பங்காளிங்க..

Wednesday, April 18, 2018

3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......

 இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உரிய பதிவு. அந்த சானலுக்கு அந்த ப்ரோகிராமுக்கு தடை சொல்லுங்கள். ஏதாவது ஒரு ஊடகம் துணிவிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையின் விபரீதங்களை சொல்லுங்கள், காவிரி பிரச்சினையின்  கண்றாவிகளை சொல்லுங்கள், மரம் வளர்க்க சொல்லிகொடுங்கள், தண்ணீர் சேகரிக்க சொல்லிக்கொடுங்கள், தான தர்மம் வழங்க சொல்லிக்கொடுங்கள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வினை பற்றி சொல்லிக்கொடுங்கள், தயவு செய்து மாமா வேலை பார்க்காதீர்கள், 

தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது, எவன் நாசமாக போனால் நமக்கென்ன என்று பெண்களை கொச்சை படுத்தும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது, கல்லூரி பேராசிரியையின் காமலீலைகள், வாட்சப் பில் பரவலாகி கொண்டிருக்கிறது, அது ஒரு பக்கம் எனில், கேவலமான கான்செப்ட்டை ஸ்க்ரிப்ட் தயார் செய்து பெண்களை போகப் பொருளாக மாற்றி ஒரு அண்ணிடம் அடகு வைக்கும் அப்பா, அம்மாக்கள், ஒரு ஆணுக்கு அலையும் பெண்ணாக பெண்ணை கேவலப்படுத்தியிருப்பதும், அதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்பதும் மிகவும் கேவலமான செயலே, தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்கே போயிக் கொண்டிருக்கிறது,? 

மகளிர் ஆணையமும் தூங்கி கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகின்றது,  இதை ஒரு பொழுது போக்காக பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள், உங்க வீட்டு பெண்ணை ஆர்யா கூட அனுப்பி வைப்பீங்களா?
அந்த கேடுகெட்ட சுயம்வரத்தில் பங்கு கொள்ளும் அந்த பெண்ணை தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையின் பார்வை எப்படி இருக்கும்? 

குடும்பமே சேர்ந்து கொண்டாட இது என்ன பிறந்தநாள் விழாவா? கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டம், இதை சொன்னதும், ஒருவர் என்னிடம் உங்களுக்கு பொறாமை வயித்தெரிச்சல் என்று சொன்னார், அதே நபரிடம் திருப்பி கேட்டேன், நாளை உங்கள் பொண்ணை இதே மாதிரி ஒரு பிரபலத்திற்கு ஜோடியாக அனுப்பி வைப்பீர்களா என்று, கல்லூரி பெண்களும், பள்ளி மாணவிகளும், இதைத்தான் விரும்பி பார்க்க வைத்துள்ளது, இந்த சமுதாயம், 

கேட்டால் பெண்ணின் சுதந்திரத்தை கட்டுபடுத்தாதே என்று எகத்தாளம் வேறு, இதுவா பெண்ணின் சுதந்திரம், பெண் சாதிக்க பிறந்தவள், சாக்கடை அல்ல, எல்லா பன்னிகளும் உருண்டு மேய்ந்து செல்ல, பெண் அமைதியானவள் என்று சொல்ல காரணம் தென்றலை போன்றவள், அவள் புயலாகவும் மாறுவாள் என்பதற்காக!  

எதிர்காலத்தில் இந்த சமுதாயம் எப்படி மாறிப்போகும்? எந்தளவிற்கு தரம் தாழ்ந்து போகும், பொருளாதார சூழ்நிலைகள் சரியில்லையே, ஒரு நடுத்தர, ஏழை குடும்பங்களை சார்ந்த பெண்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எந்த எதிர்விளைவுகளையும் பற்றி சிந்திக்காத ஒரு தொலைகாட்சி ஊடகம்

ஏதாவது ஒரு ஊடகம் சாதித்த பெண்மணிகள் என்று ப்ரோக்ராம் எடுத்து வெளியிட்டுள்ளதா? சமுதாயத்தில் அவர்கள் பட்ட வேதனைகளை எடுத்து சொல்லுகிறதா? அதை விட்டுட்டு தேவையில்லாத ஆசைகளை வன்மங்களை தூண்டி பெண்களை கில்லுக்கீரையாக்கி இருக்கிறது, ஆர்யாவுக்கு வேண்டுமென்றால் இது டைம் பாசாக இருக்கலாம், ஆனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான், நாளை எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம் என்றும் கூட ஒளிபரப்பு செய்யும், அதையும் வேடிக்கை பார்க்கும், பொது மக்களிடம் கருத்தும் கேட்டு அவர்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள், ஆனால் அவமானப்படுவது யார்?   

ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி ஒரு மாவட்டமே போராடி கொண்டிருக்கிறது, மறு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் வைக்க கோரி தமிழ்நாடே பற்றி எரிகிறது,

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத ஒரு ஊடகம் மாமா வேலை பார்த்து கொண்டிருக்கிறது, பெண்ணை இன்னும் போக பொருளாக அடிமைப்படுத்த நினைக்கிறது ஒரு கும்பல்,

எவ்வளவு வக்கிரமான, கீழ்த்தரமான ஒரு செயல், ஒரு ஆணை தேடி முப்பது பெண்கள் திருமணத்திற்கு அலைவது போல ஒரு ப்ரோக்ராம், அதில் நாயகனாக வரும் ஆர்யா அங்கே பங்கு பெரும் ஒவ்வொரு பெண்ணுடனும் டான்ஸ் ஆடுகிறார், மருதாணி போடுகிறார், அவர்களோடு சேர்ந்து கூத்தடிக்கின்றார்,

நாட்டு பிரச்சனைகளை மறைக்க இந்த மாதிரியான செயற்கைகளை உருவாக்கி பேட்டிஎடுக்கிரார்கள், மானங்கெட்ட தமிழர்களே (இந்த கலாச்சார சீரழிவிற்கு ஆதரவாக பேட்டி கொடுப்பவர்களைத்தான் ) சொல்கின்றேன்,

உங்கள் வீட்டு பெண் இப்படி ஒரே ஆணோடு சுயம்வரம் செய்ய ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியெனில் இதற்கு ஆதரவு கொடுங்கள், கலர்ஸ் தமிழ் என்றொரு சானல், ஆர்யா மற்றும் 3 பெண்களை தேர்ந்தெடுக்கின்றாராம், இதுவா பெருமை, போதும் பெண்களை இழிவுபடுத்தும் கீழ்த்தரமான செயல், நிறுத்துங்கள்,

ஒரு எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியாவே பற்றி எரிகிறது, ஆனால் எதை பற்றியும் கண்டுகொள்ளாத ஒரு அரசாங்கம்,

ஆசிபா விற்கு ஆதரவு கொடுப்பதும் இதே இளைஞர்கள்தான், இந்த மாதிரியான அலங்கோலங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் நீங்கள்தானா? அப்படியெனில் ஆசிபா விற்கு கொடுக்கும் ஆதரவு போலியானதா? 

விளம்பர இடைவேளைக்கு பிறகு கலர்ஸ் தமிழ் வழங்கும் முதலிரவு தொடரும், இப்படியும் நாளை போடுவார்கள், சினிமா கதாபாத்திரங்களில் கடவுளின் பெயரில் ஒருத்தி தாசி வேடத்தில் வருகிறாள் என்பதற்காக தியேட்டரையே அடித்து நொறுக்கியவர்கள் தமிழர்கள், இன்று அடுத்தவரின் அந்தரங்கங்களை படம் எடுத்து காசு பார்க்கும் கூட்டத்திற்கு கரகோஷம் வேறா? 

மானமுள்ள தமிழர்கள், உடனடியாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள், பெண் பிள்ளைகளின் நெஞ்சங்களில் நஞ்சினை விதைக்காதீர்கள், அவளுக்குள் தேவையற்ற கற்பனைகளை வளர்த்து அவளது எதிர்பார்ப்புகளை கொச்சைபடுத்தாதீர்கள், பாரத் மாதா கி "ச்சே" பெண் வழக்கறிஞர்களே, இந்த நிகழ்ச்சி உங்களை காயப்படுத்தவில்லையா? இழிவுபடுத்தவில்லையா?