இன்னும் அவங்களும், அவங்க கட்சி தொண்டர்களும் திருந்தவே இல்லையே
புதிய அமைச்சரவையின் சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சராக பதவி ஏற்ற திரு.மரியம் பிச்சை அவர்கள் அகால மரணம் அடைந்து விட்டார்கள்.
அவர்களது பிரிவை இழந்து விடும் அவரது மனைவி மற்றும் மகனுக்கு எங்களது (மனிதாபமுள்ள வலைப்பதிவு நண்பர்கள்) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
இப்போது விசயத்திற்கு வருகின்றேன், நேற்று என் அலுவலக நண்பர்களோடு தேநீர் விடுதியில் நின்று பேசி கொண்டிருந்தேன்...
அப்போது திரு.மரியம் பிச்சையின் மரண செய்தியை பற்றி பேசிகொண்டிருந்தோம், உடனே அருகில் இருந்த இரண்டு நபர்கள் கொஞ்சம் கூட நாகரிகமில்லாமல் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள், அதை கேட்டு அனைவருமே முகம் சுழித்து விட்டார்கள்.
அதாவது, ஒருவன் என்னிடம் வந்து, நீ அதிமுக வாடா என்றான், நான் இல்லை நான் எந்த கட்சியும் கிடையாது, பொதுவாதி என்று மறுத்தேன்,
அப்புறம் என்ன ம******* அவன் மேல உனக்கு கரிசனம் என்றான்;
நான் உடனே நிருபரை போல ஏன் அந்த மனுஷன் என்ன தப்பு செஞ்சாரு என்று கேட்க?
அதில் ஒருவன், எங்க தலைவரு கே.என். நேருவை எதிர்த்து நின்னாம்-ல அதுதான் அவனுக்கு விதி முடிஞ்சி போச்சு என்று சொல்ல,
உடனே என் நண்பர், என்ன இருந்தாலும் அதற்க்கு ஒரு உயிர் என்பது மிகவும் அதிகமான தண்டனை என்று சொல்ல,
பதிலுக்கு அவன், இது சும்மா சாம்பிள்தான் , அம்மாவிற்கு ஆட்சியோட ஆரம்பமே சாவுலதான் ஆரம்பிக்குது, இனிமே அவன் குடும்பத்துல எவனாவது அரசியலுக்கு வருவான்?
சார் என்ன இருந்தாலும் அந்த மனிதரின் குடும்பத்திற்கு பெரிய இழப்புதான், தயவு செய்து கொச்சை படுத்தாதீங்க, என்றதும்
அவன், அப்படித்தான் டா செய்வோம், திருச்சில என் தோஸ்த்துங்க எல்லோரும் வெடி போட்டு கொண்டாடினோம்லே என்றதும்
எங்கள் எல்லோருக்கும் தூக்கி வாரி போட்டது....இவன் மனித ஜென்மமே இல்லை என்று நாங்கள் ஒதுங்கி நின்றோம்,
அப்போது கேப்டன் தொலைக்காட்சியில் மரியம் பிச்சை யின் ஊரினில் அவரது வீட்டினர் முன்பாக கூடிய கூட்டத்தினை காண்பித்தனர். சாதி மதம் பாராமல், ஏழை, பணக்காரன் என்று பாராமல் அனைவரும் அவருடைய உடலை பார்த்து விட்டு போய்கொண்டு இருந்தனர், வியாபாரிகள் கடைஅடைப்பு செய்தனர். பதவி ஏற்ற எட்டு நாளில் அவருக்கு இவ்வளவு மக்கள் பலம் வந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைகின்றோம்.
இருந்தும், அவன் தலைவரை எதிர்த்ததால் அவனுக்கு சாவு வந்துவிட்டது என்று சொல்லும் இவர்கள் கைகளில்தான் கடந்த முறை ஆட்சியை வழங்கி நாம் ஏமாந்து நிற்கின்றோம்...
இதை விட கொடுமையான விஷயம் சன் தொலைக்காட்சியில் சிவபதி என்ற மற்றொரு மந்திரி சட்ட பேரவைக்கு வரவில்லை என்பதை ஒரு குறை போல சொல்லிகொண்டிருந்தனர்.....
இவர்கள் வேண்டுமானால் தங்கை சிறையில் இருக்கும் போது கூட, பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு சட்டபேரவைக்குள் நுழைந்து கடைசி வரிசையில் அமருவார்கள்., ஆனால் தன்னோடு பிரயாணித்த ஒரு நண்பர் விபத்தில் இறந்தால் எப்படி அவர்களால் மற்ற விழாக்களில் பங்கேற்க முடியும்?
அந்த அளவிற்கு அவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டார்களே என்று நினைக்கும் போது இவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ என்ற எண்ணம் தான் தோன்றுகின்றது....
தங்கை சிறையில் இருக்கும் போது சட்டபேரவைக்குள் அன்றே நுழைய வேண்டுமா? என்று எங்களாலும் கேள்வி கேக்க இயலும், ஏன் அழகிரி அண்ணன் கனிமொழி அக்காவை பார்கவில்லை, ஸ்டாலின் பார்கவில்லை என்று கூட எங்களால் கேள்வி கேக்க முடியும்....
ஆனால் நாங்கள் மனிதாபமுள்ள பிளாக்கர்கள் என்பதால் அதை எல்லாம் தவிர்த்து விட்டோம்....
நான் ஏதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்,
kaatu kadhaiyaagavey therikiradhu..
ReplyDeletekattu kadhai enrey ninaikaren.. !
ReplyDeleteஉங்களின் எழுதுநடை , தலைப்பு.. மற்ற சங்கதி இணைப்பு.. வார்த்தை பிரயோகம் எல்லாம் பார்க்கும் பொது இது புனைவாகவே படுகிறது
ReplyDeleteஅன்புள்ள நண்பர்களே,
ReplyDeleteகதை எழுதவோ, புனைவு எழுதவோ இது தேவையற்ற ஒன்று, மேலும் சகோதரர் திருச்செங்கோடு குமரன் சொல்வது போல என் எழுத்து நடையை நான் சற்று மாற்றியே எழுதி இருக்கிறேன், காரணம் அப்படியே அவர்கள் பேசியது போல எழுத எனக்கு மனம் வரவில்லை என்பதுதான், ஒருவர் இறந்து விட்டார் என்று அவர்கள் சொல்லவில்லை, மாறாக அந்த இடத்திற்கு மீண்டும் தேர்தல் வரும் என்றுதான் பேசினார்கள்....இது முழுக்க முழுக்க உண்மை....
ஒருவருடைய மரணத்தை பயன்படுத்தி எனது கட்டுரையை வழங்கி அதில் ஆனந்தம் அடைய நான் விருப்பப்படவில்லை, ஆனால் சமுதாயத்தில் இப்படியும் சில மனிதர்கள் வாழத்தான் செய்கின்றார்கள் என்பதற்குத் தான் அவ்வாறு சுட்டி காட்டினேன்.
நண்பர் குமார் அளவிற்கு எனக்கு எழுத வரவில்லை என்பதை நான் ஒப்பு கொள்கின்றேன், இருந்தாலும் எனது எழுத்து நடையை சுட்டி காட்டியமைக்கு நன்றி,