Friday, April 12, 2013

அப்பனுக்கும், பிள்ளைக்கும் அப்படி என்னதான்யா பிரச்சினை?

எப்போ பாரு ஏதாவது ஒரு விசயத்துல அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஆக மாட்டேங்குது....சமீபத்துல ஒரு குட்டிக் கதை படிச்சேன்....

எங்கே பிரச்சினை ஆரம்பிக்குதுனே தெரியலை?


அந்த கதையை படிங்க ....உங்களுக்கும் ஏதாவது புலப்படுதா னு சொல்லுங்க...


அப்பாவும் மகனும் பார்க் பெஞ்சுல உக்காந்திருக்காங்க...பையன் பேப்பரு படிச்சிக்கிட்டு இருக்கான்...அப்பா ரொம்ப வயசானவரு...கண் பார்வை வேற இல்லை...திடீருன்னு அந்த பார்க்குல ஒரு குருவி வந்து கீச், கீச் நு கத்துது..உடனே அப்பா பையன்கிட்டே என்னதுப் பா அது னு கேட்குறாரு...பையன் சிரிச்சுக்கிட்டே குருவி பா னு  சொல்ல அப்பா பேசாம உக்காந்திருக்காரு.திருப்பியும் அதே கீச், கீச் கேட்க அப்பா திருப்பியும் என்னதுப்பா அது? னு கேட்கவும் பையன் கொஞ்சம் ஏளனமா இப்போதானேப்பா  சொன்னேன்...குருவி பா, அதே குருவி திருப்பியும் கீச், கீச்னு கத்தவும் அப்பா திருப்பியும், மகனே ஏதோ சத்தம் கேட்குதுடா னு  சொல்ல மகன் சற்று எரிச்சலோடு குருவிப்பா, அதே குருவிதான் திருப்பி திருப்பி வருது....


அப்பாவிடம் மௌனம்....திருப்பியும் அதே சத்தம், அப்பாவிடம் இருந்து அதே கேள்வி? அவ்வளவுதான் மகனுக்கு கோவம் வந்தது...அறிவில்லை உனக்கு, ஒரு தடவை சொன்னா தெரியாதா? குருவி...இங்கிலீசுல ஸ்பாரோ னு  சொல்வாங்க..வயசாகிடுச்சே பேசமா உட்காருரியா என்று ஆத்திரத்தில் கத்தவும்....அப்பா எதுவுமே சொல்லாமல் வீட்டிற்குள் தட்டுதடுமாறி செல்கின்றார். போனவர் ஒரு டைரி யை எடுத்துக் கொண்டு வந்து மகனிடம் ஒரு பக்கத்தை காட்டி படிக்க சொல்கின்றார்.


மகனும் அதை படிக்கின்றான்., சத்தமா படி என்று சொல்ல, மகனும் அதனைப் படிக்கின்றான். அதில் அவர் எழுதி இருப்பது....நானும் எனது மூன்று வயது மகனும் பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்கும் போது அங்கே ஒரு குருவி வந்து அமர்ந்தது. அது கீச், கீச் ஒரு சத்தமிட்டது. ஒவ்வொரு முறையும் அது சத்தமிட்ட போது  எனது மகன் அது என்ன என்று கேட்க, நான் அவனை முத்தமிட்டு அது குருவி என்று சொன்னேன். அன்று மட்டும் அவன் 27 முறை கேட்டான்...நான் அந்த இருபத்தேழு முறையும் அவனை முத்தமிட்டு குருவி என்று பொறுமையாய் பதில் சொன்னேன். மனதிற்குள் மிக சந்தோசமாய் இருந்தது மீண்டும் அந்த நாள் எப்போது வருமோ என்று ஆவலை இருக்கின்றது என்று எழுதி இருந்தார்.


படித்த மகன் கண் கலங்கி விட்டான்..என்னை மன்னியுங்கள் அப்பா, என்று அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டான்...


எனது அப்பாவை நானும் இந்த அவசர உலகத்தில் நேசிக்க தவறி விட்டேன். அவர் கேட்கும் போது  பொறுமை இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். எல்லோருமே கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கின்றேன் அப்படி நடப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என்றே நம்புகின்றேன்...


வயதானவர்களை குழந்தைகளாக பாவிக்க வேண்டுகின்றேன்...நன்றி....

தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீங்க...மேல இருக்கிற படத்தோட சம்பந்தப் படுத்தி பார்க்காதீங்க னு  நியாபகப் படுத்தவே அந்த புகைப்படம்...

6 comments:

  1. Touching story,thanks 4 sharing. Hv a Grt day. Stella, Bangalore

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி.

      Delete
  2. இது முன்பே படித்த கதைதான், இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் நாம் நடந்துகொள்ளும் முறையை நியாபகப்படுத்துவதாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும், இது நான் சமீபத்தில்தான் பார்த்து ரசித்த கதைதான்...எனினும் வருகைக்கும், தகவல் தெரிவித்தமைக்கும் மனமார்ந்த நன்றி....

      Delete
  3. நல்ல பாடம் நான் இனி என் அப்பாவிடம் கோபமாக பேசமாட்டேன்

    ReplyDelete
  4. காலத்திற்கு ஏற்ற கதை. நான் புதிய விருந்தாளி.
    எஸ் பி ஆர்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...