இளவரசன், திவ்யா காதல் ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு....காதல் பறவையில் ஒன்றை கொன்று விட்டோம்...இனிமேல் திவ்யா வின் வாழ்க்கை???
இளவரசன், திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.....அதுவும் பலவிதமான போராட்டத்தோடு...திருமணம் வெற்றி கண்டு எட்டு மாத வாழ்க்கையையும் ருசி கண்டாகி விட்டது.
மகள் வேறு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத தந்தை தற்கொலையும் செய்து கொண்டு விட்டார். தனது காதல் கணவனை விட்டு விலகாத திவ்யா தற்போது இளவரசன் வேண்டாம் என்று சொல்ல இளவரசனின் மரணம் தற்போது நிகழ்ந்து உள்ளது.
இது கொலையா? தற்கொலையா? இதன் விபரம் எல்லாமே திவ்யா விற்கு மட்டுமே தெரியும்!
அவள் வாய் திறந்து உண்மையை சொன்னால் மட்டுமே இளவரசனின் உண்மையான காதலின் அர்த்தம் உலகிற்கு புரியும்?
அவளாகவே விருப்பப்பட்டுத்தான் போராடித்தான் இந்த திருமணம் செய்து கொண்டாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவரை விட்டுப் பிரியாதவள் இன்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தின் படி எனக்கு கணவரோடு வாழ விருப்பமில்லை, அம்மாவோடு வாழ விரும்புகின்றேன் என்று சொல்ல காரணம் என்ன? இடையினில் நடந்தது என்ன?
யார் அவளை அப்படி பேசுமாறு நிர்பந்தித்தது? காதல் என்பது அவ்வளவு பாவமா? இன்று அம்மாவோடு போக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன்னால் தனது கணவனின் வாழ்க்கைக்கு, உயிருக்கு ஆபத்து என்று தெரியவில்லையா அவளுக்கு?
இதே திவ்யா அன்று நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவளை கணவரும் அவரது அம்மாவும் மிக நன்றாக பார்த்துக் கொள்கின்றார்கள் என்று சொன்னவள், அதன் பின்னர் எந்த பிரச்சினையிலும் நான் கணவரை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று அம்மா தனிமையில் இருக்கின்றார்கள், அதனால் நான் அம்மாவோடு வாழப் போகின்றேன் என்று பேசுவதற்கு, அந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதைத்தான் அந்த திவ்யாவின் அம்மாவும் ஆசைப் பட்டார்களா? மகள் விதவையாய் வாழ்வதை எந்த தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அதுவும் இந்த சமுதாயத்தில் நடந்தேறி விட்டது...
இப்போதாவது திவ்யா வாய் திறந்து நடந்தது என்ன என்பதை சொன்னால்தான் இன்னும் பல சாவுகள், சாதி மோதல்கள் நடக்காமல் இருக்கும்.....அவள் காதல் உண்மை என்றால் அவள் வாய் திறப்பது மிக முக்கியம்....
சொல்லப் போனால் அவளது உயிருக்கும் இனி ஆபத்தே...எங்கே அவள் வாய் திறந்தால் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவளையும் அழிக்கத் தயங்க மாட்டார்கள் அந்த சாதி வெறி பிடித்த முதலைகள்....இனி காதல் வேண்டாம் என்று சொல்லவேண்டுமா? அல்லது சாதி பார்த்து காதலியுங்கள் என்று சொல்ல வேண்டுமா? அப்படி சொன்னால் அதற்க்கு பெயர் உண்மையான காதல்தானா?
இரண்டு உயிர்களுக்கு உரிய காதல் பிரச்சினை, இரண்டு குடும்பங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி இரண்டு ஊர்கள், இரண்டு பிரிவு மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தாண்டி இன்று ஒரு உயிரை காவு வாங்கி இருக்கின்றது...இதற்க்கு காரணம் யார்?
விடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்......வினாக்கள் மட்டுமே பல உருவாகின்றன!
கேள்விகள் மட்டுமே எங்களுக்கும் தெரிகின்றது, பதில்கள் நோ யுவர் ஆனர்!
ReplyDeleteஇன்னும் எத்தனை எத்தனை காதல் உயிர்கள் காவு வாங்கப்படப் போகின்றதோ தெரியவில்லையே????
Deleteவிடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்....
ReplyDeleteTRU
சாதி, மத பேதமின்றி ஒற்றுமையோடு விடைகளை தேடுவோமா? தேட விடுவார்களா?
Delete
ReplyDeleteவேலை இல்லை ஆனா மது வேண்டும்.
திருமண வயது இல்லை ஆனா பொண்ணு வேணும்.
பணம் இல்லை ஆனா குடும்பம் நடத்தனும்.
இந்த ஐடியா நல்லா இருக்கே.
பள்ளி கூட மாணவர்களே ,
நன்றாக படித்தால்தான் வேலை கிடைக்கும் .
வேலை கிடைத்தால்தால் பொறுப்பு இருக்கும் ...
பொறுப்பாக பணம் சேர்த்தால் குடும்பம் இருக்கும் ...
குடும்பம் நன்றாக இருந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும் ...
ஆனா இதெல்லாம் எளிதல்ல .... அதுக்கு ...
ஒழுக்கமா இருக்கணும் ...
கட்டுபாடா இருக்கணும் ...
இப்போ ஒரு நல்ல ரூட் கிடைத்து இருக்கு ...
நோ படிப்பு
நோ வேலை
நோ வயசு வித்தியாசம்
நோ பொறுப்பு
எவனும் படிக்க வேணாம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக
இருக்கும் போது மடியும். அது போதும். அதுக்கப்புறம் ..... அதுக்கு பேர் காதல். இங்கே இணையத்தில் இருப்பவர்கள் வேலை
வாங்கி தருவார்கள். இல்லை அவர்கள் போடும் கமெண்ட்ஸ் வயிற்றை நிரப்பும்.
ஒன்லி காதல் ...
இதோ ... பஞ்ச் டயலாக்
பின்னல் சுத்து ...
விடாமல் துரத்து ...
இஸ்துகினு ஓடு ...
Neenga solura ella thakuthium irruntha matum kalappu thirumanatha aatharipingala..?
Deleteகலப்பு திருமணம் செஞ்சாத்தான் தொண்டையில சோறு இறங்குமா ?
Deleteசிறப்பான தகுதியோட திருமணம் செய்யும் போது எதுவுமே குறுக்கே வராது ... சாதி உள்பட ...
மன்னிக்கவும், காதல் ஒன்றும் பாவமல்ல...காதல் என்பது புனிதமான விஷயம். உண்மையாய் காதலித்தவர்களுக்கே அதன் மகிமை புரியும்....நீங்கள் சொல்லும் போலித்தனமான காதலுக்கு நாங்கள் ஆதரவாளர்கள் அல்ல...
Deleteஎன்று இந்த சமுதாயம் கலப்பு திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றதோ, அன்றுதான் நிசமான காதல் செயிக்கும்..... சில சமயங்களில் காதலை தவறாய் பயன்படுத்தும் ஜோடிகளுக்காக நாங்கள் பரிந்துரைக்கவில்லை...உண்மையான காதல் என்றுமே மகத்தானதுதான்...
வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிகொண்டிருப்பனுக்கு பெற்ற பாவத்திற்கு அவனுக்குதான் பெற்றவர்கள் சோறு போடுவார்கள், இவருக்கு 18 வயதிலே காதல் வந்த பாவத்திற்கு கூட்டிவந்தவளுக்கும் சேர்த்தா சோறு போடுவார்கள். முதலில் சொந்த காலில் நிற்கட்டும் அதற்கு பிறகு இவர்கள் புனிதமான காதல், புனிதமில்லாத காதல்,கலப்பட காதல், கலப்படமில்லாத காதல் ஏதாவது பண்ணி ஓழியட்டும்
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி தோழரே!
Deleteஎனது பதிவினை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கும், அதற்க்கு ஆதரவளித்த மற்ற பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றி....
வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிகொண்டிருப்பனுக்கு பெற்ற பாவத்திற்கு அவனுக்குதான் பெற்றவர்கள் சோறு போடுவார்கள், இவருக்கு 18 வயதிலே காதல் வந்த பாவத்திற்கு கூட்டிவந்தவளுக்கும் சேர்த்தா சோறு போடுவார்கள். முதலில் சொந்த காலில் நிற்கட்டும் அதற்கு பிறகு இவர்கள் புனிதமான காதல், புனிதமில்லாத காதல்,கலப்பட காதல், கலப்படமில்லாத காதல் ஏதாவது பண்ணி ஓழியட்டும்
ReplyDeleteஅது அவர்களது குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினை தோழரே, அதற்காக ஒருவரை போட்டுத் தள்ளுவது அல்லது தற்கொலைக்கு தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்.....அடுத்தவன் குடும்பத்திற்கு அட்வைஸ் பண்ணுவதற்கு நிறைய பேர் கிளம்பி வந்துவிடுவார்கள்.....
Deleteஇதில் சாதி எங்கே இருந்து வந்தது? கட்சி எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை...அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிற்கு பிடித்து அவனோடு 8 மாதம் வாழ்க்கையும் நடத்திய பிறகு இந்த சோக சம்பவம் நடந்து இருக்கின்றது.....
பதிலுக்கு நன்றி நண்பரே! அது அவர்கள் குடும்ப பிரச்சினையாக இருந்தால் அது வீதி வரைக்கும் வந்து இருக்ககூடாது. நான் இங்கு யாருக்கும் அறிவுரை வழங்க வரவில்லை. என் கருத்தைதான் கூறினேன்.
Deleteமேலும் உங்கள் பாணியில் தெய்வீக மற்றும் புனிதமான காதலின் ஆயுட்காலம் வெறும் 8 மதங்கள்தானா? காதலில் அவ்வளவு உறுதியான அந்த பெண் எனக்கு தாயும் வேண்டாம், தம்பியும் வேண்டாம் , சாதியும் வேண்டாம் என உறுதியாக இருந்திருந்தால் இந்த இழப்பு நேர்திருக்குமா? இதுதான் பிஞ்சிலே பழுத்த காதல். ஏனெவே உருப்படாத காதலுக்கெல்லாம் வக்காலத்து வாங்கவேண்டாம்.
- குமார்