பங்காளிங்க..

Thursday, March 21, 2013

மாணவர் போராட்டம் தேறுமா?

தமிழர்களின் உணர்வுகளை கொன்று குவித்தவர்கள் பட்டியலில் காங்கிரஸ் நீங்கா இடம் பெற்று விட்டது. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் இதனை மாற்ற முடியாது. விரைவினில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் என்ற கட்சியை கலைக்க அல்லது நிரந்தரமாய் நீக்குவதற்கு மக்கள் தயாராகி வருகின்றார்கள். அதன் முதல் எழுச்சிதான் இந்த மாணவர் போராட்டம்.

இத்தனை காலமாய் மாணவர்கள் ஐபிஎல் போட்டி, சினிமா நடிகர், நடிகைகள்  பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. காங்கிரசின் கைக்கூலி போல செயல்பட்டு வந்த திமுகவை இன்றைய மாணவர்கள் ராஜினாமா செய்ய செய்து விட்டார்கள்.

நேற்று முன்தினம் கூட அவருக்கு ராஜினாமா செய்வதற்கு முழு மனதாய்  சொல்லவில்லை. ஆனால் மாணவர்கள் போராட்டத்தால் திமுக பெயர் அழிந்துவிடுமோ என்று பயந்து  இதற்க்கு மேலும் பிகு செய்தால் தமிழ்நாட்டில் திமுக எதிர்காலம் பாழாய் போகும் என்றே  ராஜினாமா செய்தார்.

நீங்கள் 2009 போரின் போதே ராஜினாமா செய்திருக்கலாமே என்ற கேள்விக்கு பதில் இன்னமும் வரவில்லை. தமிழக தேர்தல் தொகுதி பிரச்சினை வந்ததும் எப்படி உடனே ஆதரவு வாபஸ் என்று சொன்னீர்கள்???? அதே போன்று அன்றே சொல்லி இருந்தால் எத்தனை எத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்!!


உண்மையில் ஈழத்  தமிழன் மீது உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இன்று இத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். டெசோ மாநாடு போட்டதே வேஸ்ட்...அதில் டெசோ மாநாடு வெற்றிகரமாய் போட்டதற்காக ஒரு வாழ்த்து மாநாடு வேறு...வெக்கமாக இல்லையா உங்களுக்கு?? பிணத்தின் மீது ஏறி நின்று பெயர் வாங்குவதுதான் நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு செய்யும் நன்றிக் கடனா?

காங்கிரஸ்  கட்சி அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தை செவ்வனே செய்தார்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யக் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் இருந்தே காங்கிரஸ் எட்டப்பன்களை வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு தொடர்ந்து வேதனைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். டெல்லியில் என்ன சொன்னாலும் அதை தெள்ளத் தெளிவான தமிழில் 

மாற்றிப் பேசுவதற்கு ஒரு சிதம்பரம். எப்போது எதைப் பற்றி மக்கள் கேள்வி கேட்டு போராட்டம் செய்தாலும் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் கலைஞரின் அறிவுரைப் படிதான் செய்கின்றோம் என்று சொல்லும் ஞானதேசிகன். அவ்வப்போது கலைஞரையும் அசிங்கப் படுத்தி  பேசுவதற்கு ஒரு இளங்கோவன், ஏன்யா, உன் ஊரு மீனவனை இந்த வேசிக்கு பிறந்த சிங்களவன் சாகடிச்சுக்கிட்டே இருந்தானே, இருக்கிறானே ...அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா?

தமிழினத் தலைவருகிட்டே விஷயத்தை கேட்டா அந்த அம்மா கபட நாடகம் ஆடுது, இந்த அம்மா துரோகம் பண்ணிடுச்சினு தினமும் ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கீரு?


நீங்க என்ன பண்ணீங்க னு தான் கேள்வி கேக்குறோம்...நாங்க நாடாளுமன்றத்துல அழுதோம், கதறினோம்னு சினிமா வசனம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே..எதுக்குய்யா அழுவனும், கதறனும், கைல வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலைஞ்சது யாரு செஞ்ச முட்டாள்தனம், தமிழன் இளிச்சவாயன்னு வெளியே இருந்து எவனும் சொல்லவேண்டாம்..நீங்களே நிரூபிச்சு காம்பிச்சிட்டீன்களே...

ரெண்டு நாளைக்கு முன்னாடி தனியார் தொலைக்காட்சிக்கு பேசுறப்ப ஞானதேசிகன் நாங்க ஈழத் தமிழர்களுக்கு நல்லதுதான் செஞ்சிட்டு வாரோம் னு சொல்றாரு. எது பொம்பள பிள்ளைக சேலையை அவுத்து அசிங்கப்படுத்தி கொன்ன அரக்கனுக்கு சிவப்புக் கம்பளம் விரிச்சதை சொல்றீகளா? மானம் உள்ள எந்த தமிழனும் இந்த வார்த்தைய சொல்ல மாட்டான்,


மாணவர்கள் போராட்டம் இன்னும் முழுமையா வெளி வரலை...ஊருக்கு போன அத்தனை பேரும் அந்தந்த ஊரு மாணவர்களோட சேர்ந்து வீதிக்கு வரணும்....வேற கிரகத்துல இருந்து நம்ம தமிழகத்துக்கு வந்திருக்கிற அத்தனை ஜீவராசிகளும் தமிழர்களோட கலந்து நின்னு போராடனும்...அப்போதான் நியாயம் கிடைக்கும்...கார்கில் போராக இருக்கட்டும், குஜராத் பூகம்பமாகட்டும்...தமிழன்தான் முதல்ல நன்கொடை கொடுப்பான்....ஆனா தமிழக மீனவர்களை சாகடிச்ச, தமிழக பெண்களை அசிங்கப்படுத்தினா ஏன்னு கேட்க ஒரு நாதி கிடையாது!!! இதுதான் தமிழக அரசியல்வாதிகளுக்கு பொழுதுபோக்கு....


எந்த மாணவர்களும் கவலையேபட வேண்டாம்....இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவிற்கு வரவே வராது. ஏன்னா வருங்கால  திமுக விற்கு, கலைஞர் போன்றவர்களுக்கு அதுதான் பொழுதுபோக்கு...வரவிட மாட்டாங்க! இன்னும் மிச்சம் மீதி உள்ளத் தமிழர்களை அவர் இன்னொருவாட்டி உண்ணாவிரதம் இருந்து சாகடிச்சிட்டுத் தான் விடுவாரு.

மாணவர்களே, உங்கள் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ரெகார்டு டான்ஸ் கூட நடத்துவார்கள், தேவைப்பட்டால் ரிகார்டு டான்ஸ் கூட ஆடுவார்கள்...ஐபிஎல் போட்டி நடத்தி அழகிகளை ஆடவிட்டு உங்கள் கவனங்களை திசை திருப்புவார்கள். ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போது உங்களுக்கு நம்மினச் சகோதரிகளின் அறுத்தெறியப்பட்ட மார்புகளே தெரியவேண்டும்,


போராடுவோம்...பிராபகரன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்...

ராஜபக்சே ஒழிக...ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்த சோனியா தலைமை ஒழிக... சோனியாவிற்கு சால்ரா போட்ட அனைத்து கட்சிகளும் ஒழிக...

2 comments:

  1. அருமையான இடுகை, மாணவர்கள் நினைத்தால் தமிழகத்தில் ஒரு மாறுதலை கொண்டுவரமுடியும்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.மாணவர்கள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள சரியான தருணம்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...