பங்காளிங்க..

Thursday, September 29, 2011

உன் மனைவி என் காதலியாக முடியாது???

ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? சமீபத்தில் எனது நண்பன் எனக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல்....அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.

தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.

இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா...அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா? யார் இதை வெளியிட்டது...அந்த பெண்ணின் சகோதரரா? அந்த பெண்ணா? அந்த பெண்ணின் தோழிகளா? அல்லது தோழர்களா? அல்லது யாரென்றே தெரியாத முகம் தெரியா நபரா? அந்த பெண்ணின் கணவரா? அல்லது காதலரா?

அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா? 

இவள் ஒரு மாடல் என்று வைத்து கொள்வோம்...ஒரு மாடல் என்பவள் ஒரு திருமண வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அடுத்த வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள இயலாது. ஒருவேளை நிஜமாகவே இவளுக்கு வரன் தேடுவதாக இருந்தால் ஏன் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற வேண்டும். சோசியல் நெட்வொர்க் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியமாகின்றது. மீதி எல்லோருமே கடமைக்கு ஒரு கணக்கு துவக்கி செயல்படுத்தி வருகின்றார்கள். இரண்டு ரூவாய் கொடுத்து தினகரன் பேப்பர் வாங்க வைக்க 3 பொருட்களை இலவசமாக கொடுத்தார்கள்.

அப்படி எனில் உங்களிடம் இருந்து எவ்வளவு கொள்ளை அடிக்க இந்த சோசியல் நெட்வொர்க் தளங்கள் விற்கப்படுகின்றது என்பதை சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள்.

விசயத்திற்கு வருவோம்...இந்த பெண்ணிற்கு இது சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா? இந்த பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? இவளே கால் கேள் ஆகவும் வருகின்றாள், இவளே திருமண மணப் பெண்ணாகவும் வருகின்றாள். எதுதான் நிசம்? அல்லது இவள் ஒரு வியாபாரப் பொருளா? 

ஒருவேளை இந்த மேட்ரிமோனி நடத்தும் வியாபாரிகள் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு நம்மை எல்லாம் ஏமாற்றுகின்றார்களோ அல்லது இப்படித்தான் எல்லா பெண்களின் புகைப்படங்களையும் வெளியிடுகின்றார்களா? இப்படி எத்தனை பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த எத்தனை அப்பாவி இளைஞர்களிடம் இருந்து பணம் பிடுங்கி இருக்கின்றார்களோ, தெரியவில்லையே?

ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.

இதை பற்றி எனது நண்பனிடம்  கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன்...டேய் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு போன் பண்ணி சொல்றியாடா? அப்படியே படத்தை பார்த்தோமா, ஜாலியா ரசிச்சோமானு போயிட்டே இருக்கணும்னு சொன்னான். மிகவும் வலித்தது,. இரண்டு நாளுக்கு முன்னாள் அவனது தங்கையின் புகைப்படத்தை  பேஸ்புக் இணையத்தில் பார்த்து விட்டு வானத்திற்கும், பூமிக்குமாய் குதித்தான். இதை போட்டவர்கள் மீது கோர்டுக்கு போவேன், அல்லாரையும் பிடிச்சு உள்ளே போடுவேன் என்று கத்தி கொண்டிருந்தான்.. மெல்ல அவனிடம் போய் டேய், இதெல்லாம் ஜாலியா ரசிச்சுகிட்டு போய்க்கிட்டே இருக்கனும்டா என்று அவன் சொன்ன வசனத்தையே அவனுக்கு திருப்பி சொன்னேன்..எதுவுமே பேச வில்லை. இப்போது அவன் இந்த செய்தியை யாரைப் பார்த்தாலும் தீவிரமாய் சொல்லிக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றான். தனக்கு வந்தால் அது வலி, அடுத்தவர்களுக்கு வந்தால் அது ஜாலியா?  

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது...இல்லேனா மருவாதை கெட்டிடும்.

வேதனைகளோடு
மின்சாரம். 
























17 comments:

  1. கொடுமை...

    பெண்கள் புகைப்படங்களை கொடுக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

    இப்படி நட்ந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறிதான்...


    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. /// # கவிதை வீதி # சௌந்தர் said.கொடுமை...
    பெண்கள் புகைப்படங்களை கொடுக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...
    இப்படி நட்ந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறிதான்...
    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே.. ///


    உண்மைதான்....விளையாட்டுத்தனமாய் சிலர் செய்யும் விஷயங்கள் சில சமயங்களில் தற்கொலையில் சென்று முடிகின்றது, கருத்து பரிமாற்றலுக்கு நன்றி

    ReplyDelete
  3. சர்வசாதாரணமாய் நடக்கும் கொடுமை.. இப்பொழுது உங்க அலைபேசி நிறுவனங்களும் நட்பு இல்லாம அவதிபடுகிறீர்களா என்று கொக்கி போட்டு கொண்டிருக்கிறது... பாலியல் உணர்ச்சிகளை தூண்டி பணம் பறிக்கும் வித்தை இது..

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வுக்கு நன்றிங்க ..

    ReplyDelete
  5. நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு
    பதிவு முழுவதையும் படித்துவிட்டு
    அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்க
    பதறுகிறது பதிவிட்டமைக்கு நன்றி
    த.ம 4

    ReplyDelete
  6. /// suryajeeva said...
    சர்வசாதாரணமாய் நடக்கும் கொடுமை.. இப்பொழுது உங்க அலைபேசி நிறுவனங்களும் நட்பு இல்லாம அவதிபடுகிறீர்களா என்று கொக்கி போட்டு கொண்டிருக்கிறது... பாலியல் உணர்ச்சிகளை தூண்டி பணம் பறிக்கும் வித்தை இது.. ///

    உண்மைதான் தலைவா...ஆனால் அகப்பட்டு கொண்டிருப்பவர்கள் நிலைமை????

    ReplyDelete
  7. /// அரசன் said...

    நல்ல விழிப்புணர்வுக்கு நன்றிங்க ..///

    அது நமது கடமை தோழா. அந்த இடத்தில் எனது உறவு இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?

    ReplyDelete
  8. /// Ramani said...நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு

    பதிவு முழுவதையும் படித்துவிட்டு அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்க பதறுகிறது பதிவிட்டமைக்கு நன்றி ///

    உங்களை பதறவைப்பது எனது எண்ணமல்ல...நாம் நமது சகோதரிகளை, தோழிகளை, உறவுகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே...

    ReplyDelete
  9. பெண்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்

    உங்கள் சமூகம் மீதான அக்கறைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. /// மதுரன் said...

    பெண்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்
    உங்கள் சமூகம் மீதான அக்கறைக்கு பாராட்டுக்கள் ///

    இதை போன்ற சம்பவத்தில் எனது நெருங்கிய நண்பனின் குடும்பமும் நேரிடையாக பாதிக்கப்படிருக்கின்றது. அதனால்தான் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை. நான் செய்யும் இப்பணியில் எத்தனையோ பேர் என்னை உதாசீனப்படுத்தி இருக்கின்றார்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் குறைந்தது உங்களை போன்ற பதிவர்களின் குடும்பங்களில் குறைந்தது ஒரு பத்து பேர் இதை கவனித்து அவர்களை தற்காப்பு செய்து கொள்ளமாட்டார்களா என்ற நப்பாசைதான்.

    ReplyDelete
  11. இப்படியுமா ..சாமி ..கொடுமை கொடுமை

    ReplyDelete
  12. ஒரே புகைப்படமே எல்லா இடத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை பார்க்கும் போது, யாரோ ஒரு வக்கிரம் பிடித்த ஆள் நெட்டில் இருந்து புகைப்படத்தை அனுமதி இல்லாமல் எடுத்து எல்லா இடங்களிலும் போட்டிருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் பெண்கள் சர்வசாதரணமாக தங்கள் புகைப்படங்களை பகிர்கிறார்கள். மிகுந்த கவனம் தேவை!

    ReplyDelete
  13. /// இம்சைஅரசன் பாபு.. said...

    இப்படியுமா ..சாமி ..கொடுமை கொடுமை///
    இதுவெல்லாம் சாதாரண விஷயம், இதைவிட இணையதள குற்றங்கள் எத்தனயோ இருக்கின்றது. அதில் இதுவும் ஒன்று. உங்கள் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  14. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஒரே புகைப்படமே எல்லா இடத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை பார்க்கும் போது, யாரோ ஒரு வக்கிரம் பிடித்த ஆள் நெட்டில் இருந்து புகைப்படத்தை அனுமதி இல்லாமல் எடுத்து எல்லா இடங்களிலும் போட்டிருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் பெண்கள் சர்வசாதரணமாக தங்கள் புகைப்படங்களை பகிர்கிறார்கள். மிகுந்த கவனம் தேவை! ///

    உங்கள் உணர்வுபூர்வமான கருத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் ஒரே புகைப்படம்தான் திரும்ப திரும்ப இடம் பெற்று இருக்கின்றது. மேலும் ஒரே நபர் என்றே வைத்துகொள்வோம்...ஆனால் எத்தனை இடங்களுக்கு எத்தனை நாடுகளுக்கு இது பரவும். ஒவ்வொரு மேட்ரிமோனி பதிவும் ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்தது. அப்படி எனில் அந்தந்த மாநிலத்தில் உள்ள நபர்கள் வக்கிர மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் அதனை பார்ப்பார்கள். அதுதான் வருத்தமாய் இருக்கின்றது. ஒருவேளை அந்த பெண் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அதனை அந்த பெண்ணின் உறவினர்களோ அல்லது எதிர்காலத்தில் அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தார் பார்த்தால் அவள் மற்றும் அவளுடைய குடும்பத்தார் நிலை என்னவாகும்??? தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களின் புகைப்படங்களை எந்த ஒரு இடத்திலும் வெளியிடாதீர்கள்.

    ReplyDelete
  15. பெண்கள் எக்காரணத்தை கொண்டும் போட்டோ போடவே கூடாது. இதை நாம சொன்னால் ஆனாதிக்கம்`னு சொல்லிருவாங்க.. என்ன பண்ண????

    ReplyDelete
  16. /// Mohamed Faaique said... Best Blogger Tipsபெண்கள் எக்காரணத்தை கொண்டும் போட்டோ போடவே கூடாது. இதை நாம சொன்னால் ஆனாதிக்கம்`னு சொல்லிருவாங்க.. என்ன பண்ண???? ///

    இந்த பதிவு ஆணாதிக்கம் என்று வேதாந்தம் பேசும் பெண்களுக்கு அல்ல, நமது நியாயமான கருத்துக்களை உன்னிப்பாய் கவனிக்கும் நமது சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும், நமது பெண் உறவினர்களுக்கு மட்டுமே பகிர்ந்தால் போதுமானது. அவர்கள் அவர்களது பிள்ளைகளை எதிர்காலத்தில் பார்த்து கொள்வார்களே.

    ReplyDelete
  17. I understand the danger of sharing girl's photos in the net. i share this message to my friends and relatives. thanks for ur valuable information.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...