பங்காளிங்க..

Tuesday, May 13, 2014

அவா, இவா எல்லாம் எப்படி ஜலத்தை குடிக்க போறா?

ஹார்வார்டு பல்கலைக்கழக அறிவாளிங்க அதாங்க விஞ்ஞானிங்க எல்லாம் புதுசா ஒரு விஷயத்தை ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்கா! இப்போ இருக்கிற இந்த பூலோகத்துக்கு அது ரொம்ப அவசியம்தான்...

என்னது அதுனு யோசிக்கிறீங்களா? பிளாஸ்டிக்கு பதிலா ஒரு பொருளை உருவாக்கி இருக்காங்களாம்....

வர்ற பொருள் எல்லாம் பிளாஸ்டிக்குல தான் உருவாகுது...அதுனால சவுகரியம்தான்...ஆனா உலகம் சுற்றுப்புறச் சூழல் பயங்கரமா மாசடைஞ்சு வருகுது....

நிலத்துல பிளாஸ்டிக் மக்க மாட்டேன்னு அடம்பிடிக்குது....தண்ணியில கரைய மாட்டேங்குது...எரிச்சா வாயுல கலந்து சுவாசக் கோளாறு வருது...

இதை எல்லாம் மாத்துறதுக்கு ஒருத்தன் பிறந்திட்டான் ன்னு சொல்ற மாதிரி சிட்டோசன் ன்னு ஒன்னு புதுசா உருவாக்கிட்டு வருது...

அது என்னா சிட்டோசன்??

சொல்றேன்....ஷ்ரிம்ப் செல்ஸ் னு ஒன்னு அதாவது, 

இறாலோட ஓடு மற்றும் வண்ணத்து பூச்சியோட இறகு இந்த இரண்டையும் வச்சு பிளாஸ்டிக் மாதிரி கனமான ஒரு பொருளை உருவாக்கி அதிலே வெற்றியும் கண்டிருக்காங்க...

இதுல என்ன லாபம்னா இது மண்ணுக்குள்ளே சுலபமா புதைஞ்சிடும், மக்கி போயிடும்..அது மட்டுமில்லாம செடிகளுக்கு நல்ல உரமும் கூட, தண்ணீரிலும் ஈசியா கறைஞ்சிடும், எரிக்கிற அளவுக்கு போகாது...அதான் மண்ணுலதான் சுலபமா மக்கி போகுதே....

அதுனால இதுல கொஞ்சமா கனமா செஞ்சு பிளாஸ்டிக்குக்கு பதிலா பயன்படுத்துற முயற்சியிலே தீவிரமா இருக்காங்க....நல்ல விசயம்தானே...அதுவும் இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமா இருக்கிற நாட்டுல சுற்றுப்புறச் சூழல் ரொம்ப மோசமாகிடுச்சு,  அதுனால இந்தியாவிற்கு இது ரொம்ப முக்கியமான ஒன்று...

அது சரி, இதுல தண்ணி பாக்கெட் வந்தா, தண்ணீ பாட்டில் வந்தா ?????

அவாள்  எல்லாம் கசம், கசம் னு குடிக்க மாட்டா...அப்புறம் அந்த காலம் மாதிரி எல்லாரும் மண் குவளையும், கமண்டலமும் தூக்கிட்டு போவாளோ????


அவாள், இவாள் எல்லாம் கோவிச்சுக்க கூடாது....எல்லா சைவ மக்களுக்கும் இறால் மூலமா உற்பத்தியார பொருள் நு தெரிஞ்சா வருத்தம்தான்....

Friday, May 9, 2014

பதிவர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது??

சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மிக சாதாரணமான ஒன்றல்ல...வெட்கக் கேடான விஷயம் "சுவாதி தினம்" என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்....

பல அதிகாரிகளின் மெத்தனமும் இதில் இருக்கின்றது...ஒரு சம்பவம் நடந்த பிறகு கேமராவை போட்டு வந்தவன் இவன்தான் என்று அடையாளம் காட்டுவது எப்படி? வரும்போதே அவனை கையும் களவுமாக பிடிப்பது எப்படி? 

இது தவிர சில இடைத்தரகர்களின்  அதிக பண ஆசையும் இதற்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது. பணம் கொடுப்பது யாராக இருந்தாலும் போலியான முகவரியை அவர்களே எடுத்துக் கொடுத்து தட்கல் முறையிலோ அல்லது தவறான முகவரியை தவறான நபர்களுக்கு எடுத்துக் கொடுத்து பயணம் செய்ய பணிக்கின்றார்கள்...

இப்போது விசாரணையில் சந்தேகத்துக்குரிய நபர்களின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் தவறு என்று தெரியவந்துள்ளது...அந்த இருக்கையில் பயணம் செய்தவர்கள் யார்? விசாரணை நடைபெற்று வருகின்றது....

ரயில்வே துறை என்பது மிகப் பெரிய நெட்வொர்க் ஆகும்...இதில் பயணிகள் போர்வையில் வரும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வது என்பது மிகச் சிரமமான விசயமே...இந்த மாதிரியான சமயங்களில் அப்பாவி பொது மக்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்....

இவற்றை தடுக்க அப்பாவி பொது மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றது...

செல் போன் இல்லாத மக்களே கிடையாது....இந்த செல் போன் தவறும் பட்சத்தில் நாம் உடனடியாக தாமதிக்காமல் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்...செல் போன் 500 ரூவாய் தான் போனால் போகின்றது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்...

அந்த 500 ரூவாய் செல்போன் தீவிரவாதி அல்லது குற்றவாளிகள் கைகளில் கிடைக்கும் போது உடனடியாக யாருக்காவது அல்லது பொது இடங்களுக்கு அழைப்பு விடுத்து குண்டு மிரட்டல் விடுக்கின்றார்கள்....விளைவு...தொலைபேசியை தொடர்பு கொண்டால் செல்போன் நிறுவனத்தில் தகவல் கேட்டு செல்போனின் உண்மையான உரிமையாளர் விசாரணைக்கு அழைத்து செல்லப் படுகின்றார்...அதுபோலவே சிம்கார்டு தொலைந்தாலோ அல்லது வேண்டாம் என்றாலோ உடனடியாக சிம்கார்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பது மிக நல்லது...முடிந்தால் எழுத்துப் பூர்வமான புகார் நகலை கையில் வைத்துக் கொள்ளல் மிகப் பாதுகாப்பாய் அமையும்.....

அது போன்று லேப்டாப் வைத்திருக்கும் நபர்கள் அது தொலைந்து போகும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப் பட்ட காவல்துறையில் புகார் அளிப்பது மிக முக்கியமான ஒன்று...நீங்கள் கவனக்குறைவாகவோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பது குற்றவாளிக்கு சாதகமாக முடியும்....

தீவிரவாதிகள்,  தவறு செய்ய உறுதுணையாக இருப்பது இந்த மாதிரியான விசயங்களில் பொதுமக்களே காரணமாக அமைகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விசயமாகும்...எப்போதுமே உங்கள் செல்போனின் ஐஎம்இஐ நம்பர் உங்கள் கைகளில் இருந்தால் மிக நல்லது, 

எதுவுமே விளையாட்டல்ல, மிக கவனத்தில் இருக்க வேண்டிய விஷயம் இது...உங்களின் கவனக்குறைவு தீவிரவாதிகளின் வசதியாகிப் போய் விடும் என்பதை மறவாதீர்கள்...

மக்களே உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்...அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்...அவர்களுக்கு எதிர்கட்சியை குறை சொல்லவும், அதிகாரிகளை குறை சொல்லவுமே நேரம் சரியாக இருக்கும்....மக்களின் பாதுகாப்பிற்கு எந்த அரசியல்வாதியும் இருக்க வில்லை...

சம்பவம் நடந்த பிறகு எதிர்கட்சியை விமர்சிக்கவே நேரம் சரியாக இருக்கும்..மிஞ்சி போனால் செத்து போனவனின் பிணம் அருகே நின்று போட்டோகிராபர்களை பார்த்து வசனம் பேசிவிட்டு செல்வார்கள்...செத்தவர்கள், செத்தவர்களே....பிணத்தின் மீதுதான் வசனம் பேசும் வேற்று அரசியல்வாதிகள் இவர்கள்...

சுவாதி, நிர்பயா தினம் கொண்டாடுறதுக்கா உங்களை ஆட்சியிலே உட்கார வைச்சோம்....


அது என்னமோ தெரியலை, தீவிரவாதிகளுக்கு எப்பவுமே அப்பாவி பொது மக்களைத் தான் கொல்லத் தெரிந்திருக்கின்றது...சுவாதி என்ற பெண்ணை கொன்றதால் தீவிரவாதம் சாதித்தது என்ன? ஒன்றுமே கிடையாது....

அதிகாரிகளை குறை சொல்லி ஒன்றும் பிரயோசனம் கிடையாது..அவர்களை கேட்டால் மேலதிகாரிகள் எனக்கு அந்த அதிகாரம் கொடுக்க வில்லை என்று சொல்வார்கள்...மேலதிகாரிகளை கேட்டால் அரசாங்கம் எனக்கு அந்த அதிகாரம் தரவில்லை என்பார்கள்....இப்படியே போய்க் கொண்டிருக்கும்...அதனால் பொது மக்கள் கூடுமானவரை தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டால் மிக நல்லது....

பதிவர்களே! உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு செல்போன் காணமல் போனால் காவல்துறையில் புகார் அளிப்பதை உடனே தெரிவியுங்கள் அல்லது ஊக்கப்படுத்துங்கள்....இல்லையேல் பிரச்சினை அன்று விசாரணை, அவமானம் போன்றவை ஏற்படும்....  

சுவாதி தினம், நிர்பயா தினமெல்லாம் போதும்...
பதிவர் நண்பர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது?