இந்த பதிவினைப் படித்த பிறகு கண்டனங்களை தெரிவிப்பதோ அல்லது பாராட்டுவதோ உங்கள் விருப்பம். ஆனால் எச்சரிக்கை கொடுக்க வேண்டியது எனது கடமை.
நாம் எத்தனையோ பிரச்சனைகளை அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வருகின்றோம். போலி ஆவணம், போலியான தங்கம், போலியான மருந்துகள், போலி மருத்துவர்கள், போலி சாமியார்கள், இப்படி பல விசயங்களில் போலிகளை சந்திக்கும் நாம் அடுத்து சந்தித்து கொண்டிருப்பது போலி எரிவாயு உருளைகள்..இந்தியாவின் வியாபார முத்திரையான ஐ எஸ் ஐ யோடு இண்டேன் , ஹெச்பி போன்ற உருளைகளோடு கலந்து வருகின்றது.
எத்தனையோ ஊழல்கள்...அதில் இதுவும் ஒன்று, எதில்தான் போலி இல்லை என்று நினைகிண்றீர்களா? மற்ற பொருட்கள் எப்படி என்று தெரியாது...ஆனால் இது ஆளையே அடையாளம் தெரியாமல் அழிக்கும் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு என்பதை மறக்காதீர்கள். மக்களின் உயிரோடு விளையாட துணிந்து செயல்படுத்தி இருக்கின்றது ஒரு நிறுவனம்.
இது சீனா தயாரிப்பு அல்ல, இந்தியாவின் சட்டிஸ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த அக்கிரமம் நடந்தேறி இருக்கின்றது. இது ஏன் ஊடகங்களில் பிரபலமாகவில்லை என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இது எவ்வளவு முக்கியமான செய்தி? ஏன் இது வெளியிடப் படவில்லை? ஒரு அரசாங்கம் தயாரிக்கும் ஒரு பொருளை அவர்கள் பெயரிட்டு சாதாரண மனிதன் எப்படி துவங்க முடியும்..அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்தது யார்? வேறு யாரெல்லாம் இதில் தலையிட்டிருக்கின்றார்கள்?
எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும்? போலி எரிவாயு உருளைகளை எப்படி அடைத்து வைத்து வெளியிடுகின்றார்கள்? அவர்கள் வேறு பெயர் வைத்து வெளியிட்டால் அது தனியார் மயமாகி விடும், ஆனால் அரசாங்க விளம்பரத்தில் தனது எரிவாயு உருளைகளை பயன்படுத்துவது என்பது அசா....தா....ர...ண...மான ஒன்று.
கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள்..இது பாஸ்கர்.காம் என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவலாகும்.
ஆதாரம் : www.bhaskar.com நன்றி...
கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள்..இது பாஸ்கர்.காம் என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவலாகும்.
ஆதாரம் : www.bhaskar.com நன்றி...
போலிகளை எப்போது நம் நாட்டை விட்டு விரட்டுகிறோமோ அப்போது தான் நம்நாடு முன்னேறும்...
ReplyDeleteஇவைகளை நாம் என்ன செய்யமுடியும்..
விழிப்புணர்வுக்கு நன்றி....
இந்த செய்தி வேறு வந்திருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. எனது நண்பன் எனது அலுவலக மின்னஞ்சலுக்கு இதனை அனுப்பி இருந்தான்.
Deleteஎன்ன செய்ய போலி பிரதமர் ,முதல்வர் ,பொதுமக்கள் அப்படிதான் இருக்கும்.
Deleteநான் சிலிண்டரை பத்தி மட்டும்தான் சொன்னேன்...நீங்க என்னென்னவோ சொல்றீங்களே, இப்படி எல்லாம் கூட இருக்குதா?
Deleteவிழிப்புணர்வுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி...
Deleteபோலியை கண்டுபிடிப்பது எப்படி? ஏதாவது வழிமுறை உண்டா? ஒரிஜினல் சிலிண்டரை விட நல்லா இருக்கே!?
ReplyDeleteஅழகு ஆபத்து என்பது இதுதானோ? ஆனால் போலி எது? நிஜம் எது? நமக்கு தெரியாதே?
Deletecan you please share with me the URL link. I will take up with the Chattisgarh authorities. Pl send mail to me at prpoint@gmail.com
ReplyDeleteநிச்சயமாக, எனக்கு வந்த அந்த மெயிலை உங்களுக்கு அப்படியே அனுப்பி வைத்திருக்கின்றேன்...
Deletehttp://www.bharatnewschannels.com/p7news24x7news-watchonline/duplicate-cylinder-factory-black-shell-in-raipur-video_d3e4f515f.html
DeleteVery informative. This should be brought to the notice of concerned-authorities.
ReplyDeleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி....
Deleteதகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகேஸ் விநியோகஸ்தர்களிடம் இது எப்படி வந்தடையும் ?
கேஸ் விநியோகஸ்தர்கள் எவ்வாறு விநியோகம் செய்வார்கள் , அதே சிலிண்டரை போலி ஆசாமிகளிடம் எப்படி சேர்ப்பிப்பார்கள் ? நினைத்தாலே தலை சுற்றுகிறது.!
மக்களின் உயிரோடு சம்பத்தப்பட்ட இப்பிரச்சினையில் (மத்திய)அரசும்
ஐ.ஓ.சி.யும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.எம்.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி.
உண்மைதான்...இப்படி எத்தனையோ கேள்விகள் நம்மை சுற்றி இருந்த வண்ணம்தான் இருக்கின்றது. ஆனால் இதைப் பற்றி வட இந்தியாவில் செய்திகள் வந்திருக்கின்றது. தென்னிந்தியாவில் ஒரு செய்திகளிலும் படித்ததாக எனக்கு நியாபகம் இல்லை!! உங்களுக்கு தெரியுமா?
Deleteஎச்சரிக்கையான தகவலுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteவிழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்
இது விழிப்புணர்வு செய்திதான்...ஆனால் எப்படி போலிகளை அடையாளம் கண்டுபிடிப்பது என்றுதான் தெரியவில்லை.
Deleteவிண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -
ReplyDeletehttp://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html
என்ன செய்ய!!! நம் நாடே இன்றைய சுழலில் போலியாக தான் ஆட்சியும் செய்து கொண்டிருக்கிறது......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஆட்சியாளர்களும் போலிதான் என்றால் பொருள் மட்டும் என்ன அசலாகவா இருக்கும்? வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteவருகைக்கு நன்றி...
ReplyDeletecan you please share with me the URL link. I will take up with the Chattisgarh authorities. Pl send mail to me at prpoint@gmail.com
ReplyDeleteReply
Replies
சிவா16 January 2013 9:50 pm
நிச்சயமாக, எனக்கு வந்த அந்த மெயிலை உங்களுக்கு அப்படியே அனுப்பி வைத்திருக்கின்றேன்...”””
>>> திரு சிவா ,வணக்கம் அய்யா.
திரு. கே.சீனுவாசன் அவர்கள் இதுபற்றி மேலும் செய்திகள் / கிடத்த தகவல்களை தெரிவியுங்கள்.
>>>>> கே.எம்.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி