பங்காளிங்க..

Sunday, October 30, 2011

வலைத்தள நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அன்பான வலைப்பதிவு நண்பர்களுக்கு,

எனக்கு இதுவரை தனியாக நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இந்த இணையதளம்தான் எனது நட்பு கூடாரம். அதில் பவனி வரும் உங்களை போன்ற வலைப்பதிவர்களும், வலைப்பதிவின் நிர்வாகிகளும்தான் எனக்கு தற்போதைய நண்பர்கள். இந்த நட்பு நீண்ட கால நட்பாக மலர வேண்டும், வளர வேண்டும் என்பது எனது விருப்பம். 

என்னால் அனைத்து நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் சொல்ல இயலாது. அதனால் வலைத்தள நிர்வாகிகளான உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். நெஞ்சார்ந்த நன்றிகள்
 
அதுபோல இந்த வலைப்பதிவு தோழர்களும் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி மகிழ வேண்டும் என்று விரும்புகின்றேன். அந்த புனிதமான சந்திப்பிற்கு எனது இல்லத்திற்கு அனைவரும் வருகை தரவேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கின்றேன். இத்தனை நாள் எழுத்துக்களில் பார்த்த அந்த நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கின்றேன். வெளியூரில் இருந்து வரும் நண்பர்களை அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருக்கின்றேன்.

யார் இவன்? எதற்காக இதை எல்லாம் செய்கின்றான் என்று யோசிக்காதீர்கள், எத்தனையோ அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள்  தற்புகழ்ச்சிக்காக விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால் இது நமது நட்பை, இணையதள வட்டத்தை விரிவாக்கவே இந்த திட்டம். அதற்க்கு ஒரு மையம் வேண்டும், அதற்க்கு எனது இல்லத்தை அர்ப்பணிக்கின்றேன்.

தயவு செய்து வரும் அனைத்து நண்பர்களும் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதற்கேற்றவாறு நான் திட்டமிடுதல் வேண்டும்.

புரிதலுக்கு நன்றி....




5 comments:

  1. உமது தளத்தில் மவுஸ் பொயின்ரில் சொரியும் இதழ்களுக்குரிய html coding எங்கு கிடைக்கும்

    ReplyDelete
  2. /// Admin said...

    உமது தளத்தில் மவுஸ் பொயின்ரில் சொரியும் இதழ்களுக்குரிய html coding எங்கு கிடைக்கும் ///

    Please visit the
    http://www.spiceupyourblog.com for more options.

    ReplyDelete
  3. வீட்டில் போய் உங்கள் வீடியோ பார்க்கிறேன்...அழைப்பிற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி சிவா சென்னை வந்தால் உங்களை வந்து சந்திக்கிறேன், உங்கள் அற்பணிப்பு மனசுக்கு நன்றி...!!! நானும் உங்கள் பாலோவர் ஆகிட்டேன்...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...