பங்காளிங்க..

Thursday, December 18, 2014

தடம் மாறும் தாமரை! தத்தளிக்கும் தமிழகம்!

காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணுதுன்னு சொல்லி சொல்லித் தான் பாரதிய ஜனதா நம்மகிட்டே பிச்சை கேட்டானுங்க...ஓட்டுக்கு ஊர், ஊரா தெரு தெருவா பிச்சை கேட்டானுங்க, இன்னிக்கு சமஸ்கிருதத்தை கொண்டு வருவேன்...பகவத் கீதையை கொண்டு வருவேன் னு வசனம் பேசிகிட்டு இருக்காங்க...திடீருன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒன்னு கேள்வி பட்டது அதிர்ச்சியா இருந்தது, கிறிஸ்துமஸ் கு லீவ் கிடையாதாம். மெல்ல இந்துத்துவா தலை தூக்குதோ ங்கிற அச்சம் எல்லோருக்கும் வருது...

மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் எல்லா மொழி, மதம் பேசுறவங்களும் இருக்காங்க. அந்த நாட்டோட பெருமைய சீரழிக்கிற மாதிரி பேசிகிட்டு இருக்கிறது கண்ணியமான ஆட்சியா தெரியல...

கடந்த தேர்தல் பிரச்சாரம் அப்போ இப்போ பிரதமரா இருக்கிற  மோடி தான் மன்மோகன் சிங் பிரதமரா இருந்த போது அப்போதைய பிரதமரையே ஏக போக வசனத்துல பேசினாரு...ஆனா அதே விஷயத்தை இன்னிக்கு வைகோ செய்யுறதால அவர வீட்டுக்கு பாதுகாப்பா போக முடியாது னு பிஜேபி கட்சிக்காரர் ஒருத்தர் மறந்திட்டு பேசுறாரு...

காங்கிரஸ் செஞ்ச அதே தப்பை இப்போ பிஜேபி யும் செய்யுது....ஆனா இந்த வாட்டி மக்களோட முடிவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்...

ஆட்சிக்கு வந்ததும் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று சொன்னது என்னானது? கோர்ட்ல இருக்கு, கடையிலே இருக்கு என்று படம் காண்பிக்கின்றார்கள். அன்று ஆதார் அட்டை வீணானது என்று சொன்னார்கள்..இன்று வரை ஆதார் அட்டைக்கு மக்களை விரட்டி கொண்டுதான் இருக்கின்றார்கள்.  

தமிழ்நாட்டினில் காங்கிரஸ் ஐ ஓட ஓட விரட்டியது ஈழத் தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும்தான்...

கட்சத் தீவு மீட்பு இயக்கத்தை சீதையின் மைந்தன் என்பவர் தொடங்கி வைத்தார். அதற்கு தலைமை தாங்கியதே பிஜேபி தலைவர் ஒருவர்தான் இன்று அதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றார் என்பதே வெட்க கேடான செயல். 

தமிழர்களை கழுத்தருப்பவன் ராஜபக்சே , அந்த ராஜபக்சேவிற்கு கொடி பிடித்து கொண்டிருக்கும் எல்லாருமே தமிழர்களின் எதிரிகளே...தமிழர் நலன் காக்க அன்று முதல் இன்று வரை போராடும் வைகோவையே  அச்சுறுத்தும் ராஜா அவர்களுக்கு நமது மீனவர்கள் எல்லாம் கிள்ளுக்கீரைதான்...

ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல, நீங்கள் நடத்தும் தூய்மை இந்தியா நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க? மரம், செடி கொடிகளில் இருந்து வரும் இலைகளை குப்பை என்று பெருக்குகின்றார்கள்...இறுதியில் அந்த குப்பையை பெருக்கி பிளாஸ்டிக் கூடைகளில் போடுவார்களாம், முதலில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுங்க காவி சாமியார்களே, எல்லாமுமே தானாகவே நடக்கும்...ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் , செயல்களை செயல்படுத்தினால் மக்களும் நம்புவார்கள். நாடு அழுக்காகாமல் இருக்கிறதா என்று பார்க்காதீர்கள்? உங்கள் மனது உண்மையும், நம்பிக்கைக்கும், ஏற்றவாறு சுத்தமாக இருக்கிறதா என்று பாருங்கள்? 

வந்ததில் இருந்து எதுவுமே உருப்படியான திட்டமாக தெரியவில்லையே... தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்பு பண ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஊழலை பட்டியல் போட்டார்கள்...இன்று எந்த ஊழலும் வெளியே வர வில்லை...காரணமும் தெரியவில்லை...ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்கு, மீனவர்களுக்கு எந்த வித பாதுக்காப்பிற்கும் உத்திரவாதம் அளிக்க வக்கில்லாத அரசுதான் இந்த பிஜேபி என்பதை நிருபித்து வருகின்றது.  மோடி வந்தால் நாட்டில் அது மலரும், இது மலரும் என்று தமிழகத்தின் ஒரு பத்திரிகை ஆசிரியர் பினாத்திக் கொண்டு இருந்தார். காங்கிரசிற்கும், பிஜேபி க்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றார்கள்.

தமிழ் நாட்டு மாநகரம் போன்று இருக்கும் சிறிலங்கா நமது தமிழக மீனவர்களை பந்தாடிக் கொண்டிருக்கின்றது. அடுத்த முறை மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அந்த ஹெச்.ராஜா அவர்களை படகில் வைத்து கூட்டி செல்லுங்கள்..அவர் கண்டுபிடிக்கட்டும்..கடலில் இந்தியாவின் எல்லையை. காஸ்மீரில் அடித்தால் அது இந்தியா...அதுவே தமிழக மீனவர்களை அடித்தால் அது தமிழ் நாட்டு பிரச்சினையா?  உன் மாநிலத்து பிரச்சினைகளையே உன்னால் தீர்க்க முடியவில்லை...உன்னால் உன் தலைமையிடம் பேச முடியவில்லை...நீ இந்தியாவை சுத்தப் படுத்த போகின்றாயா? நம்புவது போல் பேசுங்கள்...அல்லது பேச முயற்சியுங்கள்...

காங்கிரஸ் ஆட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரமா என்று கேட்டார்கள்? இன்று அதே டெல்லியில் மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம்? வெட்கமாக இல்லையா? உனது ஆட்சியின் லட்சணம் ஒரு வருடத்திற்குள் பல்லை இளித்து விட்டதே...

மக்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்துங்கள்...வெட்டி பந்தா ஊரை கெடுக்கும் என்பது நிதர்சன உண்மையே!  தமிழகத்திற்கு விடிவு காலத்திற்கு மூன்றாம் அணி உருவானால் மட்டுமே முடிவு பெரும். எப்போது அடுத்த தேர்தல் வரும்?

Monday, September 29, 2014

இந்த வார இறுதியில் "அம்மா" விடுதலை?

சொத்துக்குவிப்பு வழக்கினில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பாரட்டக் கூடிய விசயமே...யாரை பாராட்டுவது?

18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தையா? 

அல்லது 

வழக்கு போட்ட சுப்ரமணிய சுவாமியையா? 

அல்லது 

வழக்கம் போல் இடையில் நுழைந்து பெயர் பெற்றுக் கொண்ட கலைஞரையா? 

அல்லது 

தீர்ப்பு கொடுத்ததும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் சத்தம் இல்லாமல் சிறைக்கு சென்று அமர்ந்த அம்மாவையா? 

அம்மா நினைத்தால் "அய்யோ, என்னை கொலை பண்ண போறாங்க ன்னு ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்", எதுவும் இல்லை.

பொதுவான ஒரு கேள்வி மனதில் எழுகின்றது? 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பிற்கு அவர் மீது  இத்தனை நடவடிக்கை....நியாயம்தான்! 

இன்று சினிமாவில் ஒரு நடிகை ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ. 5 கோடி. பத்து படங்கள் நடித்தால் அவள் பெரும் தொகை 50 கோடி. இப்படி இருக்கும் போது ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஒரு பெண்மணி, அதன் பிறகு தீவிர அரசியலில் இருக்கும் போது இந்த 66 கோடி என்பது மிகச் சாதாரண தொகையே.

ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஒரு இடத்தில் பதவி வகித்தாலே அவருக்கு அந்த ஊரு வியாபாரிகள் அவருக்கு மரியாதை என்ற பெயரில் மாமூல் கொடுக்கின்றார்கள். இது பத்தாது என்று அந்த அதிகாரியும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்போது வசூலும் செய்து கொள்வார். அப்படி இருக்கும்   தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற போது அவருக்கு மரியாதை எப்படி இருக்கும், எப்படி பணம் வரும் போகும் என்று சாதாரண பாமரனும் அறிவான்.

ஒருவரை பற்றி புகார் தெரிவிக்கும் மற்றொருவர் தான் அப்படிப் பட்ட விசயத்தில் ஒழுங்கா என்பதை முதலில் யோசித்து பார்க்க வேண்டும்....

ஆர்டிகிள் 164 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு முதல்வரின் சம்பளம் 20000 முதல் 30000 வரைதானாம். இதுவரை நம்மை ஆண்ட முதலமைச்சர்களின் சம்பளமும், தற்போது அவர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளையும் வைத்து பார்த்தால் யார், யார் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று மக்கள் அனைவருக்குமே தெரியும்.

ஒரு சிலர் அந்த முதல்வர் மக்களுக்கு , அரசு ஊழியருக்கும் கொடுப்பார், அவரும் அடித்து கொள்வார்...இன்னொரு முதல்வர் எதுவுமே செய்யமாட்டார் என்று பெருமையாய் பேசிக் கொள்வார்கள்.,

உங்களுக்கு கிள்ளிக் கொடுத்தால் அவர்கள் அள்ளி எடுக்கலாம் என்பது அவர்கள் குறி. நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் போட்டு அவர்கள் அதிகம் சம்பாதித்து கொள்கின்றார்கள்...

66 கோடி அடிச்சதுக்கே 4 வருஷம் ஜெயில், 100 கோடி அபராதம், அப்படீன்னா  1 லட்சம் கோடி அடிச்சதுக்கு எவ்வளவு வருஷம் ஜெயில், எவ்வளவு கோடி அபராதம் ?

ஒரு விஷயம் கவனிக்கணும்.....சுற்றி எட்டு ஆணாதிக்க கட்சிகள்...ஒற்றைப் பெண்மணி....ஒட்டுமொத்த மாபெரும் கட்சியை ஒன்றிணைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்.

ஆனால் பல வருடங்களாக கட்சியை நடத்தும் கலைஞரால் அண்ணன் தம்பி பிரச்சினையைக் கூட சமாளிக்க முடியவில்லை என்கின்ற போது அம்மாவை தலை வணங்கலாம் தவறில்லை என்றே தோன்றுகின்றது...

ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், மேக்சிஸ் நிறுவனத்தின் பங்கு விவகார ஊழல் என்று அடுக்கிக் கொண்டே செல்லும் போது ஒவ்வொன்றுக்கும் எத்தனை வருடம் என்று கவனித்துக் கொள்ள வேண்டும். 

அதற்காக 66 கோடி நியாயம் என்று சொல்லவில்லை...அதனை களங்கமில்லாத வாயும், கைகளும் சொல்ல வேண்டும், சுட்டிக் காட்ட வேண்டும் என்பதே எண்களின் கோரிக்கை...

அடுத்தவரை ஊழல்வாதி, சொத்து குவித்திருக்கின்றார் என்று சொல்வதற்கு முன்னால் தனக்கு எவ்வளவு நிதி இருக்கின்றது, எப்படி வருமானம் வருகின்றது என்பதையும் சொல்லி விட்டு சொன்னால் நன்றாக இருக்கும். தன்னுடைய ஆண்டு வருமானம் எவ்வளவு...எப்படி தொலைகாட்சி நிறுவனம் தொடங்கினீர்கள், எப்படி இவ்வளவு இடங்கள் வாங்கினீர்கள் என்று சொன்னால் நாங்களும் அப்படியே எங்கள் தொழிலை விருத்தி செய்வோமே...

கதை திரைக்கதை வசனம் எழுதி இவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லி விடாதீர்கள்...அன்றிலிருந்து இன்று வரை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய எத்தனையோ இயக்குனர்கள் இன்று வரை சாதாரண வருமானத்தில் தான் வாழ்கின்றார்கள்.

யதார்த்தம் எங்களுக்கும் தெரியும்.....நியாயமாக 500 ரூவாய் சம்பாதிப்பவனுக்கு 700 ரூவாய் வரைக்கும் செலவுகள் இருக்கின்றது....
அதுதான் உண்மை....

அம்மையாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எத்தனையோ எதிர்கட்சித் தலைவர்கள் வாழ்த்தும், அனுதாபமும் தெரிவித்து விட்டார்கள்; ஆனால் ஆரம்பத்தில் இருந்து விரட்டிய திமுக இன்று இந்த தீர்ப்புக்கு ஏன் கருத்து சொல்லவில்லை....

நாளைக்கு நமக்கு எந்த ஜெயிலோ என்ற கவலையா? அல்லது வச்ச குறி எக்குத் தப்பாய் போனதை நினைத்து கவலையோ? 

எது எப்படியோ? வழக்கை ஜெயலலிதா அம்மையார் சந்தித்து விட்டார்....இப்போது அவருக்கு வாக்குகள் அதிகமாகி விட்டது....

அடுத்தது 2ஜி க்காக நவம்பர் மாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சராசரி மனிதனாய் நாங்கள்....நீங்களும்? 

Thursday, September 4, 2014

100 நாளில் என்ன செய்தது பாஜ அரசு?

காங்கிரஸ் அரசின் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அதிலிருந்து விடுதலை பெற்று பாஜ என்ற மற்றொரு வலையில் விழுந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். 

அரசனும் சரி இல்லை, புருசனும் சரி இல்லை என்ற பழமொழிக்கேற்ப பாஜ பல அதிருப்திகளை சம்பாதித்து வருகின்றது. குறிப்பாக தமிழ் நாட்டு மக்களை பாஜ வும் இணைந்தே வஞ்சித்து வருகின்றது. 

ஒரு காலத்தில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசை சவுந்திரராஜனும் தற்போது பதவிக்காக மௌனமாக இருக்கின்றார்கள்.

பதவிக்கு வந்ததுமே இது இலங்கை அரசின் நடவடிக்கை என்றும், அதனை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றும் பிரதமர் கூறினார்...அன்று எப்படி தமிழக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் மௌனமாக இருந்தார்களோ, அதே நிலையில் தான் இன்று பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசை சவுந்திரராஜனும் இருக்கின்றார்கள். 

சும்மா வெறுமனே மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று சொல்கின்றார்கள்....அவர்களை இன்று வரை கைது செய்கின்றது...அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றது....ஏன் என்று கேட்க நாதி இல்லை...முல்லைப் பெரியாறு அணைக்கு கிடைத்த  நீதியைப் போன்று என்று சொல்லி இருக்கின்றார். முல்லைப் பெரியாறு அணைக்கு நடவடிக்கை கோரி தமிழக அரசுதான் உச்சநீதி மன்றம் வரை சென்று நடவடிக்கை எடுத்துள்ளது...

கட்சி பொறுப்பில்லாதவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு நாங்கள் விளக்கம் தர முடியாது என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார். மோடி சொன்னதற்க்கே இன்னமும் விளக்கம் கேட்கப்படவில்லை. இலங்கை நாட்டு பிரச்சினையை அன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்கள் காங்கிரசின் அணுகுமுறை தவறு என்று சொல்லிவிட்டு இன்று உங்கள் அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது? 

அவர்களாவது நாங்கள் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்? நீங்கள், செய்வேன் என்று நம்பிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தீர்கள்? உங்களால் செய்ய முடிந்ததா? 100 நாளில் வெளியூர் சுற்றுப்பயணம் நடந்தது, எங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் எங்களுக்கு, எங்கள் மீனவர்களுக்கு என்ன உத்திரவாதம் வழங்கினீர்கள்...நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமருக்கு மாநில முதலமைச்சர் எழுதிய கடிதத்தை கொச்சைப் படுத்தி விமர்சித்தார்கள்...அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று பெருமை கொண்டது மட்டும்தான் உங்கள் சாதனை. 

இன்னும் தமிழர்கள் என்னென்ன பாடு படப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.? 

Monday, August 25, 2014

மதுரையா? சில கேள்விகள்???

மதுரையில் நான் கண்ட பல வித மாற்றங்கள்....மாறாத மாற்றங்கள்....

காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை மாற்றிக் கொண்டார்கள்..ஆனால் இன்னமும் சில பகுதிகளில் தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறும் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்...

ஜெராக்ஸ் , செல் போன் ரீசார்ஜ், செல் போன் இரண்டாம் நிலை விற்பனை, கம்பியூட்டர் என்று இளைஞர்களின் வலை விரிகின்றது....

அதே சமயம்....பெற்றவர்கள் இன்னமும் அதே பழமை மாறாத அணுகுமுறையில் வாழ்ந்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது எனது முதல் ஆச்சரியம்....

நிறைய பேருக்கு இன்னமும் செல் போன் பற்றிய விவரங்கள் தெரியவில்லை...இணையதளம் பற்றிய விவரங்களும் தெரியவில்லை...

ஈமெயில் என்றால் என்ன என்று பலர் கேட்டது ஆச்சரியமளிக்கின்றது....

அதையும்தாண்டி பழமைகள் என்று நிறைய விஷயங்கள் இன்னமும் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.....

அந்த பழமைகளில் ஒரு சில.....

மதுரையில் 99 சதவிகிதம் பழமை மாறாத தூய தமிழ் ஊர் பெயர்களே இருப்பது...

திருமண, காதுகுத்து, மற்றும் பூப்புனித விழா என்று பழமை மாறாத குடும்ப விழாக்கள் சிறப்பாய் நடைபெறுவது....

கோவில் திருவிழாக்கள்...

சாஸ்திர சடங்குகள்...
 
பேச்சு வழக்குகள்...

மரியாதையான உறவுமுறைகள்...

இட்லி, வடை, பொங்கல் என்ற உணவு வகைகள் இப்படி பல பல விஷயங்கள்....

பிரச்சினைக்குரிய விஷயங்கள்...

அடிக்கடி சாதி மோதல்கள்...

போக்குவரத்து பிரச்சினைகள்...

குடிநீர் பிரச்சினைகள்...

சரியான பராமரிப்பின்றி செயலிழந்து நிற்கும் அரசாங்க பணிகள்...

சீரற்ற நிதி நிலை....

காவல்துறையையே அலட்சியப்படுத்தும் அச்சுறுத்தல்கள்....அலட்சியங்கள்...

உதாரணமாக, மதுரை சேர் ஆட்டோக்கள் வெளிப்படையாகவே அதிக பயணிகளை ஏற்றுகின்றனர்....ஆனால் ஆட்டோக்களில் 3 பேர் மட்டுமே என்று எழுதி விட்டு 16 பேரை ஏற்றிக் கொ(ள்)ல்கின்றார்கள்......

அந்த "3 பேர் மட்டுமே" என்ற வசனம் யாரை ஏமாற்றுவதற்கு....பயணிகளையா? போக்குவரத்துதுறை அதிகாரிகளையா ?  காவல்துறை அதிகாரிகளும் பார்த்து விட்டு பேசாமல்தான் இருக்கின்றார்கள். வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்மைப் பார்த்து என்ன  ..நினைப்பார்கள்...நமது சட்டத்திற்கு அவ்வளவுதான் நாம் அளிக்கும் மதிப்பா?

மழை இல்லை..மழை இல்லை என்று புலம்பித் தள்ளும் ஒரு சில மதுரை மக்கள்...பெய்து வரும் மழை நீரை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்றால் எதுவுமே இல்லை,  

சிவகங்கை மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் என்று மூன்றுமே பக்கம் பக்கம் இருக்கின்றது......3 மாவட்ட மக்களும் ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றார்கள்....இவர்களுக்கு பாலமாய் இருப்பது இன்னமும் அரசுப் பேருந்துகள்தான்...அந்த பேருந்துகளின் நிலையோ மிகவும் பரிதாபம்....

இவ்வளவு பெரிய மாநகரில் பொழுது போக்கு மையங்கள் எதுவும் இல்லாதது வேதனைக்குரிய விசயமே....

கோவில்கள் இருக்கின்றது, இந்த ஊரிலேயே பிறந்தவர்களுக்கு அது பழகி போன விஷயம்...அது தவிர வேறு எந்த பொழுது போக்கு விசயங்களும் இல்லாதது ஆச்சரியமே....

அனைவருக்குமே தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கண்காட்சி, பொருட்காட்சிகளே பிரதான பொழுது போக்கு மையங்கள்...இது தவிர வேறு எதுவுமே இல்லை...

அது போல ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்களுக்கு முன்னரே வியாபாரிகள் விடுமுறை எடுத்துக் கொள்ள அன்றைய தினம் பெரும்பாலான மதுரை மாநகரம் முடங்கித் தான் போகின்றது....

ஒரு காலத்தில் ஒரு சில அரசியல்வாதிகளின் கோரப் பிடியில் இருந்த மதுரை இன்று தப்பி ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கையில் சென்று கொண்டு இருக்கின்றது.

மதுரை என்றாலே வன்முறை,  கொடூரம், ரவுடி என்ற போக்கிலேயே சமீப கால சினிமாக்கள் வேறு வந்தது, மதுரையை பயங்கரமாக காட்டியது... 

இவை எல்லாம் களைந்தெடுக்கப்படும் போது தானாகவே மதுரை மாநகரம் ஜொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை....

Saturday, August 16, 2014

சைஸ் சின்னதுதான் ஆனா????


மூர்த்தி சிறுசுனாலும் கீர்த்தி பெருசு ன்னு சொல்வாங்க....ஆனா இங்கே மூர்த்தியும் சிறுசு, கீர்த்தியும் சிருசாயிடுச்சே....
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?   

Tuesday, July 29, 2014

சுடுவது எனக்கு பழகிப் போச்சு????


இந்தியாவில் லேண்ட் லைன் போன்களை விட செல் போன் ஆதிக்கம் தற்போது மிக அதிகம்.....

அதனை தற்போது வியாபாரிகளும், சுயதொழில் செய்பவர்களும் தற்போது தனக்கு சாதகமாக்கி கொண்டு விட்டனர். 

பேப்பர் இல்லா உலகத்தை உருவாக்கும் முயற்சியில் டிராய் குழுமம் இறங்கி இருக்கின்றது. ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு வீதியாக, ஒவ்வொரு மனிதனாக சென்று  விளம்பர நோட்டீஸ் கொடுத்தது அந்தக் காலம். 

செல் போன் இருப்பதால் தற்போது உலகம் உங்கள் கைகளில், எப்போதும் நிரந்தரமாக உங்கள் பைகளில்......

எஸ் எம் எஸ் மூலமாக இரண்டு வரிகளில் தனது வியாபாரத்தை, பொருட்களை விற்பனை செய்வதில் அனைத்து வியாபாரிகளும், முதலாளிகளும் இறங்கி விட்டார்கள். 

எல்லாவற்றிற்கும் தற்போது எஸ் எம் எஸ் என்றாகி விட்டது. ரயிலில் பயணம் செய்ய கொடுக்கப்படும் டிக்கெட் டை கூட எஸ் எம் எஸ் சில் வைத்து கொண்டால் பிரிண்ட் அவுட் தேவையில்லை என்று சொல்லும் காலம் வந்து விட்டது...

நல்ல விசயம்தானே....ஆனால் அது எப்படி எனது போன் நம்பர் வியாபாரிகளின் கைகளுக்கு போகின்றது? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும்...நியாயம்தானே??

பொது மக்களின் செல் போன் அடங்கிய விவரங்களை வரிசையாக அமைத்து அதனை மொத்த எஸ் எம் எஸ் குழுவிற்கு ஒரு குழு தயாரித்து அனுப்புகின்றது...

அந்த எஸ் எம் எஸ் களை ஒன்றாக சேர்த்து ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கும் ஒரே பொத்தான் அழுத்தலில் அனுப்புகின்றது....

இதற்க்கு அந்த குழுமம் வியாபாரிகள் அல்லது முதலாளிகளிடம் பணம் வசூலித்துக் கொள்கின்றது. 

எல்லாம் சரி, ஆனால் ஒவ்வொரு எஸ் எம் எஸ் சும் ஒவ்வொரு நம்பரில் இருந்தும்  சில சமயங்களில் ஒரு சில அடையாள எழுத்துக்களையும் கொண்டு வருகின்றது? அது எப்படி?

டிராய் நிறுவனம் ஒவ்வொரு எஸ் எம் எஸ் சையும் ஒவ்வொரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறியீடுகளாய் சில கோட் களை உருவாக்கியுள்ளது....

அது என்ன தெரியுமா?

உதாரணமாக, AT  - 644321 என்ற பெயரில் நமக்கு எஸ் எம் எஸ் வரும்...

இதில் A என்பது ஏர்டெல் என்பதை குறிக்கும்....T என்பது தமிழ் நாடு என்பதை குறிக்கும்...முதலில் வரும் 6 என்பது ஏர்டெல் நிறுவனம் போன்ற மொபைல் சர்வீஸ் ஆகியவற்றை குறிப்பிடும்...மீதமிருக்கும் 5 எண்கள் எஸ் எம் எஸ் சர்வீஸ் ஏஜென்ட் டுகளை குறிக்கும் எண்களாகும். 

இப்போது புரிகின்றதா? நமக்கு யார் எப்படி அனுப்புகின்றார்கள் என்று?

அந்த விவரங்களை இதோ பட்டியலிட்டு இருக்கின்றேன்...

Table 1 Service Provider List
Table 2 Service Area List சர்வீஸ் ஏரியா 

Table 3  எந்த துறை/பிரிவு  என்பதை குறிக்கும் முதல் எண் 

மீதமிருக்கும் 5 எண்கள் டெலிமார்க்கெட்டிங் செய்யும் ஏஜென்ட் டுகளை குறிக்கும் எண்களாகும்....

அதெல்லாம் சரி.......

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது டிராய் குழுமம். 

அது என்ன என்று கேட்கின்றீர்களா? 

வியாபாரிகளுக்கு இந்த வசதியை கொடுத்து விட்டு மக்களுக்கு DND வசதியை செய்து கொடுத்திருக்கின்றதே....

DND என்பது Do Not Disturb ஆகும்...எப்புடீ நம்ம மாஸ்டர் பிளான்!!!

எல்லோரும் என்னை மன்னிக்கணும்...இன்னொரு இங்கிலீஸ் வலைப்பூவுல இருந்து சுட்டதுதான் இது....

Friday, July 25, 2014

நாப்கினால் ஏற்படும் நன்மைகள்!!!!


நாப்கின் ல என்ன நன்மைகள் இருக்கப் போகுதுன்னு கேக்குறீங்களா?

இருக்கே....அமெரிக்காவிலே நடந்த ஓவியக் கண்காட்சியிலே இந்த நாப்கின்ல படம் வரைஞ்சு அதை சேல்ஸ் ல வச்சு காசு சம்பாதிச்சிருக்காங்க....அதுவும் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ. 1.25 லட்சமாம்....

நாப்கின்ல நன்மைகள் இருக்குனு இப்பவாவது ஒத்துக்கிறீங்களா?  நம்ம ஊருல வர்ற தின பேப்பர்தான் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடுறதுக்கு, கை தொடைக்கிறதுக்கு, பஸ்சுல முன் கண்ணாடி தொடைக்கிறதுக்கு நாப்கீனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்.....

Sunday, June 29, 2014

திமுக வளர்கின்றதா? தேய்கின்றதா? நடுவர் மஞ்சப்பை

திமுக நடத்தும் மீட்டிங் என்றாலே வரிந்து கட்டி கொண்டு தலைவரின் பேச்சை கேட்க முதல் வரிசையில் நின்ற காலம் அது....எதுகை மோனை என்ன, எடுத்துக்காட்டுகள் என்ன, என்ன? எங்கே போனது அந்த உதாரணங்கள்....எனக்கு நினைவு தெரிந்து நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது, கல்லூரி படிக்கும் போதும் கனிமொழி யாரென்றே எனக்குத் தெரியாது...ஆனால் தற்போது வாரிசுகளின் ஆட்டம் அதிகம்,

அதனால் தற்போது அவரது பேச்சினை கேட்க யாருமே முன் வராதது ஆச்சரியமான விஷயம்...

காரணம் என்ன?   

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் முடித்து விட்டு வீடு திரும்பிய கலைஞரும், ஸ்டாலினும் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி என்ன? 

மக்கள் மிகுந்த எழுச்சியோடு இருக்கின்றார்கள்....இந்த அம்மாவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது....இந்த அம்மாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகின்றார்கள்....ஆனால் முடிவுகள் எக்குத்தப்பாய் முடிந்தது. இப்போது களை  எடுக்க தொடங்கி இருக்கின்றார்கள்....

ஆடத் தெரியாதவள்  தெரு கோணல் என்று சொன்னாளாம்...அந்த கதையில் தான் இருக்கின்றது..திமுக தலைவரின் இந்த பேட்டிகள்.....

பல வருடங்களாய் திமுக விற்கு உழைத்த தொண்டனுக்கு கடைசி வரை குவாட்டர் பாட்டிலும், பிரியாணி பொட்டலமும் மட்டுமே...கட்சி என்றால் என்ன,? என்று தெரியாத, கட்சி வரலாறு தெரியாத மக்கள் இன்று நாடாளுமன்ற வேட்பாளர்கள்.....கட்சி தேர்தல் நிதி வழங்கி விட்டால் அவர்களுக்கு தேர்தலில் சீட், மற்றவர்களுக்கு குல்லா என்றால் யாரால்தான் ஜீரணிக்க முடியும்....

என்ன காரணம் என்று கட்சி மேலிடதிர்க்கே வெளிச்சம்...

அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில் நடக்கின்றது.....ஆனால் இன்று வரை கட்சி கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்சியை ஒரு தலைமையின் கீழ் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...என்பதை கலைஞர் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்....அவரிடமும் சில குறைகள் இருக்கலாம்...ஆனால் ஒரு பெண் அகில இந்திய கட்சியின் தலைமையில் இருப்பதை, கட்டுகோப்பாய் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல.....அந்த தைரியம் பாராட்டப் படக்கூடியதே....

திமுக வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வர முடியாது....உண்மைதான்...வெளியில் இருந்து யாரும் வர முடியாது..உள்ளேயே இருக்கின்றார்கள்....

அடிக்கடி அண்ணாதுரையின் வசனங்களை நினைவுபடுத்தும் கலைஞருக்கு நாங்கள் ஒன்றை நினைவுபடுத்துகின்றோம்...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மட்டும் அண்ணா சொல்லவில்லை....குடும்ப உறுப்பினர்களுக்கு, வாரிசுகளுக்கு அரசியலில் இடமில்லை என்றும் அதே அண்ணா தான் சொன்னார்....

அது போலவே தனது தொண்டர்களை ஊக்குவித்து தான் கலைஞர் கருணாநிதி என்ற தொண்டனை தேர்ந்தெடுத்தார்....அவரது சொந்தக்கார மகனையோ, அல்லது உறவினரையோ கட்சிக்குள் சேர்க்க வில்லை...

திமுக அழிந்து விடாதா, பூண்டோடு உருத்தெரியாமல் போய் விடாதா என்று ஒரு சிலர் நினைக்கின்றார்கள் என்று சொல்லி இருக்கின்றார்.
மன்னிக்க வேண்டும் தலைவரே, நாங்கள் அதை பற்றி நினைப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. நீங்களாகவே அப்படி சொல்லிக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.....

ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கணக்கினில்  தான் திமுக தலைமை நடந்து கொள்கின்றது என்று தலைவரின் மூத்த மகனே பேட்டி அளிக்கின்றார்.....ஸ்டாலினால் தான் திமுக தோல்வி அடைந்தது என்று அழகிரி பேட்டி கொடுக்க....உடனே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. ஏன் அழகிரி பக்கம் இருக்கும் நியாயம் விளக்கம் கேட்கப் படவில்லை என்பதே அழகிரி ஆதரவாளர்களின் கேள்வி...உண்மைதானே, அப்படி என்றால் சாவி கொடுத்த பொம்மையாகி விட்டாரோ கலைஞர் என்ற சந்தேகம் வரத்தானே செய்யும்....

அனைவரையும் களை எடுக்கின்றோம் என்ற பெயரில் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் தற்போது நீக்கி கொண்டு வருகின்றார்கள்....

குடும்ப அரசியலில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கின்றது....அதை ஏற்றுக் கொண்டால், கவனித்துக் கொண்டால் திமுகவின் வளர்ச்சி அபாரமாய் இருக்கும்...இல்லை எனில் வாரிசு சண்டையும் ஓயாது...திமுக வின் வளர்ச்சியும் தேயத் தொடங்கி விடும்....இதை நாங்கள் சொல்லவில்லை...அரசியல் வல்லுனர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள்....

Friday, June 13, 2014

யாருக்கெல்லாம் நெஞ்சு எரியுது?

 நெஞ்சு எரியுதுன்னு அடிக்கடி சொல்பவரா நீங்கள்? 

அப்படீனா உங்களுக்குத்தான் இந்த கட்டுரை....

ஒரு சம்பவத்தை பார்த்து நெஞ்சு பதைபதைத் தால் அது வேறு, அது உணர்ச்சிப்பூர்வமான விஷயம்...

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் அதனை கண்டு தவிப்பது, பதறுவது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம்...
நமது மீனவர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளினால் அது ஒரு விதமான நெஞ்சை உருக்கும் செய்தி...

ஆனால் நெஞ்சு எரியுது என்று சொன்னால் அது உடல் ரீதியான கோளாறு....

அது என்ன அது?  இந்த நெஞ்சு எரிச்சல் என்பது மாரடைப்பு அல்ல...அது நெஞ்சுக்கும் கீழே இருக்கும் உருவாகும் பிரச்சினை...

இந்த நெஞ்சு எரிச்சல் என்பது சில மணித்துளிகள் அல்லது சில மணி நேரமே இருக்கும்...அதாவது எப்போதாவது அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டாலோ அல்லது சாப்பிட்ட மறு நொடியே படுத்தாலோ இந்த நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு விடும்....அப்படியே குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்....

நெஞ்சு எரிச்சல் எப்படி ஏற்படுகின்றது??

நாம் சாப்பிடும் உணவு என்பது நமது வாயின் வழியாக ஒரு பைப் பின் மூலமாக வயிற்றுக்கு செல்லும்....

அந்த பைப் ஒரு கதவு போல ஒவ்வொரு உருண்டையும் உள்ளே செல்லும் போது திறந்து திறந்து மூடும்....சில சமயங்களில் மூடாமல் இருக்கும் போது வயிற்றினில் இருந்து ஒரு அமிலம் உருவாகி அந்த நீண்ட குழாயினுள் சென்று விடும்...அந்த குழாயின் பெயர் ஆங்கிலத்தில் ஈசோபெகஸ் என்று அழைப்பார்கள்...

அந்த அமிலம்தான் நெஞ்சு எரிச்சலை உருவாக்கி விடும்....அதுதான் அந்தக் காலத்தில் சாப்பிடும் போது  பேசக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள்...

ஏனெனில் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் அந்த அமிலமானது ஈசோபேகஸ் என்னும் குழாய்க்குள் சென்று விடும் மேலும் நெஞ்சு எரிச்சல் வந்து விடும் என்றே சொல்லி வைத்தார்கள்...

என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் உருவாகின்றது? 

மிக முக்கிய காரணம் இரவினில் அல்லது பகலினில் சாப்பிட்டதும் படுத்து விடுவது...

இரண்டாவது அதிக கொழுப்புடைய உணவினை உட்கொள்வது...

மூன்றாவது சிகரட் குடிப்பது 

நான்காவது காபி போன்ற அதிக கேபைன் உட்கொள்வது...

ஐந்தாவது கார்போனட் பானங்களை குடிப்பது 

ஆறாவது இரவினில் தக்காளி, சிட்ரிக் வகை சாறுகளை குடிப்பது 

ஏழாவது வெங்காயம் மற்றும் இரவினில் பிஸ்ஸா மற்றும் வெண்ணை சம்பந்தப் பட்ட உணவுகளை உட்கொள்வது

எட்டாவது அதிக எடை கொண்ட உடலும் இதற்க்கு காரணமாக அமைகின்றது....


நெஞ்சு எரிச்சலை எவ்வாறு தடுக்கலாம்?

முதலில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உட்கொள்ளல் வேண்டும்..

சிகரட் குடிப்பவராக இருந்தால் உடனடியா நிறுத்தியாக வேண்டும்...

அதிக பருமனாக இருந்தால் உடலை உடனடியாக குறைத்தல் வேண்டும்..

இரவு நேரத்தில் அதிக அளவு சாப்பிடக் கூடாது...

மிக இறுக்கமான உடைகள், மிக இறுக்கமான பெல்ட் டுகளை தவிர்த்தல் நல்லது....

இப்படி செய்தால் நெஞ்சு எரிச்சலை எளிதாக தடுக்கலாம், அல்லது குறைக்கலாம்....


நெஞ்சு எரிச்சல் வேறு, நெஞ்சு அடைப்பு வேறு புரிந்து கொள்ளுங்கள்....
நன்றி....

Thursday, June 5, 2014

யார் காதுல பூ சுத்துறீங்க???


தேர்தல் வந்தாலும் வந்தது, சும்மா அள்ளி தெளிச்சிருக்காங்க வாக்குறுதியை....எப்படி நிறைவேத்துறாங்க ன்னு பாக்கத்தானே போறோம்...

அடுத்த எலெக்சன்ல நாங்க எதையுமே கேக்க மாட்டோம்...

காது இருந்தாத்தானே கதை விடுவீங்க....காதையே கண்டம் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?

எப்படி கண்டம் பண்றது?  பார்த்து தெரிஞ்சிக்கோங்க.... 


என்னா ஒரு அலங்காரம்? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ப்பா ?