பங்காளிங்க..

Thursday, December 29, 2011

"அதுக்கு" நாம ஒத்து வருவோமா?



உலகத்துல ஒரு சில நாட்டுல சாலைகள் எல்லாமே பளிங்கு கல் மாதிரி வழு வழுப்பா இருக்குமாம். அதுல தட்டே இல்லாம சோறு போட்டு, சாம்பார் ஊத்தி சாப்பிடலாமாம்.எனக்கு தெரியாது...நண்பர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கின்றேன்.



வேகமாக செல்லும் போது விபத்துக்கள் நடக்கின்றதால் அங்கே பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த வித முன்னேற்றமும் இல்லையாம். ஸ்பீட் ப்ரேக் நிறைய வரிசையா போட்டாங்களாம், ஒன்னும் தேறலையாம்...


டேய், கேமிரா வச்சி பிடிச்சிருவேன், ஸ்லோவா ஒட்டுங்கடா னு கேட்டு பார்த்தாங்க..அப்படியும் எவனுமே கண்டுக்கலை.

பத்து அடி தூரத்துல ஒரு டிராபிக் போலிச போட்டு மடக்கி பார்த்தாங்களாம்...அப்படியும் விபத்து நடந்துகிட்டுதான் இருந்துச்சாம்,

ஆனா ரோடுங்க எல்லாம் பாலிஸ் போட்ட மாதிரி இருக்குமாம். கடைசியிலே வேற வழியே இல்லாம ரோட்டை அவங்களை பள்ளமாக்கி போட்டுட்டாங்களாம்.  


இப்போ அவன், அவன் பார்த்து பார்த்து மெதுவா ஒட்டுரானாம்.ஏன்னா வேகமா போயி அந்த பள்ளத்துல விழுந்துச்சினா வண்டி டேமேஜ் ஆயிடுமே. அதுனால ஒழுங்கா சிக்னலை பார்த்து எந்த இடத்துல பள்ளம் வரும், எந்த இடத்துல சமமா இருக்கும்னு பார்த்து பார்த்து ஒட்டுரானுங்கலாம். 




ரூல்ஸை குடிமக்கள் மதிக்கலை, அதுனால இந்த முடிவுன்னு சொல்லிருக்காங்க. எங்களுக்கு வேற வழியே தெரியலை. 

இப்போ ஸ்பீடா ஓட்டுறா பார்க்கலாம் னு மிரட்டி இருக்காங்க. ஆமா, மூட்டை பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவானுன்களா?

நல்லா ரோடு போட்டு அதை தோண்ட அவனுங்க என்ன இந்தியாவிலா பொறந்தானுங்க, அவனுங்க ரோடை தோண்டுற அழகை பாருங்க....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் தோண்டுரானுங்க, அப்புறம் அன்னிக்கே மூடிவிடுறாங்க.....அதுசரி இந்த பார்முலா இந்தியாவிற்கு ஒத்து வருமா?

*****
*****
*****

*****
*****
*****
*****

*****
*****

*****
*****
*****

*****
*****
*****

"இதுக்கு" நாம ஒத்து வருவோம்??????

Wednesday, December 28, 2011

"வோர்ல்ட் பெஸ்ட்" னு எனக்கு அவார்டு கொடுத்த உங்களுக்கு நன்றி.

ஒரு மகிழ்ச்சியான செய்தி...

பெஸ்ட் பிசினஸ் மேனாக எனது பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்
http://www.themessagegroup.com.au/last-nights-news.php?title=20111225-Siva-Arumugam_create.html

நன்றி

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, December 23, 2011

பணத்தை வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா?

நம்ம ஊருலே இன்னமும் இந்த பணத்தை பாதுகாக்குறது பெரிய வேலையா போச்சு, பணம் சம்பாதிக்கிறது பெருசு இல்லை, அந்த பணத்தை பாதுகாப்பா கைல எடுத்திட்டு போறது பெரிய பிரச்சினையா இருக்கு..

அதுக்காக அந்த இடத்துலேயா பணத்தை வைச்சு கொண்டு போறது. அந்த இடத்துல பணத்தை வைச்சா எவ்வளவு பிரச்சினை இருக்கு தெரியுமா? சும்மா விளையாட்டு இல்லேமா..இது..சொன்னா யாரு கேட்குறா? ஆனாலும் மனசு கேட்க மாட்டேன்குது. இது ஆபாச பதிவு இல்லீங்கோ. ஆபத்தான பதிவுங்கோ. புரிஞ்சிகோங்க.. இதை படிச்ச பிறகாவது அந்த இடத்துல எல்லாம் பணத்தை வைக்காதீங்க.

ஏடிஎம் கார்டு இருக்கு, இனிமே நான் பணத்தை எடுத்திட்டு போக மாட்டேனே னு சீன் காண்பிக்காதீங்க.ஏன்னா பெரிய பெரிய தொகைக்குதான் ஏடிஎம் கார்டு யூஸ் ஆகிட்டு இருக்கு, இன்னமும் 70  ரூவாய், 80 ரூவாய்க்கு பணம் நம்ம கைலதான் வைச்சிக்க வேண்டி கிடக்கு. அதுக்குத்தான் சொல்றேன்...இனிமே பணத்தை அந்த இடத்துல எல்லாம் வைக்காதீங்க. குறைஞ்சது பணத்துக்கு மரியாதை கொடுத்தாவது அந்த இடத்துல பணம் வைக்கிறதை அவாய்ட் பண்ணுங்க.

நீ என்னடா சொல்றது? நான் அப்படித்தான் வைப்பேன்னு சொல்றீங்களா? அது உங்க இஷ்டம். ஆனா என்ன நடக்கும் கொஞ்சம் கீழே பாருங்க.

இவன் பர்சுல பத்து பைசா இல்லே,அந்த பொறாமைல நம்மள வைக்க கூடாதுன்னு சொல்றான் அப்படீன்னு நினைக்கிறீங்களா? தப்பே இல்லை. அது உங்க மனசு.

அப்படி வைச்சா என்னா ஆகும்? நான் டெய்லி பத்து மணி நேரம் உட்காந்திருக்கேன், எனக்கு அப்படி  ஒன்னும் ஆகலையே? எவனுமே என் பர்சுல கை வைச்சது கிடையாது. நான் ரொம்ப கேர்புல்லா இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

ஹலோ ஒரு நிமிஷம், நான் வருத்தப்படுறது பணம் போகப் போறதை நினைச்சு கிடையாது..உங்களுக்கு ஸ்கையாட்டிக் அப்படீங்கற நெர்வ் (sciatic nerve) தளர்ந்து போய், மூட்டு, பாதம் எல்லாம் வலிக்கும்.அடிக்கடி முதுகுத் தண்டு வலிக்கும்.

இத்துனூண்டு மேடா இவ்வளவு வலியை கொடுக்கும்னு ஆச்சரியப் படுறீங்களா? உண்மைதான். அந்த மேடு மேல நாம மணிக்கணக்கா உட்காந்திருக்கப்ப ஆட்டோமேட்டிக்க ஒரு சைடு மேடு வந்திடுது,

அதனால பிரிபார்மிஸ் மசிலை ( piriformis muscle) பாதிச்சு  பிரிபார்மிஸ்  சின்றோம் (piriformis syndrome) உருவாகுது. உதாரணமா ஒரு பாறை மேல இல்லேனா ஒரு பிளாஸ்டிக் மேல உங்களால எவ்வளவு நேரம் உட்கார முடியும்? ஆனா அதையே நீங்க உங்க பர்சு மேல மணிக்கணக்கா உட்காந்திருக்கிரதால ரத்த ஓட்டம் சீரா இருக்கிறது இல்லையே. 
 
அதுனால பணத்தை வேற இடத்துக்கு மாத்திவிட்டு நேரா உட்காருங்க. இதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க பாட்டுக்கு வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க. 

Monday, December 19, 2011

இருக்கு ஆனா இல்லை????!!!??

பொதுவா மக்களோட மூளை எப்படி வேலை செய்யும்னா ஒரு பொருள் சரியா இல்லேனாலும் அது சரியா இருக்கிற மாதிரி கற்பனை பண்ணி படிக்கிறது, வேலை செய்யுறது நம்மளோட வழக்கம். இல்லேன்னு மறுத்தாலும் அதுதான் நிசம்.

உதாரணத்திற்கு கீழே கொடுத்திருக்கிற படத்தை பாருங்க..நீங்களே புரிஞ்சிகுவீங்க..

எவ்வளவு தப்பா இருந்தாலும் நாம கரெக்டா படிக்கிறோம் பாருங்க

இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்!

Friday, December 16, 2011

மூன்றெழுத்தின்தலையெழுத்து

மூன்றெழுத்தின்தலையெழுத்து---
அருமை என்ற மூன்றெழுத்து இந்த மின்னஞ்சலுக்கும் பொருந்தும்.
இதயம் நிறை வணக்கங்களுடன்.



தி.மு.., தமாஷ்: மூன்றெழுத்தின்தலையெழுத்து!
 
கி.கண்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
 
கடந்த, உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.., பிரசாரத்தில், "அண்ணா' என்பது மூன்றெழுத்து, "அறிவு' என்பது மூன்றெழுத்து' என்ற கேசட்டை ஒலிபரப்பியதை கேட்டேன்.
 
அதையும், கட்சியின் இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.எப்படியெல்லாம் பேசி, வளர்ந்த கட்சி? இன்றோ, "உறவு' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "ஆட்சி' என்ற மூன்றெழுத்தில் ஏறி, "ஊழல்' என்ற மூன்றெழுத் தில் விழுந்து, "பணம்' என்ற மூன்றெழுத்தை வாரிக் குவித்தது.பின், "ஜெயில்' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "கம்பி' என்ற மூன்றெழுத் தை எண்ணி, "பெயில்' என்ற மூன்றெழுத்துக்காக ஏங்கி, "டில்லி' என்ற மூன்றெழுத்தில் தங்கி, "சோனியா' என்ற மூன்றெழுத்தை சந்தித்து, "கருணை' என்ற மூன்றெழுத்து மனு போடும்படி ஆகிவிட்ட நிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.எப்படி இருந்த தி.மு.., இன்று கடைசியாக, "குஷ்பு' என்ற மூன்றெழுத்தை நம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.., உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவு துக்கமென் றால், உண்மையான தி.மு..,வினரின் மனநிலை எப்படி இருக்கும்?
 
நன்றி - கூகுள் சினிமா செய்திகள் 

Friday, December 2, 2011

அந்த ' 9 ' ஐ பத்தி தெரிஞ்சிகோங்க

 9  ங்கிறது சாதாரண விஷயம் கிடையாதுங்கோ, அதுல அவ்வளவு விஷயம் இருக்கு. 

எல்லாத்தையும் சாதாரணமா எடை போட்டுறக் கூடாதுன்னு இந்த விழிப்புணர்வு பகிர்வு. கோச்சிக்காம படிங்க.
 இப்பெல்லாம் காலம் போற வேகத்துக்கு அவனவன் இன்டர்நெட் மூலமா, ஏன் இப்பெல்லாம் மொபைல்ல இருந்து கூட காரியத்தை கட்சிதமா முடிச்சிட்டு  போயிடுறான்.உதாரணமா இந்த பேங்கு விஷயத்தை எடுத்துக்கோங்க, (முண்டம், எந்த நேரத்துல எதை பற்றி பேசுது பாரு)

பேங்குன்னா என்னா? அங்கே என்ன என்ன செய்வாங்க னு கூட பாதிக்கு பேருக்கு தெரியாது. என்னையும் சேர்த்துதான் சொல்றேன். (தெரிஞ்சா சரி.)

இப்போ எல்லாம் எல்லா பிபிஓ  கம்பெனியில் எல்லாம் வர்றவங்களை எல்லாம் வேலைக்கு சேர்த்து அன்னிக்கே பேங்க் அக்கௌன்ட் ஒப்பன் பண்ணி கொடுத்திடுறாங்க. ஒரு வாரத்துக்குள்ள அந்த பேங்கிலே இருந்து ஒரு ஏடிஎம் கார்டும், செக் புக்கும் கைக்கு வந்திடுது.

அப்புறம் சம்பளம் வந்ததும், எப்போ வேணுமினாலும் ஏடிஎம் கார்டை தேச்சு ரூவாயை உருவிக்கலாம். அந்த செக் புக்கை திரும்பி கூட பார்க்குறது கிடையாது. எதுக்கு பார்க்கணும்? ஆனா சில சமயத்துல ஏடிஎம் முல பணம் வராம அக்கவுண்ட்ல கேஷ் மட்டும் குறைஞ்சிடும். அன்னிக்குத தான் நம்ம ஆளுங்க பேங்குக்கு ஓடுவாங்க.

அந்த மாதிரி நேரத்துல தான் செக் புக்கைத் தேடுவானுங்க. அந்த செக் லீப்ல எத்தனை மேட்டரு இருக்கு தெரியுமா? செக் லீபுக்கு அடியிலே ஏதோ நம்பர் எல்லாம் கொடுத்திருப்பானுங்க. நிறைய பேரு பணம் கைமாத்துரப்ப எது செக் நம்பரு, எது மைக்ரோ கோடு னு  புரியாம மண்டைய சொரியறத நானும் பார்த்திருக்கேன். (நீ ரொம்ப ஒழுங்கா னு கேக்கக் கூடாது )

அவங்களுக்காகத் தான் இந்த புள்ளி விவரம். 


மேல ஒரு சாம்பிள் செக் லீப் இருக்கு,.

அதுல வட்டம் போட்டு காண்பிச்சி இருக்கிறதுக்கு பேரு மைக்ரோ கோடு. அதாவது இங்கிலீஷ்ல MICR No. னு சொல்வாங்க. அதுக்கு முன்னாடி இருக்கிறது நம்மளோட செக் நம்பர். அத அப்பால பார்த்துக்குவோம்.

இப்போ இந்த MICR No. னு ஒன்னு இருக்கே, அதை பற்றி எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.

அந்த MICR No. ல ஒன்பது நம்பர் இருக்கும்.
உதாரணமா, 400 002 003
முதல் மூணு நம்பர் சிட்டி கோடு. அதாங்க உங்க நகரத்தின் பின்கோடு நம்பர். மேல இருக்கிற உதாரணம் படி அது மும்பை மாநகரம்.
அடுத்த மூணு நம்பர் உங்க பேங்கோட அடையாள நம்பர். அதாவது எஸ்பிஐ பேங்கோட குறியீட்டு எண்.
கடைசி மூணு நம்பர் எந்த பிராஞ்ச்சுனு கண்டுபிடிக்கிற நம்பரு. அதாவது அந்தேரின்கிற கிளையில் இருந்து வந்திருக்கு னு டக்குனு சொல்லலாம். (98****3210 இந்த நம்பரு எந்த ஏரியா னு கண்டுபிடிச்சா தேவலை.)

சரி இதை வச்சு நமக்கு என்ன பிரயோசனம், இதெல்லாம் ஒரு மேட்டரு, இதை சொல்றதுக்கு கிளம்பி வந்துட்டான், போய் ஆகுற வேலைய பாரு னு திட்டுறீங்களா, பரவாயில்லை. சரி இந்த நம்பரை வச்சு என்ன செய்ய முடியும், சும்மா பொழுது போகாமலா அடிக்கிறாங்க?

முதல்ல  MICR No. னா என்னான்னு தெரியுமா? Magnetic Ink Character Recognition. (MICR). டேய் சிவா, பேசாம பணத்தை ஏ டி எம்ல எடுத்தியா, பாக்கெட்ல வச்சியான்னு பேசாம போவியா? உனக்கெல்லாம் இது தேவையா?

அப்படி என்னதான் செய்யுறாங்க னு ஒரு ஆர்வக் கோளாறுதான். அதாவது அதாவது அந்த ஒன்பது எண் குறியீடு என்பது ஸ்பெஷல் இங்க்ல செய்யப்பட்டது. அதாவது காந்த சக்தி கொண்ட அயன் ஆக்சைட் ல தயாரிக்கப் பட்டது.

நீங்க பேங்க்ல செக்கை கொடுத்ததும், அவங்க ஒரு மெசின்ல போட்டு செக் பண்ணி பார்ப்பாங்க. அப்போ ஒரு பீப் சவுண்டு வரும், கேட்டிருக்கீங்களா???!!!??, (ஏன்டா அறிவுக்கெட்டவனே...பேங்க்ல போய் அதையா டா கவனிப்போம். )

அது வேற ஒன்னும் கிடையாது, அந்த பேங்கு சாப்ட்வேருல இந்தியாவில இருக்கிற அத்தனை பேங்கு கோடும் அதுல லோடு ஆகி இருக்கும். அது கரெக்டா எந்த ஏரியா னு கண்டுபிடிச்சு கொடுத்திடும். (ஹலோ, அந்த கேசியர் பக்கத்துல இருக்கிற பொண்ணு எந்த ஏரியா னு கண்டுபிடிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா? )அதுக்கப்புறம் அந்த செக் ஈசியா கிளியரன்ஸ் ஆகுறதுக்கு சவுகரியமாகிடும். இதுனாலதான் சில சமயத்துல ஒரே நாள்ல கூட பணம் கை மாறுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

முன்னாடி எல்லாம் ஒரு போன் போட்டு கேட்டு அதுக்கப்புறம் தான் கைமாற்றுவாங்க. இப்போ எல்லாமே அட்வான்ஸ் தான்.

ஒருவேளை உங்க பேங்கு கோடு விவரம் தெரியனுமினா கீழே இருக்கிற லிங்கை செக் பண்ணி பார்த்துக்கோங்க..



அவ்வளவுதாங்க...மேட்டரு...  
(அட சண்டாளா, நாங்க எந்த விவரம் கேட்டுகிட்டு இருக்கோம், இதெல்லாம் எங்களுக்கு தேவையா? )