பங்காளிங்க..

Friday, December 23, 2011

பணத்தை வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா?

நம்ம ஊருலே இன்னமும் இந்த பணத்தை பாதுகாக்குறது பெரிய வேலையா போச்சு, பணம் சம்பாதிக்கிறது பெருசு இல்லை, அந்த பணத்தை பாதுகாப்பா கைல எடுத்திட்டு போறது பெரிய பிரச்சினையா இருக்கு..

அதுக்காக அந்த இடத்துலேயா பணத்தை வைச்சு கொண்டு போறது. அந்த இடத்துல பணத்தை வைச்சா எவ்வளவு பிரச்சினை இருக்கு தெரியுமா? சும்மா விளையாட்டு இல்லேமா..இது..சொன்னா யாரு கேட்குறா? ஆனாலும் மனசு கேட்க மாட்டேன்குது. இது ஆபாச பதிவு இல்லீங்கோ. ஆபத்தான பதிவுங்கோ. புரிஞ்சிகோங்க.. இதை படிச்ச பிறகாவது அந்த இடத்துல எல்லாம் பணத்தை வைக்காதீங்க.

ஏடிஎம் கார்டு இருக்கு, இனிமே நான் பணத்தை எடுத்திட்டு போக மாட்டேனே னு சீன் காண்பிக்காதீங்க.ஏன்னா பெரிய பெரிய தொகைக்குதான் ஏடிஎம் கார்டு யூஸ் ஆகிட்டு இருக்கு, இன்னமும் 70  ரூவாய், 80 ரூவாய்க்கு பணம் நம்ம கைலதான் வைச்சிக்க வேண்டி கிடக்கு. அதுக்குத்தான் சொல்றேன்...இனிமே பணத்தை அந்த இடத்துல எல்லாம் வைக்காதீங்க. குறைஞ்சது பணத்துக்கு மரியாதை கொடுத்தாவது அந்த இடத்துல பணம் வைக்கிறதை அவாய்ட் பண்ணுங்க.

நீ என்னடா சொல்றது? நான் அப்படித்தான் வைப்பேன்னு சொல்றீங்களா? அது உங்க இஷ்டம். ஆனா என்ன நடக்கும் கொஞ்சம் கீழே பாருங்க.

இவன் பர்சுல பத்து பைசா இல்லே,அந்த பொறாமைல நம்மள வைக்க கூடாதுன்னு சொல்றான் அப்படீன்னு நினைக்கிறீங்களா? தப்பே இல்லை. அது உங்க மனசு.

அப்படி வைச்சா என்னா ஆகும்? நான் டெய்லி பத்து மணி நேரம் உட்காந்திருக்கேன், எனக்கு அப்படி  ஒன்னும் ஆகலையே? எவனுமே என் பர்சுல கை வைச்சது கிடையாது. நான் ரொம்ப கேர்புல்லா இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

ஹலோ ஒரு நிமிஷம், நான் வருத்தப்படுறது பணம் போகப் போறதை நினைச்சு கிடையாது..உங்களுக்கு ஸ்கையாட்டிக் அப்படீங்கற நெர்வ் (sciatic nerve) தளர்ந்து போய், மூட்டு, பாதம் எல்லாம் வலிக்கும்.அடிக்கடி முதுகுத் தண்டு வலிக்கும்.

இத்துனூண்டு மேடா இவ்வளவு வலியை கொடுக்கும்னு ஆச்சரியப் படுறீங்களா? உண்மைதான். அந்த மேடு மேல நாம மணிக்கணக்கா உட்காந்திருக்கப்ப ஆட்டோமேட்டிக்க ஒரு சைடு மேடு வந்திடுது,

அதனால பிரிபார்மிஸ் மசிலை ( piriformis muscle) பாதிச்சு  பிரிபார்மிஸ்  சின்றோம் (piriformis syndrome) உருவாகுது. உதாரணமா ஒரு பாறை மேல இல்லேனா ஒரு பிளாஸ்டிக் மேல உங்களால எவ்வளவு நேரம் உட்கார முடியும்? ஆனா அதையே நீங்க உங்க பர்சு மேல மணிக்கணக்கா உட்காந்திருக்கிரதால ரத்த ஓட்டம் சீரா இருக்கிறது இல்லையே. 
 
அதுனால பணத்தை வேற இடத்துக்கு மாத்திவிட்டு நேரா உட்காருங்க. இதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க பாட்டுக்கு வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க. 

6 comments:

 1. Really Every body should be know that one ... its very useful information

  ReplyDelete
 2. நம்முடைய எல்லா நடவடிக்கைகளிலும் பாதிப்பு இருக்கிறதா...


  நல்லதொரு அறிவுரை..
  ஆனா நம்ம ஜனங்கள் கேட்கனுமே...

  ReplyDelete
 3. மிக்க நன்றிங்க

  ReplyDelete
 4. /// filmics said...

  Really Every body should be know that one ... its very useful information ///

  எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன்...கருத்திற்கு நன்றி

  ReplyDelete
 5. /// கவிதை வீதி... // சௌந்தர் // said...

  நம்முடைய எல்லா நடவடிக்கைகளிலும் பாதிப்பு இருக்கிறதா...


  நல்லதொரு அறிவுரை..
  ஆனா நம்ம ஜனங்கள் கேட்கனுமே... ///

  ஜனங்க எல்லாத்தையும் கேட்டுப்பாங்க னு நாம எதிர்பார்க்க முடியாது...நமக்கு தெரிஞ்சத சொல்லலாமே. நிச்சயம் பலர் இதை யோசிப்பாங்க.

  ReplyDelete
 6. ///அரசன் said...

  மிக்க நன்றிங்க ///

  நன்றி எல்லாம் எதுக்குங்க...உங்க வருகையே மிகப் பெரிய விஷயம்.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...