சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.....
அதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கின்றது.
இருந்த போதும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இரு சக்கர வாகனம் என்பது இயலாத காரியமாகும். அதனால் அவர்கள் அரசு வாகனங்களான பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
எத்தனை பேருந்துகள் விட்டாலும் எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. எல்லா பேருந்துகளிலும் படிக்கட்டு பயணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
ஆனால் வருந்த கூடிய விஷயம் என்னவெனில் அநேக பேருந்துகளில் பேருந்தின் நடுவினிலும், முன்னே மற்றும் பின்னேயும் இடம் காலியாக இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டு பயணத்தை விரும்புகின்றார்கள்,
மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழகம் எவ்வளவோ வலியுறுத்தியும் இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்துக்குள்ளே வராமலும், வெளியே நின்று பிரச்சினை செய்கின்றார்கள்.
இதற்க்கு முடிவு கட்டுவதற்காக, போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழகமும் இணைந்து புது வடிவிலான பேருந்தினை உருவாக்கி இருக்கின்றது. இதில் முன் படிக்கட்டு வழியாகத்தான் ஏற வேண்டும், அதே வழியில்தான் இறங்க வேண்டும்.
இதற்கான சோதனை ஓட்டமாக முதலில் ஒரு பேருந்தினை இயக்கி இருக்கின்றார்கள். பொதுமக்கள் இடையே குறிப்பாக பெண்கள் இடையே நல்ல வரவேற்பை அளித்திருக்கின்றது.
இந்த மாதிரியான 1000 வண்டிகளை இயக்க முடிவு செய்திருக்கின்றார்கள். எப்பூடி? ? !!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...