பங்காளிங்க..

Monday, October 29, 2012

பெண்கள் தண்ணி அடிக்கலாமா? எப்போ அடிக்கலாம்? அதிர்ச்சி ரிப்போர்ட்..

சமீபத்தில் ஒரு கார்டியாலாஜிஸ்ட் உறவினர் ஒருவரை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன்..உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், நான் சொல்கின்றேன் என்று சொன்னார். பல நண்பர்கள் , உறவினர்கள் பல கேள்விகளை கேட்டனர். எனது சகோதரி ஒரு கேள்வி கேட்டார். நான் அவள் கேட்பதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு அவ்வளவா கேள்வி கேட்க வராது. அதுனால அவள் கேட்கும்போது அருகில் இருந்து கவனித்தேன்..முதலில் ஒரு கேள்வி கேட்டாள்..அதாவது நைட் தூங்கி எழுந்திருக்கும் போது அதிகமாக சிறுநீர் வெளியே வருதே...அதுவே பகல் நேரத்துல குறிப்பிட்ட நேரத்துல மட்டும்தான் வருதே...அது ஏன்னு கேட்டா?

உடனே நாங்க எல்லோருமே சிரிச்சோம்..நானும்தான்...அடச் சீ? இதை எல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டுகிட்டு இருக்கியே?  உடனே டாக்டர்...சிவா..அவ கேக்குறதுல தப்பே கிடையாது...இப்படி சிரிக்கிறியே..உனக்கு அதுக்கு பதில் தெரியுமா? நு என்னை பார்த்து ஒரு முறை முறைச்சார். நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி அதிகமா தண்ணி குடிச்சா காலையிலே அதிகமா வரும் னு நான் படிச்ச மருத்துவத்தை என்னோட ஞானத்தை பயன்படுத்தி சொன்னேன்...(அப்படீன்னு ஒன்னு இருக்கா உனக்கு)

சரி தம்பி, நைட்டு தண்ணி குடிக்கலேனாலும் காலையிலே அதிகமா ஒன்னுக்கு வரும் தெரியுமா னு சொன்னாரு, அவர் அந்த "ஒன்னுக்கு" னு சொன்ன வார்த்தை என்னை என்னவோ செய்தது. கூறுகெட்ட டாக்டரு..இப்படி பொம்பளைங்க இருக்கிறப்ப அசிங்கமா "ஒன்னுக்கு" னு சொல்றாரே...டீசண்டா பேசத் தெரியலையே இவருக்கு...என் சகோதரி எவ்வளவு நாகரிகமா சிறுநீரு னு சொல்றா? இவரெல்லாம் என்ன டாக்டருக்கு படிச்சாரு? (மனசுக்குள் திட்டிக் கொண்டேன்)..அவரே தொடர்ந்தார்..சிவா இப்போ நாகரிகம் முக்கியமில்லை...கேள்வியின் தன்மைதான் முக்கியம்.. உன் சகோதரி கேட்டதில் தவறு இல்லை..பலருக்கு தெரியாத உண்மை இது..என்று சொல்லிவிட்டு தொடங்கினார்.

நாம் பகல் பொழுதில் நிற்கும் போதோ அல்லது ஓடும்போதோ நமது உடலில் இருக்கும் அல்லது சேரும் நீரானது புவிஈர்ப்பு தன்மையால் உடல் முழுவதும் பரவி விடும்.முக்கியமாக கால் பகுதிகள் வரை சென்று பரவி இருக்கும்..அதுவே இரவு நாம் படுக்கும் போது நமது உடல் சமதளத்திற்கு வந்து விடும். அப்போது நமது கால் பகுதியும்..இடுப்பிற்கு கீழ் பகுதியும் சமதளத்திற்கு வந்து விடும். அப்போது நமது சிறுநீரகமானது (கிட்னி) தண்ணீரை லாவகமாக எடுத்துக் கொள்ளும். அது நிரம்பும் வரை பிரச்சினை இல்லை., நிரம்பியதும்...உடலை சுத்தம் செய்த நீரானது வெளியேறும் பட்சத்தில் அது சிறுநீராக சொல்லப் படுகின்றது.

அதனால் காலையில் எழுந்ததும் ஒண்ணுக்கை அடக்கி வைக்காமல் கழித்து விடுவது மிக நல்லது. காரணம் அப்படி அடக்கும் போது சிறுநீரகத்தில் இருக்கும் அசுத்த நீர் மீண்டும் நம் உடலோடு கலந்து விடும்..அதுவே பல துவாரங்களை அடைத்து விட வாய்ப்புகள் இருக்கின்றது. நான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்..ஆனால் அவர் அடிக்கடி "ஒன்னுக்கு", "ஒன்னுக்கு" என்று சொன்னதை கேட்டு நான் முகம் சுழித்தேன்..அப்படியே என் சகோதரியை பார்த்தேன்..அவள் எதையுமே சட்டை செய்யாமல் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சரி..சரி..நேரமாச்சு, நாம கிளம்புவோமா? என்று அவளை அங்கிருந்து அப்புறப் படுத்த முயற்சி செய்தேன்..பலனில்லை..அடுத்தது அவள் கேட்ட கேள்வியில் ஒட்டுமொத்த கும்பலும் ஆடிப் போயி விட்டது. டாக்டர் அங்கிள்..பெண்கள் தண்ணி அடிக்கலாமா? எப்போ, எவ்வளவு தண்ணி அடிக்கலாம்? சீ நாயே..வாயை மூடு, எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க பாரு...பேசமா வந்து தொலையிரியா? அடுத்த மாசம் உனக்கு கல்யாணம் டி, நீ இப்படி கேட்டதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டா அவ்வளவுதான்?

டாக்டர் மாமா...உடனே என்னை பார்த்து கண்ணசைத்தார்..(பார்த்தியா, உன்னை  விட சின்ன பிள்ளை, எப்படி புத்திசாலித்தனமா கேக்குது, நீயும்தான் இருக்கியே? அவர் பார்வையின் அர்த்தம் இதுதான்) என்பதை புரிந்து கொண்டேன்..உடனே அவர் பதில் அளிக்க ஆரம்பித்தார்..

பாப்பா, தூங்குறதுக்கு முன்னாடி ஒரு அவுன்சு அல்லது ஒரு கிளாஸ் தண்ணி அடிச்சா? ஸ்ட்ரோக் அல்லது ஹார்ட் அட்டாக் லே இருந்து விடுதலை..அது மட்டுமல்லாம கால் உளைச்சல்..முட்டு அசதி இலே இருந்து கூட விடுதலை கிடைக்கும்..நல்லா தூக்கம் வரும்..
(நான் உடனே பெப்பர் போடணுமா? ஐஸ் போடலாமா னு கேட்க என்னை ஒரு முறை முறைத்தார்..நான் ஒன்னும் தப்பா கேட்கலையே..)

காலையிலே எழுந்த பிறகு ரெண்டு கிளாஸ் தண்ணி யடிச்சா, நமது உள் உறுப்புகள் எல்லாம் நல்லா புத்துணர்ச்சி பெற்றிடும்...உடனே நான் குறுக்கிட்டு அங்கிள், (ஸ்மெல் வருமே னு கேட்க..அதுக்கு அவர் நல்லா பல்லை துலக்கிட்டு அடிச்சா எந்த நாத்தமும் வராது..நீ கொஞ்சம் வாய மூடுறியா னு கேட்குற மாதிரியே இருந்தது...இவனுங்க பேசுறத காட்டிலும் நான் என்னத்தை அப்படி தப்பா கேட்டுட்டேன்)

அதே மாதிரி மதிய உணவு சாபிடுரதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு கிளாஸ் தண்ணி யடிச்சா போதும்..சாப்பாடு நல்லா செரிமானம் ஆயிடும்..நிறைய பேரு சொல்வாங்க தண்ணியடிச்சிட்டா சாப்பிட முடியாதுன்னு..அது தப்பு..அரை மணி நேரத்துக்கு முன்னாடி தண்ணியடிக்கலாம்.

அடுத்தது குளிக்கிறதுக்கும் முன்னாடி கூட ஒரு கிளாஸ் அடிக்கலாம்...குறைந்த ரத்த அழுத்தம் கட்டுபடுத்தும்..(இப்போதான் கரெக்டா பாயிண்டுக்கு வந்திருக்காரு, குளிச்சதும்..போதை தெளிஞ்சு வாடை எல்லாம் போயிடும்..னு நான் மறந்து போய் சத்தமா சொல்ல) அந்த டாக்டர் அங்கிளே என் தலையிலே ஓங்கி ஒரு கொட்டு வச்சிட்டாரு..

அட மடையா இருபத்தி நாலு மணி நேரமும் சரக்கு நினைப்புலேயே இருக்காதே...உன் தங்கச்சி கேட்டது குடிக்கிற தண்ணீர்...அவள் எல்லோரும் ரசிச்சு கேட்கட்டுமே னு சாதாரண பாசையிலே கேட்டா, நானும் அதே அர்த்தத்துல பதில் சொன்னேன்..உன்னை மாதிரி அறிவாளிகளுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தானே விளங்குது னு சொல்ல நான் கப்சிப்...

Friday, October 26, 2012

பெண்களே, மரியாதை*யோட நடந்துக்கோங்க?!?

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று சொன்ன எனது தலைவன் பாரதி இன்று அந்த வாசகத்தை சொல்லி இருப்பானா என்பது சந்தேகம்தான்.. காரணம் வேகமாக பரவி வரும் கலாச்சார சீர்கேடுகளே?  தவறான கலாச்சார சுதந்திரம் எல்லாமுமே பெண்களை இன்று வரை அடிமையாகவே வைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். நான் எல்லா பெண்களையும் சொல்ல வில்லை. தவறான கலாச்சாரத்தை தேடி தேடி போய் விழும் அந்த குறிப்பிட்ட பெண்களை மட்டுமே சொல்ல ஆசைப்படுகின்றேன்..

சினிமாவில் ஆபாசக் காட்சி வந்ததும் போர்க் கோடி தூக்கும் மகளிர் சங்கங்கள் தினமும் நாடகம் என்ற போர்வையில் தமிழ் கலாச்சாரத்தை கூறு போட்டுக் கொண்டிருக்கும் நாடகங்கள் எதையுமே பார்க்காமல் விட்டு வைப்பதில்லை. காரணம் கேட்டால் சமுதாயத்தில் நடப்பதை தானே சொல்கின்றது என்று பதில் சொல்லி அவர்களை அவர்களாகவே கேவலப் படுத்திக் கொள்கின்றார்கள். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அந்த ஒரு தவறு இன்று இந்த கேவலமான நாடகங்களால் உலகமெல்லாம் இருக்கும் ஏழை பெண்களையும் தொலைகாட்சி வழியாக சென்று அடைகின்றது.

சமுக வலைத்தளங்கள் ஒரு புறம் நன்மை இருந்தாலும், மறுபக்கம் அதனால் பல தீமைகள் இருக்கின்றது என்பது ஒவ்வொரு நாளும் வெட்ட வெளிச்சமாகின்றது. இரண்டு தினத்திற்கு முன்னால் பாடகி சின்மயி இணையதளத்தில் ஆபாசப் படம் வந்திருப்பதாக புகார் தெரிவித்தார். அதை பற்றி காவல்துறை விசாரித்து வருகின்றது.

என்னதான் பிரபலமாக இருந்தாலும் ஒரு தடவை அந்த பெயர் வந்து விட்டால் அதன் பின்னர் அந்த ஆபாசப் புகைப்படம் இன்று உலகம் முழுவதும் சென்று அடைந்திருக்கும். எத்தனை பேர் அதனை தரவிறக்கம் செய்தார்களோ? எத்தனை பேர் அதனை பிரின்ட் செய்தார்களோ? யாருக்கு தெரியும்?

சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்ட அதிர்ச்சித் தகவல்...சென்னை போன்ற பெருநகரங்களில் டேட்டிங் முறையில் அதிகம் சீரழிவது நடுத்தர வர்க்க மற்றும் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்களே? பணக்கார வர்க்கத்தை சார்ந்த பெண்கள் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு அந்த ஆசைகளை தூண்டி விட்டு அவர்கள் ஒதுங்கி கொள்ள வாழ்க்கையை தொலைத்து நிற்பது நடுத்தர வர்க்கத்தின் சகோதரிகளே என்பதே அதன் ஆய்வு.

தற்போது அடுத்த அதிர்ச்சித் தகவல் என்னவெனில், சமுக வலைத்தளத்தில் வரும் பெண்களின் புகைப்படங்களை அனிமேசன் செய்து அழகுப் படுத்தி ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் கும்பல் ஒன்று சிறிலங்காவில் இருந்து செயல்படுவதாக வந்திருக்கின்றது. அதாவது முகநூல், டுவிட்டர், நெட்லாக் போன்ற வலைதளங்களில் பதியப் படும் படங்களை தரவிறக்கம் செய்து அதனை மார்பிங் கலை மூலம் நிர்வாணப் படமாக மாற்றி ஆபாசத் தளங்களுக்கு விற்கின்றார்களாம். அதற்க்கு அவர்களுக்கு ஒரு படத்திற்கு 10 டாலர் வரை சம்பளமாக கொடுக்கப் படுகின்றதாம்.  மிகத் திறமையான கிராபிக் டிசைனர்ஸ் இதற்க்கு பயன்படுத்தப் படுகின்றார்களாம். இந்த செய்தி உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

நான் சொல்வதில் சந்தேகமெனில்...கூகிள் இணையதளத்தில் "sri lanka selling female edited photos" என்று அச்சிட்டு தேடித் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் கணவர் வீட்டினில் இந்த புகைப்படங்களை பார்க்க நேர்ந்தால் அவமானம் அந்த பெண்ணிற்கு மட்டுமல்ல..அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையுமே சாரும். வளர்ப்பு சரி இல்லை என்று அவர்களின் பெற்றோர்களின் மீது பழி விழும். இதுதானே உலக இயல்பு... தயவு செய்து போலி கலாச்சாரத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்..எனக்கும் இரு மகள்கள் இருக்கின்றார்கள். அந்த பயமே இந்த விழிப்புணர்வுக் கட்டுரை..உங்களுக்கு உங்கள் பெற்றோர் கொடுக்கும் சுதந்திரம் பாதுக்காப்பாய் இருக்க வேண்டும். பெண்கள் இன்னமும் விழிப்புணர்வு பெறவில்லை..அதுதான் நிசம். விழிப்புணர்வு பெற்றுவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கின்றார்கள். சுதந்திரம் என்பது கருத்துச் சுதந்திரம்..கல்விச் சுதந்திரம்..காதல் சுதந்திரம்..கலாச்சாரச் சுதந்திரம் கிடையாது...இந்தியப் பெண்களுக்கு என்று ஒரு சில கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றது. அந்த அடையாளங்கள் அழியாமல் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும்.

பதிவுலக சகோதரிகளே, தயவு செய்து தலையங்கத்தைப் பார்த்து கோபப்படாதீர்கள்????

* மரியாதை என்பது உங்கள் குடும்ப மான, மரியாதை 


மேல குடுக்கப் பட்டிருக்கும் படம் உதாரணத்திற்க்காகவே...உடனே நம்மளை பிடிச்சு உள்ளே போட்டுறாதீங்க...

Wednesday, October 24, 2012

சென்சாருக்கு போகாத எல்லை மீறிய காட்சிகள்.???

காட்சிகளுக்கு என்று ஒரு வரைமுறை இருக்கின்றது.ஆனாலும் அந்த எல்லைகளை மீறினாலும் அதற்க்கு சென்சார் தடைவிதிக்க வில்லை.என்ன காரணம்???

காட்சிகளைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...மேலே இருக்கும் படம் சென்சாருக்கு போச்சா எனக்கு தெரியாது, ஆனா கீழே வரும் படங்கள்???
                                                                 *******************
                                                                  ******************
                                                                     ****************
                                                                       **************
                                                                         ************
                                                                           **********
                                                                            *********
                                                                             ********
                                                                              *******
                                                                                *****
                                                                                 ****
                                                                                  ***
                                                                                   **
                                                                                    *என்ன எல்லா படமும் கட்டம் போட்டிருக்கிற எல்லையை மீறித்தானே இருக்கு??????????????????

Saturday, October 20, 2012

ரியல் எஸ்டேட்டுக்கு வருது ஆப்பு??

சென்னை போன்ற மாநகரங்களில் வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர், வெளி மாவட்டத்தினரின் படையெடுப்பால் வீடு விற்பனை, வீடு வாடகை எல்லாம் பயங்கிரமான விலைகளில் ஏழை, நடுத்தரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெருகி விட்டது. மீறி போய்க் கேட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். உனக்கு ஏத்த மாதிரி உன்னோட பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி வீடு மேல்மருவத்தூருக்கு பக்கத்துல, அல்லது திண்டிவனம் தாண்டி ஒரு 350 சதுர அடியிலே காலி மனை இருக்கு, போட்டிரலமா? கண்டிப்பா எனக்கு அதுல 2 பெர்சன்ட் கமிசன் கொடுத்திரனும். ஐயா என்ன இது? நான் எக்மோர் ல வேலை பாக்குறேன்..திண்டிவனத்துல இடத்தை வாங்கிப் போட்டு நான் என்ன செய்யுறது?

என்னை கேட்டா? உங்க பட்ஜெட்டுக்கு அங்கனத்தான் வீடு கிடைக்கும், சீக்கிரம் சொல்லுங்க..அதுவும் அப்புறம் கிடைக்காது..என்னவோ வெந்நீரை காலில் ஊற்றியவாருதான் பேசுவார்கள். சரி அப்படி எனில் நாமெல்லாம் வீடு கட்டவே முடியாதா? வீடு வாங்குவதே மிகப் பெரிய லட்சியமாக இருக்க வேண்டுமோ? சரி வாடகைக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது அதை விட மிகக் கொடுமையானதாய் இருக்கும், ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் போடும் கண்டிசனைப் பார்த்தால் தீவிரவாதிகள் கொடுக்கும் நிபந்தனைகளை விட கொடுமையானதாய் இருக்கும்.

இரண்டு பேருக்கு மேல் வீட்டினில் ஆள் இருக்க கூடாது., தண்ணீர் கொட்ட கூடாது., விருந்தாளிங்க இரண்டு நாளைக்கு மேல தங்க கூடாது. சத்தம் போட கூடாது. சவுண்ட் கூட வைக்க கூடாது..குப்பையை கொட்ட கூடாது..இப்படி எத்தனயோ கூடாது???

அதுனால இப்போ அதிநவீன வசதிகளைக் கொண்ட வீடுகளை MS எம்எஸ் என்ற நிறுவனம் கட்டிக் கொடுக்கின்றது. மிகக் குறைந்த செலவினில் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கட்டிக் கொடுக்கின்றது.

பயன்கள் - இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு எல்லா வசதிகளையும் பெற்றுத் தருகின்றது. நல்ல காற்றோட்டம்...நல்ல தண்ணீர், சூரிய ஒளியில் மின்சாரம்...இப்போது நமக்கு இருக்கும் பெரும் பிரச்சினையே இந்த மின்சாரம்தான்..அந்த மின் வெட்டு என்பது அறவே இருக்காது..அது மட்டுமல்லாமல் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பே கிடையாது. அந்தளவிற்கு பாதுக்காப்பாய் இருக்கும். அந்த வீட்டின் மாடல்களை உங்களுக்காக தருகின்றேன்...பாருங்கள்..இன்றே பதிவு செய்யுங்கள்...MS Homes.

அதுல பாருங்க, உங்க வீட்டுல திருடன் பயம் இருக்கவே இருக்காது, தைரியமா நீங்க எந்த ஊருக்கு வேணுமினாலும் உங்க வீட்டோட போயிட்டு வரலாம்...

தினமும் வெயில்ல சுத்துரதால சூரிய ஒளியிலேயே மின்சாரத்தை பயன்படுத்திக்கலாம்..எவனுக்கும் கரண்ட்டு பில்லு கட்ட வேண்டாம்..பேருந்து கட்டணம் கட்ட வேண்டாம்..எங்கன வேணுமினாலும் ஜன்னல் வாசல் கதவு வச்சிக்கோங்க..அது உங்க இஷ்டம்..வாஸ்து படி ரூமை மாத்த வேண்டாம்...வீட்டையே திருப்பி வச்சிக்கலாம்.,

எப்படி நம்ம எம் எஸ் ஹோம்ஸ் பிளான்? 
இப்படிக்கு
CEO
Minsaara Siva HOMES

Thursday, October 18, 2012

கண்ணால் காண்பது பொய்யா?


என் கண்ணே, என் கண்மணியே..னு வசனம் பேசுவானுங்க..அந்த கண்ணைப் பத்தி வேறு என்ன தெரியும்னு கேட்டா,
பார்க்க முடியும் னு சொல்வாங்க..இன்னும் சிலரை கேட்ட அழ முடியும்னு சொல்வாங்க...அதைப் பத்தி ஒரு நாலு வரியாவது தெரிய வேண்டாமா? கண்ணழகி யைப் பத்தி வண்டி வண்டியா கதை விடுவாங்க..ஆனா அந்த கண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரிய வேண்டாமா?

சரி எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிடுறேன்...உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க...

1 . சராசரி மனுஷன் ஒரு நிமிசத்துக்கு 12 முறை கண்ணை சிமிட்டுவானாம்.

2 . அந்த இத்தனூண்டு கண்ணை செயல்படுத்துறதுக்கு 2 மில்லியன் சிறு சிறு கருவிகள் இருக்குதாம்.


3 . 576 மெகா பிக்சல் திறன் கொண்டதாங்க நம்மோட கண்ணு..


4 . கண்ணுக்குள்ளே இருக்கிற கார்னியாஸ் ங்கிற நாளத்துல மட்டும் ரத்தம் ஓட்டம் இருக்காதாம்...தண்ணீர் போன்ற திரவம் மட்டுமே ஓடிக்கிட்டு இருக்குமாம்.


5 . அந்த சின்னக் கண்ணாலே ஒரு மணி நேரத்துல 36000  பிட்ஸ் டேட்டாவ சேகரிக்க முடியுமாம்...


6 . கண்ணுக்குளே இருக்கிற அந்த பந்து 28 கிராம் எடை கொண்டதாம்.


7 . கண்ணை திறந்து வச்சிக்கிட்டே யாராலும் தும்ம முடியாதாம்..


8 . சரசாரிய ஒரு நாளைக்கு 40000 முறை நாம கண்ணை சிமிட்டுரோம்னு ஆய்வுல கண்டுபிடிச்சு இருக்காங்க.. 

 இந்த அளவிற்கு சிறப்பான கண்ணால மேல காண்பிச்சு இருக்கிற வேண்டாத விசயத்த பார்க்காம நம்ம நல்லதுக்கு தேவையானதா மட்டும் பாருங்க..
கண் தானம் செய்வீர்!!

Tuesday, October 16, 2012

பேஸ்புக்கில் பெட்ரோல்?

இந்த அறிய தகவல்களை இந்திய பிரதமருக்கும், மத்திய நிதியமைச்சருக்கும் அர்ப்பணிக்கின்றேன்..அதற்க்கு ஏதுவாக ஒரு வாழ்த்துக் கவிதையோடு தொடங்குகின்றேன்...

வாழ்த்துக் கவிதை.

பெட்ரோல் விலையைப் போன்று உன் சந்தோசம் நாளுக்கு நாள் உயரட்டும்..
இந்திய ரூவாயைப் போல உன் துக்கங்கள் தினமும் குறையட்டும்..
இந்தியாவில் நிறைந்திருக்கும் ஊழல் போல உனது இதயம் சந்தோசத்தால் நிரம்பட்டும்...


என்று ஆசிர்வாதத்தோடு இந்த பெட்ரோல் பற்றிய அறிய தகவல்களை வழங்க இருக்கின்றேன்...

சந்தோசமும் துக்கமும் ஒரே விலையில் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்
பீர் பாட்டில் மற்றும் பெட்ரோல் இரண்டுமே லிட்டருக்கு ரூ. 80 மட்டுமே..


அன்புள்ள மாமனாரே...
எனக்கு வரதட்சணையாக கொடுக்க நினைக்கும் கார் வேண்டாம்...
உங்கள் மகளே போதும்!!!! ஏனெனில் ஒரே நேரத்தில் என்னால் இரண்டு பேரை மெயின்டெயின் செய்யமுடியவில்லை. காருக்கு பெட்ரோலும் போட முடியவில்லை...உங்கள் மகளுக்கு தீனியும் போட முடியவில்லை.


டாடா நானோ வின் எரிபொருள் விலை ஒரு மாதத்திற்கு கட்டும் அதன் ஈஎம்ஐ யை விட அதிகமாகி விட்டது.
டாடா நானோ நிறுவனம் கவனிக்க...


விரைவினில் ரூபாயை சீனியர் சிடிசன் என்று சொல்லலாம்...காரணம் அமெரிக்கா டாலருக்கு எதிராக அது விரைவினில் 60 ஐத் தொட்டு விடும்.  ஆனால் பெங்களூருவில் விற்கப்படும் பெட்ரோல் எப்போதோ சீனியர் சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டதே...காரணம் அது லிட்டருக்கு ரூ. 81 .

போக்குவரத்து துறை காவலர்களே...விளம்பர பலகையை மாற்றுங்கள்...டோன்ட் ட்ரின்க் அண்ட் டிரைவ் என்று சொல்லாதீர்கள்...குடிச்ச பிறகு பெட்ரோலுக்கு ஏது காசு? அதுனால ஜஸ்ட் ட்ரின்க் என்று சொன்னாலே போதும்...அவங்களாவே வண்டி எல்லாம் ஓட்ட மாட்டாங்க..

இந்தியாவில் மட்டும் தான் உலகின் குறைந்த விலையில் காரும் உலகிலேயே அதிக விலையில் பெட்ரோலும் கிடைக்கின்றது..

பெட்ரோல் பம்பில் ஒரு கஸ்டமர் - எனக்கு பெட்ரோல் புல் டேன்க் நிரப்பு பா?
அட்டென்டன்ட் - சார், உடனடியா உங்க பான் கார்டை சப்மிட் பண்ணுங்க...
கஸ்டமர் - ஏன்? எதுக்கு?
அட்டென்டன்ட் - சார், நீங்க ஹை வேல்யு ட்ரான்ஸாக்சன் செஞ்சுகிட்டு இருக்கீங்க...நியாபகம் வச்சிக்கோங்க..
கஸ்டமர் - ?????

விளம்பரம் அறிவிப்பு பலகை...

நீங்கள் ரூ. 20000 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் போட்டீர்கள் என்றால் ஒரு டாடா நானோ கார் முற்றிலும் இலவசம்..

பெட்ரோல் பற்றிய அறிய தகவல்களை தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்...


முக்கிய குறிப்பு...

இதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே..எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத் திறனைப் பற்றி எதுவுமே சொல்ல வில்லை என்பதை தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கின்றேன்..

Sunday, October 14, 2012

பதிவர்களே! ஒழுங்கா நடங்க...எச்சரிக்கை பதிவு..

நான் சின்னவனா இருக்கலாம், உங்க எல்லாரையும் விட வயசுல, பணத்துல தகுதி குறைய உள்ளவனா கூட இருக்கலாம்..அனுபவத்துல கூட சின்னவனா இருக்கலாம்..ஆனா நான் சொல்றத கேட்டு நடந்தா உங்களுக்குத் தான் நல்லது..நீ என்னடா சொல்றதுன்னு கண்டுக்காம போனா அப்புறம் உங்களுக்குத் தான் நஷ்டம்...எனக்கு ஒன்னும் கிடையாது. அதுனால நான் சொல்றத கேட்டு இனிமேலாவது நடங்க.. யாருடா இவன் சுத்த பயித்தியக்காரனா இருக்கானே  யோசிக்காதீங்க...நான் சொல்றது வாழ்க்கையிலே நடக்கிறது கிடையாது, சாலையிலே நடக்கிறது....

டயாபடீஸ் நோய்க்கு மருந்து... 

இரண்டாம் வகை டையபடீஸ் நோயை விரட்டனும்னு நினைச்சா தினமும் 2 கிலோமீட்டர் நடந்து போங்க..உடம்புல இருக்கிற வெயிட்டு குறையிறப்ப தானா அந்த இரண்டாம் வகை டையபடீஸ் குறையுமாம். கூடுமானவரைக்கும் தினமும் 45 நிமிஷம் சமதளத்துல நடக்கனுமாம்..தயவு செஞ்சு மாடிப் படி, ஏறி இறங்காதீங்க, அதை விட சமதளத்துல நடக்குறது ஆயிரம் மடங்கு பெரிய விஷயம்

ஹார்ட் அட்டாக் ???

அதிகமாக பெண்களுக்குத் தான் நெஞ்சு வலி திடீரென்று வரும்..காரணம் அவர்கள் ஆண்களை விட அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள்..புடவை விலை 100 என்றாலும் அதிர்ச்சியடைவார்கள்..புடலங்காய் விலை கிலோ 10 என்றாலும் அதிர்ச்சியடைவார்கள்.. அவர்களை கேலி செய்யவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் அவர்களைப் போன்றவர்களுக்கு ஹார்ட் அட்டாக் என்பது மிக எளிதில் வந்து விடும். அதனை தடுப்பதற்கு அவர்கள் தினமும் 20 நிமிடங்கள் நடந்தாலே போதுமானது. கிராமப் புற, மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் கோயில்களுக்கு சென்று விட்டு வருவதனால் சற்று உடலில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் நகரத்தில் அபார்ட்மெண்டில் இருக்கும் பெண்கள் வேறு வழியே கிடையாது...கண்டிப்பாக மொட்டை மாடி அல்லது கார் பார்க்கிங் இடத்தினில் தினமும் 20 நிமிடம் நடந்தால் மைனர் ஹார்ட் அட்டாக் எல்லாவற்றையும் தடுத்துவிடலாம் என்கின்றது ஆய்வு. சரி ஆண்களுக்கு இல்லையா? அவர்களுக்கும் இருக்கின்றது...அவர்கள் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டியது அவசியமாகின்றது.

புத்திக்கூர்மை தீட்டப்படுது...

மைன்ட் ஷார்ப் ஆக மாறுவதற்கு தினமும் நடப்பது ஒரு காரணம் என்றும் ஆய்வினில் கண்டறியப் பட்டுள்ளது. ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது ஏதாவது ஒரு குளறுபடி என்று இருக்கும் நேரத்தில் பெண்கள் மாற்றாக டிவி பார்ப்பது என்று ஆண்கள் மாற்றாக தம் அடிப்பது என்றும் அதனால் அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆகிவிட்டதாக நினைக்கின்றார்கள். அதற்கு மாற்றாக அவர்கள் பத்து நிமிடம் அமைதியாக மிக மெதுவாக நடந்தால் புதிய வழி பிறக்கும், பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர புது யுத்தி தோன்றும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

குறைந்த ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

தினமும் 10 நிமிடங்கள் என்று கணக்கிட்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் நடந்தால் குறைந்த ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

ஸ்ட்ரோக் என்னும் வலிப்பு வராமல் தடுக்க

வாரம் 12 .5 மைல் தூரம் நடந்தால் திடீரென்று வரும் பக்கவாதம் தடுத்து நிறுத்தப் படுகின்றதாம்..

புத்துணர்ச்சிக்கு

நல்ல மூடே இல்லை, நல்ல மூடுல இல்லை, என்னை கொலைகாரனாக்காதே என்று புலம்பும் ஆண்களும் சரி..நான் மூட் அவுட், என்னை கொஞ்சம் தனியா விடுங்க நு சொல்ற பெண்களும் சரி..எல்லா பிரச்சினைகளையும் ஓரங்கட்டி வச்சிட்டு கொஞ்ச நேரம் அமைதியா நடந்து பாருங்க...மூடு எல்லாம் தானா வரும்...எல்லா மூடும்...உங்க பிரச்சினைக்கு ஏத்த மாதிரியே..

கலோரியோட வில்லன் யாரு?

தினமும் 20 நிமிஷம் நடந்தா ஒரு வருசத்துல 7 பவுண்டு கலோரிய உடம்புல இருந்து நீக்கிடலமாம் னு லண்டன் ஆராய்ச்சியிலே கண்டுபிடிச்சிருக்காங்க..

இன்சோம்னியா பேரு நல்லா இருக்கு, ஆனா இது வியாதிங்க...

என்ன வியாதி? நைட்டு ஆனா தூக்கம் வராது..எப்படி வரும்? மனசுல இவ்வளவு பிரச்சினை இருக்கிறப்ப? பாதி நேரம் கரண்ட் கிடையாது..வர்ற கரன்ட்டுல பிள்ளைங்கள தூங்க வைக்கணும்..வியாபாரம் நட்டம்..சிலரு நினைச்சுக்கிறாங்க...நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி 1 மணி நேரம் நல்ல நடந்தா களைப்புல தூங்கிடுவோம்னு...அது முழுக்க முழுக்க தப்புன்னு ஆராய்ச்சில சொல்றாங்க...அவங்க எதுக்கு அதை சொல்றாங்கன்னா? பகல் முழுக்க வேலைப் பார்த்திட்டு அப்புறமா நைட்டும் ஒரு மணி நேரம் நடந்த மூட்டு தேய்மானம் வந்திடும்..அதை விட காலையிலே எழுந்து ஒரு மணி நேரம் நல்லா நடந்திட்டு வந்தா நம்ம சோம்பல் நீங்கி மத்த வேலையும் சுருசுருப்பா போகும்...நைட்டும் சூப்பெரா தூக்கம் வரும் னு சொல்றாங்க..

எலும்போட உறுதிக்கு ரொம்ப நல்லது..

ரொம்ப வேண்டாங்க..ஒரு 15 நிமிஷம் நடந்தா போதும்...எலும்போட பலம் கூடுமாம்..தேய்மானம் இருக்கத்தான் செய்யும்...ஆனா அந்த தேய்மானம் மத்த வேலைகளை செய்யுறதா விட நடக்கிறதுல ரொம்ப குறைவாகத்தான் ஆகுமாம்..

ஆயுட்காலம் கூடும்..

நம்ம பாட்டி தாத்தா வயசு எல்லாம் பார்த்தீங்கன்னா, குறைஞ்சது 80 , 90 தான் ஆகுது..ஆனா நமக்கு 50 கூட வராது போலிருக்கு...என்ன காரணம்? நாமெல்லாம் இரண்டு அடி தூரம் போகனுமினா கூட பைக்குலதான் போவோம்..ஆனா அவங்க இரண்டு மைல் தூரம் போகனுமினாலும் நடந்துதான் போவாங்க..அதாங்க வித்யாசம்..

இப்போ சொல்லுங்க...என் பேச்சை கேட்டு நடப்பீங்களா? மாட்டீங்களா? 

Friday, October 12, 2012

சாதியும், வருமானமும்! சில சந்தேகங்கள்

இந்தியாவில் அந்த காலத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இரு பிரிவுகளாக இருந்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தாழ்ந்த சாதியினரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும், சமுதாயத்தில் அவர்களுக்கென்று தனி அந்தஸ்த்தை பெற்றுத் தர வேண்டும் என்று பல தலைவர்கள் போராடி இருக்கின்றார்கள். உண்மைதான்...ஆனால் பல இடங்களில் அந்த முயற்சி தவறான வழியினில் பயன்படுத்தப் படுகின்றது. காரணம் என்ன? எங்கே அவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது?

அரசாங்கம் (எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி) தாழ்த்தப் பட்ட சாதியினரை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி அவர்கள் சொகுசாகவே வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சில இடங்களில் அந்த தாழ்ந்த சாதியினர் தனக்கு கொடுக்கப்பட்ட வசதிகளை சரியாக கையாளாமல் வீனடித்தும் வருகின்றார்கள். 

உதாரணமாக, எனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை இங்கே சொல்ல விருப்பப் படுகின்றேன். எனது வகுப்பினில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்..ஒருவர் உயர்ந்த சாதி வகுப்பை சார்ந்தவர். மற்றொருவர் தாழ்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்..உயர்ந்த வகுப்பை சார்ந்த மாணவனின் தந்தை ஒரு கோயில் பூசாரி. அதுவே அந்த தாழ்ந்த வகுப்பை சார்ந்த மாணவனின் பெற்றோர் (அதே தாழ்ந்த வகுப்பு சலுகையால் கிடைத்த பதவி) இருவருமே மத்திய அலுவலகத்தில் பணி புரிந்தார்கள். இருவரது சம்பாத்தியம் இருப்பதால் அந்த நண்பன் பள்ளிக்கு மழைக்கு கூட ஒதுங்குவதில்லை. ஆனால் வருடத்தில் ஒருநாள் மட்டும் பள்ளிக்கு வந்து விடுவான். அது பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு  அரசாங்கம் வழங்கும் கல்வி ஊக்கத் தொகை க்காக...அவனுக்கு எதற்கு அந்த ஊக்கத் தொகை? ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்க அவன் தகுதியுடையவனா? அந்த பணத்தின் மரியாதை அவனுக்கு தெரியவில்லை. அவனது படிப்பிற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை அவன் சீரழிய பயன்படுகின்றது. இதற்குத்தானா சட்ட மாமேதை அம்பேத்கர் பாடுபட்டார்?

ஆனால் சோற்றுக்கே வழி இல்லாமல் அந்த உயர்ந்த சாதி மாணவன் படித்தான்...அவனுக்கு சத்துணவும் வழங்கப் படவில்லை...காரணம் அவன் பார்வார்ட் காஸ்ட் என்ற ஒரே காரணம். நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை...இன்னமும் ஆங்காங்கே இரட்டை குவளை முறை உள்ளதாகவும், செய்தித்தாள்களில் படித்திருக்கின்றேன்...தாழ்த்தப் பட்ட சாதியினர் ஒரு சில இடங்களில் ஒதுக்கப் படுவதும் வேதனை அளிக்கின்றது. ஒரு பக்கத்தில் தாழ்த்தப் பட்ட இனத்தவர்களுக்கு இன்னமும் அநீதிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...மற்றொரு புறம் தாழ்த்தப் பட்டவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை வீணடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எத்தனையோ இடங்களில் அரசு விழா எடுத்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு என்று இடம், நிலம், பண உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் எத்தனை இடங்களில் அது முழுமையாக பயன்படுத்தப் படுகின்றது என்று பார்த்தால் நூற்றுக்கு 40   சதவிகிதம் மட்டுமே சரியாக பயன்படுத்தப் படுகின்றதாம். பல இடங்களில் அந்த ஊக்கத் தொகை வீணடிக்கப் பட்டுதான் வருகின்றது.

இதையே ஒருவரது குடும்ப ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டு பார்த்தால் நியாயமான தொகை நியாயமான குடும்பங்களுக்கு போய்ச் சேருமே? இதனை எந்த அரசியல்வாதிகளும் செய்ய முயற்சிப்பதில்லை. காரணம் அந்த சாதியினரின், அந்த குழுவின் வாக்குகள் பறி போய்விடுமே என்று அஞ்சுகின்றார்கள்.

உண்மையில் இந்த காலத்தில் எத்தனையோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் மிக நல்ல பதவியில், கல்வியில் இருக்கின்றார்கள். அவர்கள் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண்களும் பெற்று வருகின்றார்கள். இன்று தொழில் துறை மற்றும் கணினித் துறையிலும் அவர்கள் முன்னிலையில்தான் இருந்து வருகின்றார்கள்.

ஆனால் ஒரு சில குறிப்பிட்ட சாதித் தலைவர்கள் தனது சுயலாபத்திற்காக அரசியலில் தாழ்த்தப் பட்டவர்களை மேலும் தாழ்த்தப் பட்டவர்களாகவே சித்தரித்து வருகின்றார்கள். முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில் தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பாஸ் மார்க் பெற்று இருந்தாலே போதும், அவர்களுக்கு பதினோராம் வகுப்பிற்கு அனுமதி உண்டு என்ற காலம் இருந்தது. ஆனால் தற்போது அந்த தாழ்த்தப் பட்ட மாணவர்கள் எல்லாருமே மற்ற மாணவர்களை போல் நன்கு படித்து அவர்களும் 95 சதவிகிதம் வரை மதிப்பெண்கள் பெறுகின்றார்கள். இது மிக சந்தோசப் பட, பெருமைப் படவேண்டிய விசயமே...
இதையே ஒருவரது ஆண்டு வருமானத்தை வைத்து ஸ்காலர்ஷிப் வழங்கினால் சரியான நபர்கள் சரியான விதத்தில் அதனை பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகின்றேன். இனி சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தவன், பொருளாதாரத்தில் தாழ்ந்தவன் என்ற நிலை மட்டும் இருந்தால் எல்லாருமே சமுதாயத்தில் முன்னேற பாடுபடுவார்கள் என்று நான் நம்புகின்றேன். எனது கருத்துக்களில் ஏதாவது தவறு இருக்கின்றதா? தவறு இருந்தால் திருத்திக் கொள்கின்றேன்...ஆலோசனைக் கூறுங்கள்.

Thursday, October 11, 2012

இந்த கவர்ச்சி ராணியோட, குத்துபாட்டு ஒன்னு ப்ளீஸ்??

இந்த சினிமாக்காரங்க ரசனையே இல்லாம போயிட்டாங்க...யார், யாரையோ, எது எதையோ காம்பிச்சு இதுதான் கவர்ச்சின்னு நம்மள ஏமாத்திக்கிட்டு இருக்காங்க...

கவர்ச்சினா எப்படி இருக்கணும் தெரியுமா? இதுதான் உள்ளம் கொள்ளை போகும் கவர்ச்சி..இதுக்கு முன்னாடி வேற எதுவும் நெருங்க முடியாதுன்னு நினைக்கிறேங்க..இந்த கவர்ச்சி க்கு எவ்வளவு மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க....எப்படி நம்ம கவர்ச்சி? குத்தாட்டம் போட்டிருவோமா? 

Wednesday, October 10, 2012

கள்ள நோட்டு, பராக், பராக்!!!!

இந்தியாவில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் சர்வ சாதாரணமாய் வெளி வருகின்றது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது நமது சில்லறை வணிகர்களும், நடைபாதை வணிகர்களும் மட்டுமே. காரணம் இவர்கள் மட்டுமே பொருளுக்குரிய பணத்தை நேரிடையாக பெறுகின்றார்கள். பெரிய நிறுவனங்கள் காசோலை, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு என்று பணத்தை நேரிடையாக பெறாமல் பெருமளவில் தப்பித்து விடுகின்றார்கள்.

நிறைய தடவை கடையில் இருப்பவர்கள், ரூவாய் நோட்டை அப்படி மேலே தூக்கி சிறிது நேரம் பார்த்து விட்டு அப்படியே கல்லாப் பெட்டிக்குள் போட்டு விடுவார்கள். எப்படி நல்ல நோட்டு என்று அடையாளம் கண்டுகொண்டீர்கள் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. சும்மா அப்படி பார்க்க வேண்டியது, பிறகு எதிராளியை ஒருமுறை பார்க்க வேண்டியது...பின்னர் அப்படியே உள்ளே போட்டுக் கொள்வார்கள்.

இதற்க்கு தற்போது ஒரு புது வழி இருக்கின்றது. இதனை ஆர்பீஐ, அதாங்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, எப்படி நல்ல அல்லது கள்ள நோட்டு என்று கண்டுபிடிக்க ஒரு வழியினை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. இதனை நகல் எடுத்து கடைகளில் ஒட்டி வைத்துக் கொண்டால் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அதற்க்கு கீழே இருக்கும் லின்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.. 

Tuesday, October 9, 2012

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


 அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது
….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே

நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை

ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது
, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது
!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்
!

 
இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்
!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்

உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
 

நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு

வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு

உறவுகள் இதுதானென்று
!

Saturday, October 6, 2012

சீனாவின் கொலைக்களம்......எச்சரிக்கை ப்பதிவு!!

துப்பாக்கி ஏந்தி கொல்லவில்லை, தீவிரவாதிகளாக ஊடுருவிக் கொல்லவில்லை...கலப்பட பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மனித உயிர்களோடு விளையாடுகின்றார்கள்.


மெலமயின் என்ற பவுடர் கலக்கப்படும் பால்தான் விஷம் கலந்த பாலாக மாறுகின்றது. கிட்டத்தட்ட ஸ்லோ பாய்சன் என்று கூட சொல்லலாம்.
பொதுவாக இந்த பவுடர் எதற்க்கு அதிகமாக பயன்படுத்துகின்றார்கள் தெரியுமா? கீழே படத்தில் இருக்கும் பிளாஸ்டிக் வகை தயாரிப்புகளுக்கு இதனை பயன்படுத்துகின்றார்கள்.

அடுத்தது அமெரிக்காவில் வீடுகளில் ரிசிஷ்டன்ட் பலகைகள் தயாரிக்க இதனை பயன்படுத்துகின்றார்களாம்.

அது மட்டுமல்லாமால் தொழிற்சாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் இந்த பவுடர் பயன்படுத்தப் படுகின்றது.

ஆனால் சீனா மட்டும் இதனை பால் பவுடரில் கலந்து விற்கின்றது. என்ன காரணம்?  ஏன் இந்த பவுடரைக் கலக்கின்றார்கள் தெரியுமா? இந்த பவுடரை க்கலக்கும் போது தானாகவே அசல் பால் பவுடரின் அளவை குறைத்து விடும். இது அந்தளவிற்கு விலை குறைவு.

இதனை ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்க முடியாதா? முடியாது? காரணம் இதன் நிறம் மற்றும் வாசனை. நிறம் வெண்மையாக இருக்கும். வாசனை - வாசமே இருக்காது. பிறகு எப்படி இதனை பரிசோதிக்க முடியும்.

பாலில் அதிக சத்து என்பது ப்ரோட்டீன். அதே ப்ரோட்டீன் அதாவது நைட்ரஜன் சத்து இந்த மெலமயின்  னில் இருக்கின்றது. பிறகு எங்கிருந்து கண்டுபிடிக்க முடியும். உண்ட பிறகு வரும் விளைவுகளை வைத்துதான் கண்டுபிடிக்க முடியுமாம்.

என்ன விளைவு அப்படி வந்து விடும்? பெரிதாக ஒன்றுமில்லை. சிறுநீரகத்தில் கற்கள் உருவாக்கி விடும். அப்புறம் சிறுநீர் கழிக்க முடியாமல் போகும். இதில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது பச்சிளங் குழந்தைகளும், வயதானவர்களும்தான். ஏனெனில் அவர்கள்தான் அதிகளவில் இதனை உட்கொள்கின்றார்கள்.


அவர்கள் அடுத்தது டாயலிசிஸ் முறைக்குத் தான் அழைத்து செல்லப் படுகின்றார்கள். டயாலிசிஸ் முறை என்பது என்ன? ரத்தத்தை சுத்தம் செய்வது? அதாவது எங்கெல்லாம் அடைப்பு எற்பட்டிருக்கின்றதோ அதனை சுத்தம் செய்வது. இதற்க்கு குறைந்தது 4 மணி நேரமாவது ஆகும். இதை போன்று பாதிக்கப் படுபவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் இதைப் போன்று டயாலிசிஸ் முறையை அவர்கள் ஆயுள் காலம் வரை மேற்கொள்ள வேண்டிய கொடுமை நேரிடுகின்றது.

ஐய்யையோ அப்படி எனில் எவ்வளவு அளவு மெலமயின் சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்டு சமாதானம் ஆகாதீர்கள். இது சாப்பிடவேக் கூடாத பொருள் ஆகும்.

எதில் எல்லாம் இந்த பவுடர் கலந்திருக்கின்றதோ...அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுங்கள். குறிப்பாக சீனாவில் உற்பத்தியாகும் வண்ணவண்ண கவர்களை பாக்கிங் கொண்ட பொருட்களை தூர எறியுங்கள்.

இந்தியாவில் எதில் எல்லாம் இந்த பொருள் கலந்திருக்கின்றதோ தெரியவில்லையே என்று அவர்களுக்கே தெரிய வாய்ப்புகள் இல்லை. காரணம் அவர்கள் பால் பவுடர் இங்கே தயாரித்தாலும், அந்த பாலில் கலக்கப்படும் பவுடரை சீனாவில் வாங்கி இருந்தால்? நமது நிலைமை????? உசார்....


இந்த தகவல்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அளித்த நண்பர் திரு. கே.ஜி.கோபாலகிரிஷ்ணனுக்கு மனமார்ந்த நன்றி...