பங்காளிங்க..

Monday, October 24, 2011

16 ஆம் நாள் காரியம்

ஒரு                          விழாவில்

இரண்டு                  விழிகளால்
மூன்று                    மணி வரை
நான்கு                    முறை ரசித்து

ஐந்து                        முறை கையசைத்து
ஆறு                        தடவை பெயர் சொல்லியழைத்து
ஏழு                           மணிக்கு மேல்

எட்டு                        நண்பர்களை காவல் போட்டு
ஒன்பதாவது        அறைக்கு அழைத்து சென்று
பத்து                         நிமிடம் முத்தமிட்டு

பதினொன்று        முறை கட்டித் தழுவி

பனிரெண்டு          மணிக்கு பிரிந்த பத்தாம் வகுப்பு பாவையை
பதிமூன்று             வருடம் கழித்து
பதினான்காம்       எண் வீட்டினில்

பதினைந்து            மாதக் குழந்தையுடன் உன்னை பார்த்த எனக்கு 

பதினாறாம்            நாள் காரியம் செய்திருக்க வேண்டும்
                                    இப்படி காத்திருந்த எனக்கு!!!???!!!
 

7 comments:

  1. அருமையா வந்த கவிதை கடைசில சோகமாயிருச்சே...

    ReplyDelete
  2. காதல் தோல்விக்கு பதினாறாம் நாள் காரியம் தான் தீர்வா???

    ReplyDelete
  3. /// தமிழ்வாசி - Prakash said.

    அருமையா வந்த கவிதை கடைசில சோகமாயிருச்சே...///


    சந்தோசத்தில் தொடங்கி துக்கத்தில் முடிகின்றது பல காதல்கள் என்பதை சொல்லத்தான் இந்த படைப்பு

    ReplyDelete
  4. /// தமிழ்வாசி - Prakash said...

    காதல் தோல்விக்கு பதினாறாம் நாள் காரியம் தான் தீர்வா??? ///

    பதினாறாம் நாள் தீர்வு அல்ல....அவளை பார்த்து பார்த்து தினமும் வேதனை படுவதை விட பதினாறாம் நாளை தேவலை என்று நினைக்கும் வார்த்தைகள் அவை தோழரே...பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  5. என்னவோ போங்க

    ReplyDelete
  6. கவிதை அருமை ...
    தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  7. அருமை

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...