பங்காளிங்க..

Friday, October 28, 2011

எப்படி பண்ணா வலிக்காது...ரகசிய டிப்ஸ்

 
இந்த பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிஸ்டத்துல உக்காந்துக்கிட்டு என்னம்மா சாட் பண்றாங்க...அந்த அழகே தனிதான்...

அதுக்கெல்லாம் நிறைய படிச்சிருக்கணும்...நமக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லையே

காலையிலே இருந்து நைட் வரைக்கும் இந்த கம்புடேரிலேயே உக்காந்துகிட்டு இருக்காங்க...அப்படி என்னத்ததான் தட்டிக்கிட்டே இருப்பாங்களோ நு புரியலை...இப்படி பெருமூச்சு விடும் பெருசுகளுக்கு நான் சொல்றது என்ன வென்றால் உங்க கோபம், பொறாமைக்கு எல்லாம் பதில் கிடைச்சிடுச்சி...இனிமே எங்க கம்பியுட்டர் நண்பர்கள் அதுலே அதிக நேரம் உட்கார மாட்டாங்க...போதுமா?

உங்க சார்பா நான் அவங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கலாமுன்னு இருக்கேன்...

அன்பான கம்பியுட்டர் கீபோர்ட், மௌஸ் தடவும் நண்பர்களே, நண்பிகளே,

இந்த மௌஸ், கீபோர்ட்டை சரியா பிடிச்சு தடவலேனா, அதாவது சரியா பிடிச்சு ஆபரேட் பண்ணலேனா கார்பல் டன்னல் சிண்ட்ரோம் உருவாகிடும்...கெட்ட வார்த்தை இல்லீங்க...(இங்க்லீஸ்ல படிங்க, புரியும் CARPAL TUNNEL SYNDROME)

ஊரு, உலகத்துல இல்லாத வியாதியா...எய்ட்சையே நாங்க எட்டி உதைச்ச ஆளுங்க...கேன்செரையே நாங்க ஊதி தள்ளுனவங்க நு நீங்க நக்கலா சிரிக்கறது நல்லாவே கேக்குது...

கொஞ்சம் கீழே இருக்கிற படத்தை பாருங்க

 
அச்சச்சோ, அடகன்றாவியே, சனியன் பிடிச்சவன் இதை போய் எடுத்து அனுப்பிச்சிருக்கான் பாரு நு நீங்க மனசுக்குள்ளே திட்டினாலும் பரவாயில்லே, இனிமே கொஞ்சம் மாத்தி டிரை பண்ணி பாருங்க...

உடனே ஒரு சில உள்குத்தல்வாதிகள், சாவு எப்படி வேணுமினாலும் வரும், பாம்பு கடிச்சு பிழைச்சவனும் இருக்கான், செருப்பு கடிச்சு செத்தவனும் இருக்கான்னு ஒரு வசனம் பேசுவாங்க...அது சரி நாம ஏன் கீபோர்ட், மௌஸ் தடவி கைய இழக்கணும்..இந்த கைய வைச்சு நமக்கு எத்தனை வேலை இருக்கு???

அதெல்லாம் சரி, அப்போ எப்புடித்தான் அதை பிடிக்கிறது? குறைய சொல்லிட்டே, அதுக்கு பரிகாரத்தை சொல்லு நு கேக்குறீங்க அதானே? 





அதுனால (உள்ளூர் பிஸியோ டாக்டர்ஸ் என்னை மன்னிச்சிக்கோங்க) சில டிப்ஸ் கொடுக்கிறேன்..ஒரு ரெண்டு வாட்டி டிரை பண்ணி பாருங்க..அப்புறம் தெரியும் "அந்த" சுகம்....






 நான் சொன்னதுலே எந்த பிஸியோ டாக்டர்சுக்கும் கோபம் இருந்தா மன்னிச்சிக்கோங்க, நல்லா இருந்தா ஓட்டு போடுங்க. அல்லது ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க 

18 comments:

  1. thanks for the tips.. very useful..

    Suresh

    ReplyDelete
  2. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...

    நன்றி..

    ReplyDelete
  4. /// Anonymous said...

    thanks for the tips.. very useful..

    Suresh ///

    heartiest welcome.....

    ReplyDelete
  5. /// தங்கம்பழனி said...

    ஞாபகப் படுத்தியதற்கு நன்றி! ///

    ஏதோ என்னால முடிஞ்சது

    ReplyDelete
  6. /// வெளங்காதவன் said...

    :) ///

    :) :) :)

    ReplyDelete
  7. /// கவிதை வீதி... // சௌந்தர் // said...

    தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...

    நன்றி.. ///

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  8. அந்த கப்புல என்னமோ எடுத்து போற்றுகாயிங்க,என்ன அது கொழுப்பா?

    உனது விழி வலிமையிலே!

    ReplyDelete
  9. /// IlayaDhasan said...

    அந்த கப்புல என்னமோ எடுத்து போற்றுகாயிங்க,என்ன அது கொழுப்பா? ///

    ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான்...எப்போ பார்த்தாலும் அதே நினைப்புதான் உங்களுக்கு! :)

    ReplyDelete
  10. நல்ல வேளை? விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. எல்லாமே அருமை...
    ஆனா அந்த முத படம் கன்றாவியா இருந்துச்சு, எடுத்துடுங்களேன்

    ReplyDelete
  12. /// தமிழ்வாசி - Prakash said...

    நல்ல வேளை? விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி ///

    உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. /// suryajeeva said...

    எல்லாமே அருமை...
    ஆனா அந்த முத படம் கன்றாவியா இருந்துச்சு, எடுத்துடுங்களேன் ///

    மிக்க நன்றி, அவசரத்தில் போட்டுவிட்டேன்...விரைவில் மாற்றிவிடுகின்றேன்..

    ReplyDelete
  14. தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...

    ReplyDelete
  15. /// ரெவெரி said..

    தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்... ///

    எனக்கு ஒரு பயம்! இதிலேயும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சிருவீங்கலோன்னு, நல்லவேளை ரொம்ப நன்றி..

    ReplyDelete
  16. /// இராஜராஜேஸ்வரி said...

    பகிர்வுக்கு நன்றி ///

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  17. thank u for ur tips

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...