அது ஒரு அதிகாலை நேரம், நான் மெல்ல எனது பணிக்கு கிளம்பினேன்....
ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூவாய் ஊழல் என்றதும் மிக பெரிய அளவில் பேசினார்கள்....இப்போது 26 லட்சம் கோடி ஊழல் என்று தலைப்பு போட்டு செய்தி போட்டதும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூவாய் ஊழல் என்பதை மறந்து விட்டார்கள், "உண்மைத் தமிழன்" என்னை மறந்தது போல.....
மெல்ல ஒரு கட்டிலில் ஏறி உள்ளே போனேன்....நல்ல நல்லெண்ணையில் வறுத்த வாசம்...எட்டி பார்த்தேன்.!!!
உண்மைத்தமிழன் ஒய்யாரமாய் தூங்கி கொண்டிருந்தார்....இதில் குறட்டை சத்தம் வேறு பலமாய் இருந்தது.....எனக்கு கடுப்பாய் இருந்தது....அவரது தலையில் ஏறினேன், கன்னத்தில் மெல்ல வருடினேன், குறட்டை போடாதீர்கள் என்று சொல்லிபார்த்தேன், எதையுமே கண்டுகொள்ளவில்லை, அதனால் குகை போன்று இருந்த அந்த காதுக்குள் போனேன்....
சாதாரணமாகவே தமிழன் வந்தாரை எல்லாம் வாழ வைப்பானே, இவன் உண்மைத்தமிழன் ஆயிற்றே, நிச்சயம் நம்மை ராஜாவாக வாழ வைப்பார் என்று நம்பித்தான் உள்ளே போனேன்...
முதலில் ஆரம்பத்தில் உள்ளே மேடு பள்ளமாக இருந்தது...பிறகு சற்று குறுகலான நீண்ட பாதை....மிகவும் கும்மிருட்டாக இருந்தது....வெளிச்சமே தெரியவில்லை....பாதை தெரியாமல் இங்கும், அங்கும் அலைந்தேன்...தலைவாசல் எங்கே இருக்குன்னே தெரியாமல் சுற்றி சுற்றி வந்தேன்....ஒரு சின்ன வெளிச்சம் கூட கிடைக்காமல் அலைந்தேன்....
திடீரென்று பார்த்தேன், ஒருவித பச்சிலை வாடை இருந்தது, உண்மைத்தமிழன் ஏதோ இலையை சுருட்டி உள்ளே விட்டிருக்கின்றார், அடுத்த அடி எடுத்து வைக்க மனதிற்குள் பயம்...இலையை கொண்டு அடைத்ததால் இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் தெரியவில்லை, அதனால் பேசாமல் நின்று விட்டேன். பின்னர் அவர் இலையை எடுத்ததும் மீண்டும் வெளிச்சம் கிடைத்த திசையை நோக்கி ஓடினேன்.
திடீரென்று மழை தூறல் அடித்தது....திருப்பியும் இலை வந்தது...திருப்பியும் மழை சாரலடித்தது....சற்று நேரத்தில் ஒரு பெரும் வெள்ளம் வந்தது....என்னால் பதுங்க முடியா சூழ்நிலை உருவானது....
(அப்புறம்தான் தெரிந்தது அது மழை அல்ல, என்னை சாகடிக்க அவர் ஊற்றிய தண்ணீர் என்று, இதில் என்னை சாகடிக்க எத்தனை பேர் அவருக்கு ஐடியா வேறு கொடுக்கின்றார்கள், உப்புத்தண்ணீர் ஊத்துவாங்களாமே, உள்ளே புகுந்து ஏதாவது ரெண்டு இடத்தை கடிச்சி வச்சா அப்போ தெரியும் அவனுகளுக்கு, அம்மாம் பெரிய யானையையே அசால்டா பயித்தியம் பிடிக்க வைச்சிருவோம், இந்த மனுசனெல்லாம் எங்களுக்கு ஜிஜுபி)
உண்மைத்தமிழனை நம்பி உள்ளே வந்தது எவ்வளவு தவறு என்று அப்போது உணர்ந்தேன்....பிறகு ஒரு பெரிய வெள்ளம் வந்தது, இந்த முறை நானும் வெள்ளத்தில் அடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டேன்.....நிறைய தண்ணீர் குடித்ததால் கொஞ்சம் கிறுகிறுவென்று இருந்தது...
உண்மைத்தமிழன் என்னை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்...எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நான் அவரோடு நட்பு பாராட்டி கொண்டிருக்க முயற்சி மேற்கொண்டேன்...ஆனால் அவரோ என்னை அழித்து விடுவது போல பார்த்து கொண்டிருந்தார்...அதன் பிறகுதான் எனக்கு விவரம் புரிந்தது, நான் அவரை கொல்ல போவதாகவும், இம்சை கொடுக்க நினைத்ததாகவும் அவர் என்னை தவறாய் புரிந்து கொண்டு என் மீது கோபம் கொண்டிருந்திருக்கின்றார். உண்மையில் அந்த குறட்டை சத்தம் என் தொழிலை செய்ய விடாமல் தடுத்ததால் அதை பற்றி சொல்லத்தான் போனேன்...அது புரியாமல் அவர் தவறாய் முடிவெடுத்து விட்டார்...
முருகா இவருடைய தவறான எண்ணத்தை மாற்றி இவருக்கு நல்ல புத்தியை கொடு என்று என் அப்பன் முருகனிடம் வேண்டினேன். அப்போது அவரது பனியனுக்குள் என்னை போன்ற மற்றொரு "அழையா விருந்தாளி" போய் விட்டார்.. அந்த எரிச்சலில் அவர் என்னை கீழே இறக்கி விட்டார். என்னே எந்தன் முருகனின் சித்து விளையாட்டு, என்று நினைத்து நான் "எஸ்கேப்".
தமிழன் தனக்கு யார் என்ன கெடுதல்கள் செய்தாலும், அடுத்த கெடுதல்கள் வரும்போது பழைய கெடுதலை மறப்பான் என்பதை உண்மைத்தமிழனை பார்த்து புரிந்து கொண்டேன்....
அதுபோல எதிரியாக அவர் என்னை நினைத்து இருந்தாலும் என்னை திருவாளர், பூச்சியார், அவர், இவர் என்று கண்ணியமாக பேசியது அவருடைய தமிழ் கலாச்சாரம், மற்றும் கண்ணியத்தை காட்டியது.... வாழ்க தமிழ் கலாச்சாரம்....
supperoo super
ReplyDeleteThanks very much..! Mikavum Rasithean..! Nandri..!
ReplyDeleteஉண்மைத்தமிழனின் வருகைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....
ReplyDeleteஅண்ணனுக்கு தம்பி போல சளைக்காமல் கலக்கலா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஅந்த கடைசி வரி பஞ்ச் சூப்பர்.