பங்காளிங்க..

Thursday, January 31, 2013

ஏசி காரு வச்சு படம் காட்டும் பதிவர்களுக்கு????

நம்ம ஊருல இப்போ எல்லாம் கார் வச்சிருக்கலைனா அவன பரம ஏழையா, பண்டாரப் பரதேசியாத் தான் பாக்குராக....

எங்கே வேலை பாக்குற? அட்லீஸ்ட் ஒரு மாருதி கார்?  சரி மாருதி கார் இருக்குன்னு சொன்னா, உடனே ஏசி வண்டி.................................தானே? னு ஒரு இழுவை.....

இந்த ஏசி காரை வச்சிக்கிட்டு படம் காட்டும் பதிவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை!!

ஊரெல்லாம் வெயிலுக்குள்ளே சுத்த வேண்டியது, அப்புறமா காருக்குள்ளே ஏறியதும்...ஜாக்சன் பாட்டு, இல்லேனா ஒரு ராஜா சார் பாட்டை போட்டுக்கிட்டு கூலிங் கிளாசை நல்லா ஏத்திகிட்டு அப்படியே ஏசியை போட்டுக்கிட்டு சும்மா 120 கிலோ மீட்டர் வேகத்துல சிட்டியை வலம் வந்தா எப்படி இருக்கும் தெரியுமா?

சூப்பராத்தான் இருக்கும்? நம்ம ஊருல அடிக்கிற வெயிலுக்கு இந்த சுகம் நல்லாத்தான் இருக்கும்....சொர்க்கமே வருமே....உண்மைதான் நாம கேன்சருல பரலோகம் போனா சொர்க்கமே வரத்தானே செய்யும்....

என்ன கேன்சரா? ஆமாங்க....வண்டிக்குள்ளே ஏறுனதும் கொஞ்ச நேரம் கண்ணாடி கிளாசை எல்லாம் திறந்து வச்சிட்டு அப்புறமா வண்டியை ஸ்டார்ட் செய்யணும்...அதுக்கப்புறமா ஏசியை போடுங்க...அதை விட்டுட்டு எடுத்தவுடனே கண்ணாடிய மூடிட்டு ஏசியை போட்டா சீக்கிரம் சொர்க்கம் போயிடுவீங்க.....

அமெரிக்காவுலே எடுத்த ஆராய்ச்சியிலே சொல்றது என்னானா...வண்டி போயிட்டு நிக்குரப்ப வண்டிக்குள்ளே இருக்கிற சூடு, வெப்பம், வண்டியிலே இருக்கிற பிளாஸ்டிக் ல எல்லாம் பட்டு பென்சீன் ங்கிற வேதியியல் உருவாகி இருக்கும்...இந்த பென்சீன் என்ன செய்யும்...கழுதை அதுபாட்டுக்கு உருவாகிட்டு போகுதுன்னு நினைக்காதீங்க...அது நம்மளோட எலும்பு, தோல், சருமம், மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை விசமா மாத்திடும்....அதுக்கப்புறம் என்ன? கொஞ்சம், கொஞ்சமா புற்றுநோயை உருவாக்கிடும்...இது நமக்கு தேவையா? பிறந்த எல்லாவனுக்கும் சாவு நிச்சயம்...அது எப்படி வேணுமினாலும் இருந்திட்டு போவுதுன்னு வெட்டி பந்தா பேசுறவன் எல்லாருக்கும் சொல்றது என்னானா....கருமம் நீ போறதா இருந்தா பரவாயில்லை...நம்மளோட குழந்தைங்க, இன்னமும் இந்த உலகத்தை முழுசா அனுபவிக்காதவங்க அவங்க இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு போகட்டுமே...என்ன நான் சொல்றது?

சாதாரணமா பென்சீன் அளவு காருக்குள்ளே ஒரு சதுர அடிக்கு 50 மில்லிகிராம் இருந்தா பிரச்சினை இல்லை....ஆனா நல்ல மரத்தடியிலே அல்லது கார் செட்டுக்குள்ளே...கண்ணாடி எல்லாம் மூடிட்டு நிக்குற காருக்குள்ளே...400லே இருந்து 800 மில்லிகிராம் பென்சீன் இருக்குமாம்....

இன்னும் சில இடத்துல நல்லா உச்சி வெயில்ல நிக்குற காருக்குள்ளே 2000 முதல் 8000 மில்லிகிராம் வரைக்கும் பென்சீன் இருக்குமாம்....கருவை சுமக்கிற கர்ப்பிணிங்க முதல் முப்பது நாட்களுக்கு உள்ளே இருந்தா அந்த கருவே கலைஞ்சு போகுமாம்....நாசமா போச்சு! கஷ்டப்பட்டு உருவாக்குன ஒரு கருவை இந்த பாழாய் போன ஏசி காத்து புடுங்கனுமா என்ன? கொஞ்சம் சிந்தியுங்க...உங்களை ஏசி காரு வாங்காதீங்க னு சொல்லல....ஏசி காரு வாங்கினாலும் நல்ல காத்தை கொஞ்ச நேரம் சுவாசிட்டு அப்புறமா ஏசியை போட்டுகோங்க...

உடனே ...சில லொள்ளு பிடிச்ச பதிவருங்க...என்கிட்டேதான் சைக்கிளே இல்லையே...அதுனால எனக்கு இது தேவை இல்லைன்னு சொல்வாங்க...என்னிக்காவது ஏசி காரு வாடகைக்கு எடுப்பீகளே...அப்போ இது தேவைப்படுமே.....

இன்னும் சிலரு எங்க ஊருல வெயிலே கிடையாது, நாங்க கொடைக்கானல்...ஊட்டியிலே இருக்கோம்..எங்களுக்கும் இது தேவைப்படாதுன்னு சொல்வாங்க..தெய்வமே...உங்களுக்குத்தான் பென்சீன் அளவு அதிகமா இருக்கும்....ஏன்னா வெளியிலே இருக்கிற குளிருல வண்டி அதிகமா எனெர்ஜி எடுக்கும்...அப்போ அதிக அளவுல சூடு உற்பத்தி ஆகும்...அப்போ காருக்குள்ள இருக்கிற சீட், டேஸ் போர்டு ரொம்ப சூடாகுமாம்...வேற வழியே கிடையாது...நீங்களும் இதை பாலாப் பண்ணித்தான் ஆகணும்....

பென்சீன் அதிகமா இருக்கிற நேரத்துல ஏசி காத்து பட்டதும்...அந்த இடம் அந்த பிளாஸ்டிக் குள்ள இருக்கிற பென்சீன் என்கின்ற விசத்தை தூண்டி நம்ம சுவாசிக்கிற காத்துக்குள்ள கலந்திடுது....நம்ம சந்ததி நல்லா வளரனுமினா கொஞ்சம் புரிஞ்சிகோங்க....

Monday, January 28, 2013

சென்னையில் விமானம் தலைகுப்புற கவிழ்ந்தது??!! உயிர்சேதம் இல்லை...

சென்னை மீனம்பாக்கத்தில் குடியரசு தினம் அன்று காலையில் ஒரு விமானம் தலைகுப்புற விழுந்தது. விமான நிலையத்தில் பணிபுரியும் எனது நண்பன் அவனது செல் போனில் எடுத்த காட்சி இது...உயிர்சேதம் எதுவும் இல்லை என அவன் தெரிவித்தான்..இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு மட்டும் தலையில் பலத்த அடி என்றும் தெரிவித்தான்.....

எந்த நாளேடுகளிலும் வராத செய்தி இது.....
ஏன் இந்த செய்தி வெளியிடப் படவில்லை என்று தெரியவில்லை????


 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????
 ????????

 ????????

பாருங்க...விமானம் எப்படி தலைகுப்புற விழுந்திருக்குன்னு!!! பைலட் கூட உள்ளே இருக்காரு பாருங்க...மீனம்பாக்கத்துல விமான நிலையத்துல வேலை பாக்குற என்னோட நண்பனோட வீட்டுல எடுத்தது..இது வதந்தி இல்லீங்க...

Thursday, January 24, 2013

கற்பழிச்சா பாதுகாப்பு? இது எந்த நாட்டில்??

ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி அவளது விருப்பமில்லாமல் கற்பழித்தால் என்ன தண்டனை என்று உலகமே சட்ட ரீதியான நடவடிக்கைகளில் கடுமையாக இருக்கின்றது. ஆனால் பெண்ணை தெய்வமாக போற்றும் இந்தியாவில்????

இன்னமும் கட்டபஞ்சாயத்து தான் நடந்துக்  கொண்டிருக்கின்றது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டா என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் தீர்ப்புகள் காலம் தாழ்த்தி வழங்கப் படுகின்றது. எதற்கு??? அடுத்த குற்றம் எப்போது என்று காத்திருக்கவா?

நாம் மென்மையாய் கருதும் அனைத்திற்குமே பெண்களை ஒப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அந்த மென்மைக்கு மேன்மை சேர்ப்பதில் மட்டும் வேறுபட்டு நிற்கின்றோம். இன்னமும் அனைத்து ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு விமர்சனம் மட்டுமே செய்துகொண்டு வருகின்றது. இன்னமும் பல கட்சிகள் கற்பழிப்பு சம்பவத்திற்கு என்ன தண்டனை என்று வாய் திறக்கவில்லை. 

ஆனால் பல நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு தண்டனைகள் மிகக் கொடுமையானதாய் இருக்கும்போது இந்தியாவில் மட்டும்?????

வித்யாசத்தை பாருங்கள்...

யுஏஇ  - ஏழு நாட்களுக்குள் தூக்கில் தொங்கவைத்து மரணதண்டனை...
ஈரான் - 24 மணிநேரத்திற்கு கற்களால் தாக்கி பொது இடத்தினில் தூக்குத் தண்டனை...
ஆப்கானிஸ்தான் - பொது இடத்தினில் தூக்கிலிட்டு தலையில் குண்டு வைத்து சுட்டுத் தள்ளப்படுவார்கள்..
சீனா - நீதி விசாரணை நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை...
மலேசியா - மரணதண்டனை....
மங்கோலியா - மரணதண்டனை பாதிக்கப்பட்டவர்களின் மூலமாகவே!! 
ஈராக் - கடைசி மூச்சு வரை கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்.
தாலிபான் - ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எடுத்து, கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாகியால் சுட்டும் கொல்லப் படுவார்கள்.
இந்தியா -  ????????????????????????????????????????????????

தினமும் 4 நேரமும் அரசு செலவில் சாப்பாடு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு...இப்படி 7இல் இருந்து 14 வருஷம் வரைக்கும்...வேடிக்கையாக இருக்கிறதா? ஆனால்  வேடிக்கையில் ஒரு வேதனையான செய்தி இதுவே ஆகும்....

கற்பழித்த காமுகனுக்கு, குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை என்றதும் எங்கிருந்துதான் வருவாங்கன்னே தெரியாது...இந்த மனித உரிமை பாதுகாப்புக் காவலர்கள்...!!!!!!!!!!!!

Sunday, January 20, 2013

பஸ்சுல போய்...ய்...ய்....?........ச்சே!!!

எதை, எதை, எங்கே பண்ணனும்னு ஒரு விவஸ்தை வேணாம் அல்லது இதை செய்ய வேற இடமே கிடைக்கலையா இவங்களுக்கு! என்ன உலகமோ! காலம் ரொம்ப மாறிடுச்சே...இதைத்தாங்க சொன்னேன்...கடைசி மூணு படம் நம்ம ஊருல எடுத்தது...எப்படி அலங்(காரமா)கோலமா இருக்கு பாருங்க...

Wednesday, January 16, 2013

பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.....


இந்த பதிவினைப் படித்த பிறகு கண்டனங்களை தெரிவிப்பதோ அல்லது பாராட்டுவதோ உங்கள் விருப்பம். ஆனால் எச்சரிக்கை கொடுக்க வேண்டியது எனது கடமை. 

நாம் எத்தனையோ பிரச்சனைகளை அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வருகின்றோம். போலி ஆவணம்,  போலியான தங்கம், போலியான மருந்துகள், போலி மருத்துவர்கள், போலி சாமியார்கள், இப்படி பல விசயங்களில் போலிகளை சந்திக்கும் நாம் அடுத்து சந்தித்து கொண்டிருப்பது போலி எரிவாயு உருளைகள்..இந்தியாவின் வியாபார முத்திரையான ஐ எஸ் ஐ யோடு இண்டேன் , ஹெச்பி போன்ற உருளைகளோடு கலந்து வருகின்றது. 

எத்தனையோ ஊழல்கள்...அதில் இதுவும் ஒன்று, எதில்தான் போலி இல்லை என்று நினைகிண்றீர்களா? மற்ற பொருட்கள் எப்படி என்று தெரியாது...ஆனால் இது ஆளையே அடையாளம் தெரியாமல் அழிக்கும் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு என்பதை மறக்காதீர்கள். மக்களின் உயிரோடு விளையாட துணிந்து செயல்படுத்தி இருக்கின்றது ஒரு நிறுவனம். 

இது சீனா தயாரிப்பு அல்ல, இந்தியாவின் சட்டிஸ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த அக்கிரமம் நடந்தேறி இருக்கின்றது. இது ஏன் ஊடகங்களில் பிரபலமாகவில்லை என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இது எவ்வளவு முக்கியமான செய்தி? ஏன் இது வெளியிடப் படவில்லை? ஒரு அரசாங்கம் தயாரிக்கும் ஒரு பொருளை அவர்கள் பெயரிட்டு சாதாரண மனிதன் எப்படி துவங்க முடியும்..அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்தது யார்? வேறு யாரெல்லாம் இதில் தலையிட்டிருக்கின்றார்கள்? 

எத்தனை பேருக்கு இந்த விஷயம்  தெரியும்? போலி எரிவாயு உருளைகளை எப்படி அடைத்து வைத்து வெளியிடுகின்றார்கள்? அவர்கள் வேறு பெயர் வைத்து வெளியிட்டால் அது தனியார் மயமாகி விடும், ஆனால் அரசாங்க விளம்பரத்தில் தனது எரிவாயு உருளைகளை பயன்படுத்துவது என்பது அசா....தா....ர...ண...மான ஒன்று. 

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள்..இது பாஸ்கர்.காம் என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவலாகும்.  


ஆதாரம் : www.bhaskar.com நன்றி...

Wednesday, January 9, 2013

அட ராமா! இதுதான் காதலா?

ஊரு உலகத்துல வர்றவன் போறவன் எல்லாம் காதல், காதல்னு பினாத்திகிட்டு இருக்கான்..

முளைச்சு மூணு இலை  விடலை.அதுக்குள்ளே காதல், கத்திரிக்காயினு   சுத்த வேண்டியது...அப்புறம் அவன் என்னை ஏமாத்திட்டான், கை கழுவிட்டானு புலம்ப வேண்டியது....
 
அல்டாப்பு காதல்

இல்லேனா ஒரு படி மேல போயி அவன் என்னை கெடுத்திட்டான், கல்யாணம் செய்வான்னு நம்பி என்னைக் கொடுத்திட்டேன்னு புலம்பவேண்டியது...

காதல்னா என்ன தெரியுமா?

இந்த லின்க்கை கிளிக் பண்ணிப் பாருங்க..

தெய்வீக காதல்

அந்த பொண்ணு ஒரு பெரிய விபத்துல அடிபட்டு கோமாவுக்கு போயிடுச்சாம்...அதுக்கு அப்புறமா அவளோட காதலன்தான் அவளுக்கு எல்லாமே... அவளை தினமும் கவனிச்சு, அவளுக்கு ஊக்கம் கொடுத்து இப்போ எவ்வளவோ முன்னேறி இருக்காளாம். விபத்து நடந்தது 2009 ஆம் வருசமாம். காதலர்களே....இந்த காணொளிக் காட்சி அனைத்து உண்மையான காதலர்களுக்கு அர்ப்பணம். ஆர்த்தி விரைவில் பூரண குணமடைந்து அவரோடு சேர்ந்து வாழ எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

என்னவோ என் மனம் மிகவும் பாதித்ததால் இதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகின்றேன்...இது ஏற்கனவே பதிவேற்றி இருந்தால் என்னை மன்னிக்கவும்..

Tuesday, January 8, 2013

டெல்லி "நிர்பயா" வின் ஓர் எச்சரிக்கை கடிதம்!!!

டிசம்பர் 16 இல் காம வெறியர்களால் சீரழித்துக் கொல்லப்பட்ட "டாமினி" என்ற நிர்பயாவால் மூச்சுக்கூட விட முடியாததால் நிறைய விசயங்களை எழுதிக் காட்டியதாக தகவல். அப்போது அவளது அம்மாவிற்கு அவள் எழுதிய கடிதம் ஒன்று. அவள் இறந்த பிறகு தற்போது அது வெளிவந்திருக்கின்றது.

என்னை மன்னிச்சிடும்மா....

என்னால போராடமுடியலை...

எனக்கு நல்லா நியாபகம் இருக்கு...நீயும், அப்பாவும் என்கிட்டே உன் எதிர்காலத்துல என்னவா ஆகப் போறே னு கேட்டே...அதுக்கு நான் எல்லாரும் உடம்பு வலி யால துடிக்கிறாங்க...அந்த வலியை  போக்குறதுக்கு நான் பிசியோதெரபிஸ்ட் டா ஆகப் போறேன்னு சொன்னேன்..இன்னிக்கு என் உடம்புல இருக்கிற வலியை கூட என்னால தாங்க முடியலை அம்மா...

டாக்டர்ஸ் எல்லோரும் என் உடம்புல கை வைக்கிறப்ப எல்லாம் அந்த கொடூரமானவங்க கை வைக்கிற மாதிரியே இருக்கும்மா..வலி தாங்க முடியலையம்மா.....

என்னால மூச்சு விட முடியலேன்னு ஆக்ஷிஜென் கொடுக்கிறாங்க....அதுல கூட அந்த நாய்களோட வியர்வை நாத்தம் வந்துகிட்டே இருக்குதும்மா...
எனக்கு பயமா இருக்குதுமா..பயமா இருக்குதுன்னு கண்ணை மூடினா...அந்த இருட்டு எனக்கு அந்த நாய்களோட போராடுன இருட்டா தெரியுதும்மா..நான் 

அவங்களுக்கு ஒரு மாமிசமா தெரிஞ்சேனாம்மா.....இப்படி கடிச்சி குதறித் துப்பிட்டான்களே ம்மா....

என் முகத்தை என்னாலேயே கண்ணாடியிலே பார்க்கமுடியலையம்மா ....பிளீஸ் அம்மா இங்கே இருக்கிற கண்ணாடியை எல்லாம் உடைச்சு போட்டிடும்மா....

என்னை குளிக்கிறதுக்கு கூட்டிக்கிட்டு போம்மா....நான் என்னோட ஆயுசு முழுவதும் குளிச்சாலும் அந்த நாய்களோட உடம்பு வாசம் என்னை சித்திரவதை பன்னுதும்மா....பிளீஸ் அம்மா...என்னை குளிப்பாட்டிகிட்டே இரும்மா....சத்தியமா சொல்றேன்மா..என்னோட வயித்துல அப்படி ஒரு வலி, எந்திரிக்க கூட முடியலையம்மா ......

என்னால தலையை கொஞ்சமா தூக்கிக் கூட பார்க்க முடியலைம்மா...யாரோ என்னை முறைச்சு பாக்குற மாதிரியே இருக்குதும்மா..ப்ளீஸ் மா என்னை விட்டு எங்கியும் போகாதேம்மா.......ஊருக்குள்ள வெறி பிடிச்ச நாயிங்க இருக்கிறது தெரியாம உன்னை விட்டுட்டு போனது தப்புதான்மா...என்னை மன்னிச்சிடும்மா..தப்புதான்மா......நான் உன்னை விட்டு போனது..அதுக்காக நீ என்னை விட்டு போயிடாதேம்மா..

அம்மா...இந்த மெடிக்கல் மெசின்ல வர்ற சத்தம்..அந்த நடுநிசியிலே சத்தமே இல்லாத இடத்துல நான் முனங்குன சத்தம் மாதிரியே இருக்குதும்மா...பிளீஸ் மா...இந்த சத்தத்தை கொஞ்சம் நிப்பாட்டிடும்மா....இந்த ரூமுல இருக்கிற மயான அமைதி என்னை என்னென்னவோ சித்திரவதைப் பண்ணுதும்மா....பிளீஸ்மா யாராவது பேசிக்கிட்டே இருங்கம்மா...

அம்மா...உனக்கு நியாபகம் இருக்குதா? சின்ன வயசிலே நீ என்னை அடிச்சதுக்கு அப்பா அழுதாரே...அவருக்கு தெரியுமாம்மா, வெறி பிடிச்ச நாயிங்க என்னை குதறிப் போட்ட விஷயம்...துடி, துடிச்சு போயிருப்பாறேம்மா அவரு...அவரை இனிமேலும் அழவிடாதேம்மா!!!

உனக்கு நியாபகம் இருக்குதா? நீ என்னை ஒருவாட்டி அடிச்சப்ப உன்னை எப்படி திட்டினாரு??

இப்போ அந்த அரக்கனுங்க என்னையும் எனது உயிர் நண்பனையும் இரும்புத் தடியால அடிச்சிப் போட்டுட்டானுங்க மா.....என்னை காப்பாத்த அவன் ரத்தம் வழிய போராடினான்மா... அவன் தரையிலே சுருண்டு விழுற வரைக்கும் அவனைத் தடியால அடிச்சு என் கண் முன்னாடியே தூக்கி எறிஞ்சிட்டான்கம்மா!!! 

என்னையும் மாறி...மாறி...!!!!

அம்மா...இனிமேலும் டாக்டர்சை என் உடம்புல கை வைக்கச் சொல்லாதேம்மா..போதும்மா எல்லோரும் கை வைச்சது...அடிவயிறு அநியாயமா வலிக்குதும்மா!!! ....என்னை விட்டு எங்கியும் போகாதேம்மா!! 

உன்னோட மடி கொடும்மா..நான் தூங்கனும்...என்னோட உடம்பை கழுவி விடும்மா...எனக்கு உடம்பு வலிக்காம இருக்க மாத்திரை கொடும்மா..


என்னை மன்னிச்சிடும்மா!! 
இதுக்கு மேல என்னால சொல்ல முடியலை...
போராடவும் முடியலை...
என்னை மன்னிச்சிடும்மா..!!!!


நன்றி...எனக்கு  தகவலை மின்னஞ்சல் மூலமாய் பகிர்ந்துகொண்ட ஜி.கோபாலகிரிஷ்ணனுக்கு நன்றி...

Sunday, January 6, 2013

குடும்ப பெண்களிடம் பாதுகாப்பு உறைகள்???

சில விசயங்களை ஆம்பளைங்களை விட பொண்ணுங்க செஞ்சாத்தான் நல்லா இருக்கும். என்ன விசயம்னு முழுசா படிச்சு பார்த்து தெரிஞ்சிகோங்க...

காலம் ரொம்ப கெட்டு போச்சு. யார் நல்லவன், யார் கெட்டவன் யாருக்கும் தெரியாது!!! முன்னாடி எல்லாம் பார்த்தவுடனே கண்டுபிடிச்சிடலாம்...இப்போ பார்த்து, பழகினா கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சமுதாயம் நாறிப் போய் இருக்கு.

அதுனால நாம நம்மளை பாதுகாத்துகிறது ரொம்ப நல்லது. அதையும் மீறி பல தப்புகள், குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. ஆடைகளை முழுசா இழுத்து மூடிக்கிட்டு நடந்தாலே விரட்டி விரட்டி சீரழிக்கிற கும்பல், அரைகுறை ஆடையோட இருந்தா என்ன ஆகும்? அதுனால முதல்ல நாம கரெக்டா இருக்கோமா னு  கவனிக்க வேண்டி இருக்குது.
 
டெல்லி பேரணியிலே ஒரு பொண்ணு கண்டன அறிக்கைப் படத்தை வச்சிருந்தது. அதுல என்ன சொல்லி இருந்ததுனா "நான் நிர்வாணமாக சென்றால் கூட நீ என்னை கற்பழிக்க கூடாது" என்று போட்டிருந்தது. உண்மைதான்...ஆனால் காம வெறி பிடித்த நாய்களுக்கு அந்த வாசகத்தின் அர்த்தம் தெரியுமா? அவனுக்கு தேவை உடல் பசி...அதனை எப்படி அடைவது என்று வெறியோடு அலைந்து கொண்டிருப்பான்..இன்னமும் இந்தியா ஆணிற்கு, பெண் என்ற சம உரிமையை கொடுக்க வில்லை. அது நடக்கும் போது  நீங்கள் சொல்வது நடக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

அதுனால சமுதாயத்தின் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க சில விசயங்களை பெண்களே விரும்பி செய்தால் நன்றாக இருக்கும். ஆண்கள் தவறாக பார்க்க கூடாது என்று சொல்லும் பெண்கள், தங்களது உடைகளை அரை குறையாக எடுத்துச் செல்லும்போது யாருக்குமே சபலம் வரத்தான் செய்யும். பெண் கற்புடையவள் என்பதை இந்தியா நமக்கு உணர்த்துகின்றது. அந்த மேன்மையை அவர்களுக்கு மட்டும் சிறப்பாக்கி கொடுத்திருக்கின்றது. பெண்ணுக்கும் மட்டும்தானா கற்பு, ஆண்களுக்கு இல்லையா? நியாயமான கோரிக்கை. ஆனால் இந்தியா இன்னமும் முழுமையான ஆணாதிக்கத்தில் இருந்து மீளவில்லையே...இந்தியா சம ஆண், பெண் உரிமைகளோடு வாழும்போது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம். தவறில்லை.

பாதுகாப்பாய் வாழ விரும்பும் பெண்களுக்கு சில ஆலோசனைகள். இது பதிவராய் இருக்கும் எனது அனைத்து அன்பு சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றேன்...இதனை படிக்கும் பெற்றோர் மற்றும் தோழர்களுக்கும் தெரிவிக்க விருப்படுகின்றேன்.
 1. சாலையைச் சுற்றி நடக்கும்போது விழிப்புணர்வோடு நடந்து செல்லுங்கள். வேறு சிந்தனைகள், தடுமாற்றம் காம வெறியர்களின் பார்வைகளில் படும்போது தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றது. குறிப்பாய் தற்போதுள்ள பெண்கள் செல் போனில் கவனத்தை வைத்துக் கொண்டு சாலைகளை கடப்பதில் கூட கவனம் சிதருகின்றனர்.
 2. கூடுமானவரை தனிமையான பயணத்தை தவிருங்கள். குறைந்தது இன்னொரு நபரோடு பயணியுங்கள்.
 3. பொது இடத்தில் (விடுதி, வாடகை வீடுகளில்) வசிப்பவர்கள் வழக்கமாய் செல்லும் பாதையில் செல்லாமல் ஒவ்வொரு நாளும் மாற்றுப் பாதையில் பிரயாணம் செய்யுங்கள். ஒரே பாதையில் செல்லும்போது தொடர்ந்து கவனிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. குறிப்பாக கோயிலுக்கு செல்லும் பெண்கள் வியாழக்கிழமை தோறும் அர்ச்சனைக்கு செல்வார்கள்...அன்று வேறு பாதையில் கோயிலுக்கு செல்லுங்கள்.
 4. நீங்கள் கத்தி, கம்பு எல்லாம் எடுத்து செல்ல வேண்டாம். மிளகாய்ப் பொடி மட்டும் கொண்டு செல்லுங்கள்.
 5.  தொலைதூரப் பிரயாணம் செய்யும்போது கூடுமானவரை பேருந்து படிக்கட்டு வாசல் பக்கமாய் அமர்ந்து கொள்ளுங்கள். சன்னல் ஓரமாய் அமர்ந்து செல்லாதீர்கள். யாராவது உங்களை சூழ்ந்து நிற்கும் போது  தப்பிக்க வழி இருக்காது. வாசல் பக்கமாய் அமரும்போது தப்பிக்க வழிகள் ஆயிரம் இருக்கும்.
 6. நீங்கள் கார் ஓட்டுபவர்களா? தனியாக செல்லும் பிரயாணத்தை தவிர்க்கவும், அல்லது எல்லா கதவுகளையும் நன்றாக மூடி விட்டு ஏறிக்கொள்ளவும். வண்டி கிளம்பும்போது வீடிற்கு தகவல் கொடுத்து விட்டு கிளம்பவும். அது மிகவும் பாதுகாப்பானது.
 7. வாடகை காரில் ஏறும்போது தனியாக செல்லும்போது கூடுமானவரை ஓட்டுனரின் அருகினில் அமர்ந்து கொள்வது மிக்க நல்லது. பின்பக்கம் அமரும்போது உங்களை சுற்றி மூடிக்கொள்ள அவர்களுக்கு வசதியாகி விடும்.
 8. வீட்டிற்கு செல்லும் பாதை தொலைவிலோ அல்லது தனிமையிலோ இருக்கும் போது  அந்த தெருவினில் இருக்கும் வேறு வீடுகளின் பெண்களிடம் தொலைபேசி எண்  அல்லது பாதுகாப்பாய் ஒதுங்க இடம் தேடிக் கொள்ளுங்கள்.
 9. நீங்கள் பொது தொலைபேசியில் போன்  செய்யும்போது வாசல் பக்கமாய் திரும்பி நின்றுக் கொண்டு பேசவும்...அப்போதுதான் நீங்கள் போன்  பேசும் சுவாரசியத்தில் யார் பின்னால் நின்றாலும் உங்களால் அடையாளம் காண முடியும்.
 10. எந்த ஒரு சூழ்நிலையிலும் வீட்டினில் தனியாக இருக்கும் போது கதவுகளை திறக்காதீர்கள்...அது உங்கள் கணவராக இருந்தாலும் சரி..உங்கள் குழந்தைகளுக்கும் இதனை சொல்லிக் கொடுங்கள். முதலில் சன்னல் வழியாக பார்த்து விட்டு அதன் பிறகு கதவினை திறக்கவும்.
 11. எப்போதுமே வீட்டினில் ஆள் இல்லாதது போல் காண்பித்துக் கொள்ளாதீர்கள். வீட்டிற்கு சேல்ஸ்மேன்  வந்தால் நீங்கள் வீட்டினில் தனியாக இருந்தால் கூட கதவை திறந்து கொண்டு "என்னங்க, சோப் பவுடர்" விற்கிறவன் வந்திருக்காங்க" என்று சும்மானாச்சும் ஒரு குரலை உள்ளே கொடுத்து வையுங்கள். உள்ளே யாரோ இருக்கிறார்கள் போலும் என்று அவன் தயங்குவது தெரிய வரும்.
 12. அடையாளம் இல்லாத புது எண்ணில்  இருந்து அழைப்பு வரும்போது கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது. சில ஆண்களே இப்போது அதனை தவிர்க்கும் போது பெண்கள் கண்டிப்பாய் இதனை செய்துகொள்ளுங்கள்.
 13. எங்காவது வேலை நிமித்தமாக புது இடம் செல்லும்போது உங்கள் நண்பர்கள், அல்லது குழந்தைகள் அல்லது உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்லுங்கள். இது நிச்சயம் கல்லூரிப் பெண்களுக்கு உதவும்.
 14. எந்த ஒரு இடத்திலும் நீங்கள் தனிமையில் இருப்பது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். அந்தரங்க விசயங்களை, குடும்ப பிரச்சனைகளை பொது இடத்தினில் விவாதிக்காதீர்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல அடையாளம் தெரியாத ஆண்கள் ஆயிரம் பேர் வருவார்கள்.
 15. உங்களை யாரோ பின்தொடர்வது போல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதனை உணரும் பட்சத்தில் நீங்கள் பதட்டமாய் இருப்பது போல் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுங்கள். எல்லா மக்களும் உங்களை பார்க்கும் பொது குற்றவாளி காணாமல் போவான். அந்த நேரத்தில் எல்லா பெண்களும் செய்யும் தவறு யாரிடமும் சொல்லாமல் அவசர அவசரமாய் ஒரு ஆடோ அல்லது கார் பிடித்து தப்பித்து செல்ல முயற்சிப்பார்கள். அது குற்றவாளிக்கு அவர்களை பின் தொடர எதுவாகி விடும்.
  இந்த 15 விவரங்களையும் பெண்கள் செய்தால் பாதுகாப்பாய் செல்லலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.  குறிப்பு: இது பலதரப்பட்ட குடும்ப பெண்களிடம் சேகரித்த பாதுகாப்பு "உறை"கள்.

Thursday, January 3, 2013

இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?

கேஸ் சிலிண்டர் விலையா? உடனே ஏத்துறீங்க..பெட்ரோல் விலையா உடனே ஏத்துறீங்க! ஆனா குற்றம் செஞ்ச கபோதிகளுக்கு தீர்ப்பு வழங்குரதுல ஏனிந்த தாமதம்னு தெரியல... நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் ஒரு பொண்ணு, அல்லது ஒரு குழந்தை கற்பழிக்கப்பட்டுக் கிட்டுத்தான் இருக்கு,,,டெல்லி பொண்ணை  கற்பழிச்ச பிறகு அதே டெல்லியிலே, இன்னும் ரெண்டு பொண்ணை  கற்பழிச்சிருக்கானுங்க...இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க?? தமிழக முதலமைச்சர் ஆண்மையை நீக்கணும்னு யோசனை தெரிவிச்சு இருக்காங்க...அப்படி ஆண்மையை நீக்கிட்டா வரக் கூடிய பிரச்சினை என்னான்னு யோசிக்கணும்...அது நல்ல விசயம்தான்...ஆனா இயற்கையாவே ஆண்மை இல்லாதவன்...அல்லது அந்த அந்த குறைபாடு இருக்கிறவனையும் இந்த சமுதாயம் தப்பா பேசுமே!!!

கற்பழிக்கப்பட்டதர்க்குத் தான் இந்த ஆண்மை நீக்கம் ங்கிறது எத்தனை பேருக்கு பின்னாளில் தெரியும்? தெரிய வரும்? அதை விட "நந்தா" படத்துல வர்ற மாதிரி ஆண்குறியை அந்த பொண்ணு கையாலேயே நறுக்கிட்டா அதை விட சிறந்த தண்டனை உலகத்துலே இருக்க முடியாது, இன்னமும் இந்த சமுதாயமும் ஊடகமும் பாலியல் வன்புணர்விற்கு காரணம் ஆனா, பெண்ணா? யார் என்று அலசிக் கொண்டுதான் இருக்கின்றது. தப்பு செஞ்சா என்ன தண்டனை என்று யோசிக்கும் இந்த சமுதாயமும், அரசும், இந்த தவறு இனிமேல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்று யோசிக்க மறுக்கின்றது!


எல்லாவற்றிற்கும் காரணம் ஊடகங்களின் பங்குதானே தவிர வேறு எதுவுமே கிடையாது. தமிழகத்தை பொறுத்த வரை எந்த ஒரு அரசியல் கட்சியும் சமுதாயத்திற்கு என்று எதுவும் செய்யப் போவதில்லை, என்பது இதிலிருந்தே தெளிவாகின்றது. அப்போதும் கூட அந்த அம்மா யாரையும் கலந்தாலோசிப்பதில்லை என்று தான் நமது பதிவர்களில் ஒரு சிலர் பதிவிடுவார்கள். உண்மைதான்..இருந்தாலும் இது சமுதாயப் பிரச்சினை? இந்த பிரச்சினையில் எந்த அரசியல் கட்சித் தலைவனும் அவனது கருத்தினை சொல்லலாம். அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, ஆட்சியை மாற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். இதைத் தவிர வேறு என்ன அவர்களால் சொல்லிவிட முடியும்? இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். எப்படியாவது முதலமைச்சர் பதவியில் உட்கார வேண்டும், அதற்க்கு யார் செத்தால் என்ன? யார் கற்பிழந்தால் நமக்கென்ன? இதுதானே தற்போது நடக்கின்றது.


எப்படி இதை தடுக்கலாம்? என்ன செய்தால் இந்த குற்றங்களுக்கு தடை போடலாம்? என்று யோசனை கூறியதாய் ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவரை சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம்! அந்த அம்மா கேட்காது என்று ஒரே வரியில் பதில் அளிப்பார்கள் அந்த அம்மா கேட்கலைனா என்ன? மக்களிடம் மேடை போட்டு சொல்லுங்கள், மக்கள் எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்வார்களே!


அதுபோல குற்றம் செய்தவர்களை முகத்தை மூடி அழைத்து செல்வதை முதலில் தடுக்க வேண்டும்...குற்றம் செய்தவனை பகீரங்கமா அழைத்து செல்ல வேண்டும்...உலக மக்களுக்கு அவன் யார் என்ற விவரம் தெரிய வேண்டும்...அவனது குடும்பத்தார் அதனை பார்க்க வேண்டும்..அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்..தற்போது டெல்லியில் பாலியல் வன்புணர்வு கொண்ட அந்த காமக் கொடுரனின் முகம் யாருக்காவது தெரியுமா? எனக்கு தெரியாது? பாதிக்கப்பட்ட பெண்ணின் முகமும் தெரியாது, பாதிப்பை ஏற்படுத்திய குற்றவாளியின் முகமும் தெரியாது!!


அந்த பெண்ணின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி அந்த பெண்ணின் முகத்தை வேண்டுமானால் மறைத்திருக்கலாம். ஆனால் குற்றவாளிக்கு இன்னமும் என்ன எதிர்காலத்தை கொடுக்க நினைக்கின்றார்கள். அவனது முகத்தை ஏன் மறைக்க வேண்டும்? அப்படி எனில் உண்மையில் இன்னமும் குற்றவாளியை காவல்துறை கைது செய்யாமல் மக்களை திருப்திப் படுத்த போலியான நபரை கைது செய்து நாடகம் ஆடுகின்றதா?


அது போல நாளிதழ்களின் சில செய்திகள் வேடிக்கையாய் இருக்கும்...உதாரணத்திற்கு ஜிக்கியாவில் 43வது தெருவில் வசிக்கும் சொன்னன் என்ற காவலாளியின் இரண்டாவது மகள் சுமி வயது 17 (பெயர் மாற்றப் பட்டு உள்ளது) இதுக்கு அப்புறம் எதுக்குயா பெயரை மட்டும் மாத்துறீங்க? அந்த பொண்ணோட ஊரு, தெரு பேரு, அப்பன் பேரு, அது எத்தனாவது பொண்ணு, அதோட வயசு எல்லாத்தையும் போட்டாச்சு, அப்புறம் என்ன ***** பெயரை மாத்தணும்.?...அப்படி பத்திரிகை தர்மத்தை காப்பாத்துரான்கலாம், அட ராமா, அல்லா, ஏசுவே? இதுவே அவுக வீட்டுப் பொன்னா இருந்தா இப்படி செய்வாங்களா? எவ்வளவு விலை கொடுத்துனாலும் பிரச்சினைய மூடி மறைக்கத்தான் பார்ப்பாங்க..


தயவு செஞ்சு குற்றவாளிகளுக்கு உடனடியான தண்டனையா உடனே கொடுங்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலர் கருகிப் போகுறத எங்களால ஜீரணிச்சிக்க முடியல!!!