பங்காளிங்க..

Monday, July 30, 2012

"துப்பாக்கி" செல்போன் பிரிண்ட் வித்தவுட் கிளியர் ஆடியோ துப்பாக்கி, நல்ல துப்பாக்கி, கள்ள துப்பாக்கி சம்பந்தப்  அனைத்து படங்களும் இங்கே இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

கூகுள் குரோம் இருந்தால் மிக எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

வெளிநாட்டு படங்களுக்கு இணையான குவாலிட்டி யுடன் படம் இருக்கின்றது. பார்த்து டவுன்லோட் செய்த பின் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.  
******
******
******
******
******
******
******
******
******
******
 
ஆடியோ உங்களுக்கு கேட்டுச்சா? 

Sunday, July 29, 2012

வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு முஸ்லீம் !!!

இது எனது நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பிய ஒன்று. இது எனது சொந்த படைப்பு அல்ல. இது ஒரு வைரஸ் நிரப்பப்பட்டுள்ள மின்னஞ்சலின் தலைப்பு ஆகும். அது வெளி வந்திருக்கும்  விதம் ஆங்கிலத்தில் "BLACK MUSLIM IN THE WHITE HOUSE".

இதுவரை இதை அனுப்பியவர்கள் விவரம் தெரியவில்லை. ஆனால் ஒருவேளை உங்கள் நண்பரிடம் இருந்து கூட அல்லது மொத்த குரூப்பில் இருந்து கூட வெளி வரலாம். அப்படி வந்தால் என்ன ஆபத்து என்று பார்க்கின்றீர்களா?
 
இது உங்கள் கம்பியூட்டரின் சி டிரைவை ஒன்றுமே இல்லாமல் அழித்து விடுமாம். அந்த மின்னஞ்சலை திறந்ததும் ஒரு ஒலிம்பிக் டார்ச் ஒன்று எரியத் தொடங்கி உங்கள் சி டிரைவ் மற்றும் உங்கள் மின்னஞ்சல் தகவல்கள் என்று ஒட்டுமொத்த கணினி செயல்பாட்டையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
 
மெக்காபீ இதை பற்றி கூறும்போது இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கு மென்பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அறிவித்து இருக்கின்றது. ஆதலால் இந்த தலைப்பினில் வரும் மின்னஞ்சலை உடனடியாக அளித்து விடுமாறு எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

உடனே இது பற்றி நான் கூகிளில் தேடும் போது இது பொய்யான தகவல் என்று வெளிவந்து இருக்கின்றது. எது உண்மை? என்று தெரியவில்லை.. மேலும் அதில் இன்விடேசன் என்ற பெயரில் உங்கள் நண்பர் அனுப்பி இருந்தால் உடனே உங்கள் சிஸ்டத்தை உடனே அணைத்து  விடவும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்போ எதுதான் சாமி உண்மை? நல்லா கிளப்புறாங்கப் பா பீதிய...

Friday, July 27, 2012

இளந்தளிர்கள் (பிணமாக) விற்பனைக்கு - 1 லட்சம் ரூவாய் மட்டுமே...


மூச்சு விட்டால் கூட பீஸ் புடுங்கும் ப(பி)ணம் தின்னி கழுகுகளா? எங்கள் ஸ்ருதியை மீண்டும் உங்கள் பணத்தால் திருப்பி தர முடியுமா? 

மலரினும் மெல்லிய இளந்தளிரடா அவள், இப்படி பொட்டலமாய் அனுப்பி விட்டீர்களே டா? 

பொம்மை பேருந்து ஏறினால் கூட தாங்காதே அந்த பிஞ்சு, முழு பேருந்தை ஏற்றி கொன்று விட்டீர்களேயடா? 

செய்வதை எல்லாம் செய்து விட்டு, இதற்க்கு காரணமான பள்ளித் தாளாளரை, பேருந்து ஓட்டுனரை, பேருந்து உதவியாளரை, பேருந்து உரிமையாளரை கைது செய்துவிட்டோம் என்று மக்களை அமைதி காக்கச் செய்கின்றீர்களா? இந்த பேருந்து 20 நாட்களுக்கு முன்தான் வட்டாரப் போக்குவரத்தில் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கின்றதாம்..

அங்கே என்னடா ஆய்வு செய்தீர்கள்? எவ்வளவு ரூவாய் என்று ஆய்வு செய்தீர்களா? அல்லது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று ஆய்வு செய்தீர்களா? ஈவு இரக்க மற்ற கொலைகாரப் பாவிகளா!!!

இந்தியன் திரைப்படத்தில் வந்தது போன்றே இருக்கின்றதே என்று சொல்லும் மக்களே!! இந்தியன் திரைப்படத்தில் கமல் கொடுத்த தீர்ப்பு இங்கே வழங்கப்படுமா? இங்கே இருக்கும் ஓட்டை சட்டமும், நீதியும் என்ன செய்கின்றது? கொலைகாரப் பாவிகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும், போலி அரசியல்வாதிகளுக்கும் எப்போதுமே அது ஜால்ரா அடித்துக் கொண்டுதானே இருக்கின்றது. நேற்று போன அந்த உயிருக்கு ஆதரவாய் எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் மாட்டியவன் நம்ம கட்சி தொண்டனோ என்ற அச்சமே! இன்னொரு முக்கிய காரணம் எல்லா அரசியல் கட்சித் தலைவனிடமும் ஒரு கல்லூரி, ஒரு பள்ளிக்கூடம் இருக்கின்றதே? நாளை இதே நிலைமை அவர்களுக்கும் வருமே?

ஸ்ருதியின் அப்பா இந்த குறையை ஏற்கனவே பள்ளிக்கூட நிர்வாகத்திடமும், அந்த வண்டி ஓட்டுநரிடமும் புகார் தெரிவித்து இருந்தும் அந்த பிஞ்சினை காவு வாங்கி விட்டீர்களே...
எத்தனை, எத்தனை கனவுகளோடு அந்த பிஞ்சு இருந்திருக்கும்,? இதற்கு அரசு தரும் தீர்ப்பு என்ன? இறந்த குழந்தைக்கு ஒரு லட்சம் ரூவாய் நிவாரணமாம்...அத்தோடு பள்ளித் தாளாளர், பேருந்து உரிமையாளர், பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து உதவியாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்து விட்டதாம்...அது மட்டுமல்லாமல் அந்த பேருந்திற்கு சான்றிதழ் அளித்த போக்குவரத்து துறை ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து விட்டதாம்...என்னே உங்கள் நீதி...பணி இடை நீக்கம் பத்தாது, பணிநீக்கம் செய்ய வேண்டும்..லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ் அளித்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் இடை நீக்கம் சரியான தீர்வு ஆகாது..ஆறு மாசம் கழிச்சு இதே கொலைகாரப் பாவி மீண்டும் ஒரு வாகனத்திற்கு தவறான அல்லது போலியான சான்றிதழ் கொடுத்து இந்த ஆறுமாத இழப்பை சரி செய்து கொள்வான்..இதுதானா உங்கள் நீதி, தீர்ப்பு????

அது மட்டுமல்லாமல் அந்த ஊழியர்களின் பதவிகளை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் வாழ்நாளில் அவர்கள் செய்தது தவறு என்று தெரியும்படி ஒரு மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும்...ஸ்ருதியின் வீட்டிற்கு ஒவ்வொரு கொலைகாரப் பாவியின் குடும்பம் நேரில் சென்று பார்த்து விட்டு வர வேண்டும்...அப்போது அவர்கள் அந்த குடும்பத்தை நேரினில் சந்திக்க வேண்டும், அதை பார்த்து பார்த்து அவர்கள் துடி துடித்து சாக வேண்டும்!!

அவர்கள் அந்த வீட்டு வாசலுக்கு செல்லும் அந்த நொடிப் பொழுது அவர்களுக்கு மரண தண்டனையை விட கொடுமையானதாவே  இருக்கும் ..அதை வழங்குமா  இந்த நீதிமன்றம்?
 இந்த நிகழ்வுகளுக்கு பின்னரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அதே காட்டுமிராண்டித் தனமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருக்கின்றன. போக்குவரத்து காவலர்களும் இதனை கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தனியார் பேருந்துகள்தான் இந்த லட்சணத்தில் இருக்கின்றது என்று இல்லை. அனைத்து அரசுத் துறை பேருந்துகளும் இதை விட கேவலமான நிலையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. பாதி பேருந்துகளில் படிக்கட்டுகள், வாசல்கதவுகள், இருக்கைகள், கிடையாது. சில பேருந்துகளில் பிரேக் கிடையாதாம், சில பேருந்துகளில் ஹார்ன் கிடையாதாம்..அப்படிப் பட்ட பேருந்துகள் இன்றும் நகரத்தை வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வாங்கி ஏமாற்றுகின்றார்கள். அரசுப் பேருந்துகள் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு தரமற்ற பேருந்துகளை இயக்கி கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்னொரு, ஸ்ருதி மரணிக்கும் முன் அரசும், நீதியும் இதற்க்கு நியாயம் வழங்குமா?

Thursday, July 26, 2012

"ரோஜா"வை இப்போ யாரு வச்சிருக்கா?


அழகானது எப்பவுமே நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது???!!!??,
ஆனா நல்லா இருக்கிறது எல்லாமே, எப்பவுமே அழகானதுதான்!!!!!!!!!!!!!
நான் பொதுவா சொல்ற விஷயத்தை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க....நீங்க மேல சொன்ன ரோஜாவை கற்பனை பண்ணிக்கிட்டு பார்க்காதீங்க...அது வேறு, இது வேறு....

நான் சொல்றது.....
டிஸ்கி-
முதல் படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ....
நான் சொன்னது இரண்டாவது படத்துலே இருந்து ஆரம்பிக்குது...

Wednesday, July 25, 2012

ஐ லவ் யூ டீச்சர்!!!!

இப்போ எல்லாம் வாத்தியாருங்க, வாத்தியாச்சிங்க, மாணவ, மாணவிங்க டாப்பிக்குதான் பேப்பர் முழுக்க வந்துகிட்டு இருக்கு..என்ன காரணம்? ஒரு காலத்துல அந்த டாக்டரு இப்படி ஆபரேசன் பண்ணி பேசண்டுங்க செத்து போயிட்டாங்க, இல்லேனா கை போச்சு, கால் போச்சு, கண்ணு போச்சு நு செய்தி வரும்...ஆனா இப்போ டீச்சர்ஸ் வருஷம் போலிருக்கு..

ஆசிரியர்களும்,  மாணவர்களும் -
 
எங்கே பார்த்தாலும் டீச்சருங்க பேரா அடிபட்டிருக்கு..நேத்து கூட ஒரு வாத்தியாரு ரவிக்குமர்னு  ஒருத்தரு 3 வயசு பையன்கிட்டே தகாத மாதிரி நடந்துகிட்டாரு னு செய்தி வந்திருக்கு..அதை பத்தி விசாரணை நடந்துகிட்டுதான் இருக்கு.. இதுக்கெல்லாம் என்ன காரணம்? ஏதாவது ஒரு படிப்பை படிக்க வேண்டியது..அப்புறமா எந்த வேலையும் கிடைக்கலைனா ஒரு தனியார் பள்ளியில வாத்தியாரு வேலைக்கு சேர வேண்டியது..கொஞ்ச நாள்ல அனுபவத்தை வாங்கிட்டு வெளிய வந்து இந்த மாதிரி ஆட்டம் போட வேண்டியது.. சில நாட்களுக்கு முன்னாடி வாத்தியாருங்க மாணவனுக்கு சிறுநீரை குடிக்கச் சொல்லி அதுல 3 பேரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதா செய்தி வந்தது..நேற்று ஒரு செய்தியிலே ஒரு ஆசிரியை அடித்து மாணவி மயக்கம் னு வந்தது..நாமளும் அந்த மாணவப் பருவத்தை கடந்துதான் வந்தோம்னு ஏன் இவங்களுக்கு புரியமாட்டேன்குது..

அந்த காலத்து ஆசிரியர்கள்  -அந்த காலத்துல நமக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி தட்டிக் கொடுத்து, வேலை வாங்கினாங்க... அவங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,  அவங்ககிட்டே பக்குவம் இருந்தது..அவங்களும் அடிச்சாங்க...அதுல அர்த்தம் இருந்தது..உண்மையான பாசம் இருந்தது..நானும் என்னோட கணக்கு வாத்தியார்கிட்டே நிறைய கொட்டு பட்டிருக்கேன்...ஆனா அவர் அன்னிக்கு கொடுத்த தண்டனை என்னை இன்னிக்கு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு..வீட்டுலேயே பையனை நல்ல அடிச்சு வளருங்க னு பெற்றோர் கேட்டுக்கிடுவாங்க..

ஆசிரியர்கள் கையாலாகாத் திறன் 


பருவ வயது மாணவ, மாணவிகளை எப்படி கையாளனும்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சது...இப்போ குழந்தைகளை கூட எப்படி கையாளனும்னு ஆசிரியர்களுக்கு தெரியறது இல்லை...பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்வது தவறு என்றும், அவர்கள் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். அது தெரியாததால்தானே அவன் அல்லது அவள் மாணவர்களாகவே இருக்கின்றார்கள். அடித்தால்தான் புத்தி வரும் என்று சொல்லும் ஆசிரியர்களே...உங்களது பள்ளிப் பருவத்தில் நீங்கள் தவறுகளே செய்தது கிடையாதா? உங்களுக்கும் ஆசிரியர்கள் பொறுமையாய் பாடம் எடுக்கத்தானே செய்தார்கள்!!!

 பாலியல் புகார்களும் ஆசிரியர்களின் பங்கும் 

இப்போது காலம் மாறிவிட்டது...மாணவர்களின் தவறுகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறி விட்டது...ஆனால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் ஆசிரியர்களை என்னவென்று சொல்வது? இப்படி தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அப்போதுதான் அடுத்தாற்போல் அந்த தவறுகள் நடைபெறாது. அவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் வாதாடக் கூடாது. மனித உரிமைகள் ஆணையம் அவர்களுக்கு ஜால்ரா அடிக்க கூடாது. ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்க கூடாது..


ஜால்ராக் கூட்டங்கள் -
 
ஆனால் உடனடியாக சாதி, மற்றும் சங்கங்கள் அரசியல் தலையீடுகள் இருப்பதால்தான் இம்மாதிரியான கேடு கேட்ட விஷயங்கள் அரங்கேறி வருகின்றது. தவறு செய்தார் என்று தகவல் வந்தால் உடனே அது நிருப்பிக்கப் பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் நடந்தேற வேண்டும். பணியிடை நீக்கம் பத்தாது. பணி நீக்கம் மற்றும் ஆசிரியப் பதவி, கல்வித் தகுதி என்று அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். அப்போதுதான் அடுத்தது இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கலாம். 

வரும்காலத்தில்  பள்ளிக் கல்லூரி விளம்பரங்கள் -


போற  போக்கை பார்த்தா இனி எல்லா தனியார் பள்ளியிலும் பாலியல் கொடுமை இல்லாத பள்ளிக்கூடம் எங்களோடது என்று கூட விளம்பரம் செய்யவேண்டி இருக்குமோ என்ற அச்சம் நிலவுகின்றது. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வருகின்றது கல்வித்துறை..

ஆசிரியர்கள் பயோடேட்டா -

அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களின் முழு விவரங்கள் கல்லூரிகளில், பள்ளிகளின் வரவேற்பறையில் வெளியிடப் படவேண்டும். அவர்களது வயது, கல்வித் தகுதி, மற்றும் அனுபவம் பற்றிய தகவல்கள் கொடுத்திருக்க படவேண்டும். அது நடக்கவில்லை என்றால் அவர்கள் தான்தோன்றித் தனமாக நடப்பார்கள். 

கல்வி நிறுவனங்களின் அணுகுமுறைகள் -


மாணவர்கள், மாணவிகள் தவறு செய்யும்போது அவர்கள் திருத்தப் பட வேண்டும்...இல்லை எனில் அந்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க ப்பட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவிகளை மற்ற பிள்ளைகளின் முன்பு அவமானப் படுத்துகின்றார்கள். அது பிள்ளைகளின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். நாங்க ஸ்ட்ரிக்ட் ங்கோ நாங்க டெர்ரர் ங்கோ என்று சீன் காண்பிப் பார்கள். அது தவறு...மாணவனை தனியாய் அழைத்து எச்சரிக்க வேண்டும்..அதுவும் இல்லாவிட்டால் பெற்றோரை அழைத்து வரச் செய்து தண்டிக்க வேண்டும்.


தண்டனைகள் 

சரி இந்த கொடுமைகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகப்படியான தண்டனைகள் என்ன? சவுதியில் கொடுக்கும் தண்டனைகள் என்ன? அங்கே  மரண தண்டனை, இங்கே பெயில்  ஆர்டர்...

நன்றிகள் 


இதை எல்லாம் பார்க்கும் போது என்னை வாழ வைத்த என் இனிய ஆசிரியர்களே, உங்களுக்கு எனது மற்றும் என் குடும்பத்தின் சார்பாய் கோடானு கோடி நன்றிகள்..ஐ லவ் யூ டீச்சர்!!!!

Tuesday, July 24, 2012

பொம்பளைக்கு பொம்பளைங்கதான் எதிரி ??

தலைப்பு என்னவோ அரசியல்வாதிகளை குறிக்கிற மாதிரி இருந்தாலும் நிஜ வாழ்விலும் அது பெரும்பாலும் உண்மைதான்.

உதாரணமா ஏதாவது கர்ப்பிணி பொண்ணு பஸ்சுல ஏறுதுன்னு வச்சிக்கோங்களேன்.உடனே ஆம்பளைங்க எந்திரிச்சு இடம் கொடுப்பாங்க.ஆனா பொம்பளைங்க ஏதோ பிச்சைக்காரிய பாக்குற மாதிரி முகத்தை வேற பக்கம்மா திரும்பிப்பாங்க..

ஏம்மா அவளும் உன்னோட இனம்தானம்மா, கொஞ்சம் இடம் கொடுக்க கூடாதான்னு கேட்டா நானும் பிள்ளைப் பெத்தவ தான்..இப்படி எல்லாம் அலம்பல் பண்ணக் கூடாது னு  முனுமுனுப்பாங்க..

சரி அதுவாவது போகட்டும், மாமியாருங்க நிறைய பேரு மருமகளை டார்ச்சர் பண்ணுவாங்க...கேட்டா   நானும் என் மாமியாருக்கு மருமகளா இருந்திருக்கேன், ஆனா  இப்படி ஒரு   திமிர்  பிடிச்ச மருமகளை  பார்க்க முடியாதுன்னு புலம்புவாங்க.

 சில இடத்துல மருமக மாமியாரை பாடா படுத்துவாங்க..நாளைக்கு நம்ம மகளோ அல்லது மருமகளோ இப்படி பாடாய் படுத்துவாங்களே னு  நினைக்காம கூச்சமே இல்லாம சித்திரவதை பண்ணுவாங்க..

இப்போ காலம் மாறிக்கிட்டு வருது, சீனியர் பொம்பளை ஆபீசருங்க ஜூனியர் பொம்பளை ஆபீசருங்களை அழ வைப்பாங்க. வந்து வைச்சிருக்கு பாருன்னு திட்டித் தீர்ப்பாங்க    சில சமயம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும்...ஏன் மேடம் இப்படி பண்றீங்க நு கேட்டா நான் மட்டும் இந்த போஸ்டுக்கு சாதாரனமாவா வந்தேன் னு திருப்பி நம்மளையே கேள்வி கேப்பாங்க..

ஆனா இந்த மாதிரி சூழ்நிலையிலே ஆம்பளைக்கு ஆம்பளை குறை சொல்றது, போட்டுக் கொடுக்கிறது ங்கிறது பொம்பளைங்களை கம்பேர் பண்றப்ப ரொம்ப குறைவுதான். 

நான் எல்லா பொம்பளைங்களை யும் சொல்லலை, மேற்கூறிய ரகத்தை சார்ந்த ஒரு சில பொம்பளைங்களை மட்டும்தான் சொல்றேன். உடனே மகளிர் அமைப்பு கொடிய பிடிச்சிக்கிட்டு வந்திருவாங்க..

பாரதியாரே! நீ அவசரப்பட்டு ஆணுக்கு பெண் சரிசமம்னு சொன்னே.
உண்மையில் பெண்ணுக்கு பெண் சரிசமம்னு நீ பாடியிருந்தா நல்லா இருந்திருக்குமே...

இன்னைக்கு பதிவுக்கு தலைப்பு ஒண்ணுமே கிடைக்கலை...ஹி ஹி ஹி 

Friday, July 20, 2012

உங்க மகளுக்கு எத்தனை பாய் பிரண்டு?

செல் போன் வந்தாலும் வந்துச்சி...சைபர் கிரைம் குற்றங்கள் கண்ணா பின்னான்னு கூடிக் கிட்டே போகுது.. இப்போ, எல்லா பொண்ணுக கையிலும் செல் போன். ஆத்திர அவரசத்துக்கு ன்னு இருந்த காலம் இப்போ மலையேறி போச்சு..எல்லாரோட கையிலும் இப்போ செல் போன்...வித விதமான மாடல், வித விதமான ரிங்-டோன், சூப்பர் காமெரா, இப்படி பல பல வசதிகள்...இது தவிர ஒருத்தர்கிட்டே பேசுறப்பவே இன்னொருத்தரும் ட்ரை பண்ணா பாட்டு வரும்..அவருக்கு சந்தேகமே வராது...என்னா டெக்னாலஜி??!!!??

நாம தினமும் பாக்குறோம், அந்த பொண்ணுங்க கையிலே பஸ்சுக்கு காசு இருக்கோ இல்லையோ, சாப்பாடை எடுத்து வச்சுதோ இல்லையோ? கரெக்டான ஸ்டாப்புல இறங்குதோ இல்லையோ? ஆனா செல் போன் ல மட்டும் பேசுறதை நிப்பாட்டுறதே கிடையாது. இதையே மேட்டரா வச்சிக்கிட்டு பத்து பொண்ணுககிட்டே சர்வே எடுத்து பார்த்தோம், (உனக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா டா) அப்பா அம்மா அந்த பொண்ணுகளை நம்பி காலேஜுக்கோ, வேலைக்கோ அனுப்புறாங்க..இன்னும் சொல்லப் போனா அவங்களை நம்பி பொம்பளை பிள்ளைங்க முன்னேறனும்னு அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கிறாங்க..ஆனா அவங்க மொபைல் போன்ல அவங்க பாய் பிரண்டுக்கு பேசுறதுக்கு முன்னுரிமை கொடுத்து பெத்தவங்களை ஏமாத்துறதா நினைச்சு அவங்களே ஏமாந்து போறாங்க..
இப்படித்தான் ஒரு பொண்ணு சமீபத்துல திடீருன்னு தற்கொலை பண்ணிக்கிடுச்சி...காதல் தோல்வியா இருக்குமோ நு விசாரிக்க ஆரம்பிச்சாங்க..பெத்தவங்க அவளோட மொபைலே தேடுனாங்க..எதுவுமே சந்தேகப்படும்படியா இல்லை..அப்புறம் வேலை செய்யுற இடத்துல விசாரிச்சாங்க..அதுக்கப்புறமா அவ போற பஸ்சுலேயும் விசாரிச்சாங்க..எதுவுமே கிடைக்கலை...கடைசியிலே போலீஸ்கிட்டே போனாங்க..

அவங்க சைபர் கிரைம் கிட்டே சொல்லவும்..அவங்க அந்த மொபைல்ல இருக்கிற ஒவ்வொரு பொண்ணுக நம்பருக்கும் போன் போட்டு பார்த்தாங்க..என்ன ஆச்சரியம்??? போன் போட்டு பேசுனப்ப எல்லோருமே ஆம்பளை பசங்க??? எங்கே தப்பு நடந்திருக்கு? அந்த பொண்ணு மொபைல்ல எல்லா ஆம்பளைப் பசங்க பெயரையும் பொம்பளை பேருல சேவ் பண்ணி வச்சிருக்கு..உதாரணத்துக்கு ராஜா ங்கிற பெயரை ராஜி, மோகன் கிற பெயரை மோகனா, இப்படி மாற்றி வச்சிருக்கு...அப்போ என்ன அர்த்தம்? வீட்டுக்கு தெரியாம பெயரை மாத்தி வச்சி பெத்தவங்களை ஏமாத்தி கிட்டு இருந்திருக்கு. கடைசியில் அதுல இருக்கிற ஒரு பொண்ணோட நம்பர் மட்டும் சுவிட்ச் ஆப் ல இருந்துச்சி..விசாரிச்சதுல அவன்தான் இந்த பொண்ணு தற்கொலைக்கு முக்கிய காரணம்????????????................
இதுனால பெத்தவங்க பொண்ணுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்திட்டு கடமை முடிஞ்சதா நினைக்காதீங்க..அவ்வப்போது கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..என் பொண்ணை நான் சந்தேகப்படலாமா? அவ அப்படிப்பட்டவள் கிடையாது நு நீங்க நினைக்கிறது உண்மைதான்..அவங்க தப்பு செய்யலைனா நீங்க காலம் முழுக்க நிம்மதியா இருக்கலாம்...ஒருவேளை தவறான வழியிலே போயிருந்தா? ஒருவேளை யார்கிட்டேயும் தப்பா மாட்டி இருந்தா அப்போ இந்த மாதிரியான உங்களோட கண்காணிப்பு அவங்களோட எதிர்காலத்தையும், மானத்தையும், உயிரையும் காப்பாத்துமே? ஆகவே பெற்றோர்களே உசார்!!

Wednesday, July 4, 2012

நம்ம கிரகம் சரி இல்லீங்கோ???

நான் சொல்றது எல்லாம் இணையத்துல இருந்து சுட்டதுதான்...நான் ஒன்னும் அவ்வளவு பெரிய அப்பாடக்கரு எல்லாம் கிடையாதுங்கோ...

ஆனா நம்ம சகாக்கள் தெரிஞ்சிக்கணுமே னு தான் இதை எடுத்து காட்டுறேன்...உங்களுக்கு ஏற்கனவே தெரியும்னா விட்டுருங்கோ, இதுதான் பர்ஸ்ட் டைம் னா பார்த்து தெரிஞ்சிக்கோங்க.


  கிரகங்கள் படங்கள் துணைக் கிரகங்கள்
  புதன் -
  சுக்கிரன் -
  பூமி சந்திரன் (Moon)
  செவ்வாய் போபோஸ் (Phobos)
டைமோஸ் (Deimos)
  வியாழன் மெடிஸ் (Metis)
ஆட்ரஸ்டீ (Adrastea)
அமல்தியா (Amalthea)
தெபே (Thebe)
லொ (lo)
ஈரொபா (Europa)
கனிமெடெ (Ganymede)
கால்லிஸ்டொ (Callisto)
லெடா (Leda)
ஹிமலியா (Himalia)
லைசிதியா (lysithea)
எலோரா (Elara)
அனன்கே (Ananke)
கார்மே (Carme)
பசிபியா ஸினொபே (pasiphae Sinope.).
  சனி அட்லஸ் (Atlas)
ப்ரோமெதியஸ் (prometheus)
பான்டோர (pandora)
எபிமெதியஸ் (epimetheus)
ஜானுஸ் (janus)
மிமாஸ் (mimas)
என்ஸெலாடுஸ் (enceladus)
தேதிஸ் (tethys)
டெலெஸ்டோ (telesto)
கலிப்ஸோ (calypso)
டையோன் (dione)
ஹெலென் (helene)
ரேயா (rhea)
டைடன் (titan)
ஹைப்ரையோன் (hypreion)
ஐயாபெடுஸ் (Iapetus)
போயபே (phoebe.).
  யுரேனஸ் கோர்டெலியா (Cordelia )
ஒபேலியா (ophelia)
பையங்கா (bianca)
க்ரெஸ்ஸிடா (cressida)
டெஸ்டெமொன் (desdemone)
ஜுலியெட் (juliet)
போர்டியா (portia )
ரோசலின்ட் (rosalind)
பெலின்டா (belinda)
புக் (puck)
மிரன்டா (miranda)
ஏரியல் (ariel )
உம்பேரியல் (umbriel )
டைடானியா (titania )
ஒபேரொன் (oberon.).
  நெப்டியூன் நையட் (Naiad)
தலஸ்ஸா (Thalassa )
டெஸ்பினா (despina)
கலட்டீ (galatea)
லரிஸ்ஸா (larissa )
ப்ரோடியஸ் (proteus)
ட்ரிடோன் (triton)
நெரியத் (nereid).
  புளூட்டோ சரொன் (Charon).

முதல்ல இருக்கிற கிரகம் பேரு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் னு நம்புறேன்..ஆனா கடைசியா இருக்கிற துணைக் கிரகம் பேரு எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியலை, எனக்கு நேத்துதான் தெரியும்..அதுனாலதான் உங்கள் பார்வைக்கு...................