சில விசயங்களை ஆம்பளைங்களை விட பொண்ணுங்க செஞ்சாத்தான் நல்லா இருக்கும். என்ன விசயம்னு முழுசா படிச்சு பார்த்து தெரிஞ்சிகோங்க...
காலம் ரொம்ப கெட்டு போச்சு. யார் நல்லவன், யார் கெட்டவன் யாருக்கும் தெரியாது!!! முன்னாடி எல்லாம் பார்த்தவுடனே கண்டுபிடிச்சிடலாம்...இப்போ பார்த்து, பழகினா கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சமுதாயம் நாறிப் போய் இருக்கு.
அதுனால நாம நம்மளை பாதுகாத்துகிறது ரொம்ப நல்லது. அதையும் மீறி பல தப்புகள், குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. ஆடைகளை முழுசா இழுத்து மூடிக்கிட்டு நடந்தாலே விரட்டி விரட்டி சீரழிக்கிற கும்பல், அரைகுறை ஆடையோட இருந்தா என்ன ஆகும்? அதுனால முதல்ல நாம கரெக்டா இருக்கோமா னு கவனிக்க வேண்டி இருக்குது.
காலம் ரொம்ப கெட்டு போச்சு. யார் நல்லவன், யார் கெட்டவன் யாருக்கும் தெரியாது!!! முன்னாடி எல்லாம் பார்த்தவுடனே கண்டுபிடிச்சிடலாம்...இப்போ பார்த்து, பழகினா கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சமுதாயம் நாறிப் போய் இருக்கு.
அதுனால நாம நம்மளை பாதுகாத்துகிறது ரொம்ப நல்லது. அதையும் மீறி பல தப்புகள், குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. ஆடைகளை முழுசா இழுத்து மூடிக்கிட்டு நடந்தாலே விரட்டி விரட்டி சீரழிக்கிற கும்பல், அரைகுறை ஆடையோட இருந்தா என்ன ஆகும்? அதுனால முதல்ல நாம கரெக்டா இருக்கோமா னு கவனிக்க வேண்டி இருக்குது.
டெல்லி பேரணியிலே ஒரு பொண்ணு கண்டன
அறிக்கைப் படத்தை வச்சிருந்தது. அதுல என்ன சொல்லி இருந்ததுனா "நான்
நிர்வாணமாக சென்றால் கூட நீ என்னை கற்பழிக்க கூடாது" என்று போட்டிருந்தது.
உண்மைதான்...ஆனால் காம வெறி பிடித்த நாய்களுக்கு அந்த வாசகத்தின் அர்த்தம்
தெரியுமா? அவனுக்கு தேவை உடல் பசி...அதனை எப்படி அடைவது என்று வெறியோடு
அலைந்து கொண்டிருப்பான்..இன்னமும் இந்தியா ஆணிற்கு, பெண் என்ற சம உரிமையை
கொடுக்க வில்லை. அது நடக்கும் போது நீங்கள் சொல்வது நடக்க வாய்ப்புகள்
இருக்கின்றது.
அதுனால சமுதாயத்தின் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க சில விசயங்களை பெண்களே விரும்பி செய்தால் நன்றாக இருக்கும். ஆண்கள் தவறாக பார்க்க கூடாது என்று சொல்லும் பெண்கள், தங்களது உடைகளை அரை குறையாக எடுத்துச் செல்லும்போது யாருக்குமே சபலம் வரத்தான் செய்யும். பெண் கற்புடையவள் என்பதை இந்தியா நமக்கு உணர்த்துகின்றது. அந்த மேன்மையை அவர்களுக்கு மட்டும் சிறப்பாக்கி கொடுத்திருக்கின்றது. பெண்ணுக்கும் மட்டும்தானா கற்பு, ஆண்களுக்கு இல்லையா? நியாயமான கோரிக்கை. ஆனால் இந்தியா இன்னமும் முழுமையான ஆணாதிக்கத்தில் இருந்து மீளவில்லையே...இந்தியா சம ஆண், பெண் உரிமைகளோடு வாழும்போது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம். தவறில்லை.
பாதுகாப்பாய் வாழ விரும்பும் பெண்களுக்கு சில ஆலோசனைகள். இது பதிவராய் இருக்கும் எனது அனைத்து அன்பு சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றேன்...இதனை படிக்கும் பெற்றோர் மற்றும் தோழர்களுக்கும் தெரிவிக்க விருப்படுகின்றேன்.
அதுனால சமுதாயத்தின் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க சில விசயங்களை பெண்களே விரும்பி செய்தால் நன்றாக இருக்கும். ஆண்கள் தவறாக பார்க்க கூடாது என்று சொல்லும் பெண்கள், தங்களது உடைகளை அரை குறையாக எடுத்துச் செல்லும்போது யாருக்குமே சபலம் வரத்தான் செய்யும். பெண் கற்புடையவள் என்பதை இந்தியா நமக்கு உணர்த்துகின்றது. அந்த மேன்மையை அவர்களுக்கு மட்டும் சிறப்பாக்கி கொடுத்திருக்கின்றது. பெண்ணுக்கும் மட்டும்தானா கற்பு, ஆண்களுக்கு இல்லையா? நியாயமான கோரிக்கை. ஆனால் இந்தியா இன்னமும் முழுமையான ஆணாதிக்கத்தில் இருந்து மீளவில்லையே...இந்தியா சம ஆண், பெண் உரிமைகளோடு வாழும்போது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம். தவறில்லை.
பாதுகாப்பாய் வாழ விரும்பும் பெண்களுக்கு சில ஆலோசனைகள். இது பதிவராய் இருக்கும் எனது அனைத்து அன்பு சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றேன்...இதனை படிக்கும் பெற்றோர் மற்றும் தோழர்களுக்கும் தெரிவிக்க விருப்படுகின்றேன்.
- சாலையைச் சுற்றி நடக்கும்போது விழிப்புணர்வோடு நடந்து செல்லுங்கள். வேறு சிந்தனைகள், தடுமாற்றம் காம வெறியர்களின் பார்வைகளில் படும்போது தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றது. குறிப்பாய் தற்போதுள்ள பெண்கள் செல் போனில் கவனத்தை வைத்துக் கொண்டு சாலைகளை கடப்பதில் கூட கவனம் சிதருகின்றனர்.
- கூடுமானவரை தனிமையான பயணத்தை தவிருங்கள். குறைந்தது இன்னொரு நபரோடு பயணியுங்கள்.
- பொது இடத்தில் (விடுதி, வாடகை வீடுகளில்) வசிப்பவர்கள் வழக்கமாய் செல்லும் பாதையில் செல்லாமல் ஒவ்வொரு நாளும் மாற்றுப் பாதையில் பிரயாணம் செய்யுங்கள். ஒரே பாதையில் செல்லும்போது தொடர்ந்து கவனிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. குறிப்பாக கோயிலுக்கு செல்லும் பெண்கள் வியாழக்கிழமை தோறும் அர்ச்சனைக்கு செல்வார்கள்...அன்று வேறு பாதையில் கோயிலுக்கு செல்லுங்கள்.
- நீங்கள் கத்தி, கம்பு எல்லாம் எடுத்து செல்ல வேண்டாம். மிளகாய்ப் பொடி மட்டும் கொண்டு செல்லுங்கள்.
- தொலைதூரப் பிரயாணம் செய்யும்போது கூடுமானவரை பேருந்து படிக்கட்டு வாசல் பக்கமாய் அமர்ந்து கொள்ளுங்கள். சன்னல் ஓரமாய் அமர்ந்து செல்லாதீர்கள். யாராவது உங்களை சூழ்ந்து நிற்கும் போது தப்பிக்க வழி இருக்காது. வாசல் பக்கமாய் அமரும்போது தப்பிக்க வழிகள் ஆயிரம் இருக்கும்.
- நீங்கள் கார் ஓட்டுபவர்களா? தனியாக செல்லும் பிரயாணத்தை தவிர்க்கவும், அல்லது எல்லா கதவுகளையும் நன்றாக மூடி விட்டு ஏறிக்கொள்ளவும். வண்டி கிளம்பும்போது வீடிற்கு தகவல் கொடுத்து விட்டு கிளம்பவும். அது மிகவும் பாதுகாப்பானது.
- வாடகை காரில் ஏறும்போது தனியாக செல்லும்போது கூடுமானவரை ஓட்டுனரின் அருகினில் அமர்ந்து கொள்வது மிக்க நல்லது. பின்பக்கம் அமரும்போது உங்களை சுற்றி மூடிக்கொள்ள அவர்களுக்கு வசதியாகி விடும்.
- வீட்டிற்கு செல்லும் பாதை தொலைவிலோ அல்லது தனிமையிலோ இருக்கும் போது அந்த தெருவினில் இருக்கும் வேறு வீடுகளின் பெண்களிடம் தொலைபேசி எண் அல்லது பாதுகாப்பாய் ஒதுங்க இடம் தேடிக் கொள்ளுங்கள்.
- நீங்கள் பொது தொலைபேசியில் போன் செய்யும்போது வாசல் பக்கமாய் திரும்பி நின்றுக் கொண்டு பேசவும்...அப்போதுதான் நீங்கள் போன் பேசும் சுவாரசியத்தில் யார் பின்னால் நின்றாலும் உங்களால் அடையாளம் காண முடியும்.
- எந்த ஒரு சூழ்நிலையிலும் வீட்டினில் தனியாக இருக்கும் போது கதவுகளை திறக்காதீர்கள்...அது உங்கள் கணவராக இருந்தாலும் சரி..உங்கள் குழந்தைகளுக்கும் இதனை சொல்லிக் கொடுங்கள். முதலில் சன்னல் வழியாக பார்த்து விட்டு அதன் பிறகு கதவினை திறக்கவும்.
- எப்போதுமே வீட்டினில் ஆள் இல்லாதது போல் காண்பித்துக் கொள்ளாதீர்கள். வீட்டிற்கு சேல்ஸ்மேன் வந்தால் நீங்கள் வீட்டினில் தனியாக இருந்தால் கூட கதவை திறந்து கொண்டு "என்னங்க, சோப் பவுடர்" விற்கிறவன் வந்திருக்காங்க" என்று சும்மானாச்சும் ஒரு குரலை உள்ளே கொடுத்து வையுங்கள். உள்ளே யாரோ இருக்கிறார்கள் போலும் என்று அவன் தயங்குவது தெரிய வரும்.
- அடையாளம் இல்லாத புது எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது. சில ஆண்களே இப்போது அதனை தவிர்க்கும் போது பெண்கள் கண்டிப்பாய் இதனை செய்துகொள்ளுங்கள்.
- எங்காவது வேலை நிமித்தமாக புது இடம் செல்லும்போது உங்கள் நண்பர்கள், அல்லது குழந்தைகள் அல்லது உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்லுங்கள். இது நிச்சயம் கல்லூரிப் பெண்களுக்கு உதவும்.
- எந்த ஒரு இடத்திலும் நீங்கள் தனிமையில் இருப்பது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். அந்தரங்க விசயங்களை, குடும்ப பிரச்சனைகளை பொது இடத்தினில் விவாதிக்காதீர்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல அடையாளம் தெரியாத ஆண்கள் ஆயிரம் பேர் வருவார்கள்.
- உங்களை
யாரோ பின்தொடர்வது போல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதனை உணரும்
பட்சத்தில் நீங்கள் பதட்டமாய் இருப்பது போல் மற்றவர்களுக்கு அடையாளம்
காட்டுங்கள். எல்லா மக்களும் உங்களை பார்க்கும் பொது குற்றவாளி காணாமல்
போவான். அந்த நேரத்தில் எல்லா பெண்களும் செய்யும் தவறு யாரிடமும் சொல்லாமல்
அவசர அவசரமாய் ஒரு ஆடோ அல்லது கார் பிடித்து தப்பித்து செல்ல
முயற்சிப்பார்கள். அது குற்றவாளிக்கு அவர்களை பின் தொடர எதுவாகி விடும்.
இந்த 15 விவரங்களையும் பெண்கள் செய்தால் பாதுகாப்பாய் செல்லலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். குறிப்பு: இது பலதரப்பட்ட குடும்ப பெண்களிடம் சேகரித்த பாதுகாப்பு "உறை"கள்.
நல்ல யோசனை எல்லோருக்குமே பிடிக்கும்
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..
Deleteம்.....நல்ல நல்ல யோசனைதான்
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..
Deleteநீங்கள் சொன்ன வழி முறைகள் 2.8 விழுக்காடு அனானிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காட்டாயம் உதவும் என்பதை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், நமககு நன்கு அறிந்தவர்கள், உறவினர்கள், அதே தெருவில் வசிக்கும் 97 விழுக்காடு மக்கள் செய்யும் கற்பழிப்பு குற்றங்களில் இருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது? சொன்னால் நலம. உலகம் முழுவதும் பெண்களுக்கு இழக்கபடும் குற்றங்கள் அறிந்தவர் உறவினரிடம் இருந்து தான் அதிகம்.
ReplyDeleteஉங்கள் பதில் தேவைபடுவதால், இந்த இடுகை லிங்கை கொடுதுள்ளேன்.
http://www.nambalki.com/2013/01/blog-post_5.html#comment-form
நன்றி.
புள்ளிவிபரம் படி 1000 கற்பழிப்புகளில் 28 பேரே அனானிகள்; 970 பேர் பெண்களுக்கு அறிமுகமானவர்கள்;இதில் 580 பேர் உறவினர்கள்;360 பேர் அதே தெருவில் வசிப்பவர்கள்;அப்ப மதுரை ஆதீனம் சொல்படி முன்பின் தெரியாத அனானிகள் முன்பு பர்தா அணிவதால் கிடைக்கும் நன்மை மிக மிகக் குறைவு! கீழே கொடுக்கப்பட்டுள்ளtது புள்ளிவிவரம்...
டெல்லி ஆவணங்களில் இருந்து எடுத்த புள்ளிவிவரம் வெளியுட்டுள்ள இந்த வார விகடன்:
"2011 பதிவான கற்பழிப்பு வழக்குகளில் 97.54 விழுக்காடு பாதிக்கப் பட்டவர்களுக்கு அறிமுகமானவர்கள். இதில் 58.28 விழுக்காடு பாதிக்கப் பட்டவர்களுக்கு உறவினர்கள். இதில் 36.46 விழுக்காடு பாதிக்கப் பட்டவர் தெருவில் வசிப்பவர்கள். மீதி 2.8 விழுக்காடு முன்பின் தெரியாதவர்கள்."
எனது பதிவினை பொறுமையாய் முழுதும் படித்து உணர்ந்த உங்களுக்கு எனது நன்றி, மேலே குறிப்பிட்டு சொன்னவை முகம் தெரியாத நபர்களுக்கு என்று கேட்டிருக்கின்றீர்கள். முகம் தெரிந்த நபர் என்று சொல்லும்போது (அது நண்பர்கள், உறவினர்கள், அல்லது ஒரே தெரு) என்று சொல்லும் போது நீங்கள் ஏன் அவர்களோடு கிளம்பும்போது அவர்களது முன்னிலையில் வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டு செல்லக் கூடாது.
Deleteபெண்கள் அவர்களது நண்பர்களோடு வெளியில் செல்லும்போது கூடுமானவரை அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் தான் இன்னாருடன், இத்தனை மணிக்கு இந்த இடம் சென்று சேருகின்றேன் என்ற தகவலை அளிக்கும்போது தானாகவே கூட அழைத்துச் செல்பவர்களுக்கு, தடுமாற்றம் அல்லது பொறுப்புகள் வந்து சேரும். ஆனால் பெரும்பாலான பெண்கள் தனது ஆண் அல்லது பெண் நண்பர்களோடு செல்லும்போது வீட்டிற்கு தகவல் அளிப்பதில்லை. காரணம் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற காரணமே. அப்படி வலிய சென்று ஏமாறுவதை தடுக்க ஒன்றும் செய்ய இயலாது. அடுத்தது உறவினர்களின் (குறிப்பாக குடிகார அப்பன், மற்றும் அண்ணன்) ஆகியோருடு வெளியில் செல்லும்போது பெண்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டார்கள். காரணம் அப்பனோ, அண்ணனோ பாசமாகத்தான் இருப்பான்...ஆனால் அவனுக்குள் செல்லும் போதை அல்லது மதுபானம் அவனது மூளையை மழுங்கச் செய்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. மூன்றாவது தெருவினில் வசிப்பவர்கள், அவர்கள் பெண்களின் அன்றாட நிகழ்ச்சிகளை கண்காணித்து விட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களோடு நயமாக பேசி ஏமாற்றுகின்றார்கள். இதற்கும் முக்கிய காரணம், பெண் பிள்ளைகள் தனது பெற்றோரோடு சகஜமாய் பேசி பழகாததே காரணம் என்று நினைக்கின்றேன். ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தெருவினில் நின்று பேசக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண் நண்பர்களோடு செல்லும் எந்த பெண்ணும், அவனைப் பற்றிய முழு விவரங்களை சேகரித்த பின்னரே, அவனோடு வெளியில் சுற்ற வேண்டும் இது உங்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று சொன்னால் அதன் பிறகு வரும் பிரச்சினைகளுக்கு சமுதாயத்தின் மீது பழி போடக் கூடாது.
உண்மையில் ஒரு பெண்ணை மனதார நேசிக்கும் ஒரு ஆண் அந்த பெண்ணின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தனியாக அழைத்து செல்ல மாட்டான்..அதுவும் நேரங்கெட்ட நேரங்களில். சென்னையில் பள்ளிபடிப்பு முடித்து கல்லூரி முதலாண்டிலேயே பாய் பிறேண்ட்சை தேடி செல்லும் காலம் வந்து விட்டது. இந்த சுதந்திரத்தையா உங்கள் பெற்றோர் அவர்களுக்கு கொடுத்தார்கள்...???
உங்கள் யோசனைகள் மிக அருமைதான் அதுபோல நம்ப்ள்கீ சொல்லவருதிலும் உண்மைகள் இருக்கிறது. நாம் நம்பும் உறவினர்கள் நண்பர்கள் முலம் கூட பலாத்காரத்திற்கான வாய்ப்புகள் உண்டு. இதை முழுவதுமாக நீக்க வேண்டுமென்றால் வளரும் ஆண் மற்றும் பெண்குழந்தைகளிடம் "நல்ல பண்புகளை "இப்போதே விதைக்க வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியும். இதை சட்டத்தால் மாற்ற முடியாது என்பது என் கருத்து
ReplyDeleteஉண்மைதான்..நம்பள்கி அவர்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்த விடையினை அளித்திருக்கின்றேன்..நீங்கள் சொல்வதும் உண்மைதான்...இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் கட்டத்தில் தாத்தா, பாட்டி பார்வையில் பிள்ளைகள் வளர வேண்டும். அதுதான் சாலச் சிறந்தது. அப்படி அமையாத சூழ்நிலையில் பெண் பிள்ளைகளின் அம்மாதான் பிள்ளைகளுக்கு சில பாதுகாப்பு விசயங்களை சொல்லித் தர வேண்டும். தெரிய வேண்டிய வயதில் தானாக தெரியும் என்று விடுவதால் அனேக பிரச்சினைகள் வருகின்றது. எனது நண்பர் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையின் தொடையினில் கைகளை யாராவது வைத்தால் தட்டி விட வேண்டும் என்றும், முறைத்து பார்த்து துப்பி விட வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அது எந்த அளவிற்கு பாதுகாப்பாய் இருக்கின்றது என்பதை இப்போது உணர முடிகின்றது. காரணம் கடந்த வாரம் அந்த குழந்தையை பள்ளியில் கொண்டு போய் விடும் ஆட்டோ ஓட்டுனர் அந்த குழந்தையிடம் சில்மிஷம் செய்ய முற்பட்டு பதிலுக்கு அந்த குழந்தை அவனை அசிங்கப் படுத்தி விட்டது. அதோடு பள்ளிக்குள் சென்றதும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்து விட்டது. இப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் தேடிக் கொண்டு வருகின்றது. பாதுகாப்பு அந்த பிஞ்சின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது..இன்னமும் ஒரு சில பருவ வயது பிள்ளைகளுக்கு அது வரவில்லை என்பதே நிதர்சன உண்மை.
Delete