பங்காளிங்க..

Tuesday, July 19, 2011

பகல் கொள்ளை


இன்று வியாபாரத்தில் விற்கப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை தராசு மூலமாய் நிறுத்து கொடுக்கப்படுகின்றது.

அவசர உலகத்தில் நம்மால் நம் வீட்டு பெரியவர்கள் மாதிரி நின்று பேரம் பேசி வாங்க முடியாது, வந்தோமா பாக்கெட்டை வாங்கினோமா, போனோமா என்று இருக்கின்றோம், அது இந்த மாதிரியான கொள்ளையடிக்கும் வியாபாரிகளுக்கு வசதியாக போய் விடுகின்றது....


 
என்ன செய்கின்றார்கள் இவர்கள்? யார் இவர்கள்? எங்கிருந்து வந்தவர்கள்?

எலெக்ட்ரானிக் தராசு வைத்திருக்கும் இவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் 100 கிராம் வரை கொள்ளையடிக்கின்றார்கள்...


அதற்கு அவர்கள் செட் செய்வதற்கு ஒரு பட்டனை வைத்திருக்கின்றார்கள்...பழங்கள், இனிப்பு, கார வகைகளை வைக்கும் போது அந்த பட்டனை செயல்படுத்தி விடுகின்றார்கள். அதனால் உங்களுக்கு ஒரு கிலோவிற்கு பதிலாக 900 கிராம் மட்டுமே கிடைக்கின்றது....


அந்த சமயத்தில் நீங்கள் ஒரு 100 கிராம் பாக்கெட்டை வைத்தால் அது 200 கிராம் என்று காண்பிக்கும். இதை பெரும்பாலும் செய்வது யாரென்று பார்த்தால் கேரளாவில் இருந்து இங்கு வந்து தொழில் செய்யும் வியாபாரிகளே....
 
நமது தமிழ் நாட்டு வியாபாரிகள் சற்று பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். இதுதான் மற்ற மாநில வியாபாரிகளுக்கும், நமது வியாபாரிகளுக்கும் உள்ள வித்யாசம்....நான் எல்லா வியாபாரிகளையும் சொல்லவில்லை, ஒரு சில கயவர்களைத்தான் சொல்லி கொண்டிருக்கின்றேன்....

இதை நான் சந்தேகத்தோடு கேட்ட போது அவன் என்னிடம் சொன்னது இது ஏற்கனவே அப்படித்தான் செட் செய்யப்பட்டிருகின்றது. டிரே வைத்து பொருளை வைப்பது போல் செட் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார்.. அவர் விருப்பபடியே டிரேயை வைத்து பார்த்தால் 1kilo 400 கிராம் என்று காட்டியது....டிரேயை மட்டும் தனியாக வைத்து பார்த்தால் 300 கிராம் என்று காட்டியது...ஏனெனில் டிரேவிற்கும் அது 100 கிராம் எக்ஸ்ட்ரா காட்டியது....நியாயப்படி அது 1 கிலோ 200 கிராம் என்றுதான் காட்டி இருக்க வேண்டும்...ஆக ஏதோ ஒரு குளறுபடி அரங்கேறி இருப்பது நன்கு புரிந்தது....அப்போதுதான் ஒருவர் 5 கிலோ சுவீட் வாங்கி இருந்தார்...அவருக்கும் அதே சந்தேகம் வரவே மீண்டும் ஒவ்வொரு பொருளாக நிறுத்து பார்த்தார்....அவருக்கு குழப்பம் வரவே....அவர் வாங்கி வைத்திருந்த பூஸ்ட் டப்பாவை டிரே இல்லாமல் நேரிடையாக வைத்து நிறுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தோம்....1/2 கிலோ பொருள் 608 என்று அளவு காட்டியது....


மீண்டும் சந்தேகம் வரவும் அவனை கொஞ்சம் "கவனி"க்கவும் உண்மையை சொல்லி விட்டான்...அவன் கடை திறந்து 3 ஆண்டுகள் ஆகின்றது....அவன் எப்போது இந்த சில்மிசத்தை ஆரம்பித்தான்....ஆரம்பத்திலேயேவா? இடையிலா? அல்லது சமீபத்திலா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?

அதற்குள் கூட்டம் கூடியது...கூடி இருந்த ஒரு சிலர் 100 கிராம்தானே, அதற்க்கு போய் இப்படியா சண்டை போடுவது என்று கேட்டார்...நான் வாங்கிய பொருளுக்கு வேண்டுமானால் மன்னிக்கலாம், ஆனால் இவனை நம்பி 4.5 கிலோ  வாங்கி விட்டு 5 கிலோவிற்கு காசு கொடுத்து சென்று இருக்கின்றாரே...

தமிழன் ஏற்கனவே அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து விட்டான்....ஏற்கனவே நாம் இளிச்சவாயர்களாக இருக்கின்றோம், இந்த லட்சணத்தில் ஏமாளியாகவும் இருந்தால் விரைவில் ஒகேனக்கலும், கட்சத்தீவும் நம்மிடம் இருந்து போனது போன்று மொத்த தமிழகமும் கை மீறி போகும் என்பதில் துளியும் ஐயமில்லை.....

Wednesday, July 13, 2011

சிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதி? ஒரு "பகீர்" ரிப்போர்ட்...


எல்லா அரசியல்வாதிகளையும் தாண்டி இன்று சிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதியாக வாழ்கின்றார் என்ற ஐயம் எல்லார் மனதிலும் தோன்றுகின்றது......

ஒரு சிலர் நிச்சயம் அவரிடம் அவ்வளவு பணம் இருக்கும், எங்காவது புதைத்து வைத்திருப்பார் என்று உறுதியாக சொல்கின்றார்கள்.

இதனை சிபிஐ கைகளில் ஒப்படைத்தால் நிச்சயம் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்கின்றார்கள்....

ஆனால் சிதம்பரம் அவ்வளவு பணம் வைத்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு சிலர் அடித்து சொல்கின்றார்கள்....

எதுவாக இருந்தாலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லையே என்று மற்றொரு பிரிவினர் சொல்கின்றார்கள்....

அவ்வளவு பணம் இருக்குமா என்பதை பொதுமக்கள் முன்னிலையில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.....அப்போதுதான் நம்மால் எதையும் உறுதியாக சொல்ல முடியும்.....

அவர் அவ்வளவு தூரம் பேமஸ் கிடையாது...அதனால் அவ்வளவு பணம் நிச்சயம் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள்....

என்னதான் நடக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.....

சிதம்பரம் கோயிலில் பத்மநாபா சுவாமி கோவில் அளவிற்கு பணம் புதைந்து இருக்குமா? சிதம்பரம் நடராஜர் அந்த அளவிற்கு பணக்காரரா என்பதில் உங்கள் கருத்துக்கள் என்ன? தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்....

ஆந்திராவில் ஒரு திருப்பதி, கேரளாவில் ஒரு திருவனந்தபுரம், நமக்கு ஏன் இந்த "சிதம்பரம்" இருக்க கூடாது? என்பது தான் என் கேள்வி?

அவசரப்பட்டு நீங்கள் வேறு ஏதாவது சிதம்பரத்தை நினைத்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?திருப்பதி னு தானே நீங்க சொல்றீங்க...அதுனாலதான் நான் சிதம்பரம் னு சுருக்கி சொன்னேன்...
கண்டிப்பா வன்முறைக்கு  நான்  பொறுப்பாக  மாட்டேன்!!!!!!!!!!!!!!!!

Monday, July 11, 2011

தமிழ்நாட்டு "தில்லாலங்கடி" நிலைமை

விரைவில் உங்கள் ஏரியா வில் இருக்கும் பத்திரிகையில் வரவிருக்கும் செய்திகளின் தொகுப்பு

காட்சி 1
பேசன்ட் - டாக்டர், ஒன்னு இருக்கு ஆனா இல்லை....

டாக்டர் - என்ன சார் குழப்புறீங்க, இருக்கிறது எப்படி இல்லாம போகும்? 

பேசன்ட் - அதான் டாக்டர் எனக்கும் புரியலை?

டாக்டர் - கொஞ்சம் விளக்கமா சொல்லு, என்ன உன் பிராப்ளம்?

பேசன்ட் - டாக்டர் என் ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைச்சி வாங்குன இடம், இப்போ இருக்கு,

டாக்டர் - அப்புறம் என்ன பிரச்சினை?

பேசன்ட் - இப்போ இருக்கு, ஆனா இல்லை....

டாக்டர் - வம்பா, என்னை கொலைக்காரன் ஆக்காதே?
 
பேசன்ட் - பொறுமையா கேளுங்க டாக்டர், அந்த இடம் இருக்கு, ஆனா என்கிட்டே இல்லை..

டாக்டர் - உங்க நிலைமை புரியுது, ஆனா நான் டாக்டர், இப்போதான் இந்த கட்டிடம் வாங்கி தொழிலை தொடங்கி இருக்கேன், நான் என்ன செய்ய முடியும்? நீங்க நல்ல லாயர்கிட்டே போங்க...

பேசன்ட் - நான் வாங்குன அந்த இடத்தோட பத்திரம், பத்திரமா இருக்கு, ஆனா அந்த இடம் இப்போ என்கிட்டே இல்லை, நீங்க தொழில் தொடங்கி உக்காந்திருக்கீங்க, அதைதான் சொன்னேன், உங்ககிட்டே இருக்கு, ஆனா
என்கிட்டே இல்லேன்னு...

டாக்டர் - ?????!!!!!??????

காட்சி - 2

வெளிநாடு வாழ் இந்தியர் - ஏன் பா வாட்ச்மேன், ஆறு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு இடம் வாங்கி போட்டேனே பா?, இப்போ ஒரு இடம்தான் இருக்கு, இன்னொரு நிலம் எங்கே?

வாட்ச்மேன் - இல்லே முதலாளி, அந்த ஒரு இடம் தான் இது......

வெளிநாடு வாழ் இந்தியர் - உன்கிட்டே நான் போறப்ப என்ன சொன்னேன்?

வாட்ச்மேன் - இடத்தை பார்த்துக்க சொன்னீங்க,

வெளிநாடு வாழ் இந்தியர் - எத்தனை இடத்தை பார்த்துக்க சொன்னேன்?

வாட்ச்மேன் - ரெண்டு இடம் பார்த்துக்க சொன்னீங்க,

வெளிநாடு வாழ் இந்தியர் - குட், நான் பார்த்துக்க சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு இங்கே இருக்கு. அந்த ரெண்டாவது இடம் எங்கே இருக்கு?

வாட்ச்மேன் - அந்த ரெண்டாவது இடம்தானே இது!!!

வெளிநாடு வாழ் இந்தியர் - ???? !!!! ?????

காட்சி - 3

விவசாயி - அய்யா, எனக்கு ஒரு புகார் கொடுக்கணும்,

போலிஸ் - சொல்லுய்யா, என்ன கம்ப்ளைன்ட்?

விவசாயி - நேத்து நைட் நான் என் வீட்டு தோட்டத்துல தூங்கிகிட்டு இருந்தேன், இன்னிக்கு காலையிலே வேற ஒருத்தன் அது அவனோட இடம்னு சொல்லி என்னை வீட்டை விட்டு  நடு  ரோட்ல துரத்திட்டான் அய்யா, என் கட்டில், கோவணம்னு உட்பட எல்லாத்தையும் உருவிட்டு போயிட்டான் அய்யா,

போலிஸ் - நீ ஏன்யா தோட்டத்துல தூங்குற?

விவசாயி - புழுக்கமா இருக்கேன்னு தோட்டத்துல தூங்கினேன் அய்யா, இப்போ என்ன அய்யா பண்றது?

போலிஸ் - ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திட்டு போ?

விவசாயி - எப்படி எழுதணும் அய்யா, என்ன எழுதணும்?

போலிஸ் - இது வேறயா? சரி எழுதிக்கோ "வணக்கத்திற்குரிய அய்யா, நேத்து நைட் நான் தூங்கிகிட்டு இருந்தப்ப யாரோ என்னோட கட்டிலை தூக்கிட்டு போயிட்டாங்க, நான் கட்டி இருந்த கோவணத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க, கட்டிலோட அங்க அடையாளம், 6 அடி நீளம், 3 அடி அகலம், மஞ்ச கலர்ல இருக்கும், அதே மாதிரி என்னோட கோவணம் பட்டு துணியிலே இருக்கும் னு" எழுதி கொடுத்திட்டு போ, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்றோம்,

விவசாயி - அய்யா, என்னோட இடம் என்ன அய்யா ஆச்சு?

போலிஸ் - அதான் சொல்றோம்ல, கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்ரோம்னு, அப்புறம் திருப்பி திருப்பி தொந்திரவு பண்ண கூடாது, போ, போ!

விவசாயி - ????? !!! ????
காட்சி - 4

ஏழை பெண் : அய்யா, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியா?

கமிசனர் : எஸ் கமிசனர் ஸ்பீகிங், என்னம்மா வேணும் உங்களுக்கு?

ஏழை பெண் : அய்யா, குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து 450 சதுர அடில ஒரு வீடு கட்டி இருந்தேன் அய்யா?

கமிசனர் : சரிம்மா, இப்போ ஏதாவது பிரச்சினையா மா?

ஏழை பெண் : ஆமாய்யா, நேத்து பத்து பதினைஞ்சு பேரு வீட்டுக்குள்ள வந்து இது அவங்க இடம், உடனே காலி பண்ணுங்க னு சொல்றாங்கய்யா?
கமிசனர் : நீங்க எந்த ஏரியா மா?
ஏழை பெண் : அய்யா நான் மதுரை பக்கத்துல இருக்கிற ஒரு சித்தூருங்கய்யா?

கமிசனர் : என்னது சித்தூரா? ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, அவங்க எந்த ஏரியா னு தெரிஞ்சிருந்தா உடனே ஆக்சன் எடுத்திருப்பேன்,
(சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்)

கமிசனர் - ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க,

ஏழை பெண் : அய்யா, நான்தான் அய்யா, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 450 சதுர அடி இடம் பத்தி பேசினேனே?  நான் மதுரை பக்கத்திலே இருக்கிற சின்ன ஊருலே இருந்து பேசுறேன் அய்யா,

கமிசனர் : அப்போ சித்தூருனு சொன்னீங்களே அம்மா,

ஏழை பெண் : சின்ன ஊருங்கிரத, சித்தூருனு வாய் தவறி சொல்லிட்டேன் அய்யா...

கமிசனர் : உங்க ஏரியா லே இருக்கிற போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுங்கம்மா, நான் விசாரிக்க சொல்றேன்...

ஏழை பெண் : அய்யா, ரெண்டு நாளா போலீஸ் ஸ்டேசனையே காணோமுன்னு போலீஸ்காரங்க எல்லோரும் தேடிகிட்டு இருக்காங்கய்யா, அதுனாலதான் நான் உங்ககிட்டே சொன்னேன்...

கமிசனர் : என்னம்மா உளர்றே???!!!???

ஏழை பெண் : சத்தியமா சொல்றேன் அய்யா, என்னோட நிலத்து பக்கத்துலே இருந்த போலீஸ் ஸ்டேசனையும்  சேர்த்து லவட்டிகிட்டு போயிட்டானுங்க அய்யா....

கமிசனர் : ???? ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, (சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்) ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க.........

********

அழகிரிபேரம்

எது நடந்ததோ (நிலம் அபகரிப்பு) அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ (தயாநிதி மாறன் ராஜினாமா) அதுவும் நன்றாகவே நடக்கிறது...
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக புலம்புகின்றாய்?
எது (வீட்டு, தரிசு, விவசாய நிலங்கள்) இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது
எதை நீ கொண்டுவந்தாய் அதை என்னிடம் இழப்பதற்கு
எது இதுவரை நன்றாக நடந்ததோ,  அது இனியும் நன்றாகவே நடக்கும்...
எது இன்று உன்னுடையதோ (வீடு, நிலம், வயல்) அது நாளை என்னுடையது, நாளை மறுநாள் என் மகனுடையது...

Wednesday, July 6, 2011

அவுத்து போட்ட சாமியாருக

ஏன் நைனா, இந்த முற்றும் திறந்த சாமியார்கள் கிட்டே மட்டும் எப்படி இவ்வளவு கிடைக்குது?

அவனுங்க வேண்டாம் வேண்டாம் னு சொன்னாலும் (எவனுமே சொன்னதில்லை) இந்த கூறு கெட்ட ஜனங்க அவனுகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிரானுங்க....

எல்லாம் நம்ம ஜனத்தை சொல்லணும்....சாமியாருக்கு எதுக்கு கோடிக்கணக்குல கட்டிடம், வசதி, புண்ணாக்கு எல்லாம்.நல்லா அருள், குறி சொல்றானா, அவனுக்கு ஒரு கிலோ அரிசியை கொடு....இல்லேனா பால், பழம் கொடு.....அத விட்டுட்டு வயாகரா ஒரு ஸ்பூன் வாயிலே ஊட்டி விட்டா இப்படித்தான் கேடுகெட்ட விசயமெல்லாம் நடக்கும்....


இது பத்தாதுன்னு பங்களா எதுக்கு கொடுக்கணும்? தங்கம், வைரம் எதுக்கு கொடுக்கணும்.......பணத்தை கோடி கணக்குல எதுக்கு கொடுத்து அவனை பணக்காரன் ஆக்கணும்....பணம் வந்திடுச்சா அவனுக்கு வேண்டிய அடுத்த போதை பொம்பளைதானே, அதுக்கும் பொண்ணுகளை வசியம் பண்ணுவான்...தஸ்ஸு புஸ்ஸுன்னு உளறுவான்....அது நம்ம கூறு கெட்ட ஜனத்துக்கு அருள்வார்த்தையாக மாறிடும்....

பொண்ணுக்கு பயித்தியம் பிடிச்சிருக்கு, என்கூட அனுப்பி வை, தெளியவைக்கிறேன்னு சொல்வானுங்க...முட்டாள் ஜனங்க, தன் சொந்த பொன்னை சாமியார்கிட்டே அனுப்பிட்டு வாசல்ல காவல் காத்துகிட்டு நிப்பாங்க! ஆனா உள்ளே அந்த சாமியாருங்க அந்த பொண்ணை அம்மாவாக்கி, பயித்தியமாவே திரிய விட்டுருவானுங்க.....


ஏன் மக்களே, நீங்களே இடத்தையும் கொடுத்து, பொன், பொருள், பணம்னு எல்லாத்தையும் வாரி வாரி கொடுத்து கடைசியிலே பொண்ணையும் அனுப்பி வைச்சிட்டு அவனை பெரிய ரௌடியாக்குறீங்க....அப்புறம் அவன் எப்படி அடங்குவான்? 

எல்லா சாமியாரும் பாருங்க, நல்ல வசனம் பேசுவானுங்க....புதுசு, புதுசா பேசுவானுங்க...கடைசியிலே பெரிய அல்வாவை கிண்டி கொடுத்திட்டு போயிடுவானுங்க....

இதுதானே காலம், காலமா நடக்குது....எனக்கு தெரிஞ்சி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளுவர், ஷீரடி பாபா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவிர எவனும் ஏழைங்க கிடையாது.ஆனா இந்த மனுசங்க எல்லாருமே ஏழை யாவே வாழ்ந்தவங்க..அவங்க பேரை சொல்லி வந்தவனுங்க எல்லோரும் பணத்திலே மிதக்கிறானுங்க ...


நான் என் மதத்திலே இருந்தே இதை சொல்றேன்.... இதை மாதிரி கிறித்துவத்திலும், இசுலாமத்திலும் இருக்காங்க....அத எல்லாம் சொல்லி நான் மதப் பிரச்சினையை தூண்ட நினைக்கலை... எத்தனையோ கிறித்துவ பாதிரியார் பாலியல் பிரச்சினைல சிக்கி இருக்காங்க....அது போல எத்தனையோ இசுலாமிய மத போதகர்கள் அவங்க மத கோட்பாட்டுக்கு மீறி செயல்பட்டு இருக்காங்க....

மக்களுக்கு சேவை செய்யறதுக்கு எத்தனயோ வழி இருக்கு....ஆனா இங்கே பல பேரு ஆண்டவன் பேரை சொல்லி அவித்து போட்டு அலையுரானுங்க....

பிரேமானந்தா....எப்பவுமே பக்தி பரவசத்துலே யேதான் இருப்பாரு...இப்போ பரலோகம் போயிட்டாரு....

ஒரு சாமியாரு ஷேர் மார்கெட்டுல பங்கு வச்சிருக்காரு. சட்டம்கிறது பொதுவான விஷயம், அரசனுக்கும், ஆண்டிக்கும் ஒரே சட்டம்தான்.....ஆனா இங்கே அரசனுக்கும், சாமியாருக்கு மட்டும் சட்டம் சரியா வேலை செய்ய மாட்டேங்குது....

ஒரு சாமியாரு மர்டர் கேசுல மாட்டி ஜாமீன்ல வர்றாரு....

ஒருத்தர் நடிகையை வச்சிக்கிட்டு சல்லாபம் பண்றாரு...

ஒருத்தர் வாயிலே இருந்து லிங்கத்தை எடுக்கிறாரு....ஒரு ஊரே வளைச்சு போட்டிருக்காரு.....அந்த ஆளோட ரூமுல கோடிக்கணக்கான பணம் இருந்தது கண்டுபிடிக்க பட்டிருக்கு.....

இன்னொருத்தர் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப ஏதோ பிரச்சினைன்னு வெளியே வந்தாரு....வந்த வேகத்துல ஆத்தா காலடியிலே உக்காந்தாரு....இப்போ பார்த்தா ஆத்தா அவரோட காலடியிலே உக்காந்திருக்கு......

 
என்ன கொடுமை சார் இது? 


இன்னொருத்தர் என்னடானா பேமிலி சாமியார் போல, நகைக்கடை விளம்பரம் போஸே கொடுக்கிறாங்க.....

இந்த நகை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

ஆண்டவர் என்பதையே மக்கள்தான் உருவாக்கி இருக்கும் இந்த சமயத்தில் நான்தான் கடவுள் என்று உருவெடுத்து ஆங்காங்கே பல சாமியார்கள் உருவாகுவதும் வாடிக்கையாகி விட்டது....

இதற்கிடையில் சில சாமியார்கள் கல்லூரிகளும் நடத்துகின்றார்கள். ஏதாவது ஒரு சாமியார் இலவச கல்வி நடத்துகின்றார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... மக்களிடம் இருந்து பணம் வாங்கும் அவர்கள் கல்லூரி ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களது நோக்கம் என்ன? இறைவனை தரிசிப்பதா? ஏழைகளை உபசரிப்பதா? எதுவுமே கிடையாது! 

கீழே இருப்பவர்களை யும் பாருங்கள்....இதுவரை பார்த்தவர்களையும் ஒப்பிட்டு கொள்ளுங்கள்....
Tuesday, July 5, 2011

"அயிட்டம்" எச்சரிக்கை

சீனா அயிட்டம் எப்பவுமே கவர்ச்சிக்கு பெயர் பெற்றதுங்க....

உள்ளே சரக்கு இருக்கோ இல்லையோ, ஆனா வெளியே கவர்ச்சி தலை தூக்கும், அயிட்டத்தோட அழகை பார்த்து பிரிச்சு பார்த்தா, நம்ம பொழப்பு நாறிப்போகுமே...
 
அதற்காகவே இந்த விழிப்புணர்வு கட்டுரை 

உதாரணமாக பெண்கள் தலையில் அணியும் ஹேர் பேண்ட் 

என்ன அழகாக இருக்கின்றது பாருங்கள்,,,,
இது எப்படி தயாரிக்கப் படுகின்றது என்று பார்க்கலாமா?

ஒரு பேண்டை வாங்கி கட் செய்து பார்ப்போமே....
என்ன அது ஏதோ இலாஸ்டிக் போல இருக்கே? 


கொஞ்சம் இழுத்து பார்ப்போமா? அப்படி என்னதான் வச்சிருக்கானுங்க...


ஒருவேளை ரப்பர் சீட் வச்சிருக்கானுங்க போலிருக்கே? நல்லா செஞ்சிருக்கானுங்க...இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீப்பா கிடைக்குது? அது என்ன ரோஸ் கலர்ல வழுக்கு வழுக்குன்னு இருக்கே, இழுத்து வெளியே எடுத்து பாரு மக்கா? 

அடங்கொக்கா மக்கா......சண்டாளப்பாவிகளா, சீப்பா கொடுக்கிறப்பவே நினைச்சேன்.... 

அடச்சே இந்த கண்ராவிய என் பொண்ணு வாயிலே வேற வச்சி கடிச்சி கடிச்சி இழுத்து வச்சாளே, நினைச்சாலே குமட்டி கிட்டு வருதே? 

என்ன அது னு யோசிக்கிறீங்களா? சீனால யூஸ் பண்ணி போட்ட "காண்டம்"தாங்க அது, 

எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க? ரூம் போட்டு யோசிப்பானுங்களோ? 
வேஸ்ட் பொருளை கூட எப்படி எல்லாம் பயன்படுத்துரானுங்க னு நினைச்சு பாராட்டுறதா, இல்லே நம்மளை கோமாளியா மாத்திட்டானுன்களே னு புலம்புறதா தெரியலையே? 

அடுத்த அயிட்டத்தை பாருங்களேன்.....
இது யு எஸ் ல இருக்கிற வால்மார்ட் ல வந்த சீனா அயிட்டம், சாதாரணமா யுஎஸ் ல செருப்பெல்லாம் குறைஞ்ச விலைன்னு பார்த்தா எப்படியும் 10 டாலர் இருக்குமாம், ஆனா சீனா அயிட்டம் ரேட்டை பாருங்க, வெறும் 2.44 டாலர்தான், மக்கள் எதை வாங்குவாங்க....
நம்ம ஊர்காரன் மாதிரியே அங்கன இருக்கிற ஒரு மிடில் கிளாஸ் ஆளு வாங்கிட்டு என்ன பாடு படுறானு பாருங்களேன்....

செருப்பு சூப்பெரா இருக்குல்ல? இப்போ பாருங்க, இதை போட்ட மூணு வாரம் கழிச்சி அவன் எந்த நிலைமைக்கு போயிட்டான்னு,

முதல் வாரம் - 
  
 இரண்டாவது வாரம்

மூணாவது வாரம் 

போச்சே, ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்துச்சே என் காலு, 

எப்படி இருந்த நான் ? இப்படி ஆயிட்டேனே? 


சீனா அயிட்டம் வாங்கலையோ? சீன அயிட்டம்!  

இந்தியாவில் மெதுவாக சீனா அயிட்டங்கள் நிறைய தலை எடுத்துள்ளன

இன்றைய பேன்சி அயிட்டங்களில் நிறைய சீன பொருட்கள்தான் இடம் பெற்று இருக்கின்றன, மற்ற பொருள்களை விட சீனா அயிட்டத்தின் விலை பல மடங்கு குறைவு....

அதனால் மக்கள் இன்றைய தேவைக்கு சீன பொருட்களை விரும்பி வாங்குகின்றார்கள்....
சீன அயிட்டம் எல்லாமே மிக கவர்ச்சியாக இருக்கும்.....

ஆனால் அழகு என்றுமே ஆபத்துதான் என்பதை மக்கள் நன்கு உணருதல் வேண்டும்...

Monday, July 4, 2011

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா?

இந்தியாவில் இருக்கும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு....
ஆனால் தற்போதெல்லாம் மத்தியில் இருக்கும் ஆட்சி மற்றும் ஊடகங்களின் கருத்துக்கள் மற்றும் செய்திகளில் எப்போதுமே தமிழ்நாட்டினை தனியாக பிரித்தே சொல்கின்றார்கள்....

 அதற்கு கராணம் என்னவென்று யோசிக்க வேண்டியதாக இருக்கின்றது....

உதாரணமாக மும்பையில் இருக்கும் மீனவர்களோ அல்லது கேரளாவில் இருக்கும் மீனவர்களோ அல்லது மேற்கு வங்கத்தில் இருக்கும் மீனவர்களோ அல்லது விசாகப்பட்டனத்தில் இருக்கும் மீனவர்களோ ஏதாவது பிரச்சினைகளில் தவிக்கும் போது அல்லது சிக்கி கொள்ளும்போது எல்லோரும் சொல்வது இந்திய மீனவர்கள் என்றே சொல்கின்றார்கள்....

ஆனால் அதுவே ராமேஸ்வரத்து மீனவர்களோ அல்லது சென்னையில் இருக்கும் மீனவர்களோ எதாவது பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும் போது மத்திய அரசும் சரி, பத்திரிகையும் சரி, அவர்களை தமிழக மீனவர்கள் என்று தனியாக பிரித்து சொல்ல காரணம் என்ன? நாங்கள் இந்திய மீனவர்கள் இல்லையா? 

 வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் அல்லது நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் தமிழனுக்கு எப்போதுமே நீதியும், நியாயமும் சரியாக கிடைக்க படுவதில்லை...இதற்க்கு என்ன காரணம்?

அனைத்து ஊடகங்களுமே தமிழகத்தை தனியாகவே பிரித்து அடையாளம் காட்டப்படுவதன் நோக்கம் என்ன?

நக்கீரன் = மன்மத லீலை

நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே - ஒரிஜினல் நக்கீரன்...
எதிரியா இருந்தா குற்றம் இல்லேனாலும் குற்றமே - இன்றைய நக்கீரன்.....

ஒரு காலத்தில் நக்கீரன் புத்தகத்தை "அந்த" மாதிரியான புத்தகமாக நினைத்து வாங்கி படித்த காலமெல்லாம் உண்டு....
 காரணம் அதில் வரும் செய்திகள்....எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்த்து ரசித்த மாதிரியே போடுவார்கள்...

ஒரு காலத்தில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளோடு இருந்த உறவை வெளியிட்டு ஒரு மெகா சீரியல் போட்டு அமர்களப்படுத்தினார்கள்....

அதன் பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், நடிகை சொர்ணமால்யாவும் என்று ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை விற்று தீர்த்தார்கள்....

அடுத்தது கடந்த வருடத்தில் நடந்த நித்யானந்த சாமிகள் மற்றும் நடிகை ரஞ்சிதா வின் அந்தரங்கம் என்று ஒரு வருட சிறப்பு பிரதிகள் விற்று முடித்தார்கள்....

இதற்கிடையில் ஒரு காலத்தில் ஒரு நடிகையின் கதை என்று ஒரு மெகா தொடரையும் பதிவு செய்தார்கள்.....

அதன் பிறகு தற்போது தன்னை பற்றியே ஒரு சுயசரிதை ஒன்றை வெளியிடுகின்றார் நக்கீரன் கோபால் அவர்கள். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்க முடியும் என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்...

இதில் வேடிக்கை என்னவெனில் நக்கீரனில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் அதை நாங்களே படிக்கிறது கிடையாது....எப்போ பார்த்தாலும் அந்த "அம்மா" சரியில்லே, அந்த அம்மா கொடுங்கோல் ஆட்சி பண்ணுது, இந்த "அய்யாதான்" டாப் னு மனசாட்சியை வித்து கதை எழுதுவாரு னு சொன்னாரு...

அடுத்தது நக்கீரன் மட்டும்தான் சர்வே எல்லாம் எடுக்குமா? நாங்களும் எடுப்போம்ல...

அதுலே நடிகைகள் படம் போட்டு சினிமா பக்கம் வருதே, அதுக்காகத்தான் 57 சதவிகிதம் பேரு படிக்கிறாங்க...

அடுத்தது வேற எந்த புக்கும் கிடைக்கலேனா நக்கீரனை வாங்கி படிக்கிறது 32 சதவிகிதமாம்...காரணம் அதிலே இருக்கிற விசயங்கள்ல பாதிக்கும் மேல பொய் தான்னு எல்லோரும் புரிஞ்சிகிட்டாங்க....

இடையில் ஒரு உருப்படியான விஷயம் என்னவெனில் மன ரீதியான தொடர் ஒன்றை வெளியிடுவதை 9 சதவிகித பெருசுகள் படிக்குது... அவ்வளவுதான்...

தன்னை பற்றிய ஒரு சுயசரிதைய யாருமே படிக்கிறது இல்லையாம்...அதுல வெறும் 2 சதவிகிதம்தான் படிக்கிறாங்க...

இதழோட பேரை "நக்கீரன்" னு வைச்சிட்டு எழுதுறது எல்லாம் "மன்மதன்" ரேஞ்சுக்கு இருந்தா யாருதான் அதை வாங்கி படிப்பாங்க...

ஒரு சின்ன உதாரணம்....2011 தேர்தல் கணிப்புகள் என்று ஒன்று வெளியிட்டார்கள்....அதிலே கணிப்பு உண்மையா இருந்தது னு பார்த்தா வெறும் 8 - 10 வேட்பாளர்கள்தான்.....
அதிமுக கட்சியே இல்லாமல் போகும், தேமுதிக இந்த தேர்தலோட வீட்டுக்கு போயிடுவாரு னு போட்டாங்க....எதுவுமே நடக்கலை, திமுக கட்சியே இல்லாம போயிடுச்சு....பாமக, விசிக, காங்கிரஸ் மண்ணை கவ்விடுச்சு....

உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை ஸ்பெக்ட்ரம் வழக்கு மிக பயங்கரமான வழக்கு என்று அறிவித்தது...ஆனால் நக்கீரன் அப்படி எதுவுமே நடக்காதது மாதிரி செய்திகள் போடுதே, அது எப்படிங்க???? 

துதி பாடுறது னு நான் கேள்வி பட்டிருக்கேன்....இப்போதான் நக்கீரன் பத்திரிகை ரூபத்துல பார்க்குறேன்....அடுத்தது எனக்கு ஒரு சின்ன ஆசை என்னான்னா


ஒரு காலத்திலேயே காட்டுலே இருக்கிற வீரப்பனை போய் பார்க்கிறதுக்கு போனப்ப "தமிழ்நாட்டு மக்களுக்காக நான் ஏதாவது சேவை செய்யனும்னு நினைக்கிறேன்...அது என்னோட கடமை" னு சொன்னவரு நம்ம தமிழக மீனவர்களை விடுதலை செய்யுறதுக்கு ஸ்ரீலங்கா விற்கு போயிட்டு வந்திருக்கலாம்....பரவாயில்லை, அடுத்த வாட்டி படகுல போய் சிங்கள ராணுவ வீரன் கிட்டே பேசி நம்ம இந்திய(தமிழக) மீனவர்களை கூட்டிட்டு வந்திருவாரு னு நம்புறோம்....அவரைத்தான் அனுப்பனும்....

Saturday, July 2, 2011

தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல) ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

நானும் என் பிரெண்டும் ஒரு நாள் சென்னையின் பிரதான நகருக்கு போய்ட்டு ஊரெல்லாம் சுத்தி பார்த்திட்டு மதியம் சாப்பிடலாமுன்னு கடைக்கு போனோம்

நிறைய ஹோட்டல் இருந்துச்சி, எதுல சாப்பிடுரதுனே தெரியலை....ஒவ்வொரு கடையும் அழகழகா லைட், பேன், ஏசி எல்லாம் போட்டு டிவி வச்சு வரவேற்பு கொடுத்துச்சி....ஒரு சில கடைல பொண்ணுங்க சாப்பாடு பரிமாறி கிட்டும் இருந்தாங்க....
அப்போ என் பிரண்டு தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடனும்னு சொன்னான்...
 

அப்போ வரிசையா 5 கடை இருந்திச்சி, எல்லாமே பிரியாணி கடைதான்....கடைசியா ஒரு கடைய தேர்ந்தெடுத்து பிரியாணி ஆர்டர் பண்ணோம்...
அஞ்சே நிமிசம்தான், சூடா ரெண்டு பிளேட் பிரியாணி கொண்டுவந்து வச்சான்....சூப்பெரா இருந்திச்சி, நல்ல பசி வேறயா, வெளுத்து வாங்கினோம்....
சாப்பிட்டு முடிச்சதும் என் பிரண்டு ஒரு கோக் வாங்கி குடிச்சான்...ஏற்கனவே புல்லா சாப்பிட்டதாலே அப்படியே வாமிட் பண்ணிட்டான்....சாப்பிட்ட பிரியாணி எல்லாம் அவுட்....

அப்போ தான் கவனிச்சோம்.....சாப்பிட்டது பிரியாணி அரிசி கிடையாது....அரிசி மாதிரி வெட்டி வச்சிருக்கிற நூடுல்ஸ், எப்பவுமே 20 கிலோ அரிசிக்கு 10 கிலோ நூடுல்ல்ஸ் கலக்குரானுங்க...
அதுபோல பிரியாணிக்குள் ஒளிச்சு வச்சிருக்கிற முட்டை காலையிலேயே அவிக்க படுகின்றது. அவிச்ச முட்டையை வெகு நேரம் வெளியில் வைத்தால் அது ஊதா நிறமாகி விடும்....கடையினில் இருக்கும் வெளிச்சம், மற்றும் டிவி போன்றவை இதை போன்ற விசயங்களை மூடி மறைப்பதற்காகவே...படுபாவி பசங்க....

எல்லோருமே பசி மயக்கத்துல இருக்கிறப்ப அதை யாரும் கவனிக்க மாட்டோம்....மக்களுக்கு சாப்பாடுதான் பிரதானம், அது அவங்களுக்கு சௌகரியமா போயிடுது....

அடுத்த நாள் ஒரு கடைல போய் நின்னுக்கிட்டு, நாங்களும் ஊருல பிரியாணி கடை வச்சிருக்கோம், ஆனா இது பிரியாணி அரிசி மாதிரியே தெரியலையே னு சொன்னதுக்கு அந்த கடைக்காரன் இது பிரியாணி அரிசி இல்லீங்க, இன்னிக்குதான் அவசரத்துக்கு புழுங்கல் அரிசியை போட்டிட்டோம் னு சொல்றான்....

நான் ரொம்ப நேரமா பிரியாணி யையே முறைச்சு பார்க்கவும், அந்த முதலாளி என்கிட்டே வந்து இஷ்டம் இருந்தா சாப்பிடு, இல்லேனா கிளம்பி போய்க்கிட்டே இரு...வியாபாரத்தை கெடுக்காதே என்று கறாராய் பேசிவிட்டு சென்றான்....

கடைக்குள் திரும்பி பார்த்தேன், 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் அவர்களது அப்பா, அம்மா கூட சந்தோசமாய் ரசித்து, ருசித்து தலப்பாக்கட்டு நூடுல்சை  பிரியாணி என்று நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.... தமிழக உணவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை இதை கவனிக்குமா?

கையேந்தி பவனை எல்லாம் நடிகர் விவேக் கிண்டலடித்து கொண்டிருந்தார் படங்களில்...ஆனால் இந்த மாதிரியான நாகரீக வடிவிலான கடைகளும் அதைதானே செய்து கொண்டிருக்கின்றது....

தமிழனுக்கு ஒரு பகிரங்க சவால்

சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மத, ஜாதி, இன மக்களால்
அதிகம் சபிக்க பட்டது யார்? சாபம் பெற்றது யார்? 

  

 இதில் நான்காவதாகஇருக்கும் படம் உங்கள் எண்ணத்தில் தோன்றிய நபராகவோ அல்லது குழுவாகவோ கூட இருந்தாலும் குறிப்பிடலாம்.....