பங்காளிங்க..

Sunday, October 30, 2011

வலைத்தள நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அன்பான வலைப்பதிவு நண்பர்களுக்கு,

எனக்கு இதுவரை தனியாக நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இந்த இணையதளம்தான் எனது நட்பு கூடாரம். அதில் பவனி வரும் உங்களை போன்ற வலைப்பதிவர்களும், வலைப்பதிவின் நிர்வாகிகளும்தான் எனக்கு தற்போதைய நண்பர்கள். இந்த நட்பு நீண்ட கால நட்பாக மலர வேண்டும், வளர வேண்டும் என்பது எனது விருப்பம். 

என்னால் அனைத்து நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் சொல்ல இயலாது. அதனால் வலைத்தள நிர்வாகிகளான உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். நெஞ்சார்ந்த நன்றிகள்
 
அதுபோல இந்த வலைப்பதிவு தோழர்களும் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி மகிழ வேண்டும் என்று விரும்புகின்றேன். அந்த புனிதமான சந்திப்பிற்கு எனது இல்லத்திற்கு அனைவரும் வருகை தரவேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கின்றேன். இத்தனை நாள் எழுத்துக்களில் பார்த்த அந்த நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கின்றேன். வெளியூரில் இருந்து வரும் நண்பர்களை அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருக்கின்றேன்.

யார் இவன்? எதற்காக இதை எல்லாம் செய்கின்றான் என்று யோசிக்காதீர்கள், எத்தனையோ அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள்  தற்புகழ்ச்சிக்காக விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால் இது நமது நட்பை, இணையதள வட்டத்தை விரிவாக்கவே இந்த திட்டம். அதற்க்கு ஒரு மையம் வேண்டும், அதற்க்கு எனது இல்லத்தை அர்ப்பணிக்கின்றேன்.

தயவு செய்து வரும் அனைத்து நண்பர்களும் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதற்கேற்றவாறு நான் திட்டமிடுதல் வேண்டும்.

புரிதலுக்கு நன்றி....
Friday, October 28, 2011

எப்படி பண்ணா வலிக்காது...ரகசிய டிப்ஸ்

 
இந்த பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிஸ்டத்துல உக்காந்துக்கிட்டு என்னம்மா சாட் பண்றாங்க...அந்த அழகே தனிதான்...

அதுக்கெல்லாம் நிறைய படிச்சிருக்கணும்...நமக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லையே

காலையிலே இருந்து நைட் வரைக்கும் இந்த கம்புடேரிலேயே உக்காந்துகிட்டு இருக்காங்க...அப்படி என்னத்ததான் தட்டிக்கிட்டே இருப்பாங்களோ நு புரியலை...இப்படி பெருமூச்சு விடும் பெருசுகளுக்கு நான் சொல்றது என்ன வென்றால் உங்க கோபம், பொறாமைக்கு எல்லாம் பதில் கிடைச்சிடுச்சி...இனிமே எங்க கம்பியுட்டர் நண்பர்கள் அதுலே அதிக நேரம் உட்கார மாட்டாங்க...போதுமா?

உங்க சார்பா நான் அவங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கலாமுன்னு இருக்கேன்...

அன்பான கம்பியுட்டர் கீபோர்ட், மௌஸ் தடவும் நண்பர்களே, நண்பிகளே,

இந்த மௌஸ், கீபோர்ட்டை சரியா பிடிச்சு தடவலேனா, அதாவது சரியா பிடிச்சு ஆபரேட் பண்ணலேனா கார்பல் டன்னல் சிண்ட்ரோம் உருவாகிடும்...கெட்ட வார்த்தை இல்லீங்க...(இங்க்லீஸ்ல படிங்க, புரியும் CARPAL TUNNEL SYNDROME)

ஊரு, உலகத்துல இல்லாத வியாதியா...எய்ட்சையே நாங்க எட்டி உதைச்ச ஆளுங்க...கேன்செரையே நாங்க ஊதி தள்ளுனவங்க நு நீங்க நக்கலா சிரிக்கறது நல்லாவே கேக்குது...

கொஞ்சம் கீழே இருக்கிற படத்தை பாருங்க

 
அச்சச்சோ, அடகன்றாவியே, சனியன் பிடிச்சவன் இதை போய் எடுத்து அனுப்பிச்சிருக்கான் பாரு நு நீங்க மனசுக்குள்ளே திட்டினாலும் பரவாயில்லே, இனிமே கொஞ்சம் மாத்தி டிரை பண்ணி பாருங்க...

உடனே ஒரு சில உள்குத்தல்வாதிகள், சாவு எப்படி வேணுமினாலும் வரும், பாம்பு கடிச்சு பிழைச்சவனும் இருக்கான், செருப்பு கடிச்சு செத்தவனும் இருக்கான்னு ஒரு வசனம் பேசுவாங்க...அது சரி நாம ஏன் கீபோர்ட், மௌஸ் தடவி கைய இழக்கணும்..இந்த கைய வைச்சு நமக்கு எத்தனை வேலை இருக்கு???

அதெல்லாம் சரி, அப்போ எப்புடித்தான் அதை பிடிக்கிறது? குறைய சொல்லிட்டே, அதுக்கு பரிகாரத்தை சொல்லு நு கேக்குறீங்க அதானே? 

அதுனால (உள்ளூர் பிஸியோ டாக்டர்ஸ் என்னை மன்னிச்சிக்கோங்க) சில டிப்ஸ் கொடுக்கிறேன்..ஒரு ரெண்டு வாட்டி டிரை பண்ணி பாருங்க..அப்புறம் தெரியும் "அந்த" சுகம்....


 நான் சொன்னதுலே எந்த பிஸியோ டாக்டர்சுக்கும் கோபம் இருந்தா மன்னிச்சிக்கோங்க, நல்லா இருந்தா ஓட்டு போடுங்க. அல்லது ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க 

Monday, October 24, 2011

16 ஆம் நாள் காரியம்

ஒரு                          விழாவில்

இரண்டு                  விழிகளால்
மூன்று                    மணி வரை
நான்கு                    முறை ரசித்து

ஐந்து                        முறை கையசைத்து
ஆறு                        தடவை பெயர் சொல்லியழைத்து
ஏழு                           மணிக்கு மேல்

எட்டு                        நண்பர்களை காவல் போட்டு
ஒன்பதாவது        அறைக்கு அழைத்து சென்று
பத்து                         நிமிடம் முத்தமிட்டு

பதினொன்று        முறை கட்டித் தழுவி

பனிரெண்டு          மணிக்கு பிரிந்த பத்தாம் வகுப்பு பாவையை
பதிமூன்று             வருடம் கழித்து
பதினான்காம்       எண் வீட்டினில்

பதினைந்து            மாதக் குழந்தையுடன் உன்னை பார்த்த எனக்கு 

பதினாறாம்            நாள் காரியம் செய்திருக்க வேண்டும்
                                    இப்படி காத்திருந்த எனக்கு!!!???!!!
 

Wednesday, October 19, 2011

தமிழ்மணம் ரமணிதரனுக்கு எனது ஆதரவு

எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கின்றது. அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ரமணீதரன் எதையும் தவறாக சொல்லவில்லை...அவர் மனதில் பட்டதைத்தான் சொன்னார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதற்காக யாரும் கோவப்பட வேண்டாம். இது எங்கள் தளம். நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் தமிழ்மணத்து நிர்வாகி திரு.ரமணிதரனுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம். ஆனால் முகம் தெரியாத எத்தனையோ இசுலாமிய சகோதர,  சகோதரிகளுக்கு நல்ல பதிவர்களுக்கு நிச்சயம் இது கடுமையான வேதனையை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை. 

பன்னிக்குட்டி ராமசாமி எழுதிய பயோடேட்டா இத்தனை பிரச்சினைக்குள்ளாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு  பதிவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. அதில் அவர் மிகவும் ஜாலியாக பொழுதை கழிக்கும் ஒரு மனிதர் என்றே நான் நம்புகின்றேன். சிலர் மிக சீரியஸாக பதிவிடுவார்கள், சிலர் ஜாலியாய் பதிவிடுவார்கள். அப்படி நினைத்து தான் அவர் அந்த பயோடேட்டாவை தயாரித்திருக்க வேண்டும். அதை வெளியிடுவதற்கு அவர் எத்துணை சிந்தித்திருக்க வேண்டும். ஒரு மனிதனின் செய்கையை வேடிக்கை பார்க்கும் போது சிரிக்க வைத்தல் என்பது வேறு..அதையே தனது எழுத்தால், தனது பதிவில் ஒவ்வொரு நாளும் சிரிக்க வைப்பது என்பது வேறு. அந்த திறமை அவருக்கு இருக்கின்றது. அவருக்கென்று ஒரு தனிப்பட்டாளம் இருப்பது மிகப் பெரிய விஷயம். ஒருவேளை தமிழ்மணத்தில் அறிமுகம் ஆன ஒருவருக்கு இத்துனை புகழ்ச்சியா என்று ஒரு நிமிடம் ரமணிதரன் பொறாமைப் பட்டிருக்க வேண்டும். அதனால் கூட அந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கலாம். இல்லை அவசரத்தனத்தில் எழுதி இருந்தால் அதை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கலாம். எதுவுமே நடக்காதது போல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. 


அதுமட்டுமல்லாமல் தமிழ்மணத்தில் இருந்து இது அவரது சொந்த கருத்து என்று வெளியிட்டிருப்பதன் பின்னணியையும் நாம் கவனிக்க வேண்டும். ரமணிதரன் அவ்வாறு பின்னூட்டம் இட்டிருப்பது தவறு என்று தெரிந்திருந்ததால்தான் அவர்கள் ரமணிதரனை தனியே கழட்டி விட்டு இது அவரது சொந்த கருத்து என்று பின்வாங்குகின்றார்கள்.

தமிழ்மணம் இந்த அளவிற்கு புகழ் பெறுவதற்கு காரணம் இவர்களை போன்றவர்களின் ஜாலியான பதிவுகளே. பெயரிலி என்ற தலைப்பில் வந்த  அந்த பின்னூட்டம் எல்லோரையுமே சற்று முகம் சுழிக்க வைக்கின்றது. அது என்னை போன்ற புதியவர்களையும் கூட, அப்படி சிந்திக்க வைக்கின்றது. ஒரு ஆபாசமான அல்லது தகாத வார்த்தையை கூறினால் அந்த பதிவு தடைசெய்யப்படும் என்று தமிழ்மணத்தின் விதிமுறைகளில் படித்த நியாபகம். அப்படி இருக்கும் போது அந்த தமிழ்மணத்தின் நிர்வாகி என்ற பொறுப்பில் இருப்பவர் எப்படி பின்னூட்டம் கொடுத்திருக்க வேண்டும். மிக எளிதாக பன்னிக்குட்டி ராமசாமிக்கு தனிப்பட்ட முறையில் கண்டனம் தெரிவித்து இருக்கலாம். அதை விடுத்து பின்னூட்டம் கொடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லி ஒரு மதத்தின் அடிப்படைகளில் ஊடுருவுவது தவறு என்றே நான் நினைக்கின்றேன்.

தமிழ்மணம் என்பது படைப்பாளிகள் கூடும் சந்தை என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த மோசமான பின்னூட்டம் இசுலாமிய மதத்து பதிவர்களை, நண்பர்களை பயங்கரமாக பாதித்து இருக்கின்றது.

எப்போதுமே தனிமனித சாடல் இருக்கும்...ஆனால் இன்னாரின் சார்பாக நான் இதை சொல்கின்றேன் என்று சொல்லும்போது அந்த சாடலுக்குஅந்த மொத்த குழுவும் பொறுப்பாகின்றது. அதை யாராலும் மறுக்க இயலாது. அப்படி இருக்கும் போது இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று சொல்வது விநோதமாய் இருக்கின்றது.  அதனால் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுப்பதற்கு முன்பு ரமணிதரன் அதே தமிழ்மணம் சார்பாக மன்னிப்பு பதிவு இடுதல்அவசியம். இன்று இந்த தளம் இந்த அளவிற்கு பெயர் பெறுவதற்கு எத்தனையோ இசுலாமிய, இந்துத்துவ, கிருத்துவ சகோதரர்கள்தான் காரணம். யாரும் இதை இந்துத்துவ தளம் என்று எதிர்பார்த்து தன்னை இணைக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இது தமிழர்கள் தளம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 
அப்போதுதான் தமிழ்மணம் நிசமாகவே மணம் கமழும் என்று சொல்லலாம்.


ரமணிதரனோ அல்லது தமிழ்மண நிர்வாக குழுவோ இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோரினால் எனது முழு ஆதரவு அவருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் நிச்சயம் உண்டு. 


செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோருவது மிகப் பெரிய விஷயம். அந்த மன்னிப்பினை பெருந்தன்மையோடு ஏற்று கொள்ள இசுலாமிய சகோதரர்கள், பதிவர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் மனதார நம்புகின்றேன். 


தமிழ்மணத்திற்கு, திரு ரமணிதரனுக்கு இது ஒரு சோதனை தான் என்று நாங்கள் நினைக்கின்றோம். முடிவு அவர்களிடம் ஒப்படைக்கின்றோம்.


இப்போதும் சொல்கின்றேன் ரமணிதரன் மன்னிப்பு கோரினால் எனது ஆதரவு அவருக்கே. நீ நேற்று வந்தவன், உன்னுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை என்று கூட அவர் நினைக்கலாம். ஆனால் காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.


Thursday, October 13, 2011

அந்தக் கால அழகிகள்

இன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வலம் வரும் நண்பர்களே, உங்களுக்கு சில விசயங்களை காட்ட விருக்கின்றேன். இதை பார்த்த பிறகாவது நாம் எந்த லட்சணத்தில் தற்போது இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு இது எரிச்சலை தரும், சிலருக்கு இது கோபத்தை தரும், சிலருக்கு இது சந்தோசத்தை தரும், சிலருக்கு இது வேதனையை தரும், சிலருக்கு இது ஆச்சரியம் தரும், இப்படியும் கூட இருந்ததா என்று? அது பார்ப்பவர்களின் மன நிலையை பொறுத்து அமைகின்றது.

இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கூட நினைப்பார்கள். குறிப்பாக 18 மற்றும் 26 பலருக்கு வேதனையை தரும், அதனால் கூடுமானவரை அதை தவிர்த்து விடுங்கள். சொல்ல வேண்டும் என்று தோன்றியது...சொல்லி விட்டேன்...அப்புறம் உங்கள் இஷ்டம்.


இதை விட படு பயங்கரமான படமெல்லாம் நம்மகிட்டே இருக்கு

பொறுமையா பாருங்க...உடனே நம்ம ரெவரி படம் வரைஞ்சு பாகம் குறிச்சிடுவாறு...ஆனா நான் கொடுக்கப்போற படத்துல அதுக்கு அவசியமே கிடையாது...ஏற்கனவே பாகத்தை எல்லாம் குறிச்சே கொடுத்திருக்காங்க...

இதெல்லாம்  என்னாங்க  அழகு, அழகுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?

|
|
|
|
|
|
|
|
|
|