பங்காளிங்க..

Friday, December 16, 2011

மூன்றெழுத்தின்தலையெழுத்து

மூன்றெழுத்தின்தலையெழுத்து---
அருமை என்ற மூன்றெழுத்து இந்த மின்னஞ்சலுக்கும் பொருந்தும்.
இதயம் நிறை வணக்கங்களுடன்.தி.மு.., தமாஷ்: மூன்றெழுத்தின்தலையெழுத்து!
 
கி.கண்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
 
கடந்த, உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.., பிரசாரத்தில், "அண்ணா' என்பது மூன்றெழுத்து, "அறிவு' என்பது மூன்றெழுத்து' என்ற கேசட்டை ஒலிபரப்பியதை கேட்டேன்.
 
அதையும், கட்சியின் இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.எப்படியெல்லாம் பேசி, வளர்ந்த கட்சி? இன்றோ, "உறவு' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "ஆட்சி' என்ற மூன்றெழுத்தில் ஏறி, "ஊழல்' என்ற மூன்றெழுத் தில் விழுந்து, "பணம்' என்ற மூன்றெழுத்தை வாரிக் குவித்தது.பின், "ஜெயில்' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "கம்பி' என்ற மூன்றெழுத் தை எண்ணி, "பெயில்' என்ற மூன்றெழுத்துக்காக ஏங்கி, "டில்லி' என்ற மூன்றெழுத்தில் தங்கி, "சோனியா' என்ற மூன்றெழுத்தை சந்தித்து, "கருணை' என்ற மூன்றெழுத்து மனு போடும்படி ஆகிவிட்ட நிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.எப்படி இருந்த தி.மு.., இன்று கடைசியாக, "குஷ்பு' என்ற மூன்றெழுத்தை நம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.., உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவு துக்கமென் றால், உண்மையான தி.மு..,வினரின் மனநிலை எப்படி இருக்கும்?
 
நன்றி - கூகுள் சினிமா செய்திகள் 

8 comments:

 1. ஓட்டு என்ற மூன்றெழுத்தால் தான் இது வரை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..

  ReplyDelete
 2. /// suryajeeva said...

  ஓட்டு என்ற மூன்றெழுத்தால் தான் இது வரை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..///

  ஓட்டு என்ற மூன்று எழுத்தை விட பிச்சை என்ற மூன்று எழுத்து மிகச் சரியாக பொருந்தும் என்று நான் நினைக்கின்றேன்.

  ReplyDelete
 3. arasiyal nakaichchuvaikal...

  ReplyDelete
 4. மக்கள் புத்தி என்ற மூன்றெழுத்தை உபயோகப்படுத்தவேண்டும்

  ReplyDelete
 5. /// அம்பலத்தார் said...

  மக்கள் புத்தி என்ற மூன்றெழுத்தை உபயோகப்படுத்தவேண்டும் ///

  உயிர் , பயம் என்ற மூன்று மூன்று எழுத்துக்களால் அஞ்சி ஒதுங்குகின்றார்கள்.

  ReplyDelete
 6. /// kovaikkavi said...

  arasiyal nakaichchuvaikal...///

  அரசியல் நகைச்சுவை அல்ல...நகைச்சுவையில் இன்றைய அரசியல்

  ReplyDelete
 7. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 8. Thamilan 'Adimai' endra moondreluthu

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...