சென்னை சிட்டிக்குள்ள தரங்கெட்ட பஸ்சுங்க நிறைய ஓடுது, அதுக்கு பேரு என்ன தெரியுமா? "தாழ் தள சொகுசு பேருந்து", அதை நம்ம ஸ்டாலின் மாமா, நேரு மாமா (அட இவரு திருச்சி காரரூ) எல்லோரும் சேர்ந்து திறந்து விட்டாங்க...சாதாரண பஸ் சை விட இந்த பஸ் ல ஒரு வசதியும் கிடையாது, உக்கார முடியாது, நிக்க முடியாது, சீட் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கும், கண்டக்டருக்கு டிரைவர் தெரிய மாட்டாரு, டிரைவருக்கு கண்டக்டர் தெரிய மாட்டாரு, குத்து மதிப்பாத்தான் ஓட்டனும். சாதாரண பஸ்ல 120 போலாமுனா இதுல 200 பேரு போவானுங்க...பஸ் சை விட்டு இறங்குரப்ப கண்டக்டருக்கு கலக்சன் இருக்கோ இல்லையோ திருடன், திருடிகளுக்கும், பஸ் ல பொண்ணுகளை உரசுற பொறுக்கி களுக்கும் நல்ல கலக்சன் , விருந்து எல்லாமுமே...உள்ளே நிக்குறவன் எவனும் மூச்சு விட முடியாது, மவனே தற்கொலை பண்ணனும்னு நினைக்கிறவன் இதுல ஏறி சந்தோசமா போகலாம். இந்த வசதி எல்லாம் கொடுக்கிறதால, சாதாரண பஸ் சை விட இதுல இரண்டு மடங்கு கட்டணம் ஜாஸ்தி. இதுக்கு கருணாநிதி தாத்தா என்ன சொல்றாருணா, மக்களுக்கு வாங்குற சக்தி அதிகமாயிடுச்சி னு சொல்றாரு. ஆனா மேட்டரு என்னானா, ஏறினவன் எவனும் டிக்கெட் எடுக்காம இறங்க முடியாது, கதவை வேற பூட்டிடுவானுங்க...மானம் போயிடுமே னு சொல்லி பயந்து போய் காலையிலே டிக்கெட் எடுத்திட்டு சாயங்காலம் சாதாரண பஸ் சுக்கு 3 மணி நேரம் உக்காந்திருப்பாங்க நம்ம "வாங்குற சக்தி" கொண்ட மக்கள்.
நான் என்ன சொல்றேனா இந்த ஸ்டாலின் மாமா, நேரு மாமா வை எல்லாம் ஒரு நாள் இந்த மாதிரி கூட்டமான பஸ் சுல ஏத்தி விட்டு ஒரு ஒரு மணி நேரம் சிட்டிக்குள்ள சுத்த விட்டு இறக்கணும், அப்போ தெரியும் பொதுமக்கள் பிரச்சினை.
எனக்கு என்ன சந்தேகம்னா பொதுமக்கள் உட்காரும் சீட்டு கிழிஞ்சு உடைஞ்சி போயிருந்தாலும் ஏத்துக்கலாம்...ஆனா இந்த டிரைவரு உட்காருவாரே அந்த சீட்டு கூட கேவலமா உடைஞ்சி போயிருக்கு, அதுக்கு செங்கல் வேற சீட்டுக்கு அடியிலே முட்டு குடுத்து உட்காந்திருக்காங்க. எனக்கு தெரிஞ்சி இந்த பஸ்ல ஒரே ஒரு வசதி படிக்கட்டு தனிஞ்சி இருக்கும். அதை தவிர வேற எந்த வசதியும் இந்த வண்டியிலே கிடையாது. சாதாரண வண்டியை விட இந்த வண்டி ஈசியா டேமேஜ் ஆகுது. லைட்டா ஒரு சைக்கிள் தட்டினா கூட நெலிஞ்சு போகுது. காசு கூட வாங்குரோமே பஸ் ஸ்டாப்ல மட்டும் நிப்பாட்டி போவோம்னு கிடையாது, கை காட்டுற இடத்துல எல்லாம் நிப்பாட்டுரானுங்க. (படத்துல சீட்டை மட்டும் பாருங்க)
சாதா பஸ் சு போற அதே தூரம்தான் இவனுங்களும் போறாங்க, சாதா பஸ்சுல இருக்கிற இருக்கை வசதி கூட இதிலே கிடையாது..ஆனா ரூவாய் மட்டும் இரண்டு மடங்கு கூடவாம்..யார் கேக்குறது?
ஜெயலலிதா ஆட்சியில் 5600 பேருந்துகள்தான் ஓடிச்சி, ஆனால் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதுமே தமிழகம் முழுவதும் 15000 பேருந்துகள் இயக்கி இருக்கின்றோம் என்று சொன்ன கே.என். நேருவே? ஆட்சி முடிவினில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் ஓடுகின்றது என்று சொன்னீர்களே, 5600 பேருந்துகள் இயக்கி நஷ்டத்தில் இல்லாத போக்குவரத்து துறை, 15000 பேருந்துகளை இயக்கி நஷ்டபடுத்தி இருக்கின்றது எனில் அதற்க்கு யார் பொறுப்போ?
படத்துல பஸ் எவ்வளவு கூட்டமா போகுதுன்னு பாருங்க, இப்படி போச்சுனா நஷ்டம் வராம என்ன செய்யும்? அதை கூட தட்டி கேட்க துப்பில்லை உங்களுக்க்கு?
சென்னைக்குள்ள இருக்கிற பிளாக்கர் நண்பர்கள் இந்த கண்டிசன் வண்டிய பார்த்திருப்பீங்க னு நினைக்கிறேன்.
எங்க ஊரு மீன்பாடி வண்டி தோத்து போயிடும் சாமியோவ்....
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...