பங்காளிங்க..

Tuesday, November 29, 2011

1 ,76 ,000 கோடியை விட பெருசு இது? யம்மாடியோவ்!!!!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை நான் எனது ஆபீசில் இருந்து கம்பெனி வண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். மிக அருமையான பாடல்களை எல்லாம் ஒலிபரப்பி கொண்டிருந்தார் வண்டி டிரைவர். திடீரென்று பாட்டு நின்று விட்டது. என்னவென்று கேட்டபோது "எப்.எம் ரேடியோ மக்கர் ஆயிடுச்சு சார்" என்று சொல்லவும் எரிச்சல் வந்தது.

ச்சே, ஐபாட் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். அப்போதுதான் நினைவிற்கு வந்தது. நான் ஏற்கனவே ஐபாட்டை வாங்கி 6 மாதத்திற்கு மேலாகி விட்டதே. ஆனால் அதிகப்படியாக இரண்டு அல்லது மூன்று முறைதானே பயன்படுத்தி இருக்கின்றேன். இப்போது அது எங்கே இருக்கின்றது? கழுதை ஐபாட்டை விட்டு தள்ளு. நான் என்னென்னவோ வாங்கி வச்சிருக்கேனே? ஆமா அதெல்லாம் இப்போ என்னாச்சு?

போன வருஷம் வந்த இங்கிரிமென்டில ஹாண்டி கேம்முனு ஒன்னு வாங்கினேன், அது இரண்டு வாரம் யூஸ் பண்ணிருப்பேன்...அதுக்கப்புறம் ஆபீசியல் டூர் போனப்ப பந்தாவா ஒரு டிஜிட்டல் கேமிரா வாங்கினேன். 18 ஆயிரம் ரூவாய்? என்னாச்சு அது?

இப்போ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எல்லா வசதியும் இருக்கிற மாதிரி ஒரு மொபைல் வாங்கினேன். எங்கே அது? சர்வீஸ் கடைல இருக்கு, இப்போ அதே பழைய நோக்கியா தான் கைல இருக்கு!!!???!!!  அப்படீனா எங்கயோ தப்பு நடக்குது? எங்கே? எப்படி? என் பிரண்ட்சு கிட்டே இல்லாதது எல்லாம் என்கிட்டே இருக்கு, ஆனாலும் மனசுக்கு நிம்மதியே இல்லை,.

உன்கிட்டே சான்ட்ரோ இருக்கும், ஆனா சிட்டி வேணும்னு எதிர்பார்ப்போம், சிட்டி வச்சிருக்கிறவன் ஸ்கோடா வை பார்ப்பான்...லேட்டஸ்ட் மொபைல் போன் வாங்கணும், சூப்பர் லேப்டாப் வாங்கணும், புது வீடு வாங்கணும், கார் வாங்கணும், பெரிய டிவி சுவத்துல மாட்டி வச்சி பார்க்கணும்...மனசு அடங்க மாட்டேங்குது...ஆனாலும் நைட்டு நிம்மதியா தூக்கம் வரமாட்டேன்குது. ஏன் இந்த தொல்லை, பணம், பணம், பணம் நு இப்படி அலைய ஆரம்பிச்சிட்டோம்.

ஆனா எந்த வசதியும் இல்லாம என்னோட அப்பா ஹாயா படுத்திருக்காரே. எனக்கும் என்னோட அக்காவிற்கும் சூப்பெரா வீடு வாங்கி ஆளுக்கொரு வீடு கொடுத்திட்டு இன்னிக்கு பேரன் கூட சந்தோசமாய் விளையாண்டுகிட்டு இருக்காரே. அவன் கூட ஐஸ்பால், கண்ணாமூச்சி விளையாடுறாரு. ஆனா நம்மால ஒரு லீவை கூட சந்தோசமா கொண்டாடமுடியலை. என்னோட அப்பா 30 வருசமா சம்பாதிச்சதை நான் 3 வருசத்துல சம்பாதிச்சிட்டேன். ஆனா அந்த பாழாய் போன நிம்மதி மட்டும் வரவே இல்லையே. என்ன வாழ்க்கைடா இது?

அவர் இன்னமும் அதே சாலிடர் டிவி யை வச்சிக்கிட்டு, நோக்கியா செங்கல் மாடல் போனையும் கைல வைச்சுகிட்டு இருக்காரு...அப்பா உனக்கு லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கித்தரவா னு கேட்டதுக்கு அதெல்லாம் வேண்டாம், யாரும் போன் பண்ணா அவசரத்துக்கு கேக்குறதுக்கு, பேசுரதுக்குத்தான், அதனால இது போதும் னு ஈசியா சொல்லிட்டு ஹாப்பியா இருக்காரே.


ஆனா நான் எல்லாம் இருந்தும், இன்னிக்கு எதுவுமே இல்லாத மாதிரி ஓடிக்கிட்டே இருக்கேனே? என் பொண்டாட்டியோட பிறந்த நாள் மறந்து போச்சு, என் பிள்ளையோட ராசி, நட்சத்திரம், பிறந்த நேரம், தேதி கூட தெரியாம ஓடிக்கிட்டு இருக்கேன்..ஆனா என் அப்பா எங்க மொத்த குடும்பத்து ஜாதகத்தை பிட்டு பிட்டு வைக்கிறாரே. அது எப்படி? கோயில்ல அர்ச்சனை பண்றப்ப அய்யர் கேக்குறப்ப ஒவ்வொருத்தர் ராசி, நட்சத்திரம் அவர்தான் சொல்றாரு. வீட்டுல யார், யாருக்கு பிறந்த நாள் னு நியாபகமா, போன் போட்டு வாழ்த்து சொல்றாரு!
எப்படி? எப்படி? எப்படி? எப்படி? எப்படி? 

நான் வீக்என்ட்டுல என்ன பண்றேன்? காலையிலே 10 மணிக்கு எந்திரிச்சி உடம்பை குறைக்க ஜிம்முக்கு போறேன், 10 மணிக்கு வந்து குளிச்சிட்டு 12 மணி வரைக்கும் டிவிய பாக்குறேன். அதுக்கப்புறம் சாப்பிட்டு விட்டு நல்லா தூங்குறேன். எப்போவாவது பிரண்ட்சு கூட வெளிய போயிட்டு வாரேன் . ஈவ்னிங் ஆனா பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு படத்துக்கு போறேன், இல்லேனா ஹோட்டல்ல போயி நல்லா நான்-வெஜ் சாப்பிட்டுவிட்டு நைட்டு வீட்டுல வந்து படுக்கிறேன். சில சமயம் பிரண்ட்சு கூட சாட்டிங், பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் னு உட்காரேன்.

உண்மையிலே இதுதானா வாழ்க்கை? நேரா வீட்டுக்கு போனதும் அம்மாவை தேடினேன்...விஷயத்தை சொல்லி அவளிடம் விவரம் கேட்டேன். அவள் சிரித்து கொண்டே பதில் சொன்னாள். டேய் மடையா, நீ உறவுகளை மறந்து பணத்தை நேசிக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டது. அதனால் உனக்கு நிம்மதி இல்லை. பணம் அவசியம்...அது சேமிப்பாய் இருக்க வேண்டும். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை உனக்கு. இந்த வாரம் ஞாயிற்று கிழமை நீ மின்னணு பொருட்களை பயன்படுத்தாமல் உனது உறவுகளை பயன்படுத்தி பார் என்று சொன்னாள். நான் புரியவில்லை என்று சொன்னதும்...நீ எல்லாம் ஒரு மேனேஜெர் என்று நக்கலாய் சிரித்து விட்டு,  அன்னிக்கு புல்லா நீ செல் போனை கையில் எடுக்காதே, டிவி, லேப்டாப் பார்க்காதே, டிவிடி பிளேயரை மறந்து விடு...உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சு, அவர்களோடு விளையாடு, மனைவியை பாரு, அப்பாவிடம் பேசு, மாலை அக்கா வீட்டிற்கு போய் அந்த பிள்ளைகளோடு விளையாடு. உனக்கு எல்லாம் கிடைச்சிடும் என்று சொன்னாள். உண்மைதான், நான் எத்தனை தூரம் என்னை, என் நிம்மதியை இழந்திருக்கின்றேன். உண்மையில் இதை விட பெரிய சொத்து எதுவுமே இருக்க முடியாதுதான்....

Sunday, November 27, 2011

லேட்டஸ்ட் மேட்டரு வீடியோ!!!

இதெல்லாம் உண்மையா, பொய்யா?
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
நம்புற மாதிரி இல்லை, நம்பாமலும் இருக்க முடியலை...
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
இந்த காணொளியை எடுத்தவரு நிலைமை இப்போ என்னாச்சு?
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
எவ்வளவு ரிஸ்க்கான காணொளி இது?
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
ஊர் உலகத்துல இப்படி எல்லாம் கூட நடக்குமா?
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
இதெல்லாம் அந்தந்த துறை சார்ந்த பெரியோர்களுக்கு தெரியுமா?
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
டெக்னாலஜி எப்படி எல்லாம் வளர்ந்து இருக்கு பாருங்க!
*************
*************
*************
*************
*************
*************
*************
*************
சான்சே இல்லை. நீங்களும் பாருங்க...உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க!!!



டிஸ்கி : இது சொந்த மேட்டரு இல்லீங்கோ, கோர்த்து விட்டு போயிராதீங்கோ.

Friday, November 25, 2011

சேலையை பிடிச்சி இழுத்தா சும்மா விட்டுருவோமா?

ஆரம்ப கால கட்டத்துல ஒண்ணுமே இல்லாமா உள்ளே வரானுங்க. அப்புறம் பார்த்த ஒரு ஊரையே வளைச்சு போடுறானுங்க, சாதாரணமா பாமரனுக்கும், நெருங்கி இருக்கிரவனுக்கும் கூட எதுவுமே தெரியறது கிடையாது. எப்போவாவது ஒரு கட்டத்துல ரெய்டுனு ஒன்னு நடக்கிரப்பத் தான் எல்லா இழவும் மண்டையிலே ஏறுது.

இந்த ஒரு ஆளுன்னு கிடையாது. நிறைய பிரபலம் கதை இப்படித்தான் போகுது.  MA BL மட்டும் படிச்ச ஒரு வழக்கறிஞர் வீட்டுல போய் பாருங்க..மாத வருமானத்துல குடும்பத்தை நடத்துறதுக்கு உயிரை கொடுத்து வேலை செய்யணும். அப்படி செஞ்சாலும் மனசுக்கு நிம்மதியான வருமானம், சேமிப்பு இருக்காது.

ஆனா இந்த சிறப்பு தொழில்ல MA BL படிச்ச ஒரு வழக்கறிஞருக்கு மொத்தம் 14 இடம் இருக்கு. அதிலே மசாலா எக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரீ இருக்காம், சிகரட் குடோன் இருக்காம், ஏலகிரில ஒரு பண்ணை வீடு இருக்காம், ஏதோ சின்னதா வருமானமே இல்லாத ஒரு இன்ஜினீயரிங் காலேஜ் கூட இருக்காம். இது தவிர 10 இடத்துல வீடு, கடைன்னு இருக்குதாம்.

இப்போ அவங்க எவ்வளவு மாசம் சம்பளம் வாங்குனாங்க, எவ்வளவு சேர்த்து வைச்சாங்க நு விசாரிச்சு பொது மக்களுக்கு சொன்னா, நாங்களும் அதே மாதிரி முன்னுக்கு வருவோம்ல. அப்புறம் பால் விலையை நூறுக்கு ரூவாய்க்கு ஏத்துனா கூட நாங்க விலைக்கு வாங்குவோம்ல, நீங்க என்னாங்க பேருந்து கட்டணத்தை ஏத்துறது...நாங்க ஆளாளுக்கு ஒரு பேருந்தே வாங்குவோம்ல. என்ன நான் சொல்றது?

உண்மையிலேயே MA BL படிச்ச ஒரு வழக்கறிஞர் வீட்டுல இந்த அளவுக்கு வருமானம் வருமா? இவருக்கே இவ்வளவு வருமானம் என்றால், இவரை விட பவர் ஜாஸ்தியா இருக்கிற ஆளுகளுக்கு எல்லாம் எவ்வளவு இருக்கும், எங்கெங்கே சொத்து இருக்கும், சென்னை அடையாருலே 1000 சதுர அடி கொண்ட வீடை வாங்குறதுக்கு ரேட்டு விசாரிச்சு பாருங்க, எவ்வளவு மதிப்பு இருக்கும்?


இன்னொரு விசயமும் புரிய மாட்டேங்குது, அதிகாலையிலே யாருக்கும் தெரியாம ரைடு போறப்ப அதுக்கு முன்னாடியே அங்கே பாதுக்காப்புக்கு வழக்கறிஞர்கள் இருக்காங்கன்ன அவங்களுக்கு அந்த ரகசியத்த சொன்ன அந்த "கருப்பு ஆடு" யாரு? அவனை நடுரோட்ட்ல கட்டி வைச்சு அடிக்கணும். சம்பளம் வாங்குறது அரசாங்கத்துக்கு, வேலை செய்யுறது இன்னொருத்தனுக்கா? இதையும் அப்பால டீல் பண்ணிக்கலாம். 

எல்லாம் அனுபவிச்ச பிறகு இது பழிவாங்குற நடவடிக்கை னு சொல்லிக்க வேண்டியது. இது நல்லா இருக்குல்ல, இப்படி ஒவ்வொருத்தரையும் விசாரிச்சாதான் குறைஞ்சது ஓட்டு போட்ட ஜனங்களுக்கு, ஏன் அவருக்கு ஜால்ரா போடுற கொத்தடிமைகளுக்கு கூட "அடேங்கப்பா" அப்படீன்னு விஷயம் புரியும். அதுவரைக்கும் தலைவன் வீட்டுல ரெய்டு போனாலே தீக்குளிக்கிற ஜென்மம் எல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்கு. என்ன செய்யுறது? அது வேற டிபார்ட்மென்ட், அதை அப்பால பேசிக்குவோம்.
இந்த அம்மா பழி வாங்குற கேரக்டருனு நல்லா தெரியும்ல, அப்புறம் ஏன் வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கணும், அப்போ தெரிஞ்சே தான் தப்பு பண்றீங்க, அப்புறம் பழிவாங்குற நடவடிக்கை னு சொல்லி தப்பிக்கணும், அது என்ன கான்செப்ட் னு புரியலை, அப்புறம் இந்த மாதிரி வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கறத யார்தான் கண்டுபிடிச்சி கேள்வி கேக்குறது? நாங்க கேட்டா எதிர்க்கட்சி சதின்னு சொல்ல வேண்டியது...இல்லேனா என் பரம்பரை சொத்தை அழிச்சி நாயா பேயா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வைக்க வேண்டியது, அப்புறம் யார்தான் கேள்வி கேக்குறது...இப்படி எப்பயாவது கேட்டாத்தான் உண்டு.

உங்களை எதுக்கு அவங்க பழி வாங்கணும், நீங்க நேர்மையா சம்பாதிச்சிருந்தா கணக்கை காட்டிக்கிட்டு போக வேண்டியதுதானே..சரி அவங்க தப்பு பண்ணி இருந்தா நீங்க கேள்வி கேட்டு இதே மாதிரி மடக்கி பிடிக்க வேண்டியதுதானே..இது இன்னிக்கு நேத்து நடக்கலை...ஒவ்வொரு ஆட்சி மாற்றம் நடக்குறப்பவும் இது நடக்குது..உங்க ஆட்சியிலே அந்த அம்மா போட்டிருந்த செருப்பு வரைக்கும் படம் பிடிச்சு காட்டுனீங்க..இப்போ உங்க வீட்டுல காட்டுறப்ப கடுப்பா இருக்கா.

இது சேலையை பிடிச்சி இழுத்ததுக்கு பழி வாங்குறாகளா, இல்லே சொத்து எவ்வளவு சேர்த்திருக்கீங்க னு காண்பிக்க பழி வாங்குறாகளா, யாருக்கு தெரியும்? ஆனா மக்களுக்கு தெரியும்...ஒவ்வொரு கட்சிகாரனும் மக்களுக்கு செய்யுறீங்களோ இல்லையோ, உங்க மக்களுக்கு (பிள்ளை செல்வங்களுக்கு) கரெக்டா சேர்த்து வைக்கிறீங்க னு மட்டும் தெளிவா புரியுது.

நடக்கட்டும், நடக்கட்டும்.. லஞ்ச ஒழிப்பு துறை னு ஒன்னு இருக்குதுன்னு அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் தெரியுது..இனிமே அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் இவங்களுக்கு டியூட்டி. ரொம்ப நல்லா இருக்கு இந்த ஜாப். இதுக்கு எப்படி அப்ளை பண்ணனும்?

தகவல்களுக்கு நன்றி 

http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1295-3280660.htm

http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1295-3280371.htm

Thursday, November 24, 2011

2 மணி நேரம் கூடுதலாக கிடைத்தால் எப்படி செலவழிப்பாய்?

24 மணிநேரம் என்பதை நான் 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் அலுவலக வேலைக்கு, 2 மணி நேரம் அலுவலக பயணத்திற்கு என்று ஏற்கனவே ஒதுக்கி விட்டேன். மீதமுள்ள 6 மணி நேரத்தை மட்டுமே நான் என் உறவுகளோடு கழிக்கின்றேன். அந்த 6 மணி நேரத்திற்குள் என்னை அலங்கரிக்க, என் நண்பர்களை சந்திக்க, பக்கத்து வீட்டு நண்பர்களை சந்திக்க, என்னை உங்களோடு பேசிக்கொள்ள வைத்த என் பெற்றவர்களோடு பேசிக்கொள்ள, இந்த இன்டிபிலாக்கரில் என்னை அர்ப்பணிக்க, என் வருங்காலத்தை பற்றி என் பொருளாதாரத்தை பற்றி எண்ணிப் பார்க்க, என் சேமிப்பை கணக்கு செய்ய..

இது எல்லாவற்றையும் தவிர எனது நெருங்கிய சொந்தமான என் ஆருயிர் மனைவி, தோழி, காதலி, எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அந்த என்னில் சரிபாதிக்கு நான் ஒதுக்கும் நேரம் என்பது மிகச் சிறு சிறு மணித்துளிகளே. நாங்கள் வார்த்தைகளால் பேசி வெகுநாட்களாகி விட்டது...கண்களால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றோம். 

எல்லோருக்கும் நேரம் பொன் போன்றதுதான், நானும் அதை மனப்பூர்வமாய் ஏற்று கொள்கின்றேன். எனது உடல் அழுக்கானால் வாசனைத் திரவியங்களை பூசி ஏமாற்றி விடலாம். ஆனால் அலுவலகத்தில் எனது கௌரவம் குறையாமல் அடையாளம் காட்டும் என் ஆடைகளை எந்தவிதக் கறை படியாமலும் "சர்ப் எக்ஸ்செல்" கொண்டு என்னை பாதுகாக்கின்றாள் என் மனைவி.

ஆனால் இன்றும் என் மனது கறை படிந்து இருக்கின்றது. என்னை ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் பாதுகாக்கும், உலகிற்கு அழகானவனாய் அடையாளம் காட்டும் எனது மனைவிக்கு நான் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கின்றேன்? 

கடவுளே, இன்னும் 2 மணி நேரம் கொடு, அவளோடு, அவள் அருகினில், அவளுக்காக, அவளுக்காக மட்டும், அவளோடு மட்டும் பேசிக் கொள்ள கண்களால், வார்த்தைகளால், ஸ்பரிசங்களால் பேசிக்கொள்ள இன்னுமும் 2 மணி நேரம் கொடு.

எனது உள்ளத்தின் கறைகளை அகற்றும் ஒரே "சர்ப் எக்ஸ்செல்" அவள் மட்டுமே...எனது ஆடைகளின் கறைகளை "சர்ப் எக்ஸ்செல்" கொண்டு நீக்கும் அவளது தனிமை என்னும் கறைகளை அழிக்க எனக்கு இன்னும் 2 மணி நேரம் அதாவது 120 நிமிடங்கள்  மட்டும் கொடு.

நான் ஒன்றும் சச்சின், தோணி, பில்கேட்ஸ், அம்பானி அல்ல, ஒரு நிமிடத்திற்கு இத்தனை ஆயிரம் ரூவாய் என்று சம்பாதிக்க....சச்சின், தோணி, பில்கேட்ஸ், அம்பானிக்கு கிடைக்காத ஒரு வரம் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது உறவுகள் அதை நிறைய சம்பாதித்து விட்டேன். அந்த உறவுகளோடு பிரயாணிக்க எனக்கு 2 மணி நேரம் கூடுதலாய் கொடு. எனது சரிபாதியோடு நான் எனது கூடுதல் 2 மணி நேரத்தை செலவழிப்பேன்.

Friday, November 11, 2011

சாவே....நீ எங்கிருக்கிறாய் ?????

இப்படியே  போச்சுனா ...விளங்கிடும்  நம்ம  நாடு ????
இதை எல்லாம் பாக்கனும்னு நம்ம தலையிலே எழுதி இருக்கு!




விதிய யாரால மாத்த முடியும்?????




எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க பாருங்க?





இப்படி கண்டுபிடிச்சவனுக்கு கோயில் கட்டித்தான்ய கும்பிடனும்...





எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் கண்ணுல அகப்படுதோ தெரியல?





போன ஜென்மத்துல நான் ஏதோ பெரிய பாவம் பண்ணி இருக்கேன் போலிருக்கு...





நான் பட்ட கஷ்டத்தை நீங்க அனுபவிக்க கூடாது...





உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்...




இதுக்கு கீழே போய் பார்க்காதீங்க...




போதும், இத்தோட நிறுத்திக்குவோம்..




தயவு செய்து நீங்களாவது தப்பிச்சு போயிடுங்க...





அட சொல்லிக்கிட்டே இருக்கேன், திருப்பி திருப்பி கீழே போறீங்களே...





வேணாங்க...நீங்களாவது உங்க குழந்தை குட்டியோட சந்தோசமா இருங்க...





அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் னு சொல்வாங்க...ஆனா எனக்கு தெய்வம் சாவகாசமா உக்காந்து என்னைய கொன்னிடுச்சே





தயவு செய்து ரோட்ல வண்டி ஓட்டிட்டு போறப்ப வேற எதையும் பாக்காதீங்க...வீட்டுல பொண்டாட்டி, குடும்பம் இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...இல்லீனா எனக்கு நடந்தது மாதிரியே உங்களுக்கும் நடந்திரும்




உங்ககிட்டே சொல்லலாமா, வேணாமா னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..





சரி இதோட நிறுத்திக்குவோம்...இதுக்கு மேல, கீழே போகாதீங்க..







சொல்ல வேண்டியது என்னோட கடமை, நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்திட்டேன்.. இனிமே உங்க இஷ்டம்





பாக்காதீங்க..
பாக்காதீங்க..பாக்காதீங்க..
 பாக்கா......தீங்....க 




அய்யோ பாவம் நீங்க???!!!!???
























Wednesday, November 9, 2011

அமைச்சரை மாத்து, இல்லேனா பில்டிங்க மாத்து?

மழை

தமிழகம் முழுவதும் பரவலாக பருவ மழை பெய்து விவசாயிகள் நெஞ்சில் பாலை வார்த்து இருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள், ஆளும்கட்சி பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

சரி தற்போதைய ஆளும்கட்சி எதுவும் செய்யவில்லை...ஆனால் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் என்ன என்ன செய்தீர்கள்? நீங்கள் தரமான சாலைகள் அமைத்து இருந்தால் தற்போது சாலைகள் இந்த அளவிற்கு மேடு, பள்ளங்கள் ஆகி இருக்காதே..இப்படியே குறை சொல்லி ஐந்து வருடத்தை கழித்துவிடலாம் என்பது எதிர்கட்சிகளின் எண்ணம் போலும்.எங்களது வசிப்பிடம் அருகினில் சாலைகளில் பெரிய பள்ளம் விழுந்து ஒரு மிகப்பெரிய பேருந்தே அந்த பள்ளத்திற்குள் மூழ்கி விடும் அபாயத்தில் இருக்கின்றது. இது யார் காலத்தில் போடப்பட்டது? அதை அன்றே சரி செய்திருந்தால் இந்த நிலைமை மக்களுக்கு வந்திருக்காதே? ௫ ஆண்டுகளில் உன்னால் சாதிக்க முடியாததை ௫ மாதத்தில் எப்படி சாதித்து விட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் ஸ்டாலின். ஆனால் எந்த ஒரு பாதாள சாக்கடை திட்டமும் வெற்றி பெறவில்லையே. கடந்த முறை பெய்த மழையை விட தற்போது மிக குறைந்த அளவுதான் பெய்திருக்கின்றது. எங்கெல்லாம் பாதாள சாக்கடை போடப்பட்டதோ அங்கெல்லாம் தற்போது முன்பை விட அதிக அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதற்க்கு ஒப்பந்தம் போட்ட காண்டிராக்டரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை யாரும் இப்படி மோசமான சாலைகளை, பாதாள சாக்கடை திட்டத்தை போட வரமாட்டார்கள். 

தற்போதைய ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தது மே 20 .  அதன் பிறகு தலைமை செயலகத்தை மாற்றவும், நில அபகரிப்பு  வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பதற்குள் உள்ளாட்சி தேர்தல் வந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஆளும்கட்சி எந்தவித உதவிகளும் (பொதுமக்களுக்கு) செய்யக்கூடாது என்பது விதி. (எப்போதுமே செய்யப்போவதில்லை) இருந்தாலும் அதன் பிறகு மழை குறுக்கிட்டு விட்டது. இனிமேல் மழை முடிந்தால் தான் எதையுமே செய்ய முடியும்.

இந்த ஆறு மாதங்களில் அதிமுக கட்சி மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்று சொல்லும் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு தரமான சாலைகள், பேருந்து நிலையங்கள், பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாமே. அப்போதெல்லாம் எங்கே சென்று இருந்தார்கள் இவர்கள்?

மக்களின் வரிப்பணத்தை வீணாக்க ஆங்காங்கே பூங்காக்கள் நிறுவப்பட்டன. பூங்காக்கள் நல்ல விசயம்தானே...அதை எப்படி குறை சொல்லலாம் என்று குமுறும் மக்களுக்கு ஒரு அன்பான பதில். பூங்காக்கள் அமைக்கும் திட்டத்திற்கு முன்பே மெட்ரோ ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்தெந்த இடங்கள் என்றும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

அந்த விஷயம் நன்கு தெரிந்தே மக்கள் பணத்தை வீணடித்திருக்கின்றார்கள்  . காரணம் சென்னையில் மட்டும் ஏழு பூங்காக்கள் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. நானும் அதை செய்தேன், இதை செய்தேன் என்று வீண் ஜம்பம் தேவை இல்லையே. எத்தனையோ சாலைகளை நவீன வசதிகளோடு மேம்படுத்தி இருக்கலாம். எதையுமே செய்யாமல் இந்த ஆறு மாதத்தில் நீ என்ன செய்தாய் என்று கேள்வி கேட்பது நியாயமானதாக இருக்காது.

பொதுவாய் அரசு ஊழியர்கள் கருணாநிதி என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். காரணம் என்ன? அரசு ஊழியர்கள் சங்கங்கள் அமைக்கலாம், போராட்டம் செய்யலாம், 8 மணிநேரம்தான் வேலை, அது செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம், கேட்காமலே போனஸ், கேட்காமலே ஊதிய உயர்வு என்று அறிவித்து அவர்களின் வாக்குகளை எப்போதுமே தன் வசம் மேற்கொண்டு விட்டார். சரி 8 மணி நேரம் அவர்கள் உருப்படியாக வேலை செய்கின்றார்கள் என்றால் அதுவும் கிடையாது. அப்படி எனில் ஏன் இத்தனை கோப்புகள் கிடப்பினில் இருக்கின்றது. ஒரு நுகர்பொருள் வாணிபக் கழகம் அல்லது போக்குவரத்து துறை என்று எந்த ஒரு அரசாங்க பணியாக இருக்கட்டும்...எல்லாமே காலந்தாழ்த்தியே செய்து முடிக்கப்படுகின்றது. இதுவே ஒரு தனியார் வசம் செல்லும்போது அந்த வேலையை முடித்தால்தான் உனக்கு ஊதியம், ஊதிய உயர்வு என்று சொல்லும்போது அவர்களிடம் முறையான பலன் கிடைக்கின்றது.நெல்லை போன்ற நகரங்களில் ஒரு அரசுப் பேருந்து, ஒரு தனியார் பேருந்து என்று எடுத்து கொள்ளுங்கள். தனியார் பேருந்து ஒரு நாள் மட்டும் 850 முதல் 1500 வரை சம்பாதிக்கின்றார்கள். அதுவே அரசு பேருந்து என்பது 350 முதல் 600 வரை மட்டுமே வசூலிக்கின்றார்கள். அரசுப் பேருந்தின் முகப்பினில் பயணிகளின் நண்பன் என்று போட்டுக்கொள்ள வேண்டியது. ஆனால் எந்த ஒரு நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்துவதே கிடையாது. அதுவே தனியார் பேருந்துகள் பயணிகளின் நண்பனை போல எல்லா நிறுத்தம், மற்றும் பயணிகள் கைகாட்டும் இடமெல்லாம் நிறுத்தி ஏற்றி இறக்கி செல்கின்றார்கள். தானாகவே வருமானமும் பெருகுகின்றது. அப்படி உழைத்தால் அன்றைய தினம் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கூடுதல் படி கொடுக்கின்றார்கள். நீ ஓட்டு, ஓட்டாமல் போனாலும் உனக்கு சம்பளம் என்று சொல்வதால் தானே இவ்வளவு பிரச்சினை. ஒருநாளைக்கு இத்தனை ட்ரிப் அடிக்க வேண்டும் என்று மட்டுமே உத்திரவு வந்துள்ளது. அதனால் அவர்கள் 8 முதல் 10 ட்ரிப் வரை காலியாகவே அடித்து விட்டு டீசலையும் காலி செய்து விட்டு இறங்கி சென்று விடுகின்றார்கள்.

எத்தனை முறை, திரு.கருணாநிதியோ அல்லது அவரது குடும்பத்தாரோ அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார்கள். அவர்கள் அரசின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஏன் தனியார் சிகிச்சை மையம் செல்ல வேண்டும், ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் கருணாநிதி குடும்பத்தார் ஏன் தமிழகத்திற்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்து அதில் ஏழைகள் நல்வாழ்வு வாழ வழி செய்திருக்க கூடாது?

ஒரு அரசுப் பேருந்தில் திருச்சி வரை சென்றேன்..பின்னர் திரும்பி வரும்போது ஒரு தனியார் பேருந்தில் வந்தேன். அரசுப் பேருந்தில் பயணிகளின் இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்திருந்தால். கிழிந்திருந்தால் பரவாயில்லை. ஓட்டுனர், நடத்துனரின் இருக்கைகள் கிழிந்திருக்கின்றது, பல ஓட்டுனர்களின் இருக்கைகளின் கீழ் செங்கல்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. ஏன் இந்த அவலம்? ஓட்டுனர் இருக்கை உனது இடம், இதில் எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்க்கு நீதான் பொறுப்பு, உனது சம்பளத்தில் பிடிப்பேன் என்று சொன்னால் அதன் பிறகு அந்த பேருந்து எப்படி இருக்கும். அதை யாரும் செய்வதில்லை. அதை விடுத்து கேட்காமலே போனஸ், ஊதிய உயர்வு என்று கொடுத்தால் அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். இதை விட பல கொடுமைகள், நிறைய பேருந்துகளில் மூட்டை பூச்சி தொல்லை வேறு. ஏன் என்று கேட்டால் வேறு மாற்று பேருந்து இல்லை, இன்னும் கொஞ்ச தூரம்தான், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று சொல்வது...இல்லாவிட்டால் இஷ்டம் இருந்தால் ஏறுங்க, இல்லேனா பிரைவேட் பஸ்சுல போக வேண்டியதுதானே என்று எகத்தாளமாய் பேசுவது...அதையும் மீறி சொன்னால் முடிஞ்சா போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க சார் என்று பேசுவது.ஏதாவது வாக்குவாதம் முற்றிப் போய் கைகலப்பு உண்டானால் உடனே மொத்த அரசுப் பேருந்துகளையும் வழிமறித்து போராட்டம் பண்ணுவது, என்று ஒவ்வொரு ஆட்சியிலும் இது வாடிக்கையாகி விட்டது. 

நிறைய இடங்களில் வேறு பேருந்தை எடுத்து கொண்டு வருகின்றோம் என்று சொல்லி விட்டு பொது மக்களை நடுரோட்டில், நடுகாட்டில், நடு இரவில் இறக்கி விட்ட பரிதாப கதைகளும் இருக்கின்றது. எப்படித்தான் அவர்களுக்கு இதை செய்ய மனது வருகின்றது என்று தெரியவில்லை.


சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு செய்தி கேட்டேன். அதாவது சென்னையில் நிழற்குடைகளே இல்லாமல் பொதுமக்கள் அவதி படுகின்றனர். அதிமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்றது என்று சொன்னார்கள். உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய காமெடி செய்தி அது. அந்த பேருந்து நிறுத்தங்களை எல்லாம் இடித்து தள்ளியதே கலைஞரின் பொன்னான ஆட்சியில்தான். சுட்டெரிக்கும் கடுமையான கோடைகாலத்தில் அனைத்து நிழற்குடைகளையும் இடித்து விட்டு மாற்று ஏற்பாடு கூட இல்லாமல் செய்தவர்கள் அவர்கள்தான். மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்று நினைக்கின்றார்கள் போலும்...அல்லது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகின்றார்கள் போலும்.

தரமான? தாழ்தள சொகுசு பேருந்துகள்.

அடுத்த அவலமான விஷயம் என்பது தாழ்தள சொகுசு பேருந்துகள்...அனைத்துமே பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது, தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள்...சுற்றிலும் கண்ணாடி போடப்பட்ட பேருந்துகள், வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பாதிப்பு என்னவோ உள்ளிருக்கும் பயணிகளுக்குத்தான்...பற்றாக்குறைக்கு கண்ணாடியை சுற்றிலும் விளம்பர ஸ்டிக்கர்கள். உள்ளே ஏறிய பயணிக்கு தான் இறங்கும் இடம் வந்து விட்டதா, இல்லையா என்று கூட தெரியாது. முன்காலத்தில் இருந்த பேருந்துகளில் விசாலமான இருக்கைகள், பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக வசதிகள், காற்றோட்டமான சாளரங்கள் மிக குறைந்த விலையிலேயே தரமானதாய் ஓடி கொண்டிருந்தன. தற்போதைய தாழ்தள பேருந்துகளில் தானியங்கி கதவுகளைத் தவிர வேறு எந்த வசதியும் கிடையாது. இருக்கைகள் கூட வெறும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஒவ்வொரு நாளும் நரக வேதனைகளை அனுபவித்து கொண்டுதான் பயணிகள் சென்று வருகின்றார்கள்.

எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் கருணாநிதி இந்த போக்குவரத்து துறை நட்டத்தை மட்டும் ஒப்பிட்டு பேச மறுக்கின்றார் அல்லது மறைக்கின்றார். அதாவது 5000 பேருந்துகளை இயக்கி லாபத்தில் கொண்டு வந்தாராம் செயலலிதா...அந்த லாபத்தை கொண்டு 15000 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை வாங்கினாராம் கருணாநிதி. ஆனால் திமுக காலத்தில் 15000 புதிய பேருந்துகளை இரட்டிப்பு மடங்கு கட்டணத்தில் ஓட்டியும் இறுதியில் ஆட்சி முடியும் தருவாயில் நட்டத்தில் இயங்கியதாக கணக்கு காட்டி இருக்கின்றார். 

இதில் சம்பந்தப்பட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரை அழைத்து முதலில் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் மக்களுக்கு புரியும். எங்களுடைய வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப் பட்டிருக்கின்றது. இப்படி எல்லாத் துறைகளிலும் ஐந்து வருடங்கள் சீரழித்து விட்டு தற்போது நீ ஐந்து மாதத்தில் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல என்பதே என் கருத்து.

அதைவிட முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம்...கருணாநிதி அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு செய்தும் கடைசியில் எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார முடியாத வண்ணம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியதும் இதே அரசு ஊழியர்கள்தான். பெண்களுக்காக நாங்கள் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி கொடுத்தோம் என்று பெருமை பேசிய திமுக விற்கு அந்த பெண்கள் ஓட்டும் விழாததும் ஆச்சரியமான விசயமே.

அண்ணா நூலகம்

முதலில் சட்டசபையை மாற்றி அமைத்த செயலலிதா தற்போது நூலகத்தையும் மாற்றி அமைத்து இருக்கின்றார். கல்விக் கடவுள் சரஸ்வதியின் அவதாரமாய் கருதப்படும் நூலகம் இந்த திசையில் இருந்தால் ஆபத்து என்பதால் என்னவோ வேறு திசைக்கு மாற்றி இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு வருகின்றது. ஒரு மிகப்பெரிய ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் ஒன்றை இடம் மாற்றி அந்த பெயரை அழிக்க வேண்டும் என்று நினைப்பது சற்று அவசரகுடுக்கைத்தனமே. அதை விட பெரிய வருத்தம் அந்த இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற போகின்றோம் என்று சொல்லி இருக்கின்றார், குழந்தைகள் நல மருத்துவமனை மிக அவசியமான ஒன்றே. ஆனால் வேறு ஒரு இடத்தில் அந்த மருத்துவமனையை கட்டி ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் மருத்துவமனை இது என்ற பெருமையை புதிதாய் கட்டி உருவாக்கலாம்.

ஏற்கனவே கட்டியதை மாற்றம் செய்வதை விட புதிதாய் அதை விட குறைந்த விலையில் கட்டி முடிக்கலாம். நூலகத்திற்கென்று இருக்கும் தளங்களை மருத்துவமனை அறைகளாக மாற்றுவது என்பது கூடுதல் செலவுகளைத்தான் உருவாக்கும். இது தேவையற்ற ஒன்றுதான். இன்னமும் அந்த அம்மா திருந்தவே இல்லை என்பதையே இது காட்டுகின்றது.

இன்னும் என்னென்ன வற்றை மாற்றப் போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. வக்கீல்களுக்கு நன்றாக பொழுது போய் விடும். காரணம் இந்த அம்மா போடும் திட்டத்திற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே, போராடி கொண்டே இருக்கலாம். வழக்குகளை புறக்கணிக்கலாம். நீதிமன்றங்களையும் புறக்கணிக்கலாம். அந்த அம்மாவும் புதிது புதிதாய் திட்டங்களை அறிவிக்கும், ரத்து செய்யும்...நல்ல வேடிக்கைதான் அவர்களுக்கு, மோசமான நேரம்தான் வாக்களித்த பொதுமக்களுக்கு எல்லா காலகட்டத்திலும்?

Friday, November 4, 2011

ஈவு இரக்கமில்லாத மனிதன்....

இளகிய மனம் கொண்டவர்கள் இதை பார்க்க வேண்டாம் என, அன்போடு கேட்டுகொள்கின்றோம். அன்பா சொன்ன கேக்கவா போறீங்க...சரி கொஞ்சமா பார்த்திட்டு போயிடுங்க.

ஆண்டவன் படைத்த இந்த அற்புத உடலை எப்படி எல்லாம் சித்திரவதை பண்றான் பாருங்க....இவனெல்லாம் மனுசனே கிடையாது...***க்கூச்செறியும் விசயங்களை 5 நிமிடத்திற்குள் செய்துமுடித்து விட்டான்.

டிஸ்கி : தயவு செய்து வீட்டினில் யாரும் இதை செய்து பார்க்காதீர்கள். (செய்யவும் முடியாது. (அது வேறு விஷயம்)), மறக்காம ஓட்டையும் போட்டுட்டு போங்க...தோழர்களே!!!!



Tuesday, November 1, 2011

சிஎம்டிஏ விற்கு ஆப்பு எப்போது?

சென்னையில் சிஎம்டிஏ இன்று பல வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைத்து உள்ளது.இன்னமும் தொடரும் என்றும் எச்சரித்து உள்ளது. எப்படி வந்தது அவர்களுக்கு திடீரென்று இந்த ஞானோதயம்? எந்த மரத்தடியில் அவர்களுக்கு புத்தி வந்தது?

என்ன காரணம் என்று விசாரித்த போது அனுமதி இல்லாமல் விதிமுறைகளுக்கு மீறி கட்டப்பட்டு உள்ளது என்று பத்து வருடங்களுக்கு பிறகு கண்டுபிடித்து உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்வது சந்தோசம் என்றாலும் ஒரு மாளிகை கட்டி அது பல வருடங்கள் அனைத்து மக்களுக்கும் தெரியும் போது சி எம் டி ஏ விற்கு தெரியாமல் போனது ஆச்சரியம் அளிக்கின்றது.

ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுக்கும்போது கடையின் வாசலில் இருந்து அனைத்து பகுதிகளையும், அனைத்து தளங்களையும் படமெடுத்து காட்டுகின்றார்கள். அப்போதும் இவர்கள் கண்களுக்கு இது தெரியவில்லையா? அந்த நேரம் கூட அவர்களது கட்டிட வரைபடத்தை எடுத்து சோதனை செய்து பார்த்திருக்கலாமே, ஏன் அவ்வாறு செய்யவில்லை.

மாத சம்பளக்காரன் வீட்டிற்கு பாதுகாப்பாய் இருக்கட்டுமே என்று ஒரு கூரையோ அல்லது வேறு ஒரு சிறு தனி அறையோ கட்டும்போது மட்டும் எப்படி வந்து உடனே கவனித்து வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கின்றார்கள். அதுவே இந்த மாதிரியான வணிக நிறுவனங்கள் எழுப்பும் புது புது தளங்கள் மட்டும் இவர்கள் கண்களுக்கு பத்து வருடங்களாக தெரியாமல் போனது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது. அதுவும் இப்போது கூட அவர்களாக கண்டுபிடிக்கவில்லை.

சமுக நல சேவகர் திரு. டிராபிக் ராமசாமின் பொதுநல வழக்கின் தீர்ப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

நியாயப்படி எப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும் எனில், எந்த வருடத்தில் இருந்து இந்த கட்டிடம் கட்டப்பட்டது, அப்போது அதிகாரிகளாக இருந்தவர்கள் யார்? யார்? அப்போது அந்த துறையின் மேலதிகாரிகள் யார்? அந்த நேரம் அந்த துறையின் அமைச்சர்களாக யார் இருந்தார்கள் என்பதை கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரங்கநாதன் சாலையில் இருக்கும் சரவணா ஸ்டோர்சில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உயிர் சேதம் ஏற்பட்டதாக கூட தகவல். ஆனால் அதை மூடி மறைத்து விட்டதாகவும் செய்திகள் கசிகின்றது. தீ விபத்து ஏற்பட்டால் அங்கே பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று அப்போது கூட இந்த சிஎம்டிஎ அங்கே இருக்கும் மொத்த கடைகளுக்கும் சோதனை நடத்தி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்று அங்கே பணிபுரியும் ஊழியர்கள் கேள்விகள் கேட்கின்றார்கள். 

அதைவிட கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை என்பதை போல கட்டிடம் கட்டும்போதே கூட நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். உனது கட்டிட வரைபடத்தை காட்டு, நாங்கள் பரிசீலித்த பின் வணிக வளாகம் எழுப்பலாம் என்பது போல உத்திரவு பிறப்பித்து இருக்கலாம். எதுவுமே செய்யாமல் இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கின்றது.

சரி, இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விசயம்தானே...அதற்க்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் நினைக்கின்றார்கள். இவர்களை இப்படியே விட்டால் பல விதிமுறை மீறல் நடக்கும், அது நடக்காத வண்ணம் தடுக்கலாமே என்றும் ஆதங்கப்படுகின்றார்கள். நியாயமான சிந்தனைதான்.

ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. என்ன இழப்பு? தப்பு செய்தவன் தணடனையை இழக்கின்றான் என்று பேசத் தோன்றுகின்றதா? அதற்க்கு முன்னால் இங்கே இருக்கும் ஒவ்வொரு கடைகளிலும் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை என்னவாக போகின்றது? 

எத்தனயோ ஊழியர்களின் வாழ்வாதாரம் சுக்கு நூறாகி போனதே, ஒரு அரசாங்கத்தால் தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியாத வேலையை, இம்மாதிரியான தனியார் ஆலைகளும், விற்பனை நிலையங்களும் கொடுக்கின்றது. அப்படிப்பட்ட முதலாளிகளின் தவறான சிந்தனையால், விதிமுறை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படப் போவது என்னவோ, அப்பாவி ஊழியர்கள் மட்டுமே. இதை போன்ற மாட மாளிகைகளை ஒரு நாளில் கட்டி முடிக்க முடியாது. அப்படி கட்ட தொடங்கி இருக்கும் போதே ஆதாரங்களை விசாரித்து தடுத்து இருக்கலாமே..ஏன் செய்யவில்லை, யார் செய்யவில்லை. அது யார் குற்றம்? 
இந்த சி எம் டி எ மற்றும் மற்ற குழுக்கள் ஆரம்பத்திலேயே இந்த குற்றங்களை தடுத்து இருந்தால் இன்று இந்த அப்பாவி ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குரியதாக இருந்திருக்காதே? 

எத்தனையோ ஊழியர்களின் குடும்பங்கள் இந்த வணிக நிறுவனத்தின் ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்துகின்றது. இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு யார் யார் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்ற பட்டியலை வெளியிட்டு அவர்கள் மீது முதலில் கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் எல்லோரும் எவ்வளவு கையூட்டு வாங்கினார்கள் என்ற பட்டியலும் வெளியே வர வேண்டும். அப்போதுதான் இனிமேல் வரும் அரசு அதிகாரிகள் முதலிலேயே விதிமுறை மீறல் கட்டிடங்களை கண்டு தடுப்பார்கள். 

சரி, விதிமுறை மீறிய கட்டிடங்களை சீல் வைப்பதால் வேறு யாருக்கு என்ன பிரச்சினை? அந்த பெரிய நிறுவனங்களின் வாசலில் அன்றாடம் காய்ச்சிகள் சிறு சிறு வியாபாரங்களை செய்கின்றார்கள். நேற்று நடந்த "காலதாமத" அதிரடி நடவடிக்கைகளால் அவர்களது வாழ்க்கையும், ஒரு நாள் வருமானமும் வீணாகி போனது. ஒரு 2 ஜி வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஆ.ராசா தனக்கு முன்னால் இருந்தவர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நானும் செய்கின்றேன் என்று சொன்ன பிறகுதான் தயாநிதியின் பெயரும் செய்திகளில் அடிபட்டது. அதுபோல தற்போது உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தானாகவே பழைய குற்றம் செய்த அதிகாரிகளும் பிடிபடுவார்கள். 
முதலில் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..அப்போதுதான் இனிமேல் இதுபோன்ற தவறுகள் தொடராமல் தடுக்கலாம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்பது இந்த துறைக்கும் பொருந்துமே? 

அப்பாவி ஊழியர்களின் சார்பாக மின்சார சிவா...