிலும், இங்கே நீங்கள் 12.2 கிலோமீட்டர் தூரத்தில் அழகாக இருந்து படிக்கலாம்,. ஒரு பேனா வாங்க கூட நீங்கள் காசு செலவழிக்க வேண்டாம்...

நீங்கள் மற்ற இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு அரசாங்கம் அறிவிக்கும் இலவசங்கள் அவ்வளவு எளிதில் கைகளில் வந்து சேராது...குடும்ப அட்டை இல்லை, ஆண்டு வருமானம் சமர்பிக்கவில்லை என்றெல்லாம் சொல்லி அலைக்கழிப்பார்கள் அல்லது தட்டிக்கழிப்பார்கள்.அதுவே இந்த அரசு, மாளிகையில் இருப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளும் உங்கள் அறை தேடி வந்து சேரும் படி உதவிகள் செய்திருக்கின்றது ......

கடந்த ஆட்சியில் நகரத்திற்கு, நகர மக்களுக்கு  என்ன செய்தார்கள் என்பது முக்கியமல்ல,   எங்களை போன்றவர்கள் நிம்மதியாக உறங்க, சந்தோசமாய் உண்டு, சௌகரியமாய் வாழ அவர்கள் செய்த இந்த பேருதவியினை நாங்கள் எங்கள் ஆயுட்காலம் வரை மறக்க மாட்டோம்....

இங்கே நாங்கள் தனி தனி குடியிருப்புகளாய் வசித்தாலும்  எங்களுக்குள் ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் எதுவுமே கிடையாது, ஒரு அழகிய சமத்துவபுரம் அமைந்திருக்கின்றது. ஒருவரது பிரச்சினைகளில் மற்றவர்கள் பங்கு கொள்வோம், ஒருவரது சந்தோசங்களில் மற்றவர்களும் பகிர்ந்து கொள்வோம்...

எங்களது தகுதி அடிப்படியில் மட்டுமே நாங்கள் இங்கே தங்கவைக்கப் படுவோம், திடீரென்று எங்களை வெளியில் அனுப்பி விடுவார்கள், ஆனால் நாங்கள் நகரத்தில் இருந்து என்ன செய்ய முடியும்?? இதை போன்று ஒரு இடம், சாப்பாடு எங்களுக்கு வேறு எங்கே கிடைக்கும்?

கடந்த அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும், காரணம், ஒரு காலத்தில் அவர்களும், எங்களை போன்று கஷ்டபட்டவர்களாக இருந்திருக்க வேண்டும், அந்த கஷ்டம் எங்களுக்கும் வரக்கூடாது என்று எங்களுக்காகவே சிரத்தை எடுத்து செய்து முடித்திருக்கிறார்கள்....

இந்த கட்டுரை மூலமாக எனது சக நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்பது என்னவெனில் பொது மக்கள் போன்று அரசு சொத்துதானே என்று அசிங்கபடுத்துவது, சீரழிப்பது போன்று நாமும் நமது அறைகளை மாசு படுத்தக்கூடாது....

அவர்கள்தான் பொது இடங்களில் எச்சில் துப்புவதும், பான்பராக் மற்றும் வெற்றிலை போட்டு  முக்குக்கு முக்கு துப்பி வைப்பார்கள்...நாமும் அவ்வாறு நடந்து கொண்டால், பிறகு நமக்கும், அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.அது போல பொது மக்களின் சொத்துக்களை எவ்வளவு வேண்டுமானாலும் சீரழித்து கொள்ளுங்கள், ஆனால் நமது பொருட்கள் எதிலும் ஒரு சின்ன கீறல் கூட இருக்க கூடாது.....

வெறும் 12.2 கிலோ மீட்டரில் தான் நாமும், பொது மக்களும் இருக்கின்றோம், நம்மை போன்ற ஏழை, மற்றும் சாமானியர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடம்.....அதை ஒரு கோவில் போன்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நகரம் மற்றும் தமிழகமெங்கும் சாலைகளும், பேருந்துகளும் கேவலமாய், பரிதாபமாய், நாறிப்போய் இருந்தாலும் கூட நமக்கு மிக அருமையான மண்டபத்தை கட்டி கொடுத்த அய்யாவிற்கு எங்களது நன்றியினை காணிக்கை ஆக்குகின்றோம்.....


கடந்த ஆட்சியில் நமக்காக ஒரு வசந்த மாளிகையை, சொர்க்க பூமியை கட்டி கொடுத்தார்கள். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது இதை விட அதிகமாக செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக....


அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் நான் இன்று இந்த புனிதமான மாளிகை மற்றும் இயக்கத்தின் சங்கத் தலைவராக பதவி ஏற்று இருக்கின்றேன்.... 

எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், 
இங்கு இல்லாத இல்லாத நிலை வேண்டும்....
அதற்கு முதற் கண் கலைஞர் தலைமையிலான கடந்த கால ஆட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்களை, நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.... நமக்கு இப்படி எல்லாம் வசதிகள் செய்து கொடுத்த அவருக்கு அவரது சொந்த மகளை அருகில் வைத்து பார்க்க முடியாமல் செய்த அமைப்புகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....

நமது கலைஞர் தலைமையில் அடுத்த முறை பாரத பிரதமராக முயற்சி எடுப்போம்,. அப்போதுதான் நாம் இந்தியாவில் இருக்கும் அனைத்து வசந்த மாளிகைக்கும் மாற்றல் வாங்கி செல்ல முடியும். அதுபோல எல்லா அரசியல்வாதிகளும் சந்தோசமாய் வந்து செல்ல வசதியாக இருக்கும்.

உங்களுக்கு நேரம் கிடைச்சா நீங்களும் கண்டிப்பா நம்ம புழலுக்கு வந்திட்டு போங்க, எல்லோரும் பார்க்க வேண்டிய இடம் இதுதான்.....

இப்படிக்கு 
சுத்தியல் சாமி,
நிறுவனர் மற்றும் தலைவர் 
கொமுக -  (கொள்ளையர்கள் முன்னேற்ற கலக்கம் )
அறை எண்-23 . (A.C)
முதல் தளம்.
 புழல்;  
Sunday, May 29, 2011

பள்ளிக்கூடம்

விடுமுறை நாளிலும்
பள்ளிக்குச்   செல்லும் 
பாலகர்கள்!!!!
படிக்க அல்ல,
????புசிக்க????,
வரவேற்கிறது வறுமையின்
வகுப்புகள்
சத்துணவுக்கூடம்!!!!!!!!!!!!!!  

2g அலைவரிசை ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி ஊழல், ஹார்லிக்ஸ் பாட்டில் ஊழல், விலைவாசி உயர்வு, ரஜினி உடல்நிலை, தேர்தல் முடிவுகள், மக்கள் கருத்துக்கணிப்பு, ஐபீஎல் கிரிகெட் போட்டி என்று எத்தனையோ பரபரப்புகள் அடங்கி முடங்கினாலும்

இன்றும், இன்னும் மதிய உணவிற்காக தட்டு ஏந்தி வரிசையில் நிற்கும் என் தமிழக தேசத்து பிள்ளைகளுக்கு இது அர்ப்பணம்.......

Saturday, May 28, 2011

தமிழன் வழி தனி வழி.....

நீ ஒரு தமிழன்னா, நான் சொல்ல போறதுல பாதி அப்படியே உனக்கும் பொருந்தும், தோழா...........


சரியா இருக்கும்னு நம்புறேன்....
  

Friday, May 27, 2011

விஜயகாந்தின் கண் திறந்த பேட்டி

நடந்து முடிந்த தேர்தல் 2011 க்கு பிறகு முதல் முறையாக விஜயகாந்த் வடிவேலு பற்றி நமது சின்னவரிடம் பேட்டி அளித்திருக்கின்றார்..

சினிமாவில் அவரது வசனங்கள் அதிகம் இருக்காது, அது போலவே இந்த பேட்டியிலும் அவர் நறுக்கென்றே பதில் அளித்தார்...

   
பேட்டி வருமாறு -  

சின்னவர் - வணக்கம் கேப்டன், முதலில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றதற்கு எங்களது வாழ்த்துக்கள்...

கேப்டன் : நன்றி, அதற்கு முதலில் எனது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்...

சின்னவர் : தேர்தல் பிரச்சாரத்துல நீங்க இன்னொரு கட்சி கொடிய கீழே இறக்க சொன்னீங்களாமே, அது ஏன்னு இன்னும் பொது மக்கள் கிட்டே சந்தேகம் இருக்கு

கேப்டன் : இது எதிர்க்கட்சிக்காரன் செய்த சதிவேல, 
சின்னவர் : கருணாநிதியோட கடந்த கால ஆட்சிய பத்தி நீங்க என்ன நினைகிறீங்க,

கேப்டன் : அது ஒரு குடும்ப ஆட்சி, அது ரொம்ப தப்பு, ஒரு குடும்பத்துக்கு ஒருத்தன்தான் தலைவனா இருக்கணும், இது சம்பந்தமா நான் என் மனைவிகிட்டேயும், என் மச்சான் கிட்டேயும் கலந்தாலோசிச்சு முடிவு எடுக்க போறேன்...

சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா ஆன பிறகு சினிமாவிலே நடிப்பீங்களா?

கேப்டன் : நிச்சயம் எல்லாமே அரசர் காலத்து படம்தான், நானே சொந்தமா கதை, வசனம் எழுத போறேன்...டைட்டில் கூட வச்சிருக்கேன்...கொலைஞன், பண்ணர் - மன்னர்

சின்னவர் :  ரொம்ப நல்ல விஷயம், அதற்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..

இந்த தேர்தல்ல உங்களை கடுமையா விமர்சிச்சு பேசிய வடிவேலு மேல ஏதாவது வழக்கு போட போறீங்களா? னு உங்க தொண்டர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க..

கேப்டன் : நிச்சயமா, உங்க மூலமா நான் அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கிறேன், அவருக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க சொல்லுங்க...


சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா நீங்க எழுப்ப போற முதல் கோரிக்கை என்ன? என்ன?
கேப்டன் : எப்போ வீட்டுக்கு விடுவீங்க, வந்து ரொம்ப நேரமாச்சு..

சின்னவர் : சார், இதுதான் கடைசி கேள்வி, இதுக்கு பதில் சொன்னதும் பேட்டியை முடிச்சிக்கலாம்..

கேப்டன் : (கையில் வைத்திருக்கும் பேப்பரை சுருட்டி சின்னவர் தலையில் தட்டுகின்றார்) யோவ், நீ கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன், சட்டசபை ஆரம்பிச்சதும் நான் வைக்குற கோரிக்கையைத்தான் சொன்னேன்...

சின்னவர் : ஏற்கனவே, நீங்க ஒரு வேட்பாளரை அடிச்சிடீங்க, அதுவே பெரிய பிரச்சினைல இருக்கு, இப்போ பத்திரிகைகாரன வேற அடிக்கிறீங்க,

கேப்டன் : யோவ், என் கையால அடிபட்டா நீ பெரிய ஆளா வருவே பாரு...

பெரியவர் : ரொம்ப நன்றி எதிர்க்கட்சி தலைவரே...

கேப்டன் : கொஞ்ச நேரத்துக்கு என்னை பேட்டி எடுத்தாரே சின்னவரு, அவரு எங்கேய்யா காணோம்? 

பேட்டி குழு : சார், நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடிச்சீங்களே சின்னவரு, அவர்தான் இப்போ பெரியவரா மாறிட்டாரு, நீங்கதானே பெரிய ஆளா மாறுவே னு சொன்னீங்க, அதுக்குள்ளே மாறிட்டாரு...
 

ஒசாமாவின் மரண பின்னணி

ஒசாமா பின்லேடனை பிடிக்க திட்டம் தீட்டிய முக்கிய நபர்களின் ரகசிய புகைப்படம் அம்பலமாகி இருக்கிறது....

ஒசாமாவின் மறைவிடத்தை சாட்டிலைட் வழியாக கண்டுபிடித்து அவரது நடவடிக்கையை நோட்டம் விட்டு அவரை மடக்கி இருக்கின்றனர். 


ஒபாமா இதற்காக ATF (ஆண்ட்டி டெரரிசம் போர்ஸ்) என்ற ஆபேரேசனை தீட்டி இருக்கிறார்கள்...

இந்த ஆபெரசனுக்கு முக்கிய தலைவராக இருந்தவர் ஒபாமா இல்லை என்பதும் அதற்கு உண்மையான கேப்டன் யார் என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்...

 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......இது பரம ரகசியம்.....தமிழன் தரணி 
ஆள்வான், இது குறித்து ஒபாமா கூறுகையில் ரமணா மற்றும் கேப்டன் பிரபாகரனின் செயல்களைப்  பார்த்து தான் திரு. விஜயகாந்தை தெரிவு செய்ததாக கூறினார்....   

இப்போ, சொல்லுங்க உங்க கருத்துக்களை, எப்பூடி? 

அற்புத படைப்பு

இது ஒரு அற்புதமான புகைப்படம், எனது அலுவலக மின்னஞ்சலுக்கு வந்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை. இதன் சிறப்பு ஒரே பேனாவால் ஒரே ஸ்ட்ரோக்கில் வரைய பெற்றது ஆகும். இதன் காப்பிரைட் ஆண்டினை பாருங்கள், எத்தனை சிறப்பான விஷயம் அது, நமக்கெல்லாம் இது ஒரு பொக்கிசமே...
 

 

Thursday, May 26, 2011

சந்தேகம்

எனக்கு ஒரு சந்தேகம்?

(ஆரம்பிச்சிட்டான்யா சந்தேக சிங்காரம் னு நீங்க புலம்புறது எனக்கு கூட கேக்குது )...

இருந்தாலும் என்ன செய்யிறது? 

அதாவது என்னான்னா, சிகரெட்டை தடை பண்றதுக்கு எல்லா கடையிலும் ஒரு அட்டையை தொங்கவிட்டிருக்கானுங்க, எச்சரிக்கை அட்டையாம் அது,

அதாவது புகைபிடித்தல் தண்டனைக்குரிய சட்டம், அதை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுமாம்....

ஏன்யா ஒவ்வொரு பெட்டிக்கடையா போயி ஒவ்வொருத்தனையா பிடிச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா பேசாம சிகரட்டு தயாரிக்கிற கம்பெனிய இழுத்து மூடி சீல் வைக்க வேண்டியதுதானே....

இந்த அரசாங்கம் எப்பவுமே தலையை சுற்றி வயித்தை தொடுத்து, அதுயேனுதான் எனக்கு சந்தேகம்

கேட்டா அது என்ன பதில் சொல்லுது தெரியுமா, அப்படி செஞ்சா இந்தியாவோட தொழில்துறை பாதிக்கப்பட்டு, நாட்டோட வருமானம் போயிடுமாம்,

அப்படி பார்த்தா இந்த சிகரெட்டு விக்குற பெட்டி கடைக்காரன் வருமானம் பாதிக்கப்படாதா, மவனே சிகரட்டே இல்லேனா எப்படி இந்த பெட்டி கடைக்காரன் விப்பான், எப்படி நம்மாளு வாங்கி புகைப்பான்,

விடுங்க பாஸ், இவனுங்க எப்பவுமே இப்படித்தான் எப்பவுமே தப்பு தப்பாத்தான் சட்டம் போடுவானுங்க னு அரசரடி ஆண்டியப்பன் சொல்றாரு,

அடுத்தது புகை என்ன சிகரட்டுல மட்டும் இருந்தா வருது, மண்ணெண்ணெய் அடுப்புலே இருந்தும் வருது, தோசையை கையேந்தி பவன்ல வாரியலால துடைச்சு ஊத்துரப்பவும் குப்புன்னு புகை வருது,

சிட்டில ஓடுற கார்ப்பொரேசன் வண்டி கரும்புகைய கக்கி கிட்டு தான் போகுது, அந்த புகை எதுவும் செய்யாதாம், குட்டியோண்டு வர்ற சிகரெட்டுலேதான் புகை வந்துதான் நாடு மாசடைஞ்சி போச்சாம்,

ஊருக்கு நடுவுலே இந்த கார்ப் பொரேசன் காரன் எரிக்கிற குப்பைல இருந்து புகை வராம என்ன தங்கமா வருது.....யார்கிட்டே,

புகை பிடிக்கிரவனுக்கும், பக்கத்துல நிக்குரவனுக்கும் ஆஸ்த்மா, கேன்சர் எல்லாம் வருதாம், நான் ஒத்துக்கிறேன்,

ஆனா எங்க வீட்டாண்ட காஸ் அடுப்புக்கு வக்கத்து போயி ஒரு குடும்பம் விறகு அடுப்புலயும் மண்ணெண்ணெய் அடுப்புலேயும் சமைக்குது, அதுக்கு போயி கேன்சர் வந்திடுச்சே, அது என்ன சிகரெட்டா குடிக்குது....

புகை ங்கிறது சிகரெட்டு மட்டும் கிடையாது, வீட்டுலே போட்டு எரிக்கிற குப்பை லே இருந்து, கையேந்தி பவன்ல எண்ணைல வர்ற கரும்புகை வரைக்கும், அப்புறம் இந்த வண்டியிலே இருந்து வர்ற கரும்புகையும் உடம்பை கெடுக்கும், ஒரு சட்டம் போட்டா ஒழுங்கா முழுசா நடவடிக்கை எடுக்கணும்,

இந்த லட்சணத்துல ஒரு அட்டைய தொங்க விட்டா புகை இல்லா நகரம் உருவாகாது னு நான் நினைக்கிறேன்....எப்படி நம்ம சந்தேகம்? 

 

குசும்பனும், விசும்பனும்

செய்தி : - சமச்சீர் கல்வித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது 

(தலைப்பு செய்தியை படித்துக்கொண்டே) 

குசும்பன் - டேய் மச்சான், எவ்ளோ டா கொடுப்பாக?     

விசும்பன் - என்னது , கொஞ்சம் தெளிவா கேளுப்பா? 

குசும்பன் -  அட "சீர்" "சீர்" னு போட்டிருக்காகளே, அதைத்தான் கேட்டேன்....

விசும்பன் - எல்லாத்தையும் சேர்த்து படி பா? 

குசும்பன் - கல்யாண சீர், பிரசவ சீர்னு போட்டிருக்கு, அப்போ மட்டும் சீர் வருமா னு பார்குறியே, அதுதானே இதுவும்

விசும்பன் - அட இது வேற பா?, உலகம் தெரியாத ஆளா இருக்கியே பா?

குசும்பன் - அப்படீன்னு என்னான்னு நீ சொல்லு பாப்போம், 

விசும்பன் - எல்லா பாடத்திட்டமும் சமமா இருக்கும், 

குசும்பன் - அப்படீனா ச யி ன் ஸ், மேத்ஸ் , பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீ, பயோலோஜி , தமிழ், இங்க லீ பீ சு, அக்கௌண்ட்ஸ் அல்லாமே சமமா இருக்குமா மச்சான்? அப்படீனா ஒரே ஒரு நோட்டு  வச்சு  எழுதினா  போதுமா  டா

விசும்பன் - அது இல்லே மாமு, தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா பள்ளிகூடத்திலேயும் ஒரே மாதிரி பாடம்தான் இருக்கும்....

குசும்பன் - அப்படீனா பசங்க எந்த ஸ்கூலிலேயும் போய் அவன் அவன் சௌகரியத்துக்கு போய் படிக்கலாமுன்னு சொல்லு,

விசும்பன் - ஐயோ மாமு, உனக்கு எப்படி புரிய வைக்கிறது? அந்தந்த ஸ்கூல் லே படிக்கிற பிள்ளைங்க அங்கேயே படிக்கலாம், ஆனா ஒரே பாடம்தான் எல்லா ஸ்கூல் லேயும் டா... 

குசும்பன் - ஏற்கனவே புத்தகமெல்லாம் அடிச்சாச்சு னு படிச்சோமே டா, அதெல்லாம் அந்த கல்யாண மண்டபத்துல வச்சிடுவான்களா மச்சான்,     

விசும்பன் - எந்த கல்யாண மண்டபம்டா? 

குசும்பன் - அதான் ஒரு 1000 கோடி ரூபாயிலே ஓமந்தூரார் மாளிகையிலே கட்டுனாங்களே, அதைத்தான் சொன்னேன், 

விசும்பன் - டேய், நீ வீணா என் வாயை கிளறாதே? அது அப்புறம் 

குசும்பன் - அப்படீனா வேற எப்படி சொல்லலாம், மச்சான்?

விசும்பன் - இந்த திட்டம் வந்தா எல்லா பசங்களுக்கும் படிக்கிறதுக்கு ஈசீயா இருக்கும்டா...

குசும்பன் - எல்லாம் சரி, ஆனா இதுக்கு வாத்தியாருங்க ஸ்கூல்லே இருக்கணுமே, நாம படிகிரப்ப அந்த பிச்சைமுத்து  வாத்தியாரு மட்டும்தானே ஒன்னாப்பிலே இருந்து அஞ்சான் கிளாஸ் வரைக்கும் எடுத்தாரு, 

விசும்பன் - ஏண்டா அரசாங்கம் மாதிரியே நீயும் குழப்பிகிட்டே இருக்கிறே? 

குசும்பன் - இதுல குழப்பம் எதுக்குடா....ஸ்கூல்ல சீட் கிடைக்காதவன் என் பொண்ணுகிட்டே வந்து படிக்க வேண்டியதுதானே, அவதான் இப்போ பநெண்டாம் வகுப்புக்கும் கிளாஸ் எடுக்கிறாளே.

விசும்பன் - டேய், உன் பொண்ணு எட்டாம் கிளாஸ் தானடா படிக்கிறா, அவ எப்படிடா பனிரெண்டாம் கிளாஸ்க்கு எடுக்க முடியும்,

குசும்பன் - இப்போதானடா நீ சமச்சீர் பாடத்திட்டம் னு சொன்னே, எட்டாங்கிளாஸ், பனிரெண்டாம் கிளாஸ் எல்லாத்துக்கும் ஒரே பாடம், சமச்சீர் பாடம்னு சொன்னியே, என்னை ஏமாத்த முடியுமா? எப்படியும் நான் இந்த வாட்டி அந்த சீரை வாங்கிடுவோம்ல, என்னையவே ஏமாத்த பாக்குறியா? சீரை சமமா பிரிச்சி கொடுப்பாங்க, உனக்கு ரேசன் கார்டு கிடையாது,  அந்த வயித்தெரிச்சல்  உனக்கு 

விசும்பன் - ???????!!!!!!!?????  

Wednesday, May 25, 2011

*****முதன் முதலாய்******

அன்றுதான் அவளைச்  சந்தித்தேன்;
முதல் சந்திப்பிலேயே அவள் புன்னகைத்தாள்;

அழகான முகம்,
அடர்த்தியான கேசம்,
நட்சத்திரம் மின்னும் கண்கள்,
ஆப்பிள் போன்ற கன்னங்கள்,

புன்னகையில் பூத்தமலர்களாய்-
கன்னத்தில் விழும் குழிகள்,

அவள்கை விரல்தனை நீட்டி
என்னை அருகில் அழைத்தாள்;                    

அருகில் சென்றேன், அவளை மார்போடு அணைத்தேன்,
அவளது உச்சி முதல் பாதம் வரை 
முத்தமிட்டு அவள் காதில் சொன்னேன்;

இனியும் உன்னை பிரிய மாட்டேன்!!!!

என் அன்பு மகளே........   
  

இந்த வரிகள் அனைத்தும் வயிற்று பிழைப்பிற்காக சொந்த பந்தங்களை தொலைத்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் எனது அன்பு தோழர்களுக்கு சமர்ப்பணம்........

*****கருவறை களம்*****

தாய்க்கும் மகனுக்கும் 
கடும் யுத்தம்
மகன் மிதிக்க
தாய் இறக்க
மகன் மட்டும்
சுதந்திரமாய் வாழ்கின்றான்
அரசு மருத்துவமனையில்
ஆறு மாத குழந்தையாக!!!!

"ஹெ"ஸ்மா சட்டம்

இந்த அம்மா ஆட்சிக்கு வந்ததும் ஏன் இப்படி தலைல இப்படி கல்லை (ஹெல்மெட்டை) தூக்கி போடுது , 

28 ம் தேதிலே இருந்து ஹெல்மெட் போடனுமாமே 

மண்டைய பொளக்குது வெயிலு, காத்தும் வர மாட்டேன்குது, இந்த லட்சணத்துல ஹெல்மெட்டை வேற போட்டோம்னா அவ்வளவுதான், மண்டை கலங்கி போய் பைத்தியமா திரிய வேண்டியதுதான்....

ஏற்கனவே சிட்டில டிராபிக் வேற கொடுமையா இருக்கு, மெட்ரோ ரயிலு போடுறோம்னு அவன் பாதி ரோட்டை பிடுங்கிட்டான், சரி இடது ஓரமா போலாம்னா தண்ணி குழாயி போட போறோம்னு ரோட்டுல யானைக்கு குழி வெட்டுற மாதிரி பெரிய குழியை தோண்டி போட்டிருக்கான், போன வாரம் ஒரு ஆட்டோகாரன் ஆட்டோ ஸ்டாண்டு னு நினைச்சு வண்டிய குழிக்குள்ள இறக்கிட்டான், 

இப்போ இருக்கிற நிலைமல எந்த வண்டியும் 20 கிலோ மீட்டருக்கு மேல போக மாட்டேன்குது...

பாதி இடத்துல வண்டிங்க எல்லாம் பஸ் ஸ்டாப்புக்கு உள்ளே புகுந்துதான் போக வேண்டி இருக்கு, அப்படி பார்த்தா நடந்து போறவனும், பஸ் ஸ்டாப்ல நிக்குரவனும்தான் ஹெல்மெட் போட்டுக்கிட்டு சுத்தணும்,.

இப்போ எல்லாம் ஹெல்மெட் அதிகமா வாங்குறது யாருன்னு பார்த்தா சிட்டில பாய் பிரண்டு கூட போற கேள் பிரெண்டுதான், (டேட்டிங்) 

துப்பட்டா வச்சு முகத்தை மூடுறதுக்கு பதிலா ஹெல்மெட்டை வைச்சு அழகா மூடிக்கிட்டு போறாளுக... 

பூவே உனக்காக படத்துல வர்ற சார்லிய மாதிரி தான் வசனம் பேச வேண்டி இருக்கு, "முண்டம், முண்டம், மூட வேண்டியதை விட்டுட்டு மூஞ்சிய மூடுது பாரு" னு அந்த வசனம்தான் இந்த திருட்டுத்தனமா போற பொம்பள பிள்ளைகள பார்த்தா நியாபகத்துக்கு வருது.....

ஹெல்மெட்டோட யூஸ் என்னான்னு கொஞ்சம் ஹெல்மெட்டை கழட்டிட்டு யோசிச்சு பார்த்தா, தலைல அடிபடாம இருக்கத்தானே, இப்போ இருக்கிற விலைவாசி உயர்வுல அவனவன் தலையை அடகு வச்சுத்தான் வண்டிய வாங்குறான், பெட்ரோல் கூட வாங்குறான்,

இப்போ போற வேகத்துக்கு எவனுக்கு தலைல அடிபடும், இருக்கிற நெருக்கடில எவனும் ரோட்டுல விழுறதுக்கு கூட இடம் இல்லையே, விழுந்தால்ல அடி படும், 

இருந்தாலும் அரசு ஆணை, மீறவா முடியும், கேட்டுக்குவோம்.. ...

எவ்வளவோ இனாம் கொடுக்குது அரசு, ஒரு ஹெல்மெட் கொடுக்க கூடாதா?

அப்புறம் அந்த அம்மா "ஹெ"ஸ்மா சட்டம் போட்டிடுச்சுனா அப்புறம் கம்பி எண்ண வேண்டியதுதான்...    

Tuesday, May 24, 2011

அரிய புகைப்படங்கள்