பங்காளிங்க..

Thursday, January 30, 2014

பிப்ரவரியில் அக்னி நட்சத்திரம்??!


எந்த ஆண்டும் இல்லாத வகையில் அக்னி நட்சத்திரம் 2014 துவக்கத்திலேயே உருவாகி விட்டது...

யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் இந்த தடவை மிக விரைவில் வருடத்தின் ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டது...

ரொம்ப குழம்பிடாதீங்க! நான் சொன்னது அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நமது அரசியலில் வந்திருப்பதை சொன்னேன்...

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடந்து வந்த பனிப்போர் இப்போது விசுவரூபம் எடுத்திருப்பதை உலகமறியும்...

பெரும்பாலோனோர் இது ஒரு அரசியல் நாடகம் என்றே சொல்கின்றார்கள்...ஆனால் இருவருக்குள்ளும் உள்ள பனிப்போர் என்றாவது ஒரு நாள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு விரைவில் ஒரு சிறிய கருத்து தெரிவிக்கப் பட்டதற்காக இருக்குமா என்றால் கொஞ்சம் நம்ப முடியாமல்தான் இருக்கின்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு விசயகந்தைப் பற்றி பேசிய பேச்சினை ரசித்து கைகொட்டி சிரித்த வர்கள் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, அழகிரி மற்றும் திமுக தலைவர்கள் அனைவருமே...
இன்றும் அதை மனதில் கொண்டு அழகிரி தேமுதிக விடம் கூட்டணி வைக்க வேண்டாம் என்று சொல்லும் போது கலைஞர் மற்றும் ஸ்டாலின் தரப்பு விசயகாந் தோடு கூட்டணி வைக்க ஆசைப்படுவது ஒரு முதிர்ந்த தலைவருக்கு அழகல்ல என்பது பெரும்பாலான திமுக தொண்டர்களுக்கு இருக்கும் நப்பாசைதான்....

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது உண்மைதான்...ஆனால் இப்படி தடாலடியாக காலில் விழுவது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது...கட்சிக்கு என்று ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இருக்கின்றது என்றும் அதனை அழகிரி மீறி விட்டார் என்றும் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அழகிரி தரப்பினால் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது...அந்த ஒழுங்கு நடவடிக்கை ஏன் ஸ்டாலின் தரப்பின் மீது எடுக்கப் படவில்லை என்பதும் எல்லோரும் கேட்கும் கேள்வியே? 

கலைஞர் மிரட்டப் பட்டாரா? அல்லது தடுமாருகின்றாரா? என்பதும் மக்களிடையே தோன்றும் கேள்விகள்...

அழகிரி தன்னையும், திமுக பொருளாளரையும் தகாத வார்த்தைகளில் திட்டி விட்டார் என்று சொல்லும் கலைஞரை, அழகிரி கலைஞரின் மகனாக சென்று பார்த்தாரா அல்லது திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக சென்று பார்த்தாரா? 

தன்னை இடை நீக்கம் செய்த திமுகவின் ஊழல்களை வெளியிடுவேன் என்று அழகிரி பேட்டி அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...அப்படி எனில் இத்தனை நாளும் ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதானா? அதை ஏன் இத்தனை நாள் கேட்கவில்லை...தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழகிரி அப்ரூவராக மாறுகின்றாரா என்று எதிர்கட்சிகள் கேட்கின்றது...ஜனவரி 31ல் உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பேன் என்று அழகிரி பேட்டி அளித்ததன் பின்னணி என்ன? ஏன் அன்றே தெரிவிக்கலாமே? 

அதன் பிறகு 3 திமுக எம்பிக்கள் அழகிரியை சந்தித்து என்ன பேசப் போகின்றார்கள்...பேரமா? என்ற பல எண்ணங்கள் திமுக தொண்டர்களுக்கு உண்டாகியுள்ளது! கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவித்த பிறகும் 3 எம்பி க்கள் என்ன பேசப் போகின்றார்கள்?? என்று எதிர்கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது....

கடந்த பிறந்த நாளில் அழகிரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது  கலைஞரின் கண்கள் பனித்து இதயம் குளிர்ந்து...இன்று இந்த தடவை என்ன நடந்ததது, நடக்கப் போகின்றது...என்ற பல கேள்விகள் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்....

அழகிரி மன்னிப்பு கேட்டு ஸ்டாலினின் வெற்றிக்காக போராடுவாரா? அல்லது அஞ்சா நெஞ்சன் அவரது தொண்டர்களுக்கு என்று தலைவராக நீடிப்பாரா? 

அக்னி நட்ச்சத்திரம் வெற்றி விழா காணுமா? அல்லது அக்னி நட்சத்திரம் ரிலீசே ஆகாதா? பத்திரிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கின்றது....

Monday, January 27, 2014

வீரமணி யின் ஓவர் ஆக்ட், சொதப்பலில் முடிந்த கலைஞரின் நாடகம்???

தேர்தலில் யார் யாரோடு கூட்டணி?  திமுக காங்கிரசில் இருந்து விலகிய பிறகு தேமுதிக வோடு கூட்டணி அமைக்க கலைஞரே ஆசைப்படுகின்றாராம்...அதாவது குடிகாரன் என்று கடந்த தேர்தலில் விமர்சித்த விசயகாந்தோடு கூட்டணியாம்....

கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் வடிவேலுவை பயன்படுதித்தி விசயகாந்தை கேவலப்படுத்தாத மேடை இல்லை என்று சொல்லலாம்...அந்த அளவிற்க்கு கேவலப்படுத்தி பேசிய போது கை தட்டி ஆராவாரம் செய்தவர்கள் ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி என்று எல்லோருமே தான்...

இன்று நாடாளுமன்றத் தேர்தலில் பதவி மோகத்திற்காக யாருடைய காலிலும் விழத் தயாராக இருப்பது திமுகவின் முதல் கட்டத் தோல்வியை காட்டுகின்றது....மதுரையில் யாருக்கு பதவி என்ற போட்டியை விட யாருக்கு எந்த சுவர் (விளம்பரம் செய்ய) என்ற பிரச்சினை ஸ்டாலின் மற்றும் அழகிரி தொண்டர்களுக்கு உருவாகிற்று...

எப்போதுமே கலைஞரின் காலடியிலே இருக்கும் ஸ்டாலின் கலைஞரின் நன்மதிப்பை பெற்று விட்டார் போலும்...அதனாலோ என்னவோ அழகிரி தரப்பு நியாயங்கள் கலைஞரின் செவிகளுக்கு சென்று விடவில்லை....விளைவு கருத்துப்போர், தற்போது இடைநீக்கம் வரை சென்றுள்ளது.... 

ஆனால் தீர்ப்பு என்னவோ ஒரு தலைப் பட்சமாக இருப்பது போல் தோன்றுகின்றது...பதவிக்காக தொண்டர்களைத்தான் கழட்டி விடும் அரசியல் சாணக்கியர் இன்று சொந்த மகனையே இடை நீக்கம் செய்துள்ளார்...(அல்லது செய்யப்பட தூண்டப்பட்டுள்ளார்) 

நாடகமா ? நிஜமா? பட்டிமன்றத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி!

தேமுதிக வோடு கூட்டு சேரக் கூடாது என்பது அழகிரியின் தனிப்பட்ட எண்ணம்...கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று சொல்லி முடித்திருக்கலாம்...ஆனால் அதையும் தாண்டி அழகிரி ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை தருகின்றது...

எல்லாவற்றையும் தாண்டி அழகிரியின் இடை நீக்கத்‌திற்க்கு திமுக அமைச்சர்களோ அல்லது வேறு எவருமே ஆதரவு தெரிவிக்காத நிலையில் வீரமணி வாழ்த்து தெரிவித்திருப்பது எல்லோருக்குமே இதுவுமே ஒரு நாடகமோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது....வீரமணி கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்துவிட்டாரோ என்ற எண்ணமும் தோன்றுகின்றது...

இதன் மூலம் கலைஞர் குடும்ப அரசியல் செய்கின்றார் என்ற கறை அழிந்துவிட்டதாக சொல்கின்றார் வீரமணி????  தலைவர் வீரமணி அவர்களே....கலைஞரின் குடும்பம் என்பது வெறும் அழகிரி அவர்களோடு முடிந்து விட்டதா? அப்படி என்றால் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி என்பவாகள் எல்லோரும் வேறு குடும்பத்தை சார்ந்தவர்களா, என்னதான் சொல்ல வர்றீங்க...

உண்மையில் இது இடை நீக்கம்தானா? 

நிச்சயம் விசயகாந்துக்கு இது ஒரு நல்ல பாடம்....பதவிக்காக சொந்த மகனையே இடை நீக்கம் செய்தவர், நாளை விசயகாந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது வெட்ட வெளிச்ச்சமாகி விட்டது 

Friday, January 24, 2014

செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா?

ஆகம விதிகளை கடை பிடிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கும் பக்த ஜனங்களே..கடவுள் சிவனுக்கு கொழுப்பு சத்து நீக்கிய தண்ணீர் கலந்த பால் பாக்கெட்டிலா அபிசேகம் செய்வது?

நான் எப்போ செஞ்சேன்? என்று யோசிக்கின்றீர்களா? நமது சவுகரியத்துக்கு ஆண்டவனையே மாற்றி விட்டோமே...கொஞ்சம் சிந்திக்க வேண்டும்..

பிரதோஷம் என்ற ஒன்றை கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? தாத்தா, பாட்டி எங்கே போறீங்க, இன்னிக்கு பிரதோசம்டா, அதான் கோயிலுக்கு போறோம்...இந்த கால பிள்ளைங்க கிட்டே என்னிக்கு பிரதோஷம் வரும்னு கேட்டுப் பாருங்க...நூத்துக்கு 90 சதவிகிதம் பேருக்கு தெரியாது...

அந்த வரலாறை பத்தி கொஞ்சம் சொல்றேன் கேட்டுக்கோங்க...நல்ல விசயம்தானே சொல்றேன்....

பிரதோஷம் எப்போது வரும்?

13வது சந்திர நாளன்று (திரயோதசை ) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நீடிக்கும் அந்த வேளையில் பிரதோஷம் பூசை நடக்கும். 

அந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் நமது பாவங்கள் மறைந்து நாம் சொர்க்கத்திற்கு செல்ல வழி பிறப்பதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றார்கள். 

அந்த பூஜை முன்டிந்த தருணத்தில் பிரகாரத்தை சுற்றி வந்தால் நமக்கு நல்ல அனுக்கிரகங்கல் உண்டாகும் என்றும் அதற்க்கு பெயர் சோம சுற்ற ப்ரதக்சினம் என்றும் சொல்கின்றார்கள். 

பிரதோஷ வரலாறு...

பலர் பல விதமாக சொல்கின்றார்கள். நான் படித்த வரலாறை இங்கே சொல்கின்றேன்....

வாசுகி என்ற சர்ப்பத்தைக் கொண்டு திருப்பாற்கடலை மந்தாரா மலையை தேவர்களும், அசூரர்களும் கடைந்த போது முதலில் அதில் விஷம் வந்ததாகவும் அந்த விசத்தை சிவபெருமான் முழுங்க அதன் பின்னர் அமிர்தம் வந்ததாகவும் அதனை தேவர்கள் உண்டதாகவும் சொல்லப் படுகின்றது... சரி விசத்தை முழுங்கினால் என்ன செய்வது என்று அஞ்சிய பார்வதி தேவி சிவனின் கழுத்தை பிடித்து நெரித்து விஷம் மேலும் இறங்காமல் தடுக்க சிவனின் முகம் நீலமாய் மாறியதாகவும்....மேலும் அந்த விஷம் முழுவதும் இறங்காமல் நின்று போனதாகவும் வரலாறு சொல்கின்றது. 

இதனிடையே தனக்கு அமிர்தம் கிடைத்த சந்தோசத்தில் சிவனை மறந்து கொண்டாட சென்று விட்ட தேவர்கள் அடுத்த நாள் சிவனின் தியாகத்தை நினைத்து பதறிப் போய்  சிவனிடம் சென்று மன்னிப்பு கேட்டனராம். அந்த நாள்தான் திரயோதசி என்று சொல்லப்படும் 13வது நாளாகும். 

சிவனும் எளிதில் மன்னிக்க கூடிய மனதுடையவர் என்பதால் எல்லோருடைய பாவங்களை மன்னித்து அருள் புரிந்தார் என்றும்...தனக்கு விஷம் இறங்காமல் காப்பாற்றிய பார்வதியின் செயலில் மனமகிழ்ந்து ஆடியதாகவும் அதுவும் தனது வாகனமான நந்தியின் முன்பு ஆடியதாகவும் கூறப்படுகின்றது. 

ஆகையால்தான் இன்றும் சிவனை வணங்கும்போது நந்தியின் கொம்புகளுக்கு இடையில் பார்த்து வணங்கவேண்டும் என்றும் சொல்கின்றார்கள். 

சரி பக்தர்கள் சிவனை எப்படி வணங்க வேண்டும் அதனால் என்னென்ன பலன்கள் என்று தெரியுமா?

சிவபெருமானுக்கு பிடிக்காத பாக்கெட்!!!!

சுத்தமான பசும்பால் (முக்கியமா பால் பாக்கெட் கிடையாது) அதில் அபிசேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்.

சுத்தமான பசு நெய் - மோட்சம் கிடைக்குமாம் 

சுத்தமான பசுந்தயிர் - குழந்தைப் பேறு கிடைக்குமாம் 

சுத்தமான தேன் - நல்ல இனிமையான குரல் கிடைக்குமாம் 

அரிசி மாவினில் செய்தால் - கடனில் இருந்து விடுபடலாமாம்...

கரும்புச்சாரினில் அபிசேகம் செய்தால் - நல்ல உடல்நிலை கிடைக்குமாம் 

பஞ்சாமிர்தத்தில் அபிசேகம் செய்தால் செல்வங்கள் வந்து குவியுமாம் 

எலுமிச்சையில் செய்தால் மரண பயம் விட்டு விலகிச் செல்லுமாம்...(இப்போ புரியுது எதுக்கு வண்டியிலே எலுமிச்சை பழத்தை கட்டி வைக்கிறாங்கன்னு)

சர்க்கரையில் செய்தால் எதிரிகள் உருவாக மாட்டார்களாம்...

இளநீரில் அபிசேகம் செய்தால் வாழ்க்கையில் வசந்தம் வருமாம் 

வேகவைத்த அரிசியில் செய்தால் (அன்னம்) கட்டழகுடைய தேகம் கிடைக்குமாம் 

சந்தனத்தில் அபிசேகம் செய்தால் லட்சுமி கடாட்சம் வந்து சேருமாம்....

ஆனால் நாம் எல்லாவற்றையும் போலியான பொருட்களால் இன்று செய்து வருகின்றோம்...

சிவனுக்கு உகந்தது வில்வ இலைகளும் நாகலிங்க மலர்களும்...மார்கெட்டுல இப்போ எல்லாம் பிளாஸ்டிக் குலே கிடைக்குது....அதை கொடுத்திட்டு நானும் செஞ்சேன், சிவன் என்னை கண் திறந்து பாக்கலையே னு புலம்பிகிட்டு இருக்கோம்...

செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா? பஸ்சுல உக்காந்துகிட்டே சாமிக்கு டாட்டா காண்பிக்கிறது, அப்புறம் சிவன் கண்டுக்கலைன்னு சொல்ல வேண்டியது....

ரோட்டுல போலிஸ் காரனை பார்த்தா வேட்டியை கீழே இறக்கி விடுவீங்க...சைக்கிளை விட்டு இறங்கி போவீங்க...ஆனா கடவுளுக்கு மட்டும் உக்காந்துகிட்டே பிளையிங் கிஸ் கொடுப்பீங்க....

என்னென்ன பிரதோஷம் இருக்கு?

1.மாச பிரதோஷம் 
2.பக்ஷ பிரதோஷம் 
3. சனி பிரதோஷம் 

பிரதோஷம் அன்று அலங்கரிக்கப்பட்ட சிவனை பிரகாரம் சுற்றி வந்து வழிபட்டால் அது  கும்பாபிசேகம் செய்த 3 கோயில்களை வழிபட்டதற்கு சமமாம்...இதை விட நமக்கு வேறு என்ன பாக்கியம் இருக்க முடியும்....

பிரதோஷம் அன்று பக்தர்கள் செய்ய வேண்டியது என்னென்ன ?

1. அதிகாலையில் குளித்து கோயிலுக்கு சென்று வலம் வர வேண்டும்...
2. உண்ணாநிலையை கடைபிடித்தல் வேண்டும் 
3. தேவாரம், திருவாசகம், ருத்ர சமகா மந்திரங்கள் ஓத வேண்டும், அல்லது படிக்க வேண்டுமாம்...இது அறிவியலோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றது 
4. நந்திக்கு அருகம்புல்லும், சிவனை தாங்கி நிற்கும் காளைக்கு மலர்களும், சிவனுக்கு வில்வ இலைகளும் கொண்டு வணங்க வேண்டுமாம் 
5. நெய் தீப மேற்ற வேண்டுமாம்...(சுத்தமான, சுத்தமான பசும் நெய்)
6. திருவாசகம், தேவாரம் படிக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது...
7. சூடானா பசும் பாலை அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு வழங்க வேண்டுமாம்...(அதுக்கு பதிலாத்தான் அவா காசு வாங்குறாளே, அப்புறம் என்னாத்துக்கு) 
8.முக்கியமான விஷயம் என்னவெனில் அன்று கடவுளின் எந்த ஒரு விக்கிரகத்தையும் கைகளால் தொடக்கூடாதாம்...அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்குமாம்.

9. இது எல்லாவற்றையும் விட சிவனை நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று வழி படுத்தல் மிக முக்கியமான ஒன்றாகும்.....

எங்கே, கோயில்ல நிக்கவே இடமில்லை...நேரா நின்னு கும்பிடவே விடமாட்டாளே! நேக்கு புரியறது....ஆனால் இப்படி செய்தால் புண்ணியமாம்... செய்யுறதை ஒழுங்கா செய்யனுமா இல்லையா?