டெல்லியில் மட்டுமா பாலியல் பலாத்காரம் நடக்குது....தமிழ்நாட்டிலும்தான்...உணர்வுபூர்வ
தலைவர்கள் ஈழத்தில் நடந்த பாலியல் குற்றத்தைப் பகீரங்கமாய் எடுத்துரைத்து
கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு
யாருமே அந்த அளவிற்கு குரல் கொடுப்பதில்லையே....அது ஏன் என்றும் புரியவில்லை..
ஒரு தவறு என்று நடக்கும் போது டெல்லியில் நடந்தால்தான் அந்த பிரச்சினை பூதாகரமாக்கப் படுகின்றது. காரணம் கேட்டால் இந்தியாவின் தலைநகரத்தில் இந்த பிரச்சினை நடக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு முதலைமைச்சருக்கும் அவரவர் மாநிலம் முக்கியமானதே!
அவர்கள் மட்டும்தான் பெண்களா? குழந்தைகளா? நாம் பெற்றதெல்லாம் என்ன? ஆட்டு மந்தைகளா? நமது சகோதரிகள், குழந்தைகளும்தானே பாதிக்கப்படுகின்றார்கள்...அது ஏன் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு பெண் இறந்த பிறகு அவளது போட்டோவிற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மாலை போடுவதும், ஆறுதல் சொல்வதும் என்ன பிரயோசனம் ? டெல்லியில் நடந்த மருத்துவ மாணவி பாலியல் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சினை முடிவு பெறவில்லை...அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்....டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொடுமை நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் புனிதா கற்பழித்துக் கொல்லப் பட்டாள். அது ஏன் பத்திரிகை கண்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை?
ஒரு எழுத்தாளர், ஆளும்கட்சித் தலைவர் , எதிர்கட்சித் தலைவர் ஒருவர், மற்றும் சமூகநல ஆர்வலர். இவர்களை வைத்து விவாதம் நடத்தி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். பரபரப்பாய் போகும் விவாதத்தில் ஒரு சிறிய விளம்பர இடைவேளை..என்று சொல்லிவிட்டு ஒருவன் ஆக்ஸ் பெர்பியூம் போட்டதும் ஐந்தாறு பெண்கள் அந்த ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு கேவலமான விளம்பரம்...இப்படி பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்களைப் போட்டுவிட்டு மீண்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிய விவாதம் தொடங்குகின்றது, எனது 6 வயது மகள் கேட்கின்றாள், ஏன் அவன் பின்னாடி எல்லோரும் ஓடுறாங்க? நான் என்ன பதில் சொல்லவேண்டும் அவளுக்கு, எனக்குத் தெரியவில்லை! ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொள்கின்றார்கள். எழுத்தாளர் மற்றும் சமூக நல ஆர்வலரை அதிகமாய் பேச விடுவதே கிடையாது.
இதுவா இப்போது முக்கியம்.? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை எப்படி காப்பாற்றுவது...அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பன போன்ற விவாதங்கள் மற்றும் அதற்க்கு முடிவுகள் கொடுத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்குமே!
காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது என்று குறைகூறும் பத்திரிகைகள் மட்டும் என்ன ஒழுங்கா? தூத்துக்குடி மாணவி பாலியல் பலாத்காரம், திருப்பூர் மாணவி பாலியல் பலாத்காரத்தை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது?
டெல்லி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது...அந்த முக்கியத்துவம் ஏன் நம் சகோதரி, மகள் , நம் தமிழச்சி புனிதாவிர்க்கு வழங்கப் படவில்லை...அவள் ஏழைப் பெண் என்பதலா?
என்ன செய்யலாம் ?
காவல்துறையில் தனிக்குழு அமைத்து பெண்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்...
எப்படி செய்வது?
அந்தந்த பகுதி காவல்துறையினர் அருகினில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு காணொளிகள் மட்டும் குறும்படங்களை வெளியிட்டு அந்த பெண் குழந்தைகளுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு தனித் தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமாக்குதல் வேண்டும்.
என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?
துண்டுப் பிரசூரங்கள் சுத்த ஏமாற்று வேலை...இந்த காலத்தில் துண்டுப் பிரசூரங்களை யாருமே முழுதாய் படிப்பதில்லை...பாதி படிக்கும் போதே தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது கிழித்து போட்டு விடுவார்கள். அதுவே பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வழிபாடு தொடங்குவதற்கு முன் பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன? எப்படி பெண் பிள்ளைகள், பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்..ஆண் பிள்ளைகள் என்னென்ன செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்னென தண்டனை என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் மனதில் நன்கு பதியும்! இது சாத்தியமற்ற செயல் கிடையாது..இதை நிச்சயமாக செய்யலாம்..
ஒரு நாளைக்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையை அலைக்கழிப்பதை விட உருப்படியாய் இந்த விசயங்களுக்கு செலவிடலாமே! இதனை சொல்வதால் எந்த விதத்திலும் இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம் கெட்டழியாது என்றே நம்புகின்றேன்...
ஆண் , பெண் சமம் என்று போதிக்கும் மகளிர் அமைப்புகள் பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய கற்பினை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மிக்க நல்லது. அறிமுக மில்லாத நபர் அல்லது அப்பாவை த் தவிர வேறு ஒரு ஆண் நெருங்கினால், உடலைச் சீண்டினால் எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஒரு காணொளி மூலம் சொல்லிக் கொடுக்கலாம். உடனே அப்பா கூட தவறாய் அணுகி விட்டார் என்று பதிவு செய்வார்கள். அப்படி அப்பாக்கள் தப்பாய் நெருங்குவது நூற்றில் ஒரு சதவிகிதமே...
எல்லாவற்றையும் விட, செல் போன் மற்றும் மெமரி கார்ட் விற்பனையில் ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா செல் விற்பனையில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நாம் பல சைபர் குற்றங்களை தடுக்க முடியும், குறைந்த பட்சம் குறைக்க முடியும்!
தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள்...பெருச்சாளியாட, குரங்காட எல்லாம் சற்று புறந்தள்ளிவிட்டு தமிழக மக்களின் தலையாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்...இதுவரை பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பது உலகிற்கு தெரிய வேண்டும்...மருத்துவ மாணவி நிற்பயாவிர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து விட்டு இப்போது ஐபிஎல் மேட்சில் பிசியாகி விட்டார்கள் என்பதே உண்மை. ஐபிஎல் முடிந்ததும் மீண்டும் பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்புகின்றோம். முதலில் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்..
நாங்கள் காசு கொடுத்து வாங்கும் பேப்பர்ல கண்ட, கண்ட கபோதிகளோட பிறந்த நாள் வாழ்த்துப் படம் பாதிப் பக்கத்துக்கு வருது...உனக்குப் பிறந்த நாள் னா நீ காசு கொடுத்து தனியா ஒரு பேப்பர் போடு...பெரிய பெரிய தலைவர்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோசம்...நாங்க தெரிஞ்சிக்கிறோம்....நாட்டு நடப்பு தெரியரதுக்குத் தான் பேப்பர்...அதுல பிறந்த நாள், சினிமா நடிகை படம் எல்லாம் எங்களுக்கு எதுக்கு? அதைத் தவிர வேற செய்தியே உங்களுக்கு கிடைக்கலியா?
கடுமையா மின்வெட்டு இருக்கு...ஆனா பெரும்பாலான தெருவுல, காலையிலே 10 மணிக்கு வரைக்கும் லைட்டு எரியுது....குடிநீர் குழாயிலே கக்கூஸ் தண்ணி வருது...ஊருக்குள்ளே கடுமையா போக்குவரத்து நெரிசல் இருக்கு....பள்ளி மாணவ, மாணவிங்க இலவச பஸ் பாஸ் வச்சிருக்கிறதால பஸ் ஸ்டாப்புல ஒரு பஸ்சும் நிக்க மாட்டேங்குது...இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கே, அதையெல்லாம் போடுங்களேன்...போக்குவரத்து துறை யிலே நடக்கிற பிரச்சினையை எழுதுங்க..
இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தா ங்கிறது எங்களுக்கு முக்கியமில்லை.....ஆனா அதைப் போட்டுத்தான் நீங்க கல்லா கட்டுறீங்க...நடிகை அஞ்சலியாம்...ஒரு பத்து நாளைக்கு பேப்பரு நல்லா சேல்ஸ் ஆகியிருக்கும்....கடைசியிலே அது என்ன ஆச்சு? இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா? எத்தனை குடும்பம் டாஸ்மாக்குல தாலியை அறுத்திட்டு உக்காந்திருக்கு, அதைப் பத்தி செய்தி போடுங்களேன்....குடிச்சா எப்படி குடல் வெந்து போகும்னு படம் போட்டுக் காம்பிங்களேன்....நாட்டை திருத்துறதுக்கு பத்திரிகை நடத்துன காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு! நேர்மையா இருக்கிற காவல்துறை அதிகாரிய பத்தி போடுங்க...சாதனை செஞ்ச அரசு மருத்துவரைப் பற்றி முதல் பக்கத்துல போடுங்களேன்...அரசு அதிகாரிய பத்தி போடுங்களேன்...மக்களும் தெரிஞ்சிக்குவான்களே...20 ரூவாய் லஞ்சம் வாங்குனத பேப்பருல போடுறீங்க...200 கோடி லஞ்சம் வாங்கினவங்கிட்டே போயி பிரஸ் மீட்டுக்கு பெர்மிசன் கேட்டுகிட்டு இருக்கீங்க...
பாலியல் குற்றம் செஞ்சவனுக்கு வாதாடுறதுக்கு ஒரு வக்கீல் கூட வரக் கூடாது....இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது...அதை தடுக்க பத்திரிகை துறை முன்வரனும்....தமிழக கலாச்சாரம் டாஸ்மாக் குல தடம் புரண்டு தடுமாறிகிட்டு இருக்கு...இது எல்லாம் பத்திரிகை காரங்களுக்கு தெரியலையா?
கற்பழிக்கப்பட்ட பெண்ணோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு படம் எடுக்கிறீங்களே..கற்பழிச்சவனோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு பேப்பருல போடுங்களேன்...அப்போதான் தண்டனை குறையும்...பாதி வழக்குல கற்பழிச்சவன் முகத்தை மூடிக்கிட்டு கூட்டிக் கிட்டு போறாங்க...இது கற்பழிச்சவன் அப்பா, இது கற்பழிச்சவன் அம்மா இது அக்கா, இது அண்ணன், னு பேப்பருல போட்டாத்தான் அவனுங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க...எல்லாவத்தையும் விட இவர்தான் கற்பழிச்சவனுக்கு ஆதரவா வாதாடப் போற வழக்கறிஞர் நு காம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்..!
அதை எல்லாம் செய்வாங்களா? நம்ம பத்திரிகை நண்பர்கள்.....!
Excellent article Mr.Siva! Selvin, Tirupattur
ReplyDeleteநன்றி திரு செல்வின் அவர்களே, வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
Deletenataimuraikku saathiyama vithimuraikalthaan,
ReplyDeleteவருகைக்கும், புரிதலுக்கும் மனமார்ந்த நன்றி திரு. அசோகர் அவர்களே....
Deleteஅதிலே அவர்களுக்கு அப்பிடி என்னதான் ஆர்வமோ எனக்கு இன்னமும் புரியவில்லை...!
ReplyDeleteஅவர்களுக்கே இன்றைய உலகம் புரிவதில்லை...அதனால்தான் சினிமா செய்திகளையும், வீணான விளம்பரங்களையும் போட்டு வித்தை காட்டுகின்றார்கள்...
Deleteஆஹா..கட்சி 'பாரா' இருக்கே...நெத்தி அடி.
ReplyDeleteஆஹா..கடைசி பாரா இருக்கே..நெத்தி அடி
ReplyDeleteநன்றி தோழரே!
Deleteசரியான சூடு போட்டீர்கள் . நன்றி
ReplyDeleteஎத்தனை வாட்டி சூடு போட்டாலும், அவங்க சினிமா, ஆபாச விளம்பர படம் போட்டு துடைச்சிகிட்டு போயிடுவாங்க...
Deleteசுத்தமான சூடு சொரனை உள்ள தமிழனின் குரல் .. மானங்கெட்ட வர்கள் பதில் சொல்லும் காலம் வரும்
ReplyDeleteமானங்கெட்டவர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்...அப்புறம் எப்படி பதில் வரும், தோழரே?
DeleteExcellant articles. keep it up.. itha pola pathivugala podunga ellorum. ellorukum nanmayagum, athe neram
ReplyDeleteawarness erpadavaum ethuva irukum. congrats. by karunakaran
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...நிச்சயமாக சமூக நலனுடைய கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவேன்...
Delete