பங்காளிங்க..

Friday, March 28, 2014

நான் இன்னும் திராட்சைத் தோட்டம் வாங்கலையே !!! ஜெ சொத்து பற்றி கலைஞர்!!!


தி அதர் சைட் என்ற அந்த டில்லி ஆங்கிலப்பத்திரிகை வெளியிட்ட கலைஞர் குடும்ப சொத்துப் பட்டியல்.

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டின்- மதிப்பு  5 கோடி.


2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.


3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு  2 கோடி.


4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு  4 கோடி.


5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு  2 கோடி.


6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு  5 கோடி.


7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு  2 கோடி.


8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -  12 கோடி.


9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு  4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -  10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு -  2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -  2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -  100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு -  10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -  2 கோடி. 
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி' அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -  20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -  5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -  100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -  50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -  108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்' மதிப்பு -  48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு  30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு -  50 கோடி.
 27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
 28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு பங்கு  48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ரோயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்' மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில்  13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -  1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு  2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -  2 கோடி
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -  5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -  40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -  1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு -  2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு -  5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -  2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -  3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்' மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்' என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -  1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு -  5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்' என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு -  20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) கோப்பி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹொஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை' - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

 69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


நன்றி....http://tamilan-superpowerindia.blogspot.in/2011/08/blog-post_07.html


வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து ஜெயலலிதா இணைத்துள்ள சொத்துக் கணக்கு விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் சொத்து விவரம்: மொத்த சொத்து மதிப்பு ரூ. 51 கோடி. அசையும் சொத்துக்கள் - ரூ. 13,3,27,979. அசையா சொத்துக்கள் - ரூ. 38,37,40,000 ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000 கடந்த முறை ஜெயலலிதா தனது மொத்த சொத்தாக கணக்கில் காட்டியிருந்ததை விட இந்த முறை 2 மடங்கு சொத்துக்கள் அதிகரித்துள்ளன.


அடுத்தது சோனியா  அம்மா....

http://news.vikatan.com/article.php?module=news&aid=21865


இது எதுவுமே நான் சொல்லலை ங்க....பத்திரிகை செய்திதான் இதுவெல்லாம்....மக்களே...சிந்திப்பீர்.....வாக்களிப்பீர்......

நோட்டா 
Wednesday, March 26, 2014

வீட்டுக்கு ஒரு ஸ்பூன் இலவசம்...ஓட்டு போட வாங்க!!!!

ஸ்பூனை வச்சு என்னெல்லாம் பண்றாங்கப்பா? எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்! உங்களுக்கு??

Tuesday, March 18, 2014

'அம்மா'வுக்கு தடை போட்ட தேர்தல் கமிசன்!!!!!!

இந்தக் கால  பிள்ளைகளுக்கு தமிழே தெரிய மாட்டேங்குதே,  என்ன செய்யுறது னு புலம்பிகிட்டு  இருந்தாரு எங்க அண்ணன்...

உடனே நான் ரொம்ப பந்தாவா...கவலையை விடு அண்ணே...நான் அவங்களுக்கு கம்பியுட்டர் மூலமாவே தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு 

உயிரெழுத்து ல  ஆரம்பிப்போம் னு வெப்சைட்ட தேடினேன்....

அப்போ இந்த காட்சியை பார்த்தேன்...


என்னமோ கருப்பு மையால அழிச்சு வச்சிருந்தாங்க...என்னான்னு கேட்டா தேர்தல் வந்திடுச்சாம், அதுனால அம்மா, இலை னு போட்டிருந்தா அதை கருப்பு மையால அழிக்கனுமாம்....


Wednesday, March 12, 2014

காலுக்கு கீழே கிடக்குது, நம்ம மருத்துவம்!!!!இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், மருந்து என்பது பெரிய வியாபாரமாகி விட்டது....காசுதான் உலகம்...இல்லை, இல்லை பணம்தான் பிரதானாம் என்று ஆகி விட்டது...

என்ன ஆச்சு? காலையிலே இருந்து பயங்கரமான தலைவலி? அப்படியா? உடனே ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திடுவோம், நான் சொல்ற இடத்துல தான் ஸ்கேன் பண்ணனும்...அப்போதான் ஸ்கேன் ரிப்போர்ட் தெளிவா இருக்கும்...

காலை ஏன் நொண்டி நொண்டி நடக்குறீங்க? ரொம்ப நேரம் நிக்க முடியலை, உட்கார முடியலை...மூட்டு உளைச்சல் ஜாஸ்தியா இருக்கு?

அப்படியா? கீழேயே நம்ம லேப் இருக்கு, எக்ஸ்-ரே எடுத்திடலாம்...நீங்க நடக்க வேண்டாம்...லிப்ட்ல போங்க...1500 ரூவாய மட்டும் ரிசப்சன் ல கட்டிடுடுங்க...

ரிப்போர்ட் டை பார்த்திட்டு அப்பால சர்ஜரியா? இல்லேனா என்னான்னு பார்த்திடலாம்...

எதுகெடுத்தாலும் லேப் தானா? அந்த காலத்துல லேப் வசதி இல்லாமலே நோயாளிகளை பார்த்தாங்களே...எங்க பாட்டிக்கு வயசு 90 ஆகுது...இன்னமும் அவங்க வைத்தியம்தான் பாக்குறாங்க....ஆனா அதிகப்படியா 30 ரூவாய்க்கு மேல பீஸ் கொடுத்ததே இல்லையே...

உண்மையை சொல்லனும்னா, இன்றைய மருத்துவம் எல்லாம் நம்ம காலுக்கு அடியில்தான் இருக்கு!

உங்கள் பாதம்தான் உங்களுடைய பெரும்பாலான நோய்களுக்கு தற்காலிக, நிரந்தர மருந்து!

கீழே இருக்கிற படத்தை பாருங்க, மேல இருக்கிற படம் சும்மா அழகுக்கு தான்...

  


இதுல என்ன, ஒண்ணுமே புரியலை நு யோசிக்கிறீங்களா...படத்துல போட்டிருக்கிற இடத்துல லேசா இதமா தேச்சு விட்டா அந்தந்த இடத்துல இருக்கிற வலி பறந்து போகும்...நான் அடிக்கடி இந்த மாதிரி செஞ்சிக்குவேன்...நல்ல பலன் இருக்கு....ஏன்னா, நம்ம உடம்புல இருக்கிற ஒவ்வொரு பகுதியும் மற்றொரு பகுதியோடு இணைஞ்சிருக்கு! 

Monday, March 10, 2014

பழசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னும் மாறவே இல்லையே!!!

இப்ப எல்லாம் கொஞ்சம் பழசாயிட்டா கூட உடனே அக்கா ரோல், இல்லேனா அம்மா ரோல் கொடுத்து போடுறோம்!!! இன்னும் சில இடத்துல சினிமா பீல்ட விட்டே  தூர வச்சிடுறோம்....

ஆனா இங்கே பாருங்க , பழசானாலும் இன்னும் புது புது கெட்டப்புல வந்துகிட்டே இருக்கு....இதுவும் கூட ஒரு அழகுதான், பரவாயில்லை நம்மளை  மாதிரி நடுத்தர மக்களுக்கு இந்த  விஷயங்கள் அழகுதான்...


இதுல எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு பயன்படுமோ அதை  பயன்படுத்திக் கோங்க !!!

Sunday, March 9, 2014

கேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்! விசமிகளின் சதி செயலா?

பிரபலங்கள் பலரின் படுக்கையறை காட்சிகள் தற்போது இணையதளத்தில் 
உலா வருகின்றது....

இதில் ஆபாசம் இல்லை என்றாலும் இது எப்படி இணையதளத்தில் வந்தது?  என்று யோசனை செய்யாமல்  வந்தோமா,பார்த்தோமா, கமெண்ட்டை போட்டோமா ன்னு இருக்கணும்......

இவர்கள் பிரபலங்கள்.....

இவர்கள் சமுதாயத்தில் மிகப் பிரபலங்கள்....பணபலம், ஆள் பலம் உள்ளவர்கள்...இது உதாரணத்துக்கே....இவர்களைப் போன்ற பணக்காரங்களின் படுக்கை அறை இப்படித்தானே இருக்கும்...கீழே பாருங்க...இதையே தலைப்பை இங்கிலீபீசுல போட்டிருந்தா திரும்பி கூட  பார்த்திருக்க மாட்டீங்க, 

பெட்ரூமுக்கு தமிழ்ல படுக்கையறை .தானே.....

கோச்சிகாதீங்க....திட்டுறவங்க...வசை பாடுறவங்க...வையுரவங்க எல்லோரும் கீழே இருக்கிற பெட்டியிலே திட்டிட்டு போங்க....

ஆனா என்னையே மாதிரி ஆபாசம் இல்லாம திட்டிட்டு போங்க....நான் ரொம்ப நல்லவங்க.....