பங்காளிங்க..

Tuesday, January 8, 2013

டெல்லி "நிர்பயா" வின் ஓர் எச்சரிக்கை கடிதம்!!!

டிசம்பர் 16 இல் காம வெறியர்களால் சீரழித்துக் கொல்லப்பட்ட "டாமினி" என்ற நிர்பயாவால் மூச்சுக்கூட விட முடியாததால் நிறைய விசயங்களை எழுதிக் காட்டியதாக தகவல். அப்போது அவளது அம்மாவிற்கு அவள் எழுதிய கடிதம் ஒன்று. அவள் இறந்த பிறகு தற்போது அது வெளிவந்திருக்கின்றது.

என்னை மன்னிச்சிடும்மா....

என்னால போராடமுடியலை...

எனக்கு நல்லா நியாபகம் இருக்கு...நீயும், அப்பாவும் என்கிட்டே உன் எதிர்காலத்துல என்னவா ஆகப் போறே னு கேட்டே...அதுக்கு நான் எல்லாரும் உடம்பு வலி யால துடிக்கிறாங்க...அந்த வலியை  போக்குறதுக்கு நான் பிசியோதெரபிஸ்ட் டா ஆகப் போறேன்னு சொன்னேன்..இன்னிக்கு என் உடம்புல இருக்கிற வலியை கூட என்னால தாங்க முடியலை அம்மா...

டாக்டர்ஸ் எல்லோரும் என் உடம்புல கை வைக்கிறப்ப எல்லாம் அந்த கொடூரமானவங்க கை வைக்கிற மாதிரியே இருக்கும்மா..வலி தாங்க முடியலையம்மா.....

என்னால மூச்சு விட முடியலேன்னு ஆக்ஷிஜென் கொடுக்கிறாங்க....அதுல கூட அந்த நாய்களோட வியர்வை நாத்தம் வந்துகிட்டே இருக்குதும்மா...
எனக்கு பயமா இருக்குதுமா..பயமா இருக்குதுன்னு கண்ணை மூடினா...அந்த இருட்டு எனக்கு அந்த நாய்களோட போராடுன இருட்டா தெரியுதும்மா..நான் 

அவங்களுக்கு ஒரு மாமிசமா தெரிஞ்சேனாம்மா.....இப்படி கடிச்சி குதறித் துப்பிட்டான்களே ம்மா....

என் முகத்தை என்னாலேயே கண்ணாடியிலே பார்க்கமுடியலையம்மா ....பிளீஸ் அம்மா இங்கே இருக்கிற கண்ணாடியை எல்லாம் உடைச்சு போட்டிடும்மா....

என்னை குளிக்கிறதுக்கு கூட்டிக்கிட்டு போம்மா....நான் என்னோட ஆயுசு முழுவதும் குளிச்சாலும் அந்த நாய்களோட உடம்பு வாசம் என்னை சித்திரவதை பன்னுதும்மா....பிளீஸ் அம்மா...என்னை குளிப்பாட்டிகிட்டே இரும்மா....சத்தியமா சொல்றேன்மா..என்னோட வயித்துல அப்படி ஒரு வலி, எந்திரிக்க கூட முடியலையம்மா ......

என்னால தலையை கொஞ்சமா தூக்கிக் கூட பார்க்க முடியலைம்மா...யாரோ என்னை முறைச்சு பாக்குற மாதிரியே இருக்குதும்மா..ப்ளீஸ் மா என்னை விட்டு எங்கியும் போகாதேம்மா.......ஊருக்குள்ள வெறி பிடிச்ச நாயிங்க இருக்கிறது தெரியாம உன்னை விட்டுட்டு போனது தப்புதான்மா...என்னை மன்னிச்சிடும்மா..தப்புதான்மா......நான் உன்னை விட்டு போனது..அதுக்காக நீ என்னை விட்டு போயிடாதேம்மா..

அம்மா...இந்த மெடிக்கல் மெசின்ல வர்ற சத்தம்..அந்த நடுநிசியிலே சத்தமே இல்லாத இடத்துல நான் முனங்குன சத்தம் மாதிரியே இருக்குதும்மா...பிளீஸ் மா...இந்த சத்தத்தை கொஞ்சம் நிப்பாட்டிடும்மா....இந்த ரூமுல இருக்கிற மயான அமைதி என்னை என்னென்னவோ சித்திரவதைப் பண்ணுதும்மா....பிளீஸ்மா யாராவது பேசிக்கிட்டே இருங்கம்மா...

அம்மா...உனக்கு நியாபகம் இருக்குதா? சின்ன வயசிலே நீ என்னை அடிச்சதுக்கு அப்பா அழுதாரே...அவருக்கு தெரியுமாம்மா, வெறி பிடிச்ச நாயிங்க என்னை குதறிப் போட்ட விஷயம்...துடி, துடிச்சு போயிருப்பாறேம்மா அவரு...அவரை இனிமேலும் அழவிடாதேம்மா!!!

உனக்கு நியாபகம் இருக்குதா? நீ என்னை ஒருவாட்டி அடிச்சப்ப உன்னை எப்படி திட்டினாரு??

இப்போ அந்த அரக்கனுங்க என்னையும் எனது உயிர் நண்பனையும் இரும்புத் தடியால அடிச்சிப் போட்டுட்டானுங்க மா.....என்னை காப்பாத்த அவன் ரத்தம் வழிய போராடினான்மா... அவன் தரையிலே சுருண்டு விழுற வரைக்கும் அவனைத் தடியால அடிச்சு என் கண் முன்னாடியே தூக்கி எறிஞ்சிட்டான்கம்மா!!! 

என்னையும் மாறி...மாறி...!!!!

அம்மா...இனிமேலும் டாக்டர்சை என் உடம்புல கை வைக்கச் சொல்லாதேம்மா..போதும்மா எல்லோரும் கை வைச்சது...அடிவயிறு அநியாயமா வலிக்குதும்மா!!! ....என்னை விட்டு எங்கியும் போகாதேம்மா!! 

உன்னோட மடி கொடும்மா..நான் தூங்கனும்...என்னோட உடம்பை கழுவி விடும்மா...எனக்கு உடம்பு வலிக்காம இருக்க மாத்திரை கொடும்மா..


என்னை மன்னிச்சிடும்மா!! 
இதுக்கு மேல என்னால சொல்ல முடியலை...
போராடவும் முடியலை...
என்னை மன்னிச்சிடும்மா..!!!!


நன்றி...எனக்கு  தகவலை மின்னஞ்சல் மூலமாய் பகிர்ந்துகொண்ட ஜி.கோபாலகிரிஷ்ணனுக்கு நன்றி...

15 comments:

 1. Good Sho(u)t Sir, Rohini

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி சகோதரி....

   Delete
 2. இது போல் எங்கும் செய்தி பார்த்ததாக எட்டவில்லை...

  நம்பகத்தன்மை உறுதி செய்யுங்களேன். நானும் தேடி பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சகோதரி...இது எனது நண்பர் ஜி.கோபாலகிருஷ்ணன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது. அதில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கதறல் என்ற தலைப்பில் இருந்தது. உங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்...தவறான செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது..

   Delete
  2. //தவறான செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது..//

   :-)

   சாரி தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... நான் உங்களை குற்றம் சொல்லல... உங்களுக்கு வந்த மெயிலை சேர் செய்திருக்கீங்க என்றும் தெரியும்...

   இந்த கடிதத்தின் உண்மை தன்மை அறியும் ஆவலில் தான் கேட்டேன்.

   நன்றி சிவா

   Delete
  3. ஆமினா நீங்களும் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள் என்றே நான் நினைக்கின்றேன். நானும் யதார்த்தமாகத் தான் கூறினேன். உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். என்னால் அந்த மின்னஞ்சல் தகவலை இங்கே எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. அதனால்தான் அந்த பதிவின் இறுதியில் அதனை எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தேன்.

   Delete
 3. நானும் ஒரு மெயிலில் படித்திருக்கின்றேன், எனக்கும் அந்த மெயில் வந்திருக்கின்றது. கேரளா நண்பர்கள் அனுப்பிய மெயில் அது. அந்த பெண்ணிற்கு இறுதி சடங்கு முடிந்த மறுநாள் எனக்கு அந்த மெயில் வந்தது. தமிழில் படிக்கும் போது நெஞ்சு கனக்கின்றது. கற்பழிப்பினால் பாதிக்கப்பட்ட அத்துணை பெண்களுக்கும் இது பொருந்தும். பதிவாக்கியமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள். ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் கேரளாவைச் சார்ந்த்தவர்தான். உண்மைதான்.

   Delete
 4. அவ‌ள் ஆத்மாவாவ‌து எவரின் நிழ‌ல் ப‌டாம‌ல் இருக்க‌ட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி காமுகர்களுக்கு பெண் ஆத்மா என்றாலும் அவர்களது தாகம் அடங்காது.

   Delete
 5. மனதை ரொம்பவே நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் . அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கின்றேன் .

  ReplyDelete
  Replies
  1. அநியாயமான மரணம் அது. ஆனால் தமிழகத்தில் நடந்திருக்கும் மரணம் அதைவிடக் கொடூரமான கோர சம்பவம். புனிதா என்ற பள்ளி மாணவி...அவளுக்குள் எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்....ஊடங்கங்களில் கூட பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு வந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. நடந்தால் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகம் தூத்துக்குடியில் நடந்தால் அதை பெரிதுபடுத்தாது ஏன் என்ற கேள்வியும் கூடவே வருகின்றது! தூத்துக்குடியும் இந்தியாவில்தானே இருக்கின்றது!!!!

   Delete
  2. //ஊடங்கங்களில் கூட பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு வந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது//
   இது ஓரளவிற்கு உண்மைதான். பணம் படைத்தவனுக்கும் அதைவிட சினிமாக்காரனுக்கும் அதிகாரம் படைத்தவனுக்கும் தான் ஊடகம் முக்கியத்துவம் தருகிறது

   Delete
  3. உண்மைதான் தோழரே!!! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....

   Delete
 6. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலை ய பொது தகவல் அலுவலருக்கு இந்திய தண்டனை சட்டம் 1860 ன் பிரிவு 495 மற்றும் 417 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட FIR NUMBER 301/2015 நாள் 07-07-2015 இதன் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் கேட்டுமனு கொடுத்தும் வழங்கவில்லை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் விண்ணப்பித்தும் தகவல் தரவில்லை தகவல் மறுத்ததன் காரணமும் எனக்கு தெரியப்படுத்த வில்லை

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...