இந்தியாவில் லேண்ட் லைன் போன்களை விட செல் போன் ஆதிக்கம் தற்போது மிக அதிகம்.....
அதனை தற்போது வியாபாரிகளும், சுயதொழில் செய்பவர்களும் தற்போது தனக்கு சாதகமாக்கி கொண்டு விட்டனர்.
பேப்பர் இல்லா உலகத்தை உருவாக்கும் முயற்சியில் டிராய் குழுமம் இறங்கி இருக்கின்றது. ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு வீதியாக, ஒவ்வொரு மனிதனாக சென்று விளம்பர நோட்டீஸ் கொடுத்தது அந்தக் காலம்.
செல் போன் இருப்பதால் தற்போது உலகம் உங்கள் கைகளில், எப்போதும் நிரந்தரமாக உங்கள் பைகளில்......
எஸ் எம் எஸ் மூலமாக இரண்டு வரிகளில் தனது வியாபாரத்தை, பொருட்களை விற்பனை செய்வதில் அனைத்து வியாபாரிகளும், முதலாளிகளும் இறங்கி விட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் தற்போது எஸ் எம் எஸ் என்றாகி விட்டது. ரயிலில் பயணம் செய்ய கொடுக்கப்படும் டிக்கெட் டை கூட எஸ் எம் எஸ் சில் வைத்து கொண்டால் பிரிண்ட் அவுட் தேவையில்லை என்று சொல்லும் காலம் வந்து விட்டது...
நல்ல விசயம்தானே....ஆனால் அது எப்படி எனது போன் நம்பர் வியாபாரிகளின் கைகளுக்கு போகின்றது? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும்...நியாயம்தானே??
பொது மக்களின் செல் போன் அடங்கிய விவரங்களை வரிசையாக அமைத்து அதனை மொத்த எஸ் எம் எஸ் குழுவிற்கு ஒரு குழு தயாரித்து அனுப்புகின்றது...
அந்த எஸ் எம் எஸ் களை ஒன்றாக சேர்த்து ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கும் ஒரே பொத்தான் அழுத்தலில் அனுப்புகின்றது....
இதற்க்கு அந்த குழுமம் வியாபாரிகள் அல்லது முதலாளிகளிடம் பணம் வசூலித்துக் கொள்கின்றது.
எல்லாம் சரி, ஆனால் ஒவ்வொரு எஸ் எம் எஸ் சும் ஒவ்வொரு நம்பரில் இருந்தும் சில சமயங்களில் ஒரு சில அடையாள எழுத்துக்களையும் கொண்டு வருகின்றது? அது எப்படி?
டிராய் நிறுவனம் ஒவ்வொரு எஸ் எம் எஸ் சையும் ஒவ்வொரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறியீடுகளாய் சில கோட் களை உருவாக்கியுள்ளது....
அது என்ன தெரியுமா?
உதாரணமாக, AT - 644321 என்ற பெயரில் நமக்கு எஸ் எம் எஸ் வரும்...
இதில் A என்பது ஏர்டெல் என்பதை குறிக்கும்....T என்பது தமிழ் நாடு என்பதை குறிக்கும்...முதலில் வரும் 6 என்பது ஏர்டெல் நிறுவனம் போன்ற மொபைல் சர்வீஸ் ஆகியவற்றை குறிப்பிடும்...மீதமிருக்கும் 5 எண்கள் எஸ் எம் எஸ் சர்வீஸ் ஏஜென்ட் டுகளை குறிக்கும் எண்களாகும்.
இப்போது புரிகின்றதா? நமக்கு யார் எப்படி அனுப்புகின்றார்கள் என்று?
அந்த விவரங்களை இதோ பட்டியலிட்டு இருக்கின்றேன்...
Table 1 Service Provider List
Table 2 Service Area List சர்வீஸ் ஏரியா
Table 3 எந்த துறை/பிரிவு என்பதை குறிக்கும் முதல் எண்
மீதமிருக்கும் 5 எண்கள் டெலிமார்க்கெட்டிங் செய்யும் ஏஜென்ட் டுகளை குறிக்கும் எண்களாகும்....
அதெல்லாம் சரி.......
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது டிராய் குழுமம்.
அது என்ன என்று கேட்கின்றீர்களா?
வியாபாரிகளுக்கு இந்த வசதியை கொடுத்து விட்டு மக்களுக்கு DND வசதியை செய்து கொடுத்திருக்கின்றதே....
DND என்பது Do Not Disturb ஆகும்...எப்புடீ நம்ம மாஸ்டர் பிளான்!!!
எல்லோரும் என்னை மன்னிக்கணும்...இன்னொரு இங்கிலீஸ் வலைப்பூவுல இருந்து சுட்டதுதான் இது....
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...