பாமக தன் இன மக்களுக்காக தோன்றிய வெட்ட வெளிச்சமான சாதி கட்சி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது,
இவர்களோடு தேர்தல் நேரத்தில் மட்டும் ஜால்ரா போட்டுக் கொண்டு திமுகவும் அதிமுகவும் இணைத்துக் கொண்டது...அது திமுக, மற்றும் அதிமுக வின் சாமர்த்தியம்....
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது அந்த குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு அவர்களுக்கு உதவுவது போல் ஒரு மாயையை உருவாக்கி அவர்களோடு கூட்டணியை பெற்று வாக்குகளையும் பெற்றுக் கொண்டு தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களுக்குள் கூட்டணியில் இருந்து தானாகவே விலகச் செய்துவிடுவார்கள்.
ஆனால் கடந்த தேர்தலில் தான் யாரோடும் கூட்டு இல்லை, அதிமுக, திமுக இரண்டுமே மக்களை ஏமாற்றும் கட்சி என்று அறிவித்து கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி என்று அறிவித்து இருந்தார் அதன் நிறுவனர்.
இதற்க்கு இடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வோ ஒரு படி மேலாக சென்று மருத்துவர் ராமதாசுக்கு பெரியார் விருது, அம்பேத்கார் விருது என்றெல்லாம் அறிவித்து சிறப்பு செய்தார். ஆனால் பிரச்சினை எப்படி, எப்போது உருவானது என்று தெரியவில்லை....திடீரென்று இரண்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பழிபோட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எங்கே எப்படி இந்த பிரச்சினை என்று தெரியவில்லை....
சாதி கணக்கெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி ஒருபக்கம்சொல்லி விட்டு சென்றாலும் இன்னமும் நாம் சாதி அடிப்படையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே அதிர்ச்சியான வேதனையான நிதர்சன உண்மை.....
சென்னையில் பல பகுதிகளில் இன்னமும் சாதி அடிப்படையில்தான் குழுவாய் வசித்து வருகின்றார்கள். இதை நான் சொல்லவில்லை, விஜய் தொலைக்காட்சியில் நீயா?நானா நிகழ்ச்சியில் கோபிநாத் தெரிவித்த கருத்து இது...
இன்றும் வீடு வாடகைக்கு கொடுக்கும் பல வீட்டு உரிமையாளர்கள் வருகின்றவர்கள் என்ன சாதி என்பதை நாசூக்காய் கேட்டு கொடுக்கும் சம்பிரதாயம் அரங்கேறி வருகின்றது....
அதனால் சாதி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாசு சொன்னதில் அர்த்தம் இருக்கின்றது...அடுத்தது தமிழில் பெயர்பலகைகள் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்..இதுவும் அவசியமான ஒன்றே....மும்பை போன்ற மற்ற மாநகரங்களுக்கு செல்லும்போது உங்களால் ஆங்கில மொழியைக் கூட பெயர்பலகைகளில் பார்க்க முடியாது...அனைத்துமே அவரவர் தாய்மொழியினில் மட்டுமே இருக்கும்...மீறி வைத்தால் அவர்கள் அந்த மாநில பெருந்தலைகளிடம் அடிபட்டு சாவார்கள்..ஆனால் சென்னையில் இன்றும் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாள பெயர்பலகைகளை நாம் பார்க்கலாம்...ஆனால் தமிழில் பெயர்பலகை வைக்க அவன் கூச்சப் படுகின்றான். அப்படிப் பட்ட இடங்களில் சற்று கடுமையாக கையாளுவது முக்கியம்தான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
மூன்றாவது மதுவிலக்கை அமல்படுத்த கோரி ராமதாசு எடுத்த போராட்டம்....இதில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.....டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு, புகையிலை பொருட்களை தடை செய், பொது இடங்களில் சிகரெட் குடிக்க கூடாது, நியாயமான கோரிக்கை..ஆனால் அதனை அவர்களது தொண்டர்களே மதிக்கவில்லையே..அவர்கள் நடத்தும் மாண்டுகளில் வருபவர்களில் எத்தனை பேர் மதுப்பாடில்களோடு வந்தார்கள், எத்தனை பேர் பான், குட்கா என்று பாக்கெட்டோடு வந்தார்கள் என்பதற்கு அந்த பகுதி பெட்டிக் கடைகளில் கேட்டால் தெரியும்...இதனைப் பார்க்கும் போது பொது மக்கள் முகம் சுழிக்கின்றார்கள்......
இவங்க கட்சி ஆளுங்களே ஒழுங்கு இல்லை...இதுல இவர் நாட்டை திருத்தப் போறாராம் என்று பேசிக் கொள்கின்றார்கள்..தற்போது நடந்த பிரச்சினையில் தனக்கு அதிக பலம் இருக்கின்றது என்பதனை காண்பிக்கவே அவரது தொண்டர்கள் பேருந்துகளை எரித்து, கடைகளை அடைத்து போராட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள்...பாமக இன்று எல்லோராலும் முகம் சுழிக்கப்படும் கட்சியாக மாற்றப் பட்டு இருக்கின்றது....நாளை ஒருவேளை இவர்களிடம் ஆட்சி வந்தால் மக்களுக்கு இவர்களாலேயே பாதுகாப்பு இல்லாமல் போகும் நிலையைத் தான் இப்போது நாம் காண்கின்றோம்..
சித்திரை திருநாளில் நான் பதினோரு மணிக்கு மேல பேசுறேன்..முடிஞ்சா என்மேல வழக்கு போடு என்று தானாகவே வாக்குமூலம் கொடுத்தார்.இன்னொருவரோ நாம ரத்தம் பார்க்காமல் போக மாட்டோம் என்று மேடையில் ஆர்ப்பரித்தார்.....இதுவெல்லாம் தவறில்லையா? தவறாக தெரியவில்லையா? என்னைக் கைது செய், வழக்குப் போடு என்று கேட்டது யார்? அப்படிக் கேட்டதற்கு இணங்க கைது செய்த பிறகு அவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டார்கள் என்று வன்முறையில் ஈடுபடுவது ஏன்?
ஆக இன்று தெரிந்தோ தெரியாமலோ பாமக, "பாதை மாறிய காட்சியாய் இருக்கின்றது...பா - மா - கா"

தங்களின் வார்த்தைகளில் தெரிவது ஆதங்கம் ராமதாஸ் இனியாவது ? மாறுவாரா by S.Muruganantham Vridhachalam
ReplyDeleteபா மா க வின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது . இனி அந்தக் கட்சி வட மாவட்ட மக்கள் மட்டுமின்றி மொத்த தமிழ்நாட்டு மக்களிடமே நல்ல பெயர் வாங்குவது இனி ரேசன் கடையில் அரிசி வாங்கும் கதை தான் . ஆழ்ந்த வருத்தங்கள் அக்கட்சியினருக்கு
ReplyDelete