நடந்து முடிந்த தேர்தல் 2011 க்கு பிறகு முதல் முறையாக விஜயகாந்த் வடிவேலு பற்றி நமது சின்னவரிடம் பேட்டி அளித்திருக்கின்றார்..
சினிமாவில் அவரது வசனங்கள் அதிகம் இருக்காது, அது போலவே இந்த பேட்டியிலும் அவர் நறுக்கென்றே பதில் அளித்தார்...
பேட்டி வருமாறு -
சின்னவர் - வணக்கம் கேப்டன், முதலில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றதற்கு எங்களது வாழ்த்துக்கள்...
கேப்டன் : நன்றி, அதற்கு முதலில் எனது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்...
சின்னவர் : தேர்தல் பிரச்சாரத்துல நீங்க இன்னொரு கட்சி கொடிய கீழே இறக்க சொன்னீங்களாமே, அது ஏன்னு இன்னும் பொது மக்கள் கிட்டே சந்தேகம் இருக்கு
கேப்டன் : இது எதிர்க்கட்சிக்காரன் செய்த சதிவேல,
சின்னவர் : கருணாநிதியோட கடந்த கால ஆட்சிய பத்தி நீங்க என்ன நினைகிறீங்க,
கேப்டன் : அது ஒரு குடும்ப ஆட்சி, அது ரொம்ப தப்பு, ஒரு குடும்பத்துக்கு ஒருத்தன்தான் தலைவனா இருக்கணும், இது சம்பந்தமா நான் என் மனைவிகிட்டேயும், என் மச்சான் கிட்டேயும் கலந்தாலோசிச்சு முடிவு எடுக்க போறேன்...
சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா ஆன பிறகு சினிமாவிலே நடிப்பீங்களா?
கேப்டன் : நிச்சயம் எல்லாமே அரசர் காலத்து படம்தான், நானே சொந்தமா கதை, வசனம் எழுத போறேன்...டைட்டில் கூட வச்சிருக்கேன்...கொலைஞன், பண்ணர் - மன்னர்
சின்னவர் : ரொம்ப நல்ல விஷயம், அதற்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இந்த தேர்தல்ல உங்களை கடுமையா விமர்சிச்சு பேசிய வடிவேலு மேல ஏதாவது வழக்கு போட போறீங்களா? னு உங்க தொண்டர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க..
கேப்டன் : நிச்சயமா, உங்க மூலமா நான் அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கிறேன், அவருக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க சொல்லுங்க...
சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா நீங்க எழுப்ப போற முதல் கோரிக்கை என்ன? என்ன?
கேப்டன் : எப்போ வீட்டுக்கு விடுவீங்க, வந்து ரொம்ப நேரமாச்சு..
சின்னவர் : சார், இதுதான் கடைசி கேள்வி, இதுக்கு பதில் சொன்னதும் பேட்டியை முடிச்சிக்கலாம்..
கேப்டன் : (கையில் வைத்திருக்கும் பேப்பரை சுருட்டி சின்னவர் தலையில் தட்டுகின்றார்) யோவ், நீ கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன், சட்டசபை ஆரம்பிச்சதும் நான் வைக்குற கோரிக்கையைத்தான் சொன்னேன்...
சின்னவர் : ஏற்கனவே, நீங்க ஒரு வேட்பாளரை அடிச்சிடீங்க, அதுவே பெரிய பிரச்சினைல இருக்கு, இப்போ பத்திரிகைகாரன வேற அடிக்கிறீங்க,
கேப்டன் : யோவ், என் கையால அடிபட்டா நீ பெரிய ஆளா வருவே பாரு...
பெரியவர் : ரொம்ப நன்றி எதிர்க்கட்சி தலைவரே...
கேப்டன் : கொஞ்ச நேரத்துக்கு என்னை பேட்டி எடுத்தாரே சின்னவரு, அவரு எங்கேய்யா காணோம்?
பேட்டி குழு : சார், நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடிச்சீங்களே சின்னவரு, அவர்தான் இப்போ பெரியவரா மாறிட்டாரு, நீங்கதானே பெரிய ஆளா மாறுவே னு சொன்னீங்க, அதுக்குள்ளே மாறிட்டாரு...
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...