காட்சி 1
பேசன்ட் - டாக்டர், ஒன்னு இருக்கு ஆனா இல்லை....
டாக்டர் - என்ன சார் குழப்புறீங்க, இருக்கிறது எப்படி இல்லாம போகும்?
பேசன்ட் - அதான் டாக்டர் எனக்கும் புரியலை?
டாக்டர் - கொஞ்சம் விளக்கமா சொல்லு, என்ன உன் பிராப்ளம்?
பேசன்ட் - டாக்டர் என் ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைச்சி வாங்குன இடம், இப்போ இருக்கு,
டாக்டர் - அப்புறம் என்ன பிரச்சினை?
பேசன்ட் - இப்போ இருக்கு, ஆனா இல்லை....
பேசன்ட் - பொறுமையா கேளுங்க டாக்டர், அந்த இடம் இருக்கு, ஆனா என்கிட்டே இல்லை..
டாக்டர் - உங்க நிலைமை புரியுது, ஆனா நான் டாக்டர், இப்போதான் இந்த கட்டிடம் வாங்கி தொழிலை தொடங்கி இருக்கேன், நான் என்ன செய்ய முடியும்? நீங்க நல்ல லாயர்கிட்டே போங்க...
பேசன்ட் - நான் வாங்குன அந்த இடத்தோட பத்திரம், பத்திரமா இருக்கு, ஆனா அந்த இடம் இப்போ என்கிட்டே இல்லை, நீங்க தொழில் தொடங்கி உக்காந்திருக்கீங்க, அதைதான் சொன்னேன், உங்ககிட்டே இருக்கு, ஆனா
என்கிட்டே இல்லேன்னு...
டாக்டர் - ?????!!!!!??????
காட்சி - 2
வெளிநாடு வாழ் இந்தியர் - ஏன் பா வாட்ச்மேன், ஆறு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு இடம் வாங்கி போட்டேனே பா?, இப்போ ஒரு இடம்தான் இருக்கு, இன்னொரு நிலம் எங்கே?
வாட்ச்மேன் - இல்லே முதலாளி, அந்த ஒரு இடம் தான் இது......
வெளிநாடு வாழ் இந்தியர் - உன்கிட்டே நான் போறப்ப என்ன சொன்னேன்?
வாட்ச்மேன் - இடத்தை பார்த்துக்க சொன்னீங்க,
வெளிநாடு வாழ் இந்தியர் - எத்தனை இடத்தை பார்த்துக்க சொன்னேன்?
வாட்ச்மேன் - ரெண்டு இடம் பார்த்துக்க சொன்னீங்க,
வெளிநாடு வாழ் இந்தியர் - குட், நான் பார்த்துக்க சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு இங்கே இருக்கு. அந்த ரெண்டாவது இடம் எங்கே இருக்கு?
வாட்ச்மேன் - அந்த ரெண்டாவது இடம்தானே இது!!!
வெளிநாடு வாழ் இந்தியர் - ???? !!!! ?????
காட்சி - 3
விவசாயி - அய்யா, எனக்கு ஒரு புகார் கொடுக்கணும்,
போலிஸ் - சொல்லுய்யா, என்ன கம்ப்ளைன்ட்?
விவசாயி - நேத்து நைட் நான் என் வீட்டு தோட்டத்துல தூங்கிகிட்டு இருந்தேன், இன்னிக்கு காலையிலே வேற ஒருத்தன் அது அவனோட இடம்னு சொல்லி என்னை வீட்டை விட்டு நடு ரோட்ல துரத்திட்டான் அய்யா, என் கட்டில், கோவணம்னு உட்பட எல்லாத்தையும் உருவிட்டு போயிட்டான் அய்யா,
போலிஸ் - நீ ஏன்யா தோட்டத்துல தூங்குற?
விவசாயி - புழுக்கமா இருக்கேன்னு தோட்டத்துல தூங்கினேன் அய்யா, இப்போ என்ன அய்யா பண்றது?
போலிஸ் - ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திட்டு போ?
விவசாயி - எப்படி எழுதணும் அய்யா, என்ன எழுதணும்?
போலிஸ் - இது வேறயா? சரி எழுதிக்கோ "வணக்கத்திற்குரிய அய்யா, நேத்து நைட் நான் தூங்கிகிட்டு இருந்தப்ப யாரோ என்னோட கட்டிலை தூக்கிட்டு போயிட்டாங்க, நான் கட்டி இருந்த கோவணத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க, கட்டிலோட அங்க அடையாளம், 6 அடி நீளம், 3 அடி அகலம், மஞ்ச கலர்ல இருக்கும், அதே மாதிரி என்னோட கோவணம் பட்டு துணியிலே இருக்கும் னு" எழுதி கொடுத்திட்டு போ, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்றோம்,
விவசாயி - அய்யா, என்னோட இடம் என்ன அய்யா ஆச்சு?
போலிஸ் - அதான் சொல்றோம்ல, கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்ரோம்னு, அப்புறம் திருப்பி திருப்பி தொந்திரவு பண்ண கூடாது, போ, போ!
விவசாயி - ????? !!! ????
காட்சி - 4
ஏழை பெண் : அய்யா, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியா?
கமிசனர் : எஸ் கமிசனர் ஸ்பீகிங், என்னம்மா வேணும் உங்களுக்கு?
ஏழை பெண் : அய்யா, குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து 450 சதுர அடில ஒரு வீடு கட்டி இருந்தேன் அய்யா?
கமிசனர் : சரிம்மா, இப்போ ஏதாவது பிரச்சினையா மா?
ஏழை பெண் : ஆமாய்யா, நேத்து பத்து பதினைஞ்சு பேரு வீட்டுக்குள்ள வந்து இது அவங்க இடம், உடனே காலி பண்ணுங்க னு சொல்றாங்கய்யா?
கமிசனர் : நீங்க எந்த ஏரியா மா?
ஏழை பெண் : அய்யா நான் மதுரை பக்கத்துல இருக்கிற ஒரு சித்தூருங்கய்யா?
கமிசனர் : என்னது சித்தூரா? ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, அவங்க எந்த ஏரியா னு தெரிஞ்சிருந்தா உடனே ஆக்சன் எடுத்திருப்பேன்,
(சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்)
கமிசனர் - ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க,
ஏழை பெண் : அய்யா, நான்தான் அய்யா, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 450 சதுர அடி இடம் பத்தி பேசினேனே? நான் மதுரை பக்கத்திலே இருக்கிற சின்ன ஊருலே இருந்து பேசுறேன் அய்யா,
கமிசனர் : அப்போ சித்தூருனு சொன்னீங்களே அம்மா,
ஏழை பெண் : சின்ன ஊருங்கிரத, சித்தூருனு வாய் தவறி சொல்லிட்டேன் அய்யா...
கமிசனர் : உங்க ஏரியா லே இருக்கிற போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுங்கம்மா, நான் விசாரிக்க சொல்றேன்...
ஏழை பெண் : அய்யா, ரெண்டு நாளா போலீஸ் ஸ்டேசனையே காணோமுன்னு போலீஸ்காரங்க எல்லோரும் தேடிகிட்டு இருக்காங்கய்யா, அதுனாலதான் நான் உங்ககிட்டே சொன்னேன்...
கமிசனர் : என்னம்மா உளர்றே???!!!???
ஏழை பெண் : சத்தியமா சொல்றேன் அய்யா, என்னோட நிலத்து பக்கத்துலே இருந்த போலீஸ் ஸ்டேசனையும் சேர்த்து லவட்டிகிட்டு போயிட்டானுங்க அய்யா....
கமிசனர் : ???? ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, (சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்) ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க.........
********
அழகிரிபேரம்
எது நடந்ததோ (நிலம் அபகரிப்பு) அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ (தயாநிதி மாறன் ராஜினாமா) அதுவும் நன்றாகவே நடக்கிறது...
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக புலம்புகின்றாய்?
எது (வீட்டு, தரிசு, விவசாய நிலங்கள்) இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது
எதை நீ கொண்டுவந்தாய் அதை என்னிடம் இழப்பதற்கு
எது இதுவரை நன்றாக நடந்ததோ, அது இனியும் நன்றாகவே நடக்கும்...
எது இன்று உன்னுடையதோ (வீடு, நிலம், வயல்) அது நாளை என்னுடையது, நாளை மறுநாள் என் மகனுடையது...
எது நடந்ததோ (நிலம் அபகரிப்பு) அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ (தயாநிதி மாறன் ராஜினாமா) அதுவும் நன்றாகவே நடக்கிறது...
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக புலம்புகின்றாய்?
எது (வீட்டு, தரிசு, விவசாய நிலங்கள்) இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது
எதை நீ கொண்டுவந்தாய் அதை என்னிடம் இழப்பதற்கு
எது இதுவரை நன்றாக நடந்ததோ, அது இனியும் நன்றாகவே நடக்கும்...
எது இன்று உன்னுடையதோ (வீடு, நிலம், வயல்) அது நாளை என்னுடையது, நாளை மறுநாள் என் மகனுடையது...
பழைய மேட்டர்
ReplyDeleteஇருக்கு ஆனா இல்ல ... நல்லா இருக்கு
ReplyDelete///மாய உலகம் said...
ReplyDeleteஇருக்கு ஆனா இல்ல ... நல்லா இருக்கு///
நன்றி நண்பரே, இருக்கிறது நம்மகிட்டே இல்லை, அதுதான் நிசம்.....