பங்காளிங்க..

Monday, December 31, 2012

கற்பழிக்கும் காமுகர்களே? வாங்க பழகுவோம்!!

பாரதத் தாய்க்கு இப்படி ஒரு சோதனை தேவை இல்லை என்றே நம்புகின்றோம். டெல்லியில் கற்பழித்தால் மாபெரும் குற்றம்!! அதுவே மற்ற மாநிலத்தில் அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கற்பழித்து கொன்றாலும் குற்றமில்லை. பாதிக்கப் பட்டவர்களின் பிணத்தின் மீது ஏறி நின்று அரசியல் செய்ய இங்கே அநேகம் பேர் இருக்கின்றார்கள்.

டெல்லியில் மருத்துவம் படிக்கும் மாணவியை கற்பழித்து சிதிலப் படுத்திய காமுகர்களை இன்னமும் காவல்துறை தேடி வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் பருவவயதையே தொடாத சின்னஞ்சிறு குழந்தை புனிதாவை வல்லாங்கு செய்து கொன்றும் விட்டான்...என்ன நடந்தது? தமிழக காவல்துறை குற்றவாளியை பிடித்து விட்டது. டெல்லியில் இன்னமும் முழுதும் கைது செய்யப்படாத குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுங்கள...சுட்டுத் தள்ளுங்கள் என்று போராட்டம் வலுக்கின்றது. ஆனால் இங்கே குற்றவாளி காவல்துறை கைகளில் இருக்கின்றான். ஆனால் அவனுக்கு தண்டனை வழங்க யாரும் குரல் கொடுக்க வில்லை.

வழக்கம் போல நமது பதிவர்கள் குரல் கொடுத்துக் கொண்டும், கண்டனம் தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். திமுக என்னும் பிரதான கட்சி அங்கே கனிமொழியை அனுப்பி பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல அனுப்பி இருக்கின்றது. திமுக தனது சக்திக்கு மீறி அவர்கள் சொந்த வருவாயில் இருந்து 50 ஆயிரம் ரூவாயை அந்த பிஞ்சின் குடும்பத்திற்கு வழங்கி இருக்கின்றது. அதற்க்கு ஒரு படி மேலாக ஆளும் கட்சி 1 லட்சம் ரூவாயை மிகுந்த பண நெருக்கடியினால் கொடுத்து விளம்பரம் செய்து கொண்டு விட்டது. மற்ற கட்சிகள் சாதிப் பிரச்சினை, மதப் பிரச்சினை..நீயா? நானா? பிரச்சினையில் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதனால் புனிதாவின் மரணம் ஒன்றும் பெரிய விசயமாக தெரியாமல் போய் விட்டது.

குற்றவாளி சுப்பையாவும் இருக்கின்றான்...குற்றமும் நிருபிக்கப் பட்டுவிட்டது...தீர்ப்பு எங்கே? அன்னை சோனியாவே! நீயும் ஒரு பெண் என்ற காரணத்தால் கேட்கின்றோம்.டெல்லியில் நடந்தது கற்பழிப்பு என்றால் தமிழகத்தில் நடந்த விஷயம் என்ன? டைம் பாசா? டெல்லி மாணவிக்காக ஒன்றிணைந்த மாணவச் சமுதாயமே எங்கள் மாணவி புனிதா உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியப் படுத்தப் படவில்லையா?

ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு டெல்லி அதிருது, டெல்லி ஸ்தம்பித்து விட்டது...டெல்லியில் மாணவர்கள் போராட்டம் என்று வரிசையாய் மின்னும் செய்திகளை போட்டுக் கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களது வியாபார வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகம் இதிலும் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றது. தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருந்தும் நியாயமான விசயத்திற்கு நியாயமான தீர்ப்புகள் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு வழங்கப் படவில்லையே, என்ன காரணம்?

சமீபத்தில் ஒரு வார இதழில் திமுகவின் வாரிசுகள் இந்த வருடம் அவர்கள் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட இருப்பதாக வெளியிட்டிருக்கின்றது. எப்படி உங்களால் மட்டும் மனசாட்சியை அடகு வைத்து விட்டு கூச்சமே இல்லாமல் இந்த செய்திகளை வெளியிட முடிகின்றது? இதுவா நாட்டிற்கு தேவையான விஷயம்? பாதுகாப்பு இல்லாமல் வெளியில் சென்று வரும் நமது சகோதரிகள், பெண் பிள்ளைகளுக்கு, எந்த விதத்தில் பாதுகாப்பு கொடுக்கலாம் என்று யாருமே அலசி ஆராயவில்லையே !!!
இன்னமும் நீதி விசாரணை எதற்கு? தீர்ப்புகள் எப்போது வழங்கப் படும்? அந்த செய்தி மறைவதற்கு முன்னதாகவே விருதாசலத்தில் மற்றொரு பாலியல் பலாத்காரம்? டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் பலாத்காரம்? இதுதான் பாரத மாதாவிற்கு நாம் அளிக்கும் மரியாதையா? வார்த்தைக்கு வார்த்தை "பாரத மாதாவிற்கு ஜே" என்று கொடிபிடிக்கும் நாம் அந்த பாரதத்தில் இருக்கும் ஒரு மாதாவிற்கு பாதுக்காப்பை கொடுக்கின்றோமா என்றால் எதுவுமே இல்லை....குறைந்தது கண்டனக் குரல்களாவது  எழுப்பி இருக்கின்றோமா? 

விசுவரூபம் படம் டிடிஹெச் மூலமா வருமா? அல்லது தியேட்டருல வருமா? ஆனா இங்கே ஒவ்வொரு கற்பழிப்பும் "விசுவரூபம்" எடுக்கிறது எவன் கண்களுக்கும் தெரியலையா? அடுத்த பிரதமர் வேட்டிக் கட்டுனவரு வரணும்? வேட்டியை கட்டிக்கிட்டு வருவாரோ அல்லது குழாயப் போட்டுக் கிட்டு வருவாரோ? தமிழகப் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க ஒருத்தன் பிரதமரா வரணும் னு  சொல்றதுக்கு ஒருத்தர் இங்கே கிடையாது!

இனி ஏதாவது வல்லாங்கு தமிழகத்தில் நடந்தால் அவனுக்கு  பாதிக்கப்பட்டவளே ஆண்குறியை பொது மக்கள் முன்னிலையில் நறுக்கி விட வேண்டும் என்று தீர்ப்பு வர வேண்டும்..அந்த காமுகனுக்கு வாதாடும் வழக்கறிஞருக்கும், ஆதரவாளர்களுக்கும் அதைப் போன்ற கொடுமையான தண்டனை வழங்கப்படல் வேண்டும். அப்படி நடந்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். இந்த விசயத்தில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னோடியாய் இருத்தல் வேண்டும்.

ஆனால் இப்படிப்பட்ட வர்களை நம்பி தமிழ்நாட்டுல ஏன் பொறந்து தொலைச்ச புனிதாவே? வேறு எங்காவது பொறந்திருக்க கூடாதா? இனி காமுகர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் படைஎடுத்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனெனில் இங்கேதான் ஏன்? என்று கேட்க ஒரு நாதியும் கிடையாதே!!!

Thursday, December 27, 2012

முதல்ல பொருத்தம் பாக்குறத விட்டுத் தொலைங்க....

கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பாழா போன "பொருத்தம் பாக்குற" விஷயம் வந்ததால இப்போ நிறைய குடும்பங்கள் குடும்ப நல நீதிமன்ற வாசல்ல உக்காந்திருக்கு...ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு???  நகரத்துல வாழ்றவங்களை விட இந்த கிராமத்துல வாழுற பொண்ணுங்கதான் இந்த பொருத்தம் பாக்குற விசயத்துல மாட்டிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்காங்க..

என்னடா இது? இவன் சாதகம் பார்த்து கல்யாணம் செய்யுறத தப்பா சொல்றானே னு ஜோசியக்காரங்க படையெடுத்திராதீங்க.....நான் சொல்ற பொருத்தம் பாக்குறது வேற??? பெத்தவங்க பொருத்தம் பாக்குறது வேற...ஆனா இந்த மேற்கத்திய கலாச்சாரம் வந்ததும் பொண்ணுங்க, பசங்க பாக்குறாங்களே ஒரு பொருத்தம்...அதாங்க இந்த இங்கிலிபீஸ் வார்த்தை "டேட்டிங்".

இது எங்கன போய்  முடியுது தெரியுமா? படுக்கையிலே போயித் தான் முடியுது...இரண்டு பெரும் சேர்ந்து போவாங்களாம்...அங்கன போய் மனசு விட்டு பேசுவாங்களாம் ..  உண்மையிலேயே எதை விட்டுட்டு பேசுவாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்..அதுக்கப்புறம் மனசுக்கு பிடிக்கலைனா கழட்டிவிட்டுட்டு வந்திருவாங்களாம்..அப்புறம் அடுத்த வாரம் அடுத்த பொண்ணு அல்லது பையனை தேடி திருப்பியும் பொருத்தம் பார்ப்பாங்களாம்.
இந்த பொருத்தம் பாக்குற விஷயம் மேற்கத்திய நாட்டுல இருந்து நம்ம ஊருக்கு வந்திடுச்சு...ஆனா எந்த ஒரு விசயமும் முழுசா வர மாட்டேங்குது...அங்கே டேட்டிங்க்ல செய்யுற விஷயம் என்னானா, ஜோடிகள் ரெண்டு பேரும் நல்லா ஊரு சுத்துவாங்க...நல்லா ஜோடியாத் தின்பாங்க..அப்புறமா சினிமா, பீச்சுன்னு சுத்துவாங்க..ஆனா எல்லை தாண்ட மாட்டாங்க , அதுக்கு வேற வடிகால் வச்சிக்கிட்டாங்க...ஆனா இங்கே டேட்டிங் கிற பேருல எல்லா விசயத்தையும் முடிச்சிடுறாங்க...

டேட்டிங் கலாச்சாரத்துல யாரு அதிகமா சிக்குறாங்க தெரியுமா? நம்ம தென் தமிழ் நாட்டுல இருந்து வர்ற பொண்ணுங்கதான் சீக்கிரத்துல சிக்கித் தவிக்குது...காரணம் அதுக தங்கி இருக்கிற விடுதி, அப்புறமா வேலை பாக்குற இடம்...படிக்கிற கல்லூரி இதுவெல்லாம் அவுகளுக்கு எல்லாமே புதுசு...ஒருவிதமான மாயை.!!! ஊருல, ஊட்டுல பெருசுக கொடுத்த அழுத்தம் இங்கே வந்ததும் சுதந்திரமா சுற்றித் திரிய ஆரம்பிக்குதுங்க...ஊருல கண்ணுக்கு கண்ணா பாசமா பழகுன அப்பா அம்மா எல்லோரும் வில்லனா, வில்லியாத்தான் தெரிவாங்க...எவனோ ஊரு பேரு தெரியாதவன் திடீருன்னு ரொம்ப நல்லவனாத் தெரிவான்!!! அவனோட ஸ்டைலு சூப்பெரா இருக்கும், பேச்சு சுண்டி இழுக்கும்..ரொம்ப டீசண்டா பேசுவான்...ஆபாசமா பேசவேத் தெரியாது...ஆனா அவளோட அப்பா கொஞ்சி கொஞ்சி பேசினாலும் கொலைகாரன் பேசுற மாதிரியே இருக்கும்.. 

அப்புறம் கூட இருக்கிறது எல்லாம் சேர்ந்து உனக்கு லவ்வு வந்திடுச்சி...அவனை அப்ப்ரோச் பண்ணு னு  உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கும்..அப்புறம் என்ன, எஸ்எம்எஸ், சாட், தியேட்டர், பார்க்கு, அப்புறமா அந்த பொண்ணு வீட்டுக்கு பேசுறதை குறைச்சிடும்...அவன்கிட்டே பேசுறதுக்கே நேரம் பத்தாதே..

எத்தனை நாள்தான் ஊருக்குள்ளே வண்டி ஓட்டுறது...அப்படியே ஊருக்கு வெளியே கம்மாங்கரை (அடச்சே ஊர் நினைப்பா இருக்கு) ஈசிஆர் பக்கமா, மகாபலிபுரம் பக்கமா போய்  மனசு விட்டுட்டு மத்ததை பேசுவோமா? அவன்தான் ரொம்ப டீசண்டா இருக்கானே...பேசித்தான் பார்ப்போமே..னு  கிளம்புவாங்க..பொருத்தம் பாக்க கிளம்பிடுவாங்க...எல்லாப் பொருத்தமும் பார்த்திட்டு திரும்பி வரும்போதே எல்லாம் சலிச்சு போயிடும்..எனக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்கும், இப்படி டிரெஸ் போட்டாத்தான் பிடிக்கும்...ஆர்டர் வரவும்...அவ்வளவுதான் பொருத்தம் சரி இல்லாம போயிடும்...வாழ்க்கையும்தான்...அப்போதான் அம்மாவோட மடி நியாபகம் வரும்...அப்பாவோட உழைப்பு கண்ணுக்கு தெரியும்...அண்ணனோட அன்பு உணர்வுக்கு வரும்...
அடுத்த நாள் அவனை பழி வாங்குறதுக்கு கூட இருக்கிற, வேலை பாக்குற பொண்ணுங்களே கிளப்பி விடும்...அவனை நல்லவன் சொன்ன அதே பொண்ணுங்க அவனோட இன்னொரு பக்கத்தை பத்தி எடுத்துச் சொல்லி அவன் கண் முன்னாடியே இன்னொருத்தன் கூட பழக சொல்லி தூண்டி விடும்...அந்த பொருத்தம் சரி இல்லை, இது வேற பொருத்தம், இது சூப்பெரா இருக்கும்...பழகிப் பாரு...அடுத்தது கிளம்பிடும்...

டேட்டிங் னா  ஊரு சுத்துறதுக்கு தேதி குறிக்கிறது..தமிழ்ல திகதியிடல்னு சொல்றாங்க...ஆனா இப்போ இந்தியாவுல நடக்குற டேட்டிங் வரைமுறை இல்லாம போய்க்கிட்டு இருக்கு..மேலே சொன்ன உதாரணமாவது பரவாயில்லை...கூட வேலை செய்யுற, அல்லது படிக்கிற பையனா இருக்கும்...இப்போ போற வேகத்துல இணையத்துல பார்த்து , பேசினவன் எல்லாம் கூட கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க..அவன் யாரு, அவன் குணம் என்ன, அவன் எப்படிபட்டவன்..அவனுக்கு குடும்பம் இருக்கா? எதுவுமே தெரியாது...சாட்டுல அவன் சொன்ன விஷயத்தை நம்பி அவன் கூட டேட்டிங் கிளம்புற பொண்ணுங்களும் இருக்கு...

இப்படிப்பட்ட பொண்ணுங்கதான் நம்பி போயி அவன் மறைச்சு வச்சிருக்கிற கேமிராவுல சிக்கி சீரழிஞ்சு அப்புறம் அவனோ அல்லது அவனோட கும்பலோ கூப்பிடுற நேரம் எல்லாம் போயிட்டு வர வேண்டிய சூழ்நிலை...இதுவும் இல்லேனா செத்துர வேண்டியது...இதுதானா நீங்க பொருத்தம் பாக்குற லட்சணம்???

இது எல்லாத்தையும் விட இந்த மாதிரியா பொருத்தம் பார்த்து போற ஜோடிங்க பிற்காலத்துல தன்னோட மனைவி அல்லது கணவரோட நடவடிக்கைள் மேலே சந்தேகப் படத் தொடங்குறாங்க...ஏன்னா நம்மளை மாதிரியே இவ யார் கூடயாவது சுத்தி இருப்பாளோ, இவன் வேற எந்த பொண்ணு கூடேயும் போயிருப்பானோ இப்படி சந்தேகம் பெருசாகி விவாகரத்து அல்லது மனநோயாளியா மாத்திடுது..ஆரம்பத்துல இதெல்லாம் தப்பு இல்லை, எனக்கு ஒன்னும் வருத்தமில்லைன்னு சொல்றவங்க..பின்னாடி குடும்பத்துல ஏதாவது பிரச்சினை வர்றப்ப அதை சொல்லிக் காட்டி நோகடிக்கிறது வாடிக்கையாகிப் போயிடுச்சி...

இப்படி பொருத்தம் பாக்குறதுல ஆயிரத்துல 2 பேரு இணையுறதா ஆய்வுத் தகவல் வந்திருக்கு...அதிலும் ஒருத்தர் விஷயம் குடும்பத்துக்கு தெரிஞ்சி சேர்த்து  வைக்கிறதா கூடுதல் தகவல்...இந்த பொருத்தம் பாக்குறதுல ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னதுனா சாதி, மதம் பாக்காம கூடுவாங்க..சேர்ந்து விளகுனதுக்கு அப்புறம் சாதி பெயரை சொல்லி சண்டை போட்டுக்குவாங்க...இது ஒண்ணுதான் இதுல சிறப்பான விஷயம்...

பெருசுங்க பொருத்தம் பார்த்தா(சாதகம்)  சாதி பார்ப்பாங்க, சிறுசுங்க பொருத்தம் பார்த்தா (டேட்டிங்) சாதி பாக்க மாட்டாங்க...

முக்கிய குறிப்பு : டேட்டிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் "திகதியிடல்" அல்லது பொருத்தம் பார்த்தல் என்று பொருளாம். சந்தேகமிருந்தால் கூகிள்.காம் தேடித் பார்த்து கொள்ளவும்..

நன்றி கூகிள்.காம் 


Saturday, December 22, 2012

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!

பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?
பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன். 

அப்படி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நமது இந்திய சட்டத்தில்தான் ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தாலும், பல பெண்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு என்பது உறுதியாகி விட்டது...செய்வதே செய்கின்றோம்...இரண்டு, மூன்று பெண்களை சூரையாடிவிடுவோமே என்று தான் அவன் சுற்றத் தொடங்குவான். பாலியல் குற்றம் எங்குதான் நடக்கவில்லை? நடக்கும் எல்லா இடத்திலும் வழக்கு இழுவைக்கு சென்று, கடைசியில் வாதி, பிரதிவாதி இரண்டு பேரும் இறந்த பின்னர்தான் தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இந்த மாதிரியான பிரச்சினைகளில் குற்றவாளி சிக்கும் போது அவனுக்கென்று வாதாட யாருமே வரக் கூடாது. அவனது குடும்பத்தாருக்கு எந்த வித சலுகைகளும் அரசாங்கம் தரக்கூடாது. அப்படி செய்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். அவன்தானே தவறு செய்தான் அவனது குடும்பம் என்ன பாவம் செய்தது என்று யாரும் உதவ முன்வரக் கூடாது.  

அவன் வயதானவன் அல்லது பெண் அல்லது ஊனமுற்றவன் அல்லது அரசியல்வாதியின் மகன் என்ற வகையில் எந்த பாகுபாடுமின்றி தீர்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி நடக்குமா நமது இந்தியாவில்? எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும்போது குற்றவாளி கூண்டில் இருப்பவனை மன நோயாளி என்று அவனது வழக்கறிஞர் வாதாடி அவனை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றார். இதுவும் இந்தியாவில் மட்டும்தானே நடக்கின்றது.

தூத்துக்குடியில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார். ஏழாம் வகுப்பு என்பது அந்த குழந்தைக்கு 12 வயதைத் தான் தொடுகின்றது. இன்னமும் அவள் டீன் ஏஜ் வயது பருவத்தையே தொட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதற்க்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகின்றார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

இனி ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தண்டனை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். என்ன காரணம்? மேலைக் கலாச்சாரத்தால் வந்த வினை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதில் பாதி உண்மைதான்? ஆனால் நாம் மேலைக் கலாச்சாரத்தில் பாதி வரை பின்தொடர்வதுதான் இந்த அவலங்களுக்கு காரணம்!  

அது என்ன பாதி? மேலைக் கலாச்சாரத்தில் ஆண் , பெண் இருவருமே மனம் ஒத்துப் போய் காமம் கொள்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்கள் மட்டும் அவர்களைப் போல பெண்களை அனுபவிக்க ஆசைப் படுகின்றார்கள். ஆனால் குடும்ப கட்டுப் பாடு, சமுதாயப பார்வை போன்றவற்றால் பெண்கள் சற்று அடங்கி, ஒதுங்கி செல்கின்றார்கள். தனது ஆசைகளை, இச்சைகளை தீர்த்து கொள்ள வடிகால் தேடும் அந்த ஒரு சில காம வெறி பிடித்த ஆண்கள், எல்லாப் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கின்றார்கள். அதன் விளைவு பெண்கள் சூறையாடப் படுகின்றார்கள். 

அப்படி ஆண்கள் வலை வீசும்போது அவர்கள் கைகளில் சிக்குவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், அன்பிற்கு ஏங்கும் பெண்கள் போன்று வலை விரிகின்றது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான ஆண்கள் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் செய்தும் கவலையில், சோகத்தில் இருக்கும் பெண்களையே தேடுகின்றார்கள். காரணம் அவர்களால்தான் பிரச்சினையை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்கள் எத்தனை, எத்தனை பேரோ?? இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தது ஒரு சில ஆண்கள் திருமணம் ஆன பிறகும் கூட தனது காம வேட்கையால், வெறியால் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழைப் பெண்கள் (ஒருவேளை சோற்றுக்காக வேலை தேடி அலைபவர்கள்), குடும்பப் பிரச்சினையால் வெளியூர்களில் வேலைக்கு வருபவர்கள்) என்று இவர்களது பட்டியல் நீளுகின்றது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் தற்போது நடக்கின்றது? அது பள்ளி மாணவிகள், குழந்தைகள் தற்போது பாலியல் வன்புணர்ச்சிக் குட்படுத்தப் படுகின்றார்கள். என்ன காரணம்? அவர்களிடம்தான் எந்த விதமான எதிர்ப்பும் இருக்காது. ஒரு சாக்லேட், அல்லது ஒரு ஐஸ் கிரீமிர்க்கு அவர்களையும் அறியாமல் இழந்து விடுகின்றார்கள்.  

இதுவே ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தால் எங்கே சமுதாயத்தில் தம்மை அசிங்கப் படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பிஞ்சுகளை புனருகின்றார்கள். 

சட்டத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்புகள் இன்னமும் அவர்களுக்கு போதாது என்பதையே கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றது. இதற்க்கு ஒரு வழி, அவர்கள் கழுத்தினில் அவர்கள் காமக் கொடூரர்கள் என்று அடையாள அட்டைப் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த குற்றவாளியின் குடும்ப புகைப்படம் அவனது கழுத்தினில் தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் குற்றங்கள் குறையும்.  இவன் செய்யும் பாவத்திற்கு இவனது அம்மா, அப்பா, மனைவி, சகோதரி, சகோதரன், மகன், மகள் புகைப்படம் வெளியில் தெரிய வரும்.

இந்த குற்றங்களுக்கு காம வெறி பிடித்த ஆண்கள் மட்டுமே காரணமில்லை, புகழ் விரும்பும், பெருமை தேடும் ஒரு சில பெற்றோர்களும் இதற்க்கு காரணம்!!! தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. 

மேலைக் கலாச்சாரத்தை பின் தொடரும் ஆண்கள் ஆடைகளை அதிகமாக்கி கொண்டனர். இன்னமும் காமம், காதல் எது என்று வித்யாசம் தெரியாத இந்த இந்தியாவில் பெண்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அரை குறை ஆடைகளோடு வலம்  வருவதும் பிரச்சினைக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?  

ஒரு சில ஆண்களின் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில் ஏன் உங்கள் பெண்களை அரை குறை ஆடையோடு வெளியில் அனுப்பி பிரச்சனைகளை தூண்டி விடுகின்றீர்கள்?? 

பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள். அது வரை, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றவர்களின் கடமையல்லவா? 

Tuesday, December 18, 2012

இது தேவையா நமக்கு???


சகோதர, சகோதரியின் அன்பு தெரிய வேண்டுமா?
சகோதர, சகோதரி இல்லாதவர்களிடம் கேட்டுப் பாருங்கள்..

பத்து வருடங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா?
புதிதாய் விவாகரத்து ஆனவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...

நான்கு வருடங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?
தற்போது கல்லூரியை விட்டு வந்த பட்டதாரியைக் கேட்டுப் பாருங்கள்...

ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
கடைசி வருடத்தில் தோல்வியடைந்த மாணவனைக் கேட்டுப் பாருங்கள்...

பத்து மாதத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?
உங்களைப் பெற்றெடுத்த அன்னையைக் கேட்டுப் பாருங்கள்...

ஒன்பது மாதத்தின் வலி தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்ணைக்  கேட்டுப் பாருங்கள்...

ஒரு வாரத்தின் பெருமை தெரிய வேண்டுமா?
முக்கியச் செய்தியை தவறவிட்ட வாரப் பத்திரிகை ஆசிரியரைக் கேட்டுப் பாருங்கள்....

ஒரு நிமிடத்தின் வலிமை தெரிய வேண்டுமா?
பயணம் செய்யப் போகும் வாகனத்தை தவற விடுபவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.....

ஒரு நொடியின் வேதனை தெரிய வேண்டுமா?
கண்ணெதிரே உறவுகளை விபத்தினில்  இழப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்...

நேரம் நிலையாக இருக்காது...
ஆனால் தக்க நேரத்தில் வரும் பயன்கள், அதை நாம் மறக்காமல் தக்க வைத்துக் கொள்ளல் வேண்டும். துன்பங்களை மறக்க கூடாது..

நம்மை நேசிக்கும் அந்த உறவுகளை நாம் இறுக பற்றிக் கொள்வது அவசியம்....ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம்!!!!!

Friday, December 14, 2012

உன்னோட ஆசைக்கு நானா பலி???

பெண்ணாசையால வந்த வினையை பாருங்க....

பதிவர்களே.....சைடுல போற பொண்ணை  பாக்காதீங்க...பார்த்தா இதுதான் கதி?????
Thursday, December 13, 2012

நெஞ்சுக்கு நீதி????

நெஞ்சு வலி வந்துட்டா என்ன செய்யனும்னு நிறைய படத்துல நாம பாத்திருப்போம்...உடனே படத்தோட நாயகன் அல்லது நாயகி ஓடிப் போயி அவங்களுக்கு அவசர உதவி செஞ்சு காப்பாத்திப் போடுவாங்க..அதுக்கப்புறம் சில சமயம் டூயட் பாடுவாங்க.சில சமயம் கதையிலே டுவிஸ்ட் வரும்..

ஆனா கற்பனை பண்ணிப் பாருங்க...யாருமே இல்லாத இடத்துல திடீர் மாரடைப்பு வந்தா என்ன ஆகும்?? ஒன்னும் ஆகாது...சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடுவோம்..அப்புறம் சொத்து சண்டை, குடும்ப சண்டைதான் மிஞ்சும்..

இது காலம், காலமா நடந்துகிட்டு வருது..ஆனா தற்போது அதற்கும் ஒரு வழியை அமெரிக்காவின் ஜான்சன் சிட்டி சென்டருல கண்டுபிடிச்சிருக்காங்க..அதையும் ஐசியு ல இருக்கிற நோயாளியோட அனுமதி வாங்கி சோதனை செஞ்சு பார்த்திருக்காங்க..

என்ன கண்டுபிடிப்பு, மாயக் கண்டுபிடுப்புன்னு நினைக்கிறீங்களா? செலவே இல்லாத வைத்தியம் இது!
என்ன மனம் தைரியமா இருக்கணும்..படபடப்பு கொஞ்சம் கூட இல்லாம இந்த வேலையை செய்ய சொல்றாங்க..
அப்படி செஞ்சா நம்மளை நாமே காப்பாத்திக்க முடியுமாம்..

ஒண்ணுமே இல்லை, அந்த மாதிரி நெஞ்சு வலி வர்றப்ப நமக்கு உடம்பெல்லாம் வேர்த்து, மூச்சு திணறல் வருமாம்..கைகால் உளைச்சல் இருக்குமாம்..அந்த நேரத்துல நாம நல்லா அடி வயிறு வலிக்கிற மாதிரி சத்தமா இருமனுமாம். ஒவ்வொரு வாட்டியும் இருமும் போது  நல்லா மூச்சை இழுத்து விட்டா அடைபட்டிருக்கிற அடைப்பு விட்டுப் போயி நம்மால எளிதா மூச்சு விட முடியுமாம்...

மூச்சை நல்லா இழுத்து விடும்போது நம்ம நுரையீரலுக்குள்ளே ஆக்சிஜென் போயி வரும்...அதோட ஒவ்வொரு தடவையும் இருமுறப்ப  அடைபட்டு நிக்குற ரத்த ஓட்டம் மீண்டும் இயல்பா ஓடத் தொடங்கிடுமே நு அவர் சொல்றாரு...

அவ்வளவுதான் சாவோட விளிம்பை தொட்டு விட்டு வந்துற மாட்டோம்???? இதுதாங்க என்னோட நெஞ்சுக்கு நீதி !!!!

Thursday, December 6, 2012

38 ட்ரில்லியன் டாலர் ரூவாய் ஊழலா?

நபர் 1 : கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 2: மன்னிக்கணும் என்கிட்டே பணம் இல்லே!
நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 3 : மன்னிக்கணும், எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லே..
நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 4: மன்னிக்கணும், என்கிட்டே பணம் இருக்கு, நேரம் இல்லே...

இது பெரும்பாலும் பலரும் சொல்ற பதில்...ஆனா மனமிருந்தால் மார்க்கமுண்டு......நான் ஒரு சில தகவல்களை சொல்றேன்...கூடுமானவரைக்கும் அதனை நகல் எடுத்து வச்சிக்கோங்க..பலருக்கு, ஏன் உங்களுக்கே கூட அது உதவி செய்யும்...உங்களாலேயும்  உதவி செய்ய முடியும்...கீழே இருக்கிற அந்த வழிகளை கொஞ்சம் பாருங்க..

சாலையிலே எங்கியாவது குழந்தைங்க பிச்சை எடுக்கிறாங்க நு வச்சிக்கோங்க...பார்த்து பரிதாபப் பட்டுட்டு போகாம  "ரெட் சொசைட்டி" ங்கிற அமைப்புக்கு 9940217816 இந்த எண்ணுக்கு அழைப்பு கொடுத்து தகவல் கொடுத்தா அவங்க வந்து கூட்டிக்கிட்டு போய்  கல்வி மற்றும் உதவிகள் செய்வாங்க..(இது குழந்தைங்களுக்கு மட்டும்) 
ஒரு வேளை  உங்களுக்கு ரத்த தானம் செய்யணும் அல்லது ரத்தம் வேணும்னு வச்சிக்கோங்க..அதுக்கு  www.friendstosupport.org  ங்கிற இணையத்துல உங்க பெயரை பதிவு செஞ்சு வச்சிக்கலாம்.

உங்க பிள்ளைங்க, சகோதர, சகோதரிங்க அல்லது தெரிஞ்சவங்களோட பிள்ளைங்க பொறியியல் பிரிவுல படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாம இருந்தா அவங்களுக்கு www.campuscouncil.com ங்கிற இணைய முகவரியை கொடுத்து பதியச் சொல்லுங்க....சுமார் 40 நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு வச்சு வேலை கொடுக்க காத்துக்கிட்டு இருக்காங்க..

சாலையிலே எங்கியாவது மாற்றுத் திறனாளிகள்  கஷ்டப்பட்டுகிட்டு இருந்தா உடனே கீழ் கண்ட தொலைபேசி யில தகவல் கொடுத்தா அவங்க வந்து பார்த்துக்குவாங்க..

9842062501 & 9894067506


யாராவது தீவிபத்துல காயம் பட்டு அல்லது காது, மூக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளனுமினா கொடைக்கானலில் இருக்கிற பாசம் மருத்துவமனையை தொடர்பு கொள்ள சொல்லுங்க...தொலைபேசி எண்கள் 045420-240668,245732 

யாராவது பாஸ்போர்ட், ரேசன் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது பேங்க் பாஸ் புக் அல்லது வாக்காளர் அட்டைய  கீழே கிடந்தது எடுத்தீங்கன்னா, யோசிக்காதீங்க...பக்கத்துல இருக்கிற போஸ்ட் பாக்ஸ் உள்ளே போட்டிருங்க..அவங்க சம்பந்தப் பட்டவங்க கிட்டே கொண்டு போய்  சேர்த்திடுவாங்க , கண்டிப்பா அபராதம் போடுவாங்க..அப்போதானே போஸ்ட் ஆபீசுக்கு வருமானம் வரும்..
பூமி சூடாகி கிட்டே வருது...உடனே அரசியல்வாதிங்க சரி இல்லேன்னு சொல்லிராதீங்க...ஆனா மரம் வளர்த்தா பூமியிலே இருக்கிற வெட்பம் தணிஞ்சிடுமாம்...ஒரு ரெண்டு வேப்ப  மரத்த நட்டுத்தான் வைங்களேன்...


38 ட்ரில்லியன் டாலர்...இது ஊழல் இல்லை..

உலகத்துல இருக்கிற எல்லா மனுசங்களும் சுவாசிக்க தேவைப்படுற ஆக்சிஜென் தயாரிக்க 38 ட்ரில்லியன் டாலர் வேணுமாம். ஆனா இலவசமா மரம் கொடுக்குமாம்..அந்த மரத்த நட்டு வச்சு பராமரிச்சா என்ன உங்களுக்கு?

கண்ணு வேணுமா? கண்ணு? இப்படி கண்ணு கொடுக்க ஆசைப்படுறவங்க அல்லது கண்ணு வாங்க ஆசைப்படுறவங்க என்ன செய்யனும்னா http://ruraleye.org/  இந்த இணையத்துல உங்க பெயரை பதிவு செய்யுங்க...அப்படி இணையதள வசதி இல்லாதவங்க? 04428281919 and 04428271616 இந்த எண்களுக்கு கூப்பிடுங்க...அவங்க சொல்லுவாங்க விவரத்தை..


பத்து வயசுக்குள்ள இருக்கிற பிள்ளைகளுக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணனுமா? விவரங்களுக்கு ஸ்ரீ வள்ளி பாபா மருத்துவமனை, பெங்களூரு க்கு தொடர்பு கொள்ளுங்க...  9916737471

ரத்த புற்று நோய்க்கு மருந்து அடையார் புற்றுநோய் மருத்துவனையிலே இலவசமா கிடைக்குதாம்...044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241 

வீட்டு, அலுவலக விசேசத்துல சாப்பாடு மிஞ்சி போச்சா சாமீ...கவலையேபடாதீங்க..1098 ங்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னீங்கன்னா அவங்க வந்து அந்த சாப்பாடை எடுத்துகிட்டு இல்லாத குழந்தைகளுக்கு கொடுத்திடுவாங்க.

ஆண்டவா இவரை காப்பாற்று என்று சொல்லும் உதடுகளை விட உன்னை நான் காப்பாற்றுகின்றேன் என்று செயல்படுத்தும் கைகளுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி புண்ணியங்கள் வந்து சேரும்....