இந்தியாவில் இருக்கும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு....
ஆனால் தற்போதெல்லாம் மத்தியில் இருக்கும் ஆட்சி மற்றும் ஊடகங்களின் கருத்துக்கள் மற்றும் செய்திகளில் எப்போதுமே தமிழ்நாட்டினை தனியாக பிரித்தே சொல்கின்றார்கள்....
அதற்கு கராணம் என்னவென்று யோசிக்க வேண்டியதாக இருக்கின்றது....
உதாரணமாக மும்பையில் இருக்கும் மீனவர்களோ அல்லது கேரளாவில் இருக்கும் மீனவர்களோ அல்லது மேற்கு வங்கத்தில் இருக்கும் மீனவர்களோ அல்லது விசாகப்பட்டனத்தில் இருக்கும் மீனவர்களோ ஏதாவது பிரச்சினைகளில் தவிக்கும் போது அல்லது சிக்கி கொள்ளும்போது எல்லோரும் சொல்வது இந்திய மீனவர்கள் என்றே சொல்கின்றார்கள்....
ஆனால் அதுவே ராமேஸ்வரத்து மீனவர்களோ அல்லது சென்னையில் இருக்கும் மீனவர்களோ எதாவது பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும் போது மத்திய அரசும் சரி, பத்திரிகையும் சரி, அவர்களை தமிழக மீனவர்கள் என்று தனியாக பிரித்து சொல்ல காரணம் என்ன? நாங்கள் இந்திய மீனவர்கள் இல்லையா?
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் அல்லது நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் தமிழனுக்கு எப்போதுமே நீதியும், நியாயமும் சரியாக கிடைக்க படுவதில்லை...இதற்க்கு என்ன காரணம்?
அனைத்து ஊடகங்களுமே தமிழகத்தை தனியாகவே பிரித்து அடையாளம் காட்டப்படுவதன் நோக்கம் என்ன?
உண்மைதான் இந்தியாவில் இருந்து தமிழகம் தனிமைப்படுத்த படுவது கொறஞ்சம் வேதனைதான்...
ReplyDeleteஇனி தமிழக மீனவர்கள் என்பதற்க்கு பதிலாக சர்வதேச பிரச்சனை வரும் போது இந்திய மீனவர்கள் என்று அழைக்க வேண்டும்...