பங்காளிங்க..

Friday, August 19, 2011

மடியில் தலைவைத்து

















வயல்வெளி
பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

















சிறு
அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

















சிறிதாய்த்
தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?









மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?










சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

- மின்சார சிவா

3 comments:

  1. சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா!


    அருமை அருமை
    சூழ் நிலைக் கைதிபோல்
    வாழ்க்கைப் போராட்டத்தில்
    கனவுகளைத் தொலைத்தவர்களின்
    மன நிலையை மிகச் சரியாக
    விளக்கிப் போகும் பதிவு அருமை
    படங்களுடன் பதிவும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
    சிறகு முளைத்தால் பறக்க வேண்டியது தான்.
    வயிற்றுக்காக, நல்ல பிழைப்புக்காக நாம் கொடுக்கும் விலைகள் இவை.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...