சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்கள்தான்....
அதுபோல பெரிய பெரிய நிறுவனங்களில் குறிப்பாக (பிபிஒ) வில் வேலை பார்க்கும் ஆண் (HR) ஹெச்ஆர் கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும், நடுவயது அதாவது 30 லிருந்து 40 வயதை தொட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குடும்ப சூழ்நிலையில் சிக்கி அதனால் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடுபவர்களாக இருக்கின்றார்கள்...
பெண்களில் வேலை தேடுபவர்களின் வகைகள் :
1. விதவைகள்
2. விவாகரத்து பெற்றவர்கள்
3. பெற்றோர் ஊரினில் கடனை அடைக்க கஷ்டப்பட வேலைக்கு வருபவர்கள்
தனியாக வாழும் பெண்கள்
4. அநாதை பெண்கள்...
5. கருத்து வேறுபாட்டில் கணவனை பிரிந்து வாழும் பெண்கள்
6. வெளிநாட்டில் கணவன் இருக்கும்போது பொழுது போக்கிற்காக வேலைக்கு
வருபவர்கள்
7. வேலைக்கு சென்று சம்பாதித்து பெரும் பணமும், புகழும் பெற ஆசைப்படும்
பெண்கள்... என்று பிரிக்கலாம்.
பொதுவாய் சொல்ல போனால் எல்லோரையும் இப்போது நாகரீகம் என்ற போதை கண்களை மறைக்கின்றது. நாமும் அவர்களை போல வாழ வேண்டும், நாமும் கார், பங்களா என்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் ஒரு சில பெண்கள்.
இவர்களது எண்ணத்தை தமக்கு சாதகமாக்கி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்க காத்திருக்கின்றது ஒரு கும்பல் (HR) என்ற போர்வையில்....
இந்த HR களின் கணக்கு எப்படி போகின்றது எனில் முதலில் பெண்ணின் மனப்பக்குவத்தை அறிந்து கொள்கின்றார்கள். அதற்கு முன்னால் பெண்ணின் பயோ-டேட்டா வில் marital status என்னவென்று கவனித்து கொள்கின்றார்கள்....
அந்த பெண்ணின் குடும்ப பின்னணியை பற்றி வினவுவார்கள்...அந்த பெண் தனியாக விடுதியில் இருக்கிறாள், அல்லது அவள் ஒரு விதவை, அல்லது விவாகரத்து பெற்றவள் அல்லது கணவனோடு கருத்து வேறுபாடு என்றால் அன்று இரவே அவளுக்கு ஒரு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அது மிக சாதாரண இரவு வணக்கம், அல்லது காலை வணக்கம் செய்தியாக இருக்கும்....
பொதுவாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பெண்கள் எதிராளியின் குணம் அறியாது தனது குடும்ப பிரச்சினைகள் அனைத்தையுமே கொட்டி தீர்ப்பார்கள். அப்பா குடிகாரர், அம்மா ஊதாரி, எனக்கு 3 தங்கைகள், நான் சம்பாதித்துதான் அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல, சொல்ல, அந்த குறிப்பிட்ட சில HR களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகி விடும்.
பின்னர் இரண்டு நாள் கழித்து அதே HR அந்த பெண்ணிற்கு வேறு விதமான நகைச்சுவை அல்லது வேறு விதமான எஸ்.எம்.எஸ் களை அனுப்புவார்கள்.
அந்த எஸ்.எம்.எஸ் களுக்கு பதில் அளித்தாலோ அல்லது அதற்கு செவி சாய்த்தாலோ அதற்கு பின்னர் அந்த பெண்ணின் தலைஎழுத்து போலியான காதலில் முடிந்து நிற்கும்.
எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண் நியாயம் கேட்க சென்றால், அந்த HR கூறும் பதில்கள் சூழ்நிலைகேற்றவாறு மாறும். அதாவது நீ எல்லாம் அனுபவித்தவள்...நான் இனிமேல்தான் உலகை அனுபவிக்க போகின்றேன்...என்னை மறந்திடு....எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை என்று செண்டிமண்டலாய் பேசி மடக்குவார்கள்.
ஒருவேளை அந்த பெண் மிக தீவிரமாய் இருக்கும் பட்சத்தில் அவளுக்கு பிரமோசன் அல்லது டீ-பிரமோசன் பெற்று கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொள்வார்கள்.
இவர்களை போன்ற காம வெறியர்கள், கூடுமானவரை அந்த பெண்ணோடு சுற்றிய சாட்சியங்கள் எதுவுமே வைத்து கொள்ள மாட்டார்கள்... அதுதான் அவர்களது அடுத்த தொடர்புக்கு இடைஞ்சலாக இருக்காது என்பது அவர்கள் எண்ணம்.
சென்னை போன்ற நகரங்களில் வண்டிகளில் சுற்றும் இளம் சிட்டுக்களில் எத்தனை உண்மையான காதலர்கள் இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்த அளவிற்கு உண்மையான காதல் நலிந்து லிவிங் டுகதர் என்ற கேடு கேட்ட காலாச்சார சீர்கேடு உருவாகி கொண்டிருக்கிறது....விளைவு காதல் சலித்ததும் காதலன் அடுத்த பெண்ணை தேர்வு செய்ய கிளம்பி விடுகின்றான், காதலி ????????
அவளை வேலைக்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் பெற்றோர், குடும்பத்தார்...??
(நான் இங்கே சொல்வது அனைத்து HR களையும் அல்ல,
ஒரு சில வக்கிர HR களைத்தான்...)
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...