பங்காளிங்க..

Friday, September 28, 2012

சமுதாயமே! கொஞ்சம் வாய மூடுறியா?

உயிரோட இருந்தாலும் குத்தம்...நடந்தா குத்தம்..படுத்தா குத்தம்...ஒன்னும் இல்லேனா செத்தா கூட குத்தமப்பா...என்னத்தான் செய்யுறது இந்த பாழாய்ப்போன சமுதாயத்துல...
  1. ஒரு கழுதை மேல ரெண்டு பேரு போறானுங்க பாரு, ஈவு இரக்கமே இல்லாத மனுசங்கப்பா!!!
  2.  ச்சே..பொம்பளைப் பிள்ளைய நடக்கவிட்டு இவன் சவுகரியமா உக்காந்து போறானே..கொடுமைக்கார புருசன்....ப்பா !!!
  3. சீ..பொட்டச்சிய உட்கார வச்சிட்டு இவன் கேனத்தனமா நடந்து போறான் பாரு...இவனால ஆம்பள வர்க்கத்துக்கே கேவலம்...
  4. ஒரு கழுதைய கூட வேலை வாங்கத்தெரியாத இவனுக்கெல்லாம் எதுக்கு இந்த பொழப்பு...பொழைக்கத் தெரியாத மனுசனுங்க..
நீங்க உங்க கற்பனை கட்டி விடுங்க பார்ப்போம்..உங்க அலுவலகம், அரசியல் இப்படி எதுவா இருந்தாலும் சரி...

Wednesday, September 26, 2012

தொல்லையில்லா வாழ்க்கைக்கு இருக்கு 1909

செல் போன் வந்தபிறகு நம்ம மக்களோட பாடு பெரும் திண்டாட்டமாகி போயிடுச்சு...சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், தொல்லைகள் ரொம்ப அதிகமாயிடுச்சு...இதுனால பல பொண்ணுங்களோட வேலை, நிம்மதி, வாழ்க்கை, சந்தோசமும் போச்சு..பல பொண்ணுங்க இந்த செல் போன் மோகத்துல சீரழிஞ்சு போன வரலாறும் இருக்கு...

இதுதான் இப்படீன்னு பார்த்தா இந்த வியாபாரிங்க...முன்னாடி எல்லாம் வீடு வீடா வந்து விளம்பரம் பண்ணாங்க..இன்னும் சிலர் நோட்டீஸ் கொடுத்தாங்க..அதுக்கு அடுத்தாப்புல ரேடியோ எப் எம் னு வந்தாங்க..அதுக்கப்புறமா டிவி பொட்டிக்குள்ளேயும் வந்தாங்க..ஆனா அதுல எல்லாம் காசு கண்டமேனிக்கு போகுதேன்னு யோசிச்சாங்க..இப்போ என்னடானா நாம நம்பி கொடுக்கிற நம்ம விலாசத்தை இந்த போன் கம்பெனிகாரங்க இந்த மாதிரியான வியாபார முதலாளிகளுக்கு சில லகரத்தை வாங்கிட்டு கொடுத்திடுறாங்க..

அந்த மொதலாளிங்க என்ன செய்யுறாங்க...ஒரு பொம்பள பிள்ளைய வேலைக்கு வச்சிக்கிட்டு சார் லோன் தாரோம், சார் கடன் கொடுக்கிறோம், சார் வீடு கொடுக்கிறோம் னு நம்ம போன் நம்பருக்கு போன் பண்ணி உயிரை வாங்குறாங்க..அவங்க தப்பு கிடையாது..அவங்க பொழைப்பை பாக்குறாங்க..ஆனா எதிராளியோட சந்தர்ப்ப சூழ்நிலையை அவங்க புரிஞ்சிக்க வாய்ப்பு கிடையாது..அவங்க சொல்ல வேண்டியது சொல்லிட்டு போயிடுவாங்க...எத்தனை பேரு வண்டி ஒட்டிக்கிட்டு இருப்பான், எத்தனை பேரு ஏதோ அவசர காலோ னு அவசர, அவசரமா வண்டிய நடு ரோட்டுல பிரேக்கை போட்டு பின்னாடி இருக்கிறவன்கிட்டே வசவு வாங்கிகிட்டு போனை எடுத்தா சார் நான் ஐசிஐசிஐ  இலே இருந்து பேசுறேன்னு கேட்டா எவ்வளவு கோவம் வரும்,

எப்படி நம்ம நம்பெரு அவனுங்க கைக்கு போகுது? இதுவே நாம நமக்கு வந்த ராங் காலை பத்தி விசாரிச்சா போலீஸ் கம்ப்ளைன்ட் இருக்கா? எப்ஐஆர் இருக்கானு நமமலையே கேட்பானுங்க? ஆனா அவனுங்களுக்கு மட்டும் நம்ம பேரு, முகவரி எல்லாம் கரெக்டா கிடைக்குதே? அது எப்படி?

இப்போ அதை தடுக்கிறதுக்கு அரசாங்கம் ஒரு வசதியை செஞ்சு கொடுத்திருக்கு...அது என்னா நம்பருணா 1909 ...இந்த போன் நம்பருக்கு போன் பண்ணி, கம்ப்ளைன்ட் கொடுக்கலாம், இது ஒரு இலவச சேவை எண். இதுக்கு நீங்க எஸ் எம் எஸ் கூட அனுப்பி புகாரை தெரிவிக்கலாம்.

அதே சமயம் போன் பண்ணி சொல்றதா இருந்தா அந்த தொல்லை கொடுக்கிற எண் கடைசி 3 நாளுக்கு உள்ள வந்ததா  இருக்கணும்..புகார் கொடுக்கிறப்ப புகார் தெரிவிக்கப்படுபவரின் நம்பர், எந்த நேரம், எந்த நாள் என்பதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். உடனே அது ஒரு புகார் எண்ணை உங்களுக்கு தெரிவிக்கும். மேலும் 7 நாட்களுக்குள் உங்களுக்கு அந்த புகாரை பற்றிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும்.   உடனே உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிவியுங்கள்.

Thursday, September 20, 2012

"பன்னி" கூட சிங்கிளாத்தான் வரும்

முதலில் இந்திய சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மற்றும் டீசல் விலை கடுமையான உயர்வு போன்றவற்றிற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நடுத்தர மற்றும் ஏழைகளின் வயிற்றினில் அடிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி, எத்தனை பிரச்சினைகளை கொண்டு வந்தாலும்  நிலக்கரி சுரங்க ஊழலை மறக்க மாட்டோம்...

தலைவரு ரசினிகாந்து சில நேரம் சில விஷயத்தை பஞ்ச் டயலாக்கா பேசுவாரு..கண்ணா சிங்கம் சிங்கிளாத்தான் வரும், பன்னிங்கதான் கூட்டமா  வரும் னு சொல்வாரு..உக்காந்து ரூம் போட்டு யோசிச்சேன்..பன்னி கூட சிங்கிளா நிறைய இடத்துல வருதே..அப்புறம் ஏன் தலைவரு அப்படி சொன்னாரு??? அதை அப்பால பார்ப்போம்! இப்போ மேட்டருக்கு வருவோம்...

அந்த "பன்னி" யைப் பத்தி இப்போ எதுக்கு? கண்றாவி னு சொல்றவாளுக்கு எல்லாம் இந்த பதிவு சமர்ப்பணம் ..

கொஞ்சம் அந்த "பன்னி" ய கற்பனை பண்ணிப் பாருங்க, எந்த இடத்துல வருது? கற்பனையை வேற எங்கியாவது சாக்கடை, ஓடை, குட்டத்துல போக விட்டுராதீங்க..உங்க வீட்டு ஹால்ல, பெட்ரூம்ல கூட அந்த சிங்கிள் "பன்னி" இருக்கத்தான் செய்யுது??? அதாங்க அந்த உண்டியல் "பன்னி". அது ஏங்க, சேமிப்பு பண்ற இடத்துல எல்லாம் காலம், காலமா பன்னிய பொம்மையா செஞ்சு வச்சிருக்காக..ஏதாவது குரங்கு, பாம்பு, அப்படி செஞ்சு வைக்க வேண்டியதுதானே...

ஏன் அந்த நாத்தம் பிடிச்ச கண்ராவிய நடு ஹால்ல வைச்சு அலங்காரம் பண்ணனும்...ரெண்டு, மூணு பேங்க் காரங்கிட்டே விசாரிச்சேன்...  
ஹிஹிஹிஹி னு வழியிறாங்கலேத் தவிர பதில் ஒருத்தருக்கும் தெரியல...

அப்புறம் நம்ம கூகிள் அண்ணாச்சியை தேடி பார்த்தேன்..பதில் கிடைச்சது..அதான் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு வந்திருக்கேன்...அதாவது 18 ஆவது நூற்றாண்டுல எல்லாம் "பைக்" னு(pygg) ஒரு வகையான களிமண்ணுல வீட்டுல ஜார், சின்ன சின்ன மண் செம்பெல்லாம் சமையக்கட்டுல யூஸ் பண்ணிருக்காங்க..அந்த காலத்துல இருந்த பொம்பளைங்க அப்பப்ப வர்ற காசை அந்த "பைக்" கில (pygg) செய்யப்பட்ட ஜார் ல காசை போட்டு வைச்சிருக்காங்க..கிட்டத்தட்ட சேமிப்பு மாதிரி, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு போட்ட காசை எடுக்க கூடாது, அப்படியே இருக்கணும்னு அதை மூடி போட்டு வைச்சிருக்காங்க. எப்போ அந்த ஜார் காசா நிரம்புதோ..அப்போ அதை எடுத்து திருவிழா, வீட்டு விசேசத்துக்கு பயன்படுத்திகிட்டாங்க..அந்த ஜார் நிரம்பின பிறகு அதை உடைச்சு எடுத்திருக்காங்க..சரி அதுக்கும், நம்ம கதையோட ஹீரோ "பன்னி"க்கும் என்ன சம்பந்தம்?

அந்த ஆங்கில வார்த்தை "பைக்கு" (pygg) தான் நாளடைவிலே மாறி "பிக்" னு (pig) வந்திடுச்சு னு சொல்றாங்க. ஆனா அந்த காலத்துல இருக்கிறவங்க ரொம்ப கற்பனை வளம் அதிகம்..அப்போ எல்லாம் உள்ள குழந்தைகளுக்கு ஜாரோட அடையாளம் தெரியனும்னு பன்னி முகம் கொண்ட ஜார் களை உருவாக்கி விற்க ஆரம்பிச்சாங்க..."பன்னி" உண்டியல் தயாராயிடுச்சு னு சொல்றாங்க..

இன்னும் சிலர் என்ன சொல்றாங்க னு பார்த்தா அது கொஞ்சம் ஏத்துக்கிற மாதிரி இருக்கு எனக்கு. அதாவது ஒரு விவசாயி ஒரு "பன்னி"ய வளர்த்தாருனா, அதுக்கு பலன் உடனே கிடைக்காது..அவர் அந்த "பன்னி"க்காக பண்ற செலவை உடனே அனுபவிக்க முடியாது, அந்த பன்னி நல்லா வளர்ந்து, கொழு, கொழுன்னு மாறி அதை கறியாக்கு னாதான் அவர் போட்ட முதல் கிடைக்கும்..அது மாதிரி அந்த பன்னி உண்டியல்ல போடுற காசு முழுசா நிரம்பினாதான் அந்த சேமிப்பு முழு பலன் அடையும்கிறது ஒரு எண்ணம். உண்மைதானே...

ஏதாவது முன்ன, பின்ன இருந்தா கோச்சுக்காதீங்க...திட்டுறதா இருந்த மனச திறந்து திட்டிட்டு போயிடுங்க..உள்ளுக்குள்ள புதைச்சு வைச்சு அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்திடுப் போகுது....

Tuesday, September 18, 2012

450 சிசி வாகனம்.....தயார்!!!!


என்னத்த வண்டிய கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம், இந்த காங்கிரஸ்காரங்க தான் பெட்ரோல், டீசல் விலையைத்தான் வண்டி ரேஞ்சுக்கு ஏத்தி ப்புட்டான்களே  அய்யா..னு நீங்க புலம்புறதும் காதுல விழாம இல்லை...
**
**

**
**

**

**

**

ஆனா இந்த வண்டி நம்ம ஊருக்கு இப்போ ரொம்ப கண்டிப்பா தேவை..ஒரு வண்டியிலே 8 பேரு வரைக்கும் தாராளமா போகலாம்.. நம்ம ஊரு மெட்ரோ ரயில் திட்டத்தால ட்ராபிக்ல அல்லோலகப் படுறதை சமாளிக்கத் தான் இந்த மாடல் வண்டி.
**
**
**
**
**
**
**
**

மழை, வெயில் எல்லாத்துலேயும் ரொம்ப பாதுகாப்பா போகலாம்...
**
**
**
**
**
**
**
**

இது விளையாட்டு கிடையாதுங்க...ரொம்ப சீரியஸ் மேட்டரு...நாம என்னதான் ரோடு டேக்ஸ் கட்டினாலும், அவங்க தோண்டிபோட்ட ரோடை த்தான் குடுப்பாங்க.. அதையும் மீறி ரோடு நல்ல இருந்ததுனா கூட சும்மாவாவது தோண்டிப் போட்டுதான் குடுப்பாங்க..அதுக்குதானே அவங்கள ஆட்சியிலே உட்கார வைச்சிருக்கோம்...
**
**
**
**
**


**
**
**
**
**


எப்..............................................புடி?  இந்தியாக்காரன் னா கொக்கா என்ன? 

Saturday, September 15, 2012

நாற்றும், குட்டி சுவர்க்கமும் என்ன சொல்லுதுனா???

நேற்று தற்செயலா இணையத்த துழாவிக் கிட்டு இருக்கிறப்ப அந்தக் கொடுமைய பாக்க நேர்ந்தது...சகோதரி ஆமினாவும், தோழர் நிருபனும் ஏதோ கருத்துவேறுபாட்டுல இருக்காங்க... சத்தியமா யார் முதல்ல ஆரம்பிச்சாங்க னு எனக்கு தெரியல, இடையிலே நுழைஞ்சு நான் விஷயம் தெரியாம பேச விரும்பலை, நான் பஞ்சாயத்து செஞ்சு வைச்சு தீர்ர்ப்பு சொல்ற அளவுக்கு பெரிய அப்பாடக்கரும் கிடையாது.

என்னை பொறுத்தவரை இருவருமே சிறந்த பதிவாளர்கள். அந்த இரண்டு ஜாம்பவான்களும் மோதிக் கொள்வதில் என்னைப் போன்ற எத்தனையோ பதிவர்கள் பாதிக்கப் படுவார்கள். காரணம் இருவரது தொகுப்புகளுமே மிக அருமையானதாக இருக்கும். எங்களில் பலர், வீட்டு பிரச்சினைகளில் இருந்து, அலுவலக பிரச்சினைகளில் இருந்து மாறுபட்டு வந்து இந்த வலைப்பூவில் தேடி அமர்கின்றோம். ஒவ்வொரு பதிவுகளிலும் வரும் பதிவுகளை படித்து சிரித்திருக்கின்றோம், அழுதிருக்கின்றோம், உணர்ச்சி வசப் பட்டிருக்கின்றோம்.....

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிவு, துறை என்று எடுத்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.. ஆனால் நீ எழுதவே கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றே நான் நம்புகின்றேன்.

எனக்கு சகோதரியின்  "குட்டி சுவர்க்கமும்" பிடிக்கும், தோழரின் "நாற்றும்" பிடிக்கும்..இப்படிப்பட்ட குட்டி சுவர்க்கத்தில் அவரது மதத்தினைப் பற்றி எழுதுவது அவரது உரிமை, அதைப் பிடிக்காதவர்கள் அதனை படிக்க வேண்டாமே..நாற்றினில் அவர் ஹிட்ஸ் வெறியராக இருப்பது அவரது விருப்பம்..அதையும் நாம் குறை சொல்ல இயலாது. அவரது திறமையை உலகம் பார்க்க வேண்டும் என்று எண்ணுகின்றார். நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று நான் யாரையுமே சுட்டிக் காட்ட முடியாது, காரணம் உலகில் யார் பெரியவர் என்ற தர்க்கம்தான் உருவாகும்...நம் எல்லோரையும் விட பெரியது நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்திதான்...(அது இந்துவோ, முஸ்லீமோ, பௌத்தமோ, அல்லது கிறித்துவமோ) ஏதோ ஒன்று. அவரவருக்கு விருப்பமான பெயரில் கடவுளை அழைத்து கொள்கின்றோம்.

கடவுள் ஒருவர்தான்...அது நம் மனசாட்சியாய் இருக்கின்றது...ஊர்க்காரன் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்..மறவாதீர்கள் சகோதர, சகோதரிகளே...

Friday, September 14, 2012

தமிழக போலீசாரால் உதயகுமார் சுற்றிவளைப்பு

கூடங்குளப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. பல திருப்பங்கள் வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அமைதிப் பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறை வன்முறையோடு கையாண்டு இறுதியில் ஒரு மீனவனின் பலியோடு ஆரம்பமாகி இருக்கின்றது இந்த போராட்டம். கடந்த ஒரு வருடமாக நடந்த போராட்டத்தின் முதல் பலி என்று கூட சொல்லலாம்.

ஒருவர் காலம் காலமாய் வாழ்ந்த இடம் அழியப் போகின்றது என்று பயம் வரும்போது எந்த மனிதனாக இருந்தாலும் போராடத் துணிவார்கள், அந்த நிலைதான் தற்போது இடிந்தகரை மக்களுக்கும்..இவ்வளவு ஏன், கொள்ளையடித்த நிலத்தை அரசு திரும்ப மீட்டதற்க்கே, மீட்பதற்க்கே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும்போது தான் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த பகுதி பறிபோகும்போது அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

அதற்க்கு 13600 கோடி ரூவாய் செலவழித்த பின்னர் இப்போது கைவிட முடியாது என்று சொல்லும் மத்திய அரசே...சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டால் இதை போன்ற ஆயிரம் மின் திட்டங்களை உருவாக்க முடியுமே? அதற்க்கு முதலில் நடவடிக்கை எடுக்கலாமே? ஓட்டு கேட்கும் போது மட்டும் காலில் விழுந்து பிச்சை எடுக்கின்றீர்களே..இன்று அவர்கள் போட்ட பிச்சையில் வாழும் உங்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்கவில்லை அவர்கள், உபத்திரவம் செய்யாமல் இருங்கள் என்றுதான் மடியேந்தி பிச்சை கேட்கின்றார்கள்.

உங்கள் ஆட்சியில் எத்தனையோ திட்டங்களை பாதியிலே கைவிட்டு இருக்கின்றீர்கள், அப்போதெல்லாம் எவ்வளவோ மக்கள் வரிப்பணம் நாசமாய்த் தான் போயிருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போகும் வெறும் 2 .4 சதவிகித மின்சாரத்திற்காக ஒரு ஊரையே காலி செய்யத் துடிப்பதற்கு நீங்கள் யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள் என்று உதயகுமார் தரப்பு கேள்வி கேட்பது நியாயமாக த்தான் இருக்கின்றது.

காங்கிரஸ் சந்தித்து வரும் "தினம் ஒரு  ஊழல்" பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு இந்த கூடங்குளம் ஒரு மிகப் பெரிய ஆயுதம். வேறு வழியே இல்லை எனில் இருக்கவே இருக்கின்றது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. உடனே எதிர்கட்சிகள் அதனை எதிர்த்து போராடும். இப்படியே காலத்தை ஓட்டும் காங்கிரசிற்கு இனிமேல் இந்தியாவில் இடம் இருக்காது என்றே நம்புவோமாக.
நேற்று கூடங்குளப் பிரச்சினையை பற்றி கலைஞரிடம் கேட்கப் போனால் அவருக்கு "கூடிய குலப்" பிரச்சினையே பெரிய தலைவலியாக இருக்கின்றது. இதில் எங்கிருந்து கூடங்குளத்தைப் பற்றி அவர் விவாதிப்பார்.? குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்றுதான் சொல்லி பார்க்கின்றார். முடியவில்லை.

அதனால் வெறுத்துப் போன உதயகுமார், கைது ஆகின்றேன், சரண் அடைகின்றேன் என்று பேட்டியளிக்க பரபரப்பு அடைந்தது கூடங்குளப் போராட்டக் களம். உதயகுமாருக்கு தானாகவே ஆதரவுகள் பெருகியது. காங்கிரசின் "கை" சற்று ஒடுங்கியே இருக்கின்றது. காரணம் இந்த சமயத்தில் ஞானதேசிகன் "உதயகுமார் கைது செய்யப் பட்டவுடன் அவரை ஆட்டுவித்த அந்த புள்ளி யார் என்று விசாரிக்க வேண்டும்? அவருக்கு பண உதவி செய்தவர் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க சுதாரித்து கொண்ட மக்கள், 
இந்த நிலையில் அவர் சரண் அடைந்தால் அவரை விசாரணை என்ற பெயரில் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற விபரீதத்தை உணர்ந்து அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள, தற்போது அவசரப்பட்டு உளறி விட்டோமே என்று கன்னத்தில் "கை" வைத்துக் கொண்டு இருக்கின்றார் அவர். இருந்தாலும் உதயகுமாருக்கு விழிப்புணர்வு கொடுத்து அவரை சரண் அடையும் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிய ஞானதேசிகனுக்கு நாம் நன்றி கூறியே தீர வேண்டும். அவர் மட்டும் அப்படி எச்சரிக்காமல் இருந்திருந்தால் இன்று உதயகுமார் சரண் அடையக் கூட வாய்ப்புகள் இருக்கின்றது.

 இருந்தாலும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் உதயகுமார் சுற்றிவளைக்கப் பட்டிருக்கின்றார் என்ற செய்திகள் வந்தது. என்னவென்று பார்த்தால் இடிந்தகரை மக்களால் உதயகுமார் பாதுகாப்பாய் சுற்றி வளைக்கப் பட்டிருக்கின்றார் என்ற செய்தி சற்று ஆறுதலை தருகின்றது. 

Tuesday, September 11, 2012

ஜெயாவை ப்பற்றிய கேலிச்சித்திரம் - ஒன்றும் தவறில்லை!!!

கேலிச்சித்திரம் வெளியிட்ட லக்பிமா பத்திரிக்கைக்கு கண்டனத்தை தெரிவியுங்கள் என்று நமது வலைப்பூ நண்பர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள். காரணம் ஒரு பெண்ணை, தமிழக முதலமைச்சரை இழிவு படுத்தி விட்டார்களாம்?? அதனால் அந்த கேலிச்சித்திரத்தை வெளியிட காரணமாக இருந்த ஹசந்தா மற்றும் அந்த பத்திரிகை துறையைச் சார்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். 

அவர்களிடம் கேட்டால் இது கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்கள், இவர்களை கேட்டால் இது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த விசயத்தில் ஒவ்வொரு தமிழனும் முதலமைச்சரையும், பிரதமரையும் அவமதித்து விட்டதாக கொண்ட்தளித்து கொண்டிருக்கும் வேளையில் தனது கட்சிக்காரனை, மன்மோகன் சிங்கை அசிங்கப் படுத்தி விட்டதாக எந்த ஒரு காங்கிரஸ் காரனும் இன்று வரை போர்க்கொடி தூக்க வில்லை.
பிறகு எப்படி அவன் மன்னிப்பு கேட்பான்? மானமில்லாத காங்கிரஸ் வாதிகளால் மானமுள்ள தமிழனும் சேர்த்து அசிங்கப் படுகின்றானே!!??!! இதனை என்னவென்று சொல்வது? இந்த செய்தி வந்ததும் அவரவர் போட்டி போட்டுக் கொண்டு அந்த இணையத்தை தேடித் பார்த்தால் அந்த ஒரு செய்தி மற்றும் அந்த கேலிச்சித்திரத்தை மட்டும் காணவில்லை. பிரச்சினையின் விபரீதத் தை உணர்ந்து அவர்களாகவே அதனை நீக்கி விட்டார்கள். 

ஒரு விஷயத்தை நன்கு தெளிவு படுத்தி பார்க்க வேண்டும். இதனை வெளியிட்டது யார்? இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலா, அவர்தான் இந்த பத்திரிக்கையின் முதலாளி. இந்த மாதிரியான கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட காரணம் என்ன? கடந்த மாதம் டெசோ மாநாடு நடத்திய கலைஞரின் மீது வராத ஆத்திரம் தமிழக முதலமைச்சர் செயலலிதா மீது வரக் காரணம் என்ன?

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரை விட தமிழக முதலமைச்சர் அதிகளவில் குரல் கொடுக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டுமா?

ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் வெளியிட்டும் மன்மோகன் சிங் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற கோபமா? ஏன் , எப்படி இந்த கேலிச்சித்திரம் உருவானது?????

ஹசந்தா அவன் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாய், அதுவும் அவனது சொந்த நாட்டு மக்களின் மீதுள்ள பற்றால் இந்த செய்தியை வெளியிட்டு அவனது தேசப் பக்தியை வெளியிட்டு கொண்டான். அதனால் அவன் பார்வைக்கு அது தவறில்லை...

ஆனால் தமிழனுக்கு என்று ஒரு உணர்வு, தேசப் பற்று, நாட்டுப் பற்று இருக்கின்றதே...அதை அவர்கள் பார்க்கத் தொடங்கினால் இந்த உலகம் தாங்காது..அதே தொனியில் இன்று ஒவ்வொரு தமிழனும் துடி துடித்து கொண்டிருக்கின்றான். இன்று நமது வலைப்பூ நண்பர்கள் முதல் ஒவ்வொருவரும் இந்திய பிரதமரையும், தமிழ்நாட்டு முதல்வரையும், ஒரு பெண்ணையும் அவமதித்து விட்டதாக கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதை பற்றி கலைஞரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கப் போனால் அவர் விழுப்புரத்தில் நடக்க விருக்கும் முப்பெரும் விழா விற்காக தொண்டர்களை சந்தித்து உற்சாகம் கொடுக்க சென்று விட்டாராம். 

இப்படி எல்லாம் நம்மில் பிளவு இருக்கும் போது லக்பிமா போன்ற ஆயிரம் பத்திரிக்கைகள் அவர்களின் கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரல்கள்தான் அந்த செய்தியை அந்த இணையப் பக்கத்தில் இருந்து நீக்க முக்கிய காரணம் என்று நான் நம்புகின்றேன்.

வாழ்க தமிழ், வளர்க தமிழன் ஒற்றுமை...கண்டனங்களை வெளியிட்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் தமிழர்களின் உணர்வுகளை, ஒற்றுமையை உரசிப் பார்த்து பலத்தை புரிந்து கொண்ட ஹசந்தாவிற்கு இது ஒரு எச்சரிக்கை பதிவே!!!!

Friday, September 7, 2012

நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்!!!

நம்ம ஊருல என்னமோ மழை அல்வா கொடுத்திட்டாலும் கூட மத்த ஊருல, மத்த நாட்டுல வெள்ளக் காடாதான் இருக்குது...பாவம் அவங்க மழைத் தண்ணியிலே ரொம்ப அவஸ்தைப்பட்டு தவிக்கிறாகளே னு பரிதாபப் பட்டு நான் சேர்த்து வைச்சிருந்த மண் உண்டியலை உடைச்சு அதுல இருந்த சில்லறை எல்லாத்தையும் டிடி எடுத்து அனுப்பி வைப்போமே , நம்ம ஜாக்கி சேகர் அண்ணாச்சி மாதிரி கொஞ்சம் ஹெல்ப் பண்ணிரலாமுனு நினைச்சேன்..ஆனா அது எவ்வளவு தப்புன்னு இப்போ நல்லாவே புரியுது சாமீ..

நீங்களும் என்னைய மாதிரி உதவி செய்ய கிளம்பிராதீக....நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்...


இப்போ எல்லாம் நம்பி ஏமாந்தவன் னு சொன்னாலே, நம்மள ஒரு மாதிரியா முறைக்கிராங்கப்பா, என்னமோ நான் சகானாஸ் கிட்டே நம்பி ஏமாந்த மாதிரி பார்க்குராக...

உடனே சகானாஸ் ங்கிற பொண்ண நம்பி ஏமாந்திட்டேன் னு வதந்திய கிளப்பிராதீக...நான் சொன்னது வேற சாமீ...

கொஞ்சம் கீழே பார்த்திட்டு சொல்லுங்க...

 

இதுதாங்க மேட்டரு.....

Thursday, September 6, 2012

'அ' என்று சொன்னாலே அனுஷ்கா வும், அம்மாவும்தானா?

நான் சொல்லப் போற இந்த விஷயம் உங்கள்ள எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது?? ஆனா எனக்கு இன்னிக்கு காலையிலேதான் தெரியும்...
 
அதான் நண்பர்கள் உங்களோட பகிர்ந்து கொள்ளலாமுனு இதை பதிவாக்கி இருக்கேன்..


 
அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்.
 
அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
 
http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/anjaneya.jpg
 
அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!
 
அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான் .
 
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/284319_10150383514614148_508402_n.jpg
 
அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/268748_10150384442754148_7080197_n.jpg
 
அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை
அபகரித்தான்
 
 
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/184059_10150395679214148_3475116_n.jpg
 
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்
அளவில்லை.
 
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
 
 
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/228902_10150399681504148_5731314_n.jpg
 
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
 
 
 
 அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
 அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையைஅடைந்தான்.
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/283911_10150401626304148_1749733_n.jpg
 
அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம்
அளித்தான்
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/284247_10150401626269148_8227419_n.jpg
 
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
 
அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்
அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான
அதிசாகசம்.
 
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/205921_10150402882534148_4497382_n.jpg
 
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி ,அதிசயமான அணையை
அமைத்து,அக்கரையை அடைந்தான்.
 
 http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/252019_10150401626534148_3877536_n.jpg
 
 அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301268_10150405827299148_7382688_n.jpg
 
அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/294157_10150407768814148_4366885_n.jpg
 
அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்
 
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301077_10150407794024148_7014848_n.jpg
 
 
அண்ணல் . அனந்த ராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக 
அமைந்ததும் அனுமனின் அருளாலே.
 
 
ராமாயண கதை முழுதும் ''  என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
 
ஆனா நாம என்னடான்னா இன்னமும் 'அ ' என்றால் அணில் , அம்மா, அனுஷ்கா னு  பஜனை பாடிகிட்டு இருக்கோம்.!!!