பங்காளிங்க..

Sunday, June 26, 2011

நகரவாசிகளுக்கு ஒரு நற்செய்தி....

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.....

அதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கின்றது.

இருந்த போதும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இரு சக்கர வாகனம் என்பது இயலாத காரியமாகும். அதனால் அவர்கள் அரசு வாகனங்களான பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். 

எத்தனை பேருந்துகள் விட்டாலும் எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. எல்லா பேருந்துகளிலும் படிக்கட்டு பயணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. 

ஆனால் வருந்த கூடிய விஷயம் என்னவெனில் அநேக பேருந்துகளில் பேருந்தின் நடுவினிலும், முன்னே மற்றும் பின்னேயும் இடம் காலியாக இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டு பயணத்தை விரும்புகின்றார்கள்,மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழகம் எவ்வளவோ வலியுறுத்தியும் இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்துக்குள்ளே வராமலும், வெளியே நின்று பிரச்சினை செய்கின்றார்கள். 

இதற்க்கு முடிவு கட்டுவதற்காக, போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழகமும் இணைந்து புது வடிவிலான பேருந்தினை உருவாக்கி இருக்கின்றது.  இதில் முன் படிக்கட்டு வழியாகத்தான் ஏற வேண்டும், அதே வழியில்தான் இறங்க வேண்டும். 

இதற்கான சோதனை ஓட்டமாக முதலில் ஒரு பேருந்தினை இயக்கி இருக்கின்றார்கள். பொதுமக்கள் இடையே குறிப்பாக பெண்கள் இடையே நல்ல வரவேற்பை அளித்திருக்கின்றது. 


இந்த மாதிரியான 1000 வண்டிகளை இயக்க முடிவு செய்திருக்கின்றார்கள். எப்பூடி?                    ? !!!!!!!!!!!!!Friday, June 24, 2011

வேண்டுதல் - பிரார்த்தனைஇரண்டு மணி நேர

பிரயாணத்திற்கு 
பிறகு
கால் மணிநேரம் வரிசையில் 
கால் கடுக்க காத்திருந்து
கடவுளை வணங்கி
பிரார்த்தித்தார்கள்!!!!

கடவுளே....கடவுளே...
வெளியே இருக்கும்
புது செருப்பையும், வண்டியையும்
காப்பாற்று!!!!!

 

Thursday, June 23, 2011

தவமாய் தவமிருந்து


உன் மெல்லிய விரல்கள் 
என் மேனியெங்கும் படர வேண்டும்!

உன் மூச்சுக்காற்று 
என் மீது எப்போதும் வீச வேண்டும்! 

உன் காதுமடலை
என் உடலால் எப்போதும் உரச வேண்டும்!
 
என தவமாய் தவமிருக்கும் 

"அலைபேசி"

Wednesday, June 22, 2011

தினகரன் பத்திரிக்கையின் அலம்பல்ஸ்

கடந்த 15 நாட்களாக தினகரன் பத்திரிக்கையினை வாங்கி பாருங்கள்.....நாட்டில் நடக்கும் அநியாயங்களை அநியாயத்திற்கு தட்டி கேட்டிருப்பார்கள்...
 
மணல் கொள்ளை நடக்கின்றது, வீடுகளில் கொள்ளை நடக்கின்றது....
அடுத்தது சாலையில் வைத்திருந்த நிழற்குடை முறிந்து விழுந்துவிட்டது....
வரப்போகும் மின்வெட்டு பற்றிய ஒரு சர்வே, என்று தமிழ் நாட்டு அதுவும் சென்னை மக்களுக்காக தினகரன் "உண்மையாய்" செயல்படுகின்றதே....

தமிழ் நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு எப்படி எல்லாம் அக்கறை இருக்கின்றது?
அது சரி, "ஸ்பெக்ட்ரம்  ஊழலா?, கனிமொழி அத்தைக்கு என்னாச்சு? தாத்தா அவருக்கு அவரே கேள்வி கேட்டு பதில் சொல்வாரே, அதை எல்லாம் காணவில்லை....

ஈழத்தமிழர் சோத்துக்கு வழி இல்லாத போது இங்கே இவனுங்க மொத பக்கம் புல்லா போடுவானுன்களே ஒரு "விவல் விளம்பரம்", அது எதையுமே இப்போ காணோம்....

உன் தாத்தா ஆட்சியிலே மணல் கொள்ளைனு ஒரு படம் வர மாட்டேங்குது....
வீடுகளில் கொள்ளைனு என்னமோ இந்த அம்மா ஆட்சிக்கு வந்த மறுநாள்தான் நடக்கிற மாதிரி ஸ்டில் போடுறானுங்க....உன் தாத்தா ஆட்சியிலேதானே போலிஸ் ஸ்டேசன்லேயே கொள்ளை அடிச்சானுங்க...
இரண்டு நாளைக்கு முன்னாடி பீச் ல வச்சிருந்த நிழற்குடை முறிஞ்சி விழுந்திட்டுன்னு படம் போட்டு காம்பிச்சானுங்க....எனக்கு தெரிஞ்சு அந்த நிழற் குடை அமைச்சு கொடுத்த போது ஆட்சியிலே இருந்தவன் யாரு, அதை செஞ்சவன் மேல விசாரணை கமிசன் வைச்சா உண்மை நிலவரம் வெளியே வரும்னு நினைக்கிறேன்....

கடந்த ஆட்சியிலே ஒரு இடத்திலும் நிழற் குடையே கிடையாது....இருந்த நிழற்குடை எல்லாத்தையும் பிடுங்கி போட்டானுங்க.... அதை பற்றி எல்லாம் ஒன்னும் செய்தியே  கிடையாது....

அப்போ எல்லாம் எந்திரன் ஸ்டில்ஸ்சா போட்டு தள்ளுவானுங்க....ரஜினி இப்படி திரும்புனாறு, அப்படி தும்முனாறு....காரணம் சன் பிக்சர்ஸ் தான் சீன் காமிப்பானுங்க....


இப்போ இவனுங்க போடுற ஸ்டைல பார்த்தா யாருக்கு ஆதரவா செய்திய போடுறானுங்க நு தெரியலை....

ஒரு வேளை "சேம் சைடு கோல்சா" இருக்குமோனு லேசா டௌட் வருது.....
காரணம் ஒருவேளை அந்த கேபிள் டிவி மேட்டரா இருக்குமோ????

Tuesday, June 21, 2011

பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்

சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்கள்தான்....

அதுபோல பெரிய பெரிய நிறுவனங்களில் குறிப்பாக (பிபிஒ) வில் வேலை பார்க்கும் ஆண் (HR) ஹெச்ஆர் கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும், நடுவயது அதாவது 30 லிருந்து 40 வயதை தொட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.   

பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குடும்ப சூழ்நிலையில் சிக்கி அதனால் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடுபவர்களாக இருக்கின்றார்கள்...
பெண்களில் வேலை தேடுபவர்களின் வகைகள் :

1. விதவைகள் 
2. விவாகரத்து பெற்றவர்கள்
3. பெற்றோர் ஊரினில் கடனை அடைக்க கஷ்டப்பட வேலைக்கு வருபவர்கள்
    தனியாக வாழும் பெண்கள்
4. அநாதை பெண்கள்...
5. கருத்து வேறுபாட்டில் கணவனை பிரிந்து வாழும் பெண்கள் 
6. வெளிநாட்டில் கணவன் இருக்கும்போது பொழுது போக்கிற்காக வேலைக்கு 
    வருபவர்கள்
7. வேலைக்கு சென்று சம்பாதித்து பெரும் பணமும், புகழும் பெற ஆசைப்படும் 
    பெண்கள்...  என்று பிரிக்கலாம். 

பொதுவாய் சொல்ல போனால் எல்லோரையும் இப்போது நாகரீகம் என்ற போதை கண்களை மறைக்கின்றது. நாமும் அவர்களை போல வாழ வேண்டும், நாமும் கார், பங்களா என்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் ஒரு சில பெண்கள்.

இவர்களது எண்ணத்தை தமக்கு சாதகமாக்கி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்க காத்திருக்கின்றது ஒரு கும்பல் (HR) என்ற போர்வையில்....

இந்த HR களின் கணக்கு எப்படி போகின்றது எனில் முதலில் பெண்ணின் மனப்பக்குவத்தை அறிந்து கொள்கின்றார்கள். அதற்கு முன்னால் பெண்ணின் பயோ-டேட்டா வில் marital status என்னவென்று கவனித்து கொள்கின்றார்கள்....அந்த பெண்ணின் குடும்ப பின்னணியை பற்றி வினவுவார்கள்...அந்த பெண் தனியாக விடுதியில் இருக்கிறாள், அல்லது அவள் ஒரு விதவை, அல்லது விவாகரத்து பெற்றவள் அல்லது கணவனோடு கருத்து வேறுபாடு என்றால் அன்று இரவே அவளுக்கு ஒரு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அது மிக சாதாரண இரவு வணக்கம், அல்லது காலை வணக்கம் செய்தியாக இருக்கும்....

பொதுவாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பெண்கள் எதிராளியின் குணம் அறியாது தனது குடும்ப பிரச்சினைகள் அனைத்தையுமே கொட்டி தீர்ப்பார்கள். அப்பா குடிகாரர், அம்மா ஊதாரி, எனக்கு 3 தங்கைகள், நான் சம்பாதித்துதான் அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல, சொல்ல, அந்த குறிப்பிட்ட சில HR  களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகி விடும்.

பின்னர் இரண்டு நாள் கழித்து அதே HR அந்த பெண்ணிற்கு வேறு விதமான நகைச்சுவை அல்லது வேறு விதமான எஸ்.எம்.எஸ் களை அனுப்புவார்கள். 

அந்த எஸ்.எம்.எஸ் களுக்கு பதில் அளித்தாலோ அல்லது அதற்கு செவி சாய்த்தாலோ அதற்கு பின்னர் அந்த பெண்ணின் தலைஎழுத்து போலியான காதலில் முடிந்து நிற்கும். 

எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண் நியாயம் கேட்க சென்றால், அந்த HR கூறும் பதில்கள் சூழ்நிலைகேற்றவாறு மாறும். அதாவது நீ எல்லாம் அனுபவித்தவள்...நான் இனிமேல்தான் உலகை அனுபவிக்க போகின்றேன்...என்னை மறந்திடு....எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை என்று செண்டிமண்டலாய் பேசி மடக்குவார்கள். 

ஒருவேளை அந்த பெண் மிக தீவிரமாய் இருக்கும் பட்சத்தில் அவளுக்கு பிரமோசன் அல்லது டீ-பிரமோசன் பெற்று கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொள்வார்கள். 

இவர்களை போன்ற காம வெறியர்கள், கூடுமானவரை அந்த பெண்ணோடு சுற்றிய சாட்சியங்கள் எதுவுமே வைத்து கொள்ள மாட்டார்கள்... அதுதான் அவர்களது அடுத்த தொடர்புக்கு இடைஞ்சலாக இருக்காது என்பது அவர்கள் எண்ணம்.

சென்னை போன்ற நகரங்களில் வண்டிகளில் சுற்றும் இளம் சிட்டுக்களில் எத்தனை உண்மையான காதலர்கள் இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். 

அந்த அளவிற்கு உண்மையான காதல் நலிந்து  லிவிங் டுகதர் என்ற கேடு கேட்ட காலாச்சார சீர்கேடு உருவாகி கொண்டிருக்கிறது....விளைவு காதல் சலித்ததும் காதலன் அடுத்த பெண்ணை தேர்வு செய்ய கிளம்பி விடுகின்றான், காதலி ????????

அவளை வேலைக்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் பெற்றோர், குடும்பத்தார்...??

 
(நான் இங்கே சொல்வது அனைத்து HR களையும் அல்ல, 
ஒரு சில வக்கிர HR களைத்தான்...)

Tuesday, June 14, 2011

ஒரு தடவை பண்ணது போதாதா? திருப்பியுமா?

 இன்று திங்கட்கிழமை, அவசர அவசரமாய் கிளம்பினேன்....

மற்ற நாட்களை விட இன்று அதிக போக்குவரத்து தடைகள் இருக்கும்...
எவ்வளவு வேகமாக சென்றாலும் அலுவலகத்திற்கு 10 மணிக்குள் நிச்சயம் செல்ல முடியாது....என்ன செய்வது? 

அப்போது என் மனைவி என்னிடம் வந்து போகும் போது மெடிக்கல் கடையில் சாப்ரம்ய்சின் கிரீம் வந்திடுச்சா னு கேட்டிட்டு போங்க என்று அவள் பங்கிற்கு ஆரம்பித்து வைத்தாள்....

கோபம் தலைக்கேறியது.....இந்த நேரத்திற்கு எவன் கடை திறந்திருப்பான், நீயே 10 மணிக்கு போனை போட்டு கேட்டுக்கோ...  

அச்சச்சோ மணி 7 ஆகிடுச்சே... 
அவளை ஒருவழியாக சரிகட்டி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்...அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அப்பா என்னிடம் உனக்கு இன்டர்நெட் பில்லு வந்திடுச்சி, மறக்காம பணத்தை கட்டிடு, நாளைக்கும் கட்டலாம், ஆனா 100 ரூவாய் பைனுபா, பார்த்துக்கோ...
அவர் பங்குக்கு கொக்கிய போட்டார்.....

மிச்சம் யார் இருக்கா? என்னையுமறியாமல் என் பிள்ளையை கண்கள் தேடியது....

டாட்டா, டாட்டா, டாட்டா.......

அப்பாடி அப்பனை நல்லா புரிஞ்சி வச்சிருக்கு, எதுவுமே சொல்லாம டாட்டா காண்பிக்குதே....

இன்று எப்படியாவது பத்து மணிக்குள் போய் அலுவலகத்தில் உட்கார்ந்து நல்ல பேரு வாங்கிடனும்....
மெட்ராஸ்ல எந்த சந்துக்குள்ள நுழைஞ்சுனாலும் வெளிய வந்திடலாம், நம்ம மச்சி சொன்னது நியாபகம் வந்தது....

ஒருவழியாய் என் தெருவை கடந்து, குறுக்கு சந்து வழியாக அண்ணா சாலை சிக்னலுக்கு வந்துவிட்டேன்....சிக்னல் எரியவில்லை, வழக்கமான ஒரு மணிநேர மின்வெட்டு  போல என்று போக்குவரத்து துறை அதிகாரியின் வழிகாட்டுதலுக்காக காத்திருந்தேன்....

மணி பார்த்தேன், நேரம் 7.45 என்று காட்டியது...இப்போது கிளம்பினால் இன்னும் 7 சிக்னல்தான், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட 8.30 க்கெல்லாம் சென்று விடலாம். மனம் குதூகலித்தது...

எனக்கு முன்னால் ஒரு வயதானவர் தனது காரை விட்டு இறங்கி கார் கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தார்.....எனக்கு கோபமாய் வந்தது, திடீர்னு சிக்னல் போட்டா இவர் எப்படி உடனே கிளம்புவார், அதனால் வேகமாய் ஹலோ, சார், காரை எல்லாம் வீட்டுல வச்சு துடைக்க வேண்டியதுதானே, சிக்னல்ல வச்சு செய்யிற வேலையா இது, 

சாரி தம்பி, சும்மாதானே இருக்கோம்னு துடைச்சிட்டேன்...திருப்பியும் காருக்குள் ஏறி அமர்ந்தார், வெயில் வேறு மண்டையை பொளந்தது, மணி பார்த்தேன் 8 ஆகி விட்டது,..என்னாச்சு, எதிரில் சைக்கிளை தோளில் வைத்து தூக்கி வந்தவரை அழைத்து கேட்டேன்....

அவர் என்னிடம் என்னான்னு தெரியலை பா... பெரிய ஆக்சி டென்ட்டுன்னு நினைக்கிறேன், எல்லா ஏரியா போலீஸ்காரங்களும் குமிஞ்சி இருக்காங்க...

எத்தனை பேரு இறந்தாங்கன்னு தெரியலை, சோகமாய் சொல்லிவிட்டு போனார்...

மனதிற்குள் ஒரே பதை பதைப்பு, யாருன்னு தெரியலையே, பொண்ணா, பையனா, பஸ்சா, லாரியா, பைக்கா, ஐயோ கடவுளே....

அதற்குள் இன்னொரு மனசு, டேய் மடையா, உனக்கு நேரம் ஆகிடுச்சுடா....
ரிவேர்சிலே போய் வேற சந்து வழியா போய் ஆபீஸ் போடா....அது அவன் தலைஎழுத்து, அதுக்கு நாம என்ன செய்ய முடியும்....நினைத்து கொண்டே திரும்பி பார்த்தால் கால் வைக்க கூட இடம் இல்லை, எல்லோரும் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார்கள்....

பேசாமல் அப்படியே நிற்க ஒரு பெண் ஒருத்தி வந்தாள், மேடம் பெரிய ஆக்சிடேன்ட்டா மேடம் என்று கேட்க அவள் வேகமாய் ஆக்சிடென்ட் இல்லே தம்பி, இன்சிடென்ட், பயர் ஆகிடுச்சி, போலிஸ் வந்துகிட்டே இருக்கு னு சொல்ல, மனம் திக், திக் என்றது....அந்த ஆளு ஆக்சி டெண்ட்டு னு சொல்லிட்டு போனானே, தெரியாதுனா தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...

ஐயோ மணி இப்பவே 8.20 ஆகிடுச்சே...இந்த நேரம் 5 ஆவது சிக்னல் தாண்டி இருப்பேனே....

கடைசியில் பொறுமை இழந்து, வண்டியை ஓரமாய் நிப்பாட்டி விட்டு விறு விறுவென்று முன்னோக்கி நடந்து போய் அங்கே இருந்த அதிகாரியிடம் கேட்டே விட்டேன்....சார் ஆக்சி டென்ட்டா, பயரா, என்ன சார் பிராபளம், எங்களுக்கு நேரமாகி கிட்டே இருக்கு சார், டூ வீலேர்சையாவது கொஞ்சம் கொஞ்சமா விடுங்க சார்...

அவர் உடனே ஏண்டா, இவ்வளவு பேரு பேசாம நிக்காங்கல்ல, உனக்கென்னடா ஒருமையில் பேசினார்....

இந்த ரோ விலே இருக்கிற வண்டி எல்லாம் 10.45 க்கு த்தான் ரிலீசே  ஆகும், சும்மா நொய் நொய்னு புலம்ப கூடாது...

என்னது 10.45 ஆ.???? என்ன சார் ரீசன்,


யோவ், அம்மா இன்னிக்கு 12 மணிக்கு இப்படிக்கா ஏர்போர்ட் போறாங்க, அதுக்குத்தான் ஒத்திகை பார்த்துக்கிட்டு இருக்கோம், பேசாம ஓரமா போய் நில்லுய்யா,

சார் மணி 8.30 தான் ஆகுது.... இப்போ விட்டா கூட நான் ஆபீஸ் போயிடுவேன்...

யோவ், நீ ரொம்ப பேசுறே, இந்த கார் காரரூ ஒன் அண்ட் ஹாப் பன் அவரா நிக்குறாரு...பேசாம மூடிட்டு நில்லுயா..

ஆகா அம்மா டெல்லிக்கு போகும் போது ஆப்பு திமுககாரனுக்கு  மட்டும் இல்லை, நமக்கும்தான் னு நினைச்சுக்கிட்டு நொந்த படியே நின்னேன்....

இப்படித்தானேமா போன ஆட்சியிலும் பண்ணீங்க, திருப்பியும் அதே காத்திருப்போர் பட்டியல்தானா எங்களுக்கு?
 ஒரு தடவை பண்ணது போதாதா? திருப்பியுமா? 

என்ன கொடுமை சார் இது?

Monday, June 13, 2011

நம்பினால் நம்புங்கள்

 இது கதையல்ல நிஜம் 

எனது நண்பன் எனக்கு அனுப்பியது இது...

குக்கே சுப்ரமண்யா, மேங்கலூர், கர்நாடகா வில் எடுக்கப்பட்ட காட்சி என்று கூறினான்...

நான் கூட நம்பவில்லை முதலில், ஒருவேளை கிராபிக்ஸா இருக்குமோ, கொஞ்சம் பார்த்திட்டு தெளிவுபடுத்துங்கோ....ஹா...த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி.....பா........................................................ம்பு!!!!!

Sunday, June 12, 2011

"உண்மைத்தமிழனால்" பாதிக்க பட்டேன்....

அது ஒரு அதிகாலை நேரம், நான் மெல்ல எனது பணிக்கு கிளம்பினேன்....
மெல்ல ஒரு கட்டிலில் ஏறி உள்ளே போனேன்....நல்ல நல்லெண்ணையில் வறுத்த வாசம்...எட்டி பார்த்தேன்.!!!

உண்மைத்தமிழன் ஒய்யாரமாய் தூங்கி கொண்டிருந்தார்....இதில் குறட்டை சத்தம் வேறு பலமாய் இருந்தது.....எனக்கு கடுப்பாய் இருந்தது....அவரது தலையில் ஏறினேன், கன்னத்தில் மெல்ல வருடினேன், குறட்டை போடாதீர்கள் என்று சொல்லிபார்த்தேன், எதையுமே கண்டுகொள்ளவில்லை, அதனால் குகை போன்று இருந்த அந்த காதுக்குள் போனேன்....

சாதாரணமாகவே தமிழன் வந்தாரை எல்லாம் வாழ வைப்பானே, இவன் உண்மைத்தமிழன் ஆயிற்றே, நிச்சயம் நம்மை ராஜாவாக வாழ வைப்பார்  என்று நம்பித்தான் உள்ளே போனேன்...

முதலில் ஆரம்பத்தில் உள்ளே மேடு பள்ளமாக இருந்தது...பிறகு சற்று குறுகலான நீண்ட பாதை....மிகவும் கும்மிருட்டாக இருந்தது....வெளிச்சமே தெரியவில்லை....பாதை தெரியாமல் இங்கும், அங்கும் அலைந்தேன்...தலைவாசல் எங்கே இருக்குன்னே தெரியாமல் சுற்றி சுற்றி வந்தேன்....ஒரு சின்ன வெளிச்சம் கூட கிடைக்காமல் அலைந்தேன்....

திடீரென்று பார்த்தேன், ஒருவித பச்சிலை வாடை இருந்தது, உண்மைத்தமிழன் ஏதோ இலையை சுருட்டி உள்ளே விட்டிருக்கின்றார், அடுத்த அடி எடுத்து வைக்க மனதிற்குள் பயம்...இலையை கொண்டு அடைத்ததால் இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் தெரியவில்லை, அதனால் பேசாமல் நின்று விட்டேன். பின்னர் அவர் இலையை எடுத்ததும் மீண்டும் வெளிச்சம் கிடைத்த திசையை நோக்கி ஓடினேன். 

திடீரென்று மழை தூறல் அடித்தது....திருப்பியும் இலை வந்தது...திருப்பியும் மழை சாரலடித்தது....சற்று நேரத்தில் ஒரு பெரும் வெள்ளம் வந்தது....என்னால் பதுங்க முடியா சூழ்நிலை உருவானது....

(அப்புறம்தான் தெரிந்தது அது மழை அல்ல, என்னை சாகடிக்க அவர் ஊற்றிய தண்ணீர் என்று, இதில் என்னை சாகடிக்க எத்தனை பேர் அவருக்கு ஐடியா வேறு கொடுக்கின்றார்கள், உப்புத்தண்ணீர் ஊத்துவாங்களாமே, உள்ளே புகுந்து ஏதாவது ரெண்டு இடத்தை கடிச்சி வச்சா அப்போ தெரியும் அவனுகளுக்கு, அம்மாம் பெரிய யானையையே அசால்டா பயித்தியம் பிடிக்க வைச்சிருவோம், இந்த மனுசனெல்லாம் எங்களுக்கு ஜிஜுபி) 

உண்மைத்தமிழனை நம்பி உள்ளே வந்தது எவ்வளவு தவறு என்று அப்போது உணர்ந்தேன்....பிறகு ஒரு பெரிய வெள்ளம் வந்தது, இந்த முறை நானும் வெள்ளத்தில் அடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டேன்.....நிறைய தண்ணீர் குடித்ததால் கொஞ்சம் கிறுகிறுவென்று இருந்தது...

உண்மைத்தமிழன் என்னை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்...எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நான் அவரோடு நட்பு பாராட்டி கொண்டிருக்க முயற்சி மேற்கொண்டேன்...ஆனால் அவரோ என்னை அழித்து விடுவது போல பார்த்து கொண்டிருந்தார்...அதன் பிறகுதான் எனக்கு விவரம் புரிந்தது, நான் அவரை கொல்ல போவதாகவும், இம்சை கொடுக்க நினைத்ததாகவும் அவர் என்னை தவறாய் புரிந்து கொண்டு என் மீது கோபம் கொண்டிருந்திருக்கின்றார்.  உண்மையில் அந்த குறட்டை சத்தம் என் தொழிலை செய்ய விடாமல் தடுத்ததால் அதை பற்றி சொல்லத்தான் போனேன்...அது புரியாமல் அவர் தவறாய் முடிவெடுத்து விட்டார்...

முருகா இவருடைய தவறான எண்ணத்தை மாற்றி இவருக்கு நல்ல புத்தியை கொடு என்று என் அப்பன் முருகனிடம் வேண்டினேன். அப்போது அவரது பனியனுக்குள் என்னை போன்ற மற்றொரு "அழையா விருந்தாளி" போய் விட்டார்.. அந்த எரிச்சலில் அவர்  என்னை கீழே இறக்கி விட்டார். என்னே எந்தன் முருகனின் சித்து விளையாட்டு, என்று நினைத்து நான் "எஸ்கேப்". 

தமிழன் தனக்கு யார் என்ன கெடுதல்கள் செய்தாலும், அடுத்த கெடுதல்கள் வரும்போது பழைய கெடுதலை மறப்பான் என்பதை உண்மைத்தமிழனை பார்த்து புரிந்து கொண்டேன்....

அதுபோல எதிரியாக அவர் என்னை நினைத்து இருந்தாலும் என்னை திருவாளர், பூச்சியார், அவர், இவர் என்று கண்ணியமாக பேசியது அவருடைய தமிழ் கலாச்சாரம், மற்றும் கண்ணியத்தை காட்டியது.... வாழ்க தமிழ் கலாச்சாரம்....

ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூவாய் ஊழல் என்றதும் மிக பெரிய அளவில் பேசினார்கள்....இப்போது 26 லட்சம் கோடி ஊழல் என்று தலைப்பு போட்டு செய்தி போட்டதும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூவாய் ஊழல் என்பதை மறந்து விட்டார்கள், "உண்மைத் தமிழன்" என்னை மறந்தது போல.....

Friday, June 10, 2011

ஜென்ட்ஸ் ஸ்பெஷல் (+18+)

இது ஆண்களுக்கு மட்டும்,  

காலத்தின் கோலம் எல்லோரும் அவசர அவசரமாய், பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறோம். எதையும், ஆற அமர்ந்து யோசித்து செய்வதற்கு நேரமில்லை. அதனால், இப்படி ஒரு அதிரடி திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துகொண்டிருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள். 


முழு வடிவம் பெற்றதும் இதற்கு நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்படுகின்றது. திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இது ஒரு சிறந்த படைப்பு என்று பாராட்டி இருக்கின்றார். 


கையாளும் முறைகள் -

எப்போதுமே தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் வாட்டர் கப்சை பயன்படுத்துதல் மிக நல்லது. 

ஒரு நாள் ஒரு கப் என்று பயன்படுத்தலாம். இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்ற உபகரணம் இது என்று மத்திய பொருளாதார நிபுணர்கள் கூறி சான்றிதழ் அளித்துள்ளனர். 

PISSO 2059 Certified Product. 

சற்று அதிகமாய் சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு உள்ளே சில்வர் கோட்டிங் கொண்ட கப்புகளை பயன்படுத்தலாம். 

 மேலே மூடி போட்ட கப்புகளும் இருக்கின்றது. அது பொதுவாக 5 ரூ. சாத்துக்குடி ஜூசை 80 ரூ. க்கு கொடுப்பார்களே, அங்கே மூடி போட்டு கிடைக்கும். அதை கூட பயன்படுத்தலாம். அது சாதாரண கப்புகளை விட சற்று விலை அதிகம். 

சற்று பருமனான ஆண்களே அதை தூக்கி செல்ல முடியும். மற்றபடி சாதாரண கப்புகளை ஒரு வயதில் இருந்து ஐந்து வயது வரை எந்த ஆண்களுமே தூக்கி செல்ல முடியும்.


நுகர்வோரின் கருத்துக்கள்:

திரு. மாரிமுத்து (வயது 2.5, மதுரை) -   நான் எப்பவுமே இதைத்தான் யூஸ் பண்றேன். ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன். நன்றி,


திரு. அஸ்வின் (வயது 1.8, பெங்களூரு) - நான் எனது 1 வயதில் இருந்து இதை பயன்படுத்துகின்றேன். மிகவும் எளிதானது. இரவினில் நிம்மதியான தூக்கம் வருகின்றது, பகலில் கூட அடித்து போட்ட மாதிரி தூக்கம் வருது. சான்சே இல்லை.......ஐ லவ் "யுகப்"

  
திரு. வினோத் (வயது 2, சீவலப்பேரி) - எனக்கு "யூகப்" இல்லேனா முரண்டு பிடிச்சி அழுவேன்...அப்புறம் பார்த்த இடத்திலே எல்லாம் நனைச்சிடுவேன். அதுக்கு பயந்து போயி எங்க அப்பாரு 5 அல்லது 6 ரோல் கப்பு வாங்கி வச்சிருவாரு. 


தேங்க் யு "யு கப்"
யு கப் - "தி ரியல் யூரிநேட் கப்"
(ஆண்களுக்கு மட்டும் )  

Tuesday, June 7, 2011

வேலைவாய்ப்பு செய்திகள்

 

காலியிடங்கள் - 150 க்கும் மேல் 

கல்வித்தகுதி - ஏதாவது பள்ளிக்கூடம் பார்த்திருத்தல் அவசியம்

முன் அனுபவம் - பாளை, வேலூர், புழல் போன்ற இடங்களில் இருந்தோருக்கு முன்னிலை கொடுக்கப்படும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சர்களாக இருந்திருத்தல் அவசியம் அல்லது மத்திய அமைச்சர்களுக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுக தொடர்பில் இருத்தல் மிக, மிக அவசியம்.

தகுதி அடிப்படையில் ஏற்கனவே நான்கு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
அதிலும் 3 தமிழர்களுக்கு ஏற்கனவே இடம் வழங்கப்பட்டு உள்ளது. 

இப்போது எஞ்சியுள்ள 147 இடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்று வருகின்றது. 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : (அடுத்த பதவி காலியாகும்வரை.)
சலுகைகள் - 

கான்க்ரீட்டால் ஆன படுக்கை, மின்விசிறி, இரண்டு புத்தகங்கள், ஒரு தண்ணீர் பானை, தொலைகாட்சி பெட்டி..(டன், டணா, டன்)

காத்திருப்போர் பட்டியல் :
காத்திருப்போர் பட்டியலிலும் முதலில் ஒரு தமிழரே இருக்கிறார்...

முக்கிய குறிப்பு : திமுக மத்தியில் கிடைக்கும் எல்லா பதவிகளுக்கும் தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு முதலில் பதவி வாங்கி கொடுக்கும். அது போலவே இந்த பதவியிலும், தனது கட்சியை சேர்ந்த 3 நபர்களுக்கு இந்த பதவியை ஏற்கனவே பெற்று கொடுத்துவிட்டது...  இப்போது நான்காவது ஒருவரும் திமுகவை சார்ந்தவரே
மேலும் விபரங்களுக்கு:

2ஜி ஸ்பெக்ட்ரம்,
திஹார் முன்னேற்ற கலக்கம்,
dig-tihar@nic.in/ Ph:  28520398  
பாட்டியாலா.                                                
 

 

** ** ** ** வானவில் ** ** ** **

அடர்ந்த ஆகாயத்தில் 
அழகான ஓவியம்;
- ஓவியனின் எண்ணம்  

வெள்ளைச்  சீலைக்காரிக்கு 
கிடைத்த வண்ணச் சீலை;
-விதவையின் ஏக்கம்;

நிர்வாண வானத்திற்கு 
கிடைத்த குட்டியாடை;
- உடையற்ற சிறுவன்


புதுகட்ச்சிக்கு தயாராக
புது கட்சிக்கொடி;
- புது கட்சி தலைவர்

சேர்ந்தே இருப்பதை
எப்படி பிரிப்பது?
-விஞ்ஞானியின் சிந்தனை

காதலிக்கு எப்படி 
வளைத்து கொடுப்பது?
- காதலனின் யோசனை

எப்போதும் என்னோடு
நீ வேண்டும்!!!
-கவிஞனின் கவிதை            ஏழு வளைந்த 
கறுப்பு கோடுகளாம், 
இருட்டாய் தெரிகின்றதே!!!
-குருடனின் பரிதவிப்பு.....
         

இன்னும் ஒரு வாட்டி, ப்ளீஸ்

ஏய் இங்கே பாரேன், நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது,
               
                ஒரு தடவை செய்யலாம், இரண்டாவது தடவையும் செய்யலாம்  என்று டாக்டர்சே சொல்றாங்கோ, இது தப்பே கிடையாதாம், அதுனால  இன்னொரு  வாட்டியும்  செய்யலாம், தப்பே இல்லை, நான் சொன்னா நம்ப மாட்டே, உனக்காகவே இந்த வீடியோ வை யாருக்கும் தெரியாம சுட்டுட்டு வந்திருக்கேன் பா....உனக்கு டௌட்டுனா கீழே இருக்கிற வீடியோ வை பாரேன்...
**

**

**

**

**

நான் ஒரு மிக சிறந்த சமுக நல ஆர்வலர் கிடையாது, எனக்கும் தன்னலம் பார்க்கும் தன்மை உண்டு....ஆனால் இந்த காணொளி மூலமாய் நானும் கண்தானம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றேன்.....நானும் மனிதன் தான், இந்தியன்தான், எல்லாவற்றையும் விட நான் "தமிழன்".......

உங்களுக்கும் கண் தானம் செய்ய விருப்பமா?என்ற லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்....

மேலே இருப்பது

என்னை கண் கலங்க வைத்த காணொளி, 


தற்கொலை செய்பவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.....

தயவு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்யாதீர்கள்....கண் விழி பிதுங்கி விடும், பிறகு கண் தானத்திற்கு அது உதவாமல் போய் விடும்......................

Sunday, June 5, 2011

உனக்கு இருக்கு அவளுக்கு இல்லை......

நானும் என்னோட பிரென்ட்சும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில்ல புறப்பட்டோம்....ஏற்கனவே டிக்கெட் ரிசெர்வ் பண்ணி இருந்தோம். வழக்கம் போல பெட்டிக்குள்ள ஏறுவதற்கு முன்னாடி நம்ம கூட உட்கார போற லிஸ்டை படிச்சி பார்த்தோம், எங்களுக்கு எதிர் வரிசையிலே ரேணுகா 26, மணிகண்டன் 54 என்று போட்டிருந்தது. 

எங்களுக்கு சந்தோசம் தாங்க முடியல, சந்தோசத்துல உள்ளே போனோம், அப்பனும், பொண்ணுமா வராலுக.....அவ பேரே அழகா இருக்கே, ஆளு எப்படி இருப்பா? ஐஸ்வர்யா ராய், இல்லேனா நம்ம சினிமா நடிகை ரேணுகா, பாவனா, நயன்தாரா, சரண்யா, ஷர்மிலி, அசின் கற்பனை குதிரை கட்டுகடங்காமல் போனது...
இன்னிக்கு நைட் ஜாலியா பொழுது போகும்ல...நாங்க உள்ளே போறதுக்கு முன்னாடியே ஏற்கனவே அந்த பொண்ணு உட்காந்து புக்கு படிச்சிக்கிட்டு இருந்தா, அவளோட அப்பன் அவ படிக்கிற புக்கை கூட உட்காந்து பார்த்துக்கிட்டு இருந்தான்....வாவ் என்ன அழகு, எங்க கற்பனை கனவு கன்னிகளை எல்லாம் கண்ணி வெடி வச்சு சிதறடிச்சிட்டா, பேரழகுன்னு ஒரு வார்த்தைய இவளை வச்சித்தான் கண்டுபிடிச்சிருப்பானுங்க......பொதுவா இந்த பொண்ணுங்க இந்த பாழாய் போன இங்க்லீஷ் நாவலைத்தானே படிப்பாளுக......நான் பேக்கை வைக்கிற மாதிரி நைசா அவ என்ன படிக்கிறானு எட்டி பார்த்தேன்...

நடிகருங்க படம் எல்லாம் இருந்த புக்கைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தா....எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித், விசை, சிம்பு, ஆர்யா, சூர்யா னு நிறைய இருந்துச்சி.....அது சரி நாம நமிதா, ஸ்ரேயா, பிபாஷு னு பார்ப்போம், அவளுக நடிகரை பார்க்காளுக, 

ஆனா வெட்கங்கெட்ட மனுஷன் இந்தாளும் உட்காந்து படம் பார்த்துகிட்டு இருக்கானே......

எனக்கு சிரிப்பாய் வந்துச்சி.....பேசாமல் எதிர் வரிசையில் உட்கார்ந்தேன்....நம்ம தோஸ்த்துங்க எல்லாம் அவ முன்னாடி எல்லா காமெடியும், கேலியும் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. அவளை அப்படியே இம்ப்ரெஸ் பண்றாங்களாமாம் ....அவளும் அப்பப்ப எங்களை பார்த்து "குலுக்" னு சிரிச்சு வைப்பா....இப்படியே போயிக்கிட்டு இருந்தது....

திடீருன்னு ரயிலு வேகம் பிடிச்சது.....

அவ உடனே அப் ப் ப் ப் ..........பா, அப்பா அங்கே பாரேன்.....அங்கே பாரேன் னு சொல்லவும், நாங்க எல்லோரும் அவ சொன்ன பக்கத்தை திரும்பி பார்த்தோம், ஒன்னும் சொல்லிகிறாப்புலே   இல்லை....

கொஞ்சம் நேரம் கழிச்சு திருப்பியும் அதே மாதிரிதான் கத்துனா!!!! இந்த வாட்டி அவள் கொஞ்சம் சத்தமாவே அப்பா....அப்பா....

இங்கே பாருங்க அப்பா, மரம், அந்த பில்டிங் எல்லாம் பின்னாடியே போகுது பா னு கத்தினா....

எங்களுக்கு டென்சன், கோவம் எல்லாமே வந்துச்சி......என்ன விளையாடுராலா?  இல்லை நம்மளை கிண்டல் பண்றாளா? ஒன்னும் புரியல, 

கொஞ்சம் நேரம் கழிச்சு திருப்பி அவ அப்பா...அப்பா....அப்பா... என்று கத்தவும், நாங்கள் சற்று டென்சன் ஆனோம், இந்த வாட்டி என்ன சொல்ல போறா? 


அப்பா , அப்பா , மழை பெய்ய்துப்பா....அப்பாவியாய் சினுங்கினாள்....அவரும் ஆமாண்டா கண்ணு, மழை வருது, கையை நீட்டி தொட்டு பாரு, உன் கையிலும் விழும், சில்லுன்னு இருக்கும்டா என்று சொல்ல சொல்ல எங்களுக்கு கோவம் விண்ணை தொட்டது.....

யோவ், உன் பொண்ணு என்ன? லூசா, மரம், செடி, பின்னால் போகுதுன்னு சொல்லுது, மழை பெய்யுது னு மேலே எட்டி பார்க்குது....இதெல்லாம் உலக அதிசயம் பாரு...எங்களை பார்த்து நக்கல் பண்ணுதா?

அந்த பெண்ணோ எங்களை அப்படி ஒரு தீர்க்க பார்வை பார்த்து கொண்டிருந்தாள்...

பொண்ணை பார்த்தா தேவதை மாதிரி இருக்கா, ஆனா ஆளு கொஞ்சம் லூசு போல என்று எங்களுக்குள் பேசிக்கொள்ளவும்....வேண்டுமென்றே அந்த பெண்ணின் அப்பா காதுகளில் விழும்படியே பேசினோம்....

அவளது அப்பா, மெல்ல என்னை அழைத்து 

தம்பிங்களா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுகோங்க, "இத்தனை நாள் உங்ககிட்டே இருந்த அது இன்னிக்குத்தான் அவளுக்கும்  கிடைச்சிருக்கு.....அதுனாலதான் இப்படி!!! எதையும் கண்டுக்காதீங்க ப்ளீஸ் என்று சொல்ல, 

எனது நண்பன் இன்னிக்குத்தான் அது கிடைச்சுதுன்னு சொல்றீரே எது ஓய் ? அந்த "அது" என்று நக்கலாக .... கேட்டுகொண்டே வேண்டுமென்றே தனது சட்டையை தூக்கி உட்புறமாய் பார்த்துகொண்டான்...?

எனக்கும் அவன் கேட்பது சரி என்பது போல் தலை அசைக்க, அவர் சன்னமான குரலில் 

தம்பி அவள் பிறந்த நாள் முதல் கண் பார்வை கிடையாது,,,,தற்போதுதான் உங்களை போன்ற ஒரு இளைஞன் கொடுத்த விழி பார்வையில் அவள் இன்று இந்த உலகத்தை பார்க்கிறாள், உங்களை பார்க்கிறாள், மரம் செடி, கொடி பின்னால் போவதையும் பார்க்கின்றாள், மழை மேலே இருந்து வருவதை பார்க்கின்றாள், சினிமா நடிகர்களை பார்க்கிறாள், தயவு செய்து கேலி செய்யாதீர்கள் என்று சொன்னார்....

ஒரு மிகப்பெரிய இடி எங்கள் தலையில் இறங்கியது.... அவர் சொன்ன அந்த "அது" இது தானா????? பேச்சு மூச்சின்றி விக்கித்து நின்றோம்....

அப்போது அவள் எங்களை பார்த்து இந்த கண்ராவிய எல்லாம் பார்க்குறதுக்கு அந்த "இது" எனக்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம், என்று விரக்தியாய் சிரித்து கொண்டே சொன்னாள்.... 

நாங்கள் அழுதே விட்டோம்......கண்ணின் மகிமையை அன்றுதான் உணர்ந்தோம்..  நாம் என்ன என்ன சுகத்தை எல்லாம் கண்டு ரசிக்கின்றோம்....ஆனால் அவர்கள்......? 


நண்பர்களே நாம் அனுபவித்த பிறகு இதை அவர்களுக்கும் .............................................................................கொடுப்போமே....................................................................................................

Saturday, June 4, 2011

ரகசிய (வக்கிர) கேமராக்கள்

ரோட்ல நடந்து போறது இப்போ எல்லாம் ரொம்ப டென்சனா இருக்கு, அதிலும் பொம்பள பிள்ளைங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு....

முந்தி எல்லாம் ஈவ் டீசிங் பண்ணுவானுங்க...

இப்போ அதை விட ரொம்ப கொடுமையான விஷயம் இந்த செல் போனை வச்சிக்கிட்டி வம்பு பண்றானுங்க...

செல் போனை மெயினா பேசுரதுக்குத்தான், ஆனா ஒவ்வொருத்தனும் அதுல என்னென்னமோ பண்றானுங்க, 

வந்த புதுசுல அழகா ரிங் டோன் வச்சிக்கிட்டு இருந்தானுங்க, ஆனா இப்போ அதுல இருக்கிற காமெராவை வச்சு வித விதமா படம் எடுக்கிறானுங்க...

தன்னோட குடும்பத்தை, தன்னோட வீட்டு பிள்ளைகளை அழகா படம் எடுத்துக்கிட்டு இருந்தது போயி இப்போ பக்கத்து வீட்டு ஆண்ட்டி, பொம்பள பிள்ளைங்க, அடுத்தவன் பொண்டாட்டி னு படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க....

எப்போ கேப் கிடைக்கும் உள்ளே புகுந்து விளயாடலாமுனு மாதிரி எப்போ பொண்ணுங்களோட உடை விலகுதோ உடனே அதை கேமராவுல எடுத்து உடனே அதை இண்டர்நெட்ல போட்டு உலகத்துக்கே காம்பிக்கிரானுங்க...

அதுல அவனுகளுக்கு அப்படி ஒரு அற்ப சந்தோசம்....இதை தனி ஒருவனா தட்டி கேட்கவும் முடியாது, ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்போட இருந்தாதான் இதை தடுக்க முடியும், குறைஞ்சபட்சம் இந்த தப்பை குறைக்கவாவது முடியும்....

உள்ளூர்ல உழுதுக்கிட்டு இருக்கிற உமாவை உலகம் பூரா படம் போட்டு கான்பிக்கிரானுங்க படுபாவி பசங்க....

உண்மையிலேயே ஒருத்தரோட அனுமதி இல்லாம அவங்க படத்தை போடுறது, இல்லேனா அவங்க பேரை யூஸ் பண்றது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றம்...ஆனா எதை பற்றியும் கவலைப்படாம வக்கிரத்தோட விவரிச்சு போடுறாங்க....

ஒரு அம்மா தன்னோட குழந்தைக்கு பால் கொடுக்கிறதை கூட படம் பிடிச்சி போடுறானுங்க, ஒரு கட்டத்துல அந்த குழந்தைக்கு அந்த படத்த பார்க்கிற சந்தர்ப்பம் வந்தா அந்த குழந்தை மனசு என்ன பாடுபடும்.....

இந்த மாதிரி கும்பலோட வேலையே பொம்பளைங்கள படம் பிடிச்சி நெட்ல போடுறதுதான்.....

பொதுவா பொண்ணுங்க தனியா இருக்கிறப்ப தன்னை யாரும் பாக்குறாங்களா னு செக் பண்ணிக்கிறது நல்லது, பஸ்ல போறப்ப நல்லா இழுத்து மூடிக்கிறதும் நல்லது....

முந்தி எல்லாம் ஆபாசமா பேசுறது, அல்லது மெசேஜ் அனுப்புறது னு இருந்தானுங்க, இப்போ ஆபாசமா படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க....   

 
பொது மக்கள் நீங்க உங்க பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு போகும் போது ரொம்ப கவனமா இருக்கணும். கூட்டமான இடத்துக்கு போகும்போதும் அக்கம் பக்கம் ரொம்ப கவனமா இருக்கணும்....

அவங்க படம் பிடிக்க போறது நம்மோட உறவுகளாகவும் இருக்கலாம், அவங்களை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம், ஆனா நம்ம அம்மா, நம்ம அக்கா, நம்ம தங்கச்சி, நம்ம பாட்டி, நம்ம பெண் உறவுகள், உங்க காதலி, உங்க மனைவி சரியான பாதுகாப்பான டிரெஸ் போட்டிருந்தா பயம் இல்லாம போகலாமே...
இந்த விஷயத்தை நான் என் உறவுகள் கிட்டே சொல்லிட்டேன், நீங்க உங்க உறவுகள், நண்பர்கள் கிட்டே சொன்னா அவங்க மூலமா இன்னும் ஆயிரமாயிரம் பெண்கள் பாதுகாப்பா இருக்கலாமே....

மேல உள்ள படங்கள் அனைத்தும் எனது நண்பன் திரு.ஐயம்பெருமாளின் உதவியோடு பெறப்பட்டது. அவர் இணையதளத்தில் இருந்து எடுத்ததாக சொன்னார்.....

Friday, June 3, 2011

ஆபத்தான ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர்......எச்சரிக்கை ரிப்போர்ட்

பிளாக்கர் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

இணையதளத்தில் எத்தனையோ தொழிநுட்ப சிறப்புகள் ஆக்கப்பூர்வமாய் அமைந்திருக்கின்றது. ஆனாலும் எல்லா நல்ல விசயத்திலும் ஒரு கெட்ட விசயங்களும் அடங்கி இருக்கும்..

அதுபோலவே இணையத்தில் கொடுக்கும் ஒரு சில சமுக வலைத்தளம் அதாவது சோசியல் நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஆர்க்குட், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை பொழுதுபோக்கு விசயமாக இருந்தாலும், அது பேராபத்தில் முடிவடையும் என்பது யாரும் அறியாத ஒன்று. 

இவனுக்கு ஆர்குட், பேஸ் புக் கில் நண்பர்கள் கிடைக்காததால் பொறாமையில் சொல்கின்றான் என்று நிறைய பேர் என் கருத்துக்களை மதிக்க வில்லை.

ஆர்குட், பேஸ்புக் போன்றவை எல்லோருக்கும் 5GB வரை இலவசமாக இடம் கொடுக்கின்றது. காரணம் என்ன? உங்களுக்கு அப்படி கொடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்?

நீங்கள் ஆளாளுக்கு புகைப்படங்களையும், மற்ற விபரங்களையும் உங்கள் அக்கௌண்டில் இணைக்கிறீர்கள். ஒரு திருமண இணையதளம் என்பது மணப்பெண் அல்லது மணமகன் புகைப்படத்தை பத்திற்கு மேல் அனுமதிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு அதற்கு மேல் இடம் கொடுத்தால் அவர்களது ஸ்பீட் பேண்ட்வித் குறைந்து விடும் என்பதுதான்...ஆனால் ஒரு ஆர்குட் அல்லது பேஸ்புக் என்பது 1000 த்திற்கும் மேலான புகைப்படங்களை சேமிக்க உதவுகின்றதே, அதற்க்கு காரணம் என்ன? 

தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே.....

ஒரு ஆர்குட் அல்லது பேஸ்புக்கில் லட்சக்கணக்கான வாசகர்கள், நண்பர்கள் இணைகின்றார்கள். இப்படி உங்களை இணைப்பதனால் அந்த நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கின்றது? தெரிந்தவர்கள் தாராளமாய் கூறலாம். 
இது ஒரு தொண்டு நிறுவனம் என்று மட்டும் கற்பனை கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை அப்போதே மறந்து விடுங்கள். 

உண்மையிலேயே அதிர்ச்சி செய்தி என்னவெனில், இணையதளம் வழியாக கொள்ளை அடிக்கும் கும்பல் (இயக்கம்) ஒன்று இந்த ஆர்குட் மற்றும் பேஸ்புக் நண்பர்களின் முகவரிகளை திருடி, அதன் மூலமாக கிடைக்கும் முக்கிய தகவல்களை உருவி கொள்கின்றது. 

கிரடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவரா நீங்கள்????

அது என்ன முக்கிய தகவல்கள் ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் இருக்க போகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? 

இணையதளம் மூலமாக கொள்ளை அடிக்கும் அந்த கும்பல் அல்லது இயக்கம் ஒவ்வொரு ஐபி அட்ரஸ் மூலமாக நமது சிஸ்டத்தை அலசி ஆராய்கின்றது. இதற்கென்று அவர்கள் ஒரு மென்பொருள் வைத்து தேடுகின்றார்கள். 

அது என்ன செய்கின்றது எனில் நமது சிஸ்டத்தில் சேர்த்து வைத்திருக்கும் 16 இலக்க எண்ணை (கிரடிட் கார்ட், டெபிட் கார்ட்) தேடி நமது அக்கௌண்டில் எவ்வளவு பணம் மாசம் கைமாற்றுகின்றோம் என்பதை தெரிந்து கொண்டு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை உருவுகின்றார்கள். 

அதாவது ஒருவர் மாதம் 200 ரூபாய் டிரான்சாக்சன் செய்கின்றார் என்று வைத்து கொள்வோம், அப்போது அவரிடம் இருந்து 2 ரூவாய் எடுக்கபடுகின்றது.

இப்படியே உலகம் முழுவதுமாய் ஒரு 10 கோடி பேரிடம் 2 ரூபாய் எடுத்தாலே போதுமானது. 

அதுபோல 2000 ரூபாய் என்றால் 20 ரூபாய் 
20000 ரூபாய் என்றால் 200 ரூபாய். 
200000 ரூபாய் என்றால் 2000 ரூபாய். 

இதில் வேடிக்கை என்னவெனில் நமக்கு வரும் பணம் எடுத்த விபரச் சீட்டு (பேங்க் ஸ்டேட்மென்ட்) வரும்போது நம்மால் அதை கண்டுபிடிக்க இயலாது. 

காரணம் 200 ரூபாய் டிரான்சாக்சன் செய்பவர் அந்த 2 ரூபாயை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார். ஏதாவது டேக்ஸா இருக்கும், ரெண்டு ரூபாதானே போனா போகுது..... இதைதான் அவர்கள் எல்லோரிடமும் செய்கின்றார்கள். இதை செயல்படுத்துவதற்கென்று ஒரு மர்ம கும்பல் அலைந்து கொண்டுதான் இருக்கின்றது. 

போலியான முகவரி கொடுத்து ஆர்குட்டில் இருக்கிறீர்களா? படியுங்கள் இதையும்..............

ஒரு சிலர் சொல்லலாம், அவர்கள் ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் தவறான தகவல் அல்லது போலியான தகவல் கொடுத்திருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு ஒன்றும் பயமில்லை என்றும் நினைக்கலாம்.... 

நீங்கள் நினைப்பது தவறு....நீங்கள் தவறான தகவல் கொடுத்திருக்கலாம், ஆனால் உங்களை பின் தொடருபவர்கள் அல்லது உங்களது ரசிகர்கள் அல்லது உங்களை தொடர்பில் கொண்டவர்களின் தகவல்களும் அவர்களுக்கு சென்று சேருமே...ஆர்குட் அல்லது பேஸ்புக் என்பது ஒரு நெட்வொர்க், அந்த நெட்வொர்க்கில் எல்லோருமே தவறான அல்லது போலியான தகவல்கள் கொடுத்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றே நான் நினைக்கின்றேன்....அதற்கு என்ன செய்ய போகின்றீர்கள். 

நம்மை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவரிடமோ  அல்லது காய்கறி காரனிடம் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கும் சண்டை போடும் நாம் இப்படி இணையத்தில் நடக்கும் கோடிக்கணக்கான மோசடியை ஏன் கண்டு கொள்வதில்லை என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. அதற்க்கு காரணம் ஆர்குட் அல்லது பேஸ்புக் என்ற போதை பொருளே ஆகும். 

இதற்கும் ஆதாரம் வைத்திருக்கின்றேன்....எனது நண்பன் வின்ஜீத் நியூ ஜெர்சி யில் இருக்கின்றான். அவனது கடந்த மாத பேங்க் ஸ்டேட்மென்ட்டை பார்க்கவும். அதில் எடுக்கப்பட்ட பணத்திற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மேலும் பணம் எடுத்தது போக மீதம் இருக்கும் தொகையை பாருங்கள். குழறுபடி ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை வங்கியில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

உங்கள் வீட்டு பெண்களின்  புகைப்படத்தை ஊரில் உள்ள நண்பர்களுக்கு, உறவுகளுக்கு  தெரிவிக்க வேண்டுமா?  

அடுத்தது நம்மில் பலர் நமது வீட்டு பெண்களின் (அம்மா, அக்கா, தங்கை, மனைவி, தோழி, பெண் பிள்ளைகள்) புகைப்படங்களை, குடும்ப புகைப்படங்களை இணையதளத்தில் ஏற்றி அழகு பார்க்கின்றார்கள். அது தவறு இல்லை, ஆனால் சில குறிப்பிட்ட இணையதளங்களே அதற்கு பாதுகாப்பானது. 
 
வழக்கம் போல் ஆர்குட் அல்லது பேஸ்புக் அதற்க்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை. இதிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களை ஆபாச இணையதளங்களுக்கு எடுத்து விற்று அதையும் பணம் பார்க்கும் கும்பலும் இருக்கின்றது. 

உங்கள் மனைவி அல்லது அம்மா அல்லது சகோதரி அல்லது தோழியின் படங்கள் முகம் தெரியா ஒருவனுக்கு போதையாக இருக்க கூடாது. காரணம் ஆபாச அல்லது வக்கிர படங்களை ஏற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு சில இணையதளங்கள் விளம்பரம் கொடுக்கின்றது. 

உதாரணமாக 

Shareapic - The pic sharing site that gives back!


Shareapic.net is a free image hosting and photo sharing service that pays users to host their ... Upload unlimited pictures - No file size restrictions ...

அந்த விளம்பரத்தை நம்பி நம்மூர் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு தோழிகளின் அல்லது அடுத்த வீட்டு பெண்களின் புகைப்படங்களை ஏற்றி விட்டு பணம் வரும் என்று காத்து கொண்டிருக்கின்றார்கள். 

இப்போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்ப வேண்டுமா, அதற்கு நீங்கள் செய்யவேண்டியது, jpeg/gif/png file - ஐ ms-word - இல் காப்பி செய்து மற்றவர்களை பார்வை இடச் செய்யலாம். 

நேரிடையாக அப்லோடு  செய்தால் கீழ்கண்டவாறு நடக்க வாய்ப்புகள் இருக்கின்றது....

என் நண்பனின் சகோதரிக்கு யூஎஸ் சில் நடந்த சம்பவம் இது. அவளது  மாப்பிள்ளை தனது மனைவியின் புகைப்படத்தை ஒரு ஆபாச இணையதளத்தில் பார்த்து விட்டு திருமணம் செய்த ஒரு மாதத்தில் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு செய்தார். அவர் செய்தது தவறுதான் என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை அவ்வாறு நினைக்க செய்துவிட்டது. உண்மையில் அந்த புகைப்படம் கொடைக்கானலில் ஒரு ஹோட்டல் அறையில் குடும்பத்தோடு பிக்னிக் வந்த போது எடுத்தது. ஆனால் அது எப்படி ஆபாச தளத்தில் வந்தது என்று பார்த்தால் ஆர்குட்டில் இருந்து யாரோ அதனை எடுத்து ஆபாச இணையதளத்தில் வேறு ஒருவரோடு நிற்பது போல் பதிவு செய்திருக்கிறார்கள்., அவளோடு இணைக்கபட்டவன் ஒரு கருப்பனின் புகைப்படம். 

தவறு எங்கே இருக்கின்றது என்பது புரிகின்றதா? 

அடுத்தது இந்தியாவில் வலம் வரும் ரகசிய காமிராக்கள், குடும்ப பெண்களே உசார்....(கவர்ச்சியை ரசிக்கும், அனுபவிக்க விரும்பும் பெண்களுக்கு அல்ல)   விரைவில் உங்கள் மின்சாரத்தில் மின்சாரமாய் பாயவிருக்கிறது, தொடர்ந்து படியுங்கள்......கருத்துக்களை தெரிவியுங்கள்....

Thursday, June 2, 2011

சந்தை - புது வரவு :


நோக்கியா நிறுவனம் புது தயாரிப்பு ஒன்றை நேற்று மாலை அறிமுகம் செய்துள்ளது.

நிச்சயம் அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும் என்று இதன் நிறுவன மேலாளர் கூறியுள்ளார்.

இதற்க்கு உரிய  முழு விளம்பர ஒப்பந்தத்தை சன் மற்றும் ஸ்டார் விஜய் பெறுவதற்கு போட்டா போட்டி போடுகின்றது....

இந்த மொபைல் போனின் விளம்பர மாடலாக தமிழகத்தின் முன்னணி நடிகரான சூர்யா, விஜய், அஜித், கார்த்திக்,  ஜீவா, மற்றும் நடிகைகளில் திரிசா, நமிதா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்......நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் உடல்நிலையை காட்டி தவிர்த்து விட்டதாக வட்டார செய்திகள் கூறுகின்றன.....


வசதிகள் 

*    
* மற்ற போன்களை போல் இல்லாமல் இதில் இருந்து எண்ணிலடங்கா   
   அழைப்புகள் செய்யலாம், பெறலாம்.

* போனை வாங்கும் போது பணம் கட்டினாலே போதுமானது.

* எந்த நேரம் பேசினாலும் இலவசம்.

* இதில் இருந்து எடுக்கும் படங்கள் அனைத்தும் 120 எம்பி பிக்செல் தரம் 
   கொண்டது. அப்படியே உங்கள் முகம் காட்டும் தன்மை கொண்டது. 

* தற்போது பீட்டா சோதனையில் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வந்துள்ளது....

* மேலும் விபரத்திற்கு www.nokea.in காணலாம். 

* விடுக்கும் அழைப்புகளுக்கு பணம் கட்ட வேண்டிய அவசியமே இல்லை. 

அதனுடைய மாடல் கீழே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது...
தயவு செய்து இதை யாரும் காப்பி செய்யவேண்டாம் என்று எச்சரிக்கிறோம்....
இது நோக்கியாவுடன் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது......

1000 ####500 ####


250 ####


100 ####


50  ####25 ####10 ####9 ####8 ####7 ####


6 ####5 ####4 ####3 ####2 ####1 ####0 ####


-1 ####


-2  ####


-3 ####


-4 ####

 
 -------------------------------------------------------------------------------------------------------------
 "This Message and its contents is intended solely for the addressee and is proprietary.Information in this mail is for Minsaaram Business Usage only. Any Use to other than the addressee is misuse and infringement to Proprietorship of Minsaaram.blogspot.com.If you are not the addressee please return the mail to the sender.Minsaaram.blogspot.com"              

Wednesday, June 1, 2011

இன்றைய ஸ்பெஷல்

தத்துவம் 1 
ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்
நீங்கள் அவர்கள் மீது பூவை கொண்டு எறியுங்கள்;
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்,
மவனே சாவட்டும்,