பங்காளிங்க..

Friday, December 2, 2011

அந்த ' 9 ' ஐ பத்தி தெரிஞ்சிகோங்க

 9  ங்கிறது சாதாரண விஷயம் கிடையாதுங்கோ, அதுல அவ்வளவு விஷயம் இருக்கு. 

எல்லாத்தையும் சாதாரணமா எடை போட்டுறக் கூடாதுன்னு இந்த விழிப்புணர்வு பகிர்வு. கோச்சிக்காம படிங்க.
 இப்பெல்லாம் காலம் போற வேகத்துக்கு அவனவன் இன்டர்நெட் மூலமா, ஏன் இப்பெல்லாம் மொபைல்ல இருந்து கூட காரியத்தை கட்சிதமா முடிச்சிட்டு  போயிடுறான்.உதாரணமா இந்த பேங்கு விஷயத்தை எடுத்துக்கோங்க, (முண்டம், எந்த நேரத்துல எதை பற்றி பேசுது பாரு)

பேங்குன்னா என்னா? அங்கே என்ன என்ன செய்வாங்க னு கூட பாதிக்கு பேருக்கு தெரியாது. என்னையும் சேர்த்துதான் சொல்றேன். (தெரிஞ்சா சரி.)

இப்போ எல்லாம் எல்லா பிபிஓ  கம்பெனியில் எல்லாம் வர்றவங்களை எல்லாம் வேலைக்கு சேர்த்து அன்னிக்கே பேங்க் அக்கௌன்ட் ஒப்பன் பண்ணி கொடுத்திடுறாங்க. ஒரு வாரத்துக்குள்ள அந்த பேங்கிலே இருந்து ஒரு ஏடிஎம் கார்டும், செக் புக்கும் கைக்கு வந்திடுது.

அப்புறம் சம்பளம் வந்ததும், எப்போ வேணுமினாலும் ஏடிஎம் கார்டை தேச்சு ரூவாயை உருவிக்கலாம். அந்த செக் புக்கை திரும்பி கூட பார்க்குறது கிடையாது. எதுக்கு பார்க்கணும்? ஆனா சில சமயத்துல ஏடிஎம் முல பணம் வராம அக்கவுண்ட்ல கேஷ் மட்டும் குறைஞ்சிடும். அன்னிக்குத தான் நம்ம ஆளுங்க பேங்குக்கு ஓடுவாங்க.

அந்த மாதிரி நேரத்துல தான் செக் புக்கைத் தேடுவானுங்க. அந்த செக் லீப்ல எத்தனை மேட்டரு இருக்கு தெரியுமா? செக் லீபுக்கு அடியிலே ஏதோ நம்பர் எல்லாம் கொடுத்திருப்பானுங்க. நிறைய பேரு பணம் கைமாத்துரப்ப எது செக் நம்பரு, எது மைக்ரோ கோடு னு  புரியாம மண்டைய சொரியறத நானும் பார்த்திருக்கேன். (நீ ரொம்ப ஒழுங்கா னு கேக்கக் கூடாது )

அவங்களுக்காகத் தான் இந்த புள்ளி விவரம். 


மேல ஒரு சாம்பிள் செக் லீப் இருக்கு,.

அதுல வட்டம் போட்டு காண்பிச்சி இருக்கிறதுக்கு பேரு மைக்ரோ கோடு. அதாவது இங்கிலீஷ்ல MICR No. னு சொல்வாங்க. அதுக்கு முன்னாடி இருக்கிறது நம்மளோட செக் நம்பர். அத அப்பால பார்த்துக்குவோம்.

இப்போ இந்த MICR No. னு ஒன்னு இருக்கே, அதை பற்றி எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.

அந்த MICR No. ல ஒன்பது நம்பர் இருக்கும்.
உதாரணமா, 400 002 003
முதல் மூணு நம்பர் சிட்டி கோடு. அதாங்க உங்க நகரத்தின் பின்கோடு நம்பர். மேல இருக்கிற உதாரணம் படி அது மும்பை மாநகரம்.
அடுத்த மூணு நம்பர் உங்க பேங்கோட அடையாள நம்பர். அதாவது எஸ்பிஐ பேங்கோட குறியீட்டு எண்.
கடைசி மூணு நம்பர் எந்த பிராஞ்ச்சுனு கண்டுபிடிக்கிற நம்பரு. அதாவது அந்தேரின்கிற கிளையில் இருந்து வந்திருக்கு னு டக்குனு சொல்லலாம். (98****3210 இந்த நம்பரு எந்த ஏரியா னு கண்டுபிடிச்சா தேவலை.)

சரி இதை வச்சு நமக்கு என்ன பிரயோசனம், இதெல்லாம் ஒரு மேட்டரு, இதை சொல்றதுக்கு கிளம்பி வந்துட்டான், போய் ஆகுற வேலைய பாரு னு திட்டுறீங்களா, பரவாயில்லை. சரி இந்த நம்பரை வச்சு என்ன செய்ய முடியும், சும்மா பொழுது போகாமலா அடிக்கிறாங்க?

முதல்ல  MICR No. னா என்னான்னு தெரியுமா? Magnetic Ink Character Recognition. (MICR). டேய் சிவா, பேசாம பணத்தை ஏ டி எம்ல எடுத்தியா, பாக்கெட்ல வச்சியான்னு பேசாம போவியா? உனக்கெல்லாம் இது தேவையா?

அப்படி என்னதான் செய்யுறாங்க னு ஒரு ஆர்வக் கோளாறுதான். அதாவது அதாவது அந்த ஒன்பது எண் குறியீடு என்பது ஸ்பெஷல் இங்க்ல செய்யப்பட்டது. அதாவது காந்த சக்தி கொண்ட அயன் ஆக்சைட் ல தயாரிக்கப் பட்டது.

நீங்க பேங்க்ல செக்கை கொடுத்ததும், அவங்க ஒரு மெசின்ல போட்டு செக் பண்ணி பார்ப்பாங்க. அப்போ ஒரு பீப் சவுண்டு வரும், கேட்டிருக்கீங்களா???!!!??, (ஏன்டா அறிவுக்கெட்டவனே...பேங்க்ல போய் அதையா டா கவனிப்போம். )

அது வேற ஒன்னும் கிடையாது, அந்த பேங்கு சாப்ட்வேருல இந்தியாவில இருக்கிற அத்தனை பேங்கு கோடும் அதுல லோடு ஆகி இருக்கும். அது கரெக்டா எந்த ஏரியா னு கண்டுபிடிச்சு கொடுத்திடும். (ஹலோ, அந்த கேசியர் பக்கத்துல இருக்கிற பொண்ணு எந்த ஏரியா னு கண்டுபிடிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா? )அதுக்கப்புறம் அந்த செக் ஈசியா கிளியரன்ஸ் ஆகுறதுக்கு சவுகரியமாகிடும். இதுனாலதான் சில சமயத்துல ஒரே நாள்ல கூட பணம் கை மாறுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

முன்னாடி எல்லாம் ஒரு போன் போட்டு கேட்டு அதுக்கப்புறம் தான் கைமாற்றுவாங்க. இப்போ எல்லாமே அட்வான்ஸ் தான்.

ஒருவேளை உங்க பேங்கு கோடு விவரம் தெரியனுமினா கீழே இருக்கிற லிங்கை செக் பண்ணி பார்த்துக்கோங்க..அவ்வளவுதாங்க...மேட்டரு...  
(அட சண்டாளா, நாங்க எந்த விவரம் கேட்டுகிட்டு இருக்கோம், இதெல்லாம் எங்களுக்கு தேவையா? )

14 comments:

 1. REALLY USEFUl INFORMATION . THANKS FOR THAT

  ReplyDelete
 2. தலைப்புல என்னமோ இருக்குன்னு பதிவை வாசிக்க ஓடோடி வந்தேன். தெரியாத விசயத்தை பகிர்ந்திருகிங்க. இனி அந்த ஒம்போது நம்பர் பற்றியும் விழிப்பா இருக்கலாம். நன்றிங்க.


  வாசிக்க:
  லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

  ReplyDelete
 3. // ROSHAN , MUMBAI said...

  REALLY USEFUl INFORMATION . THANKS FOR THAT //

  Welcome, Its my Pleasure.

  ReplyDelete
 4. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

  தலைப்புல என்னமோ இருக்குன்னு பதிவை வாசிக்க ஓடோடி வந்தேன். தெரியாத விசயத்தை பகிர்ந்திருகிங்க. இனி அந்த ஒம்போது நம்பர் பற்றியும் விழிப்பா இருக்கலாம். நன்றிங்க. ///

  என்ன செய்யுறது தோழா? தலைப்ப வில்லங்கமா வச்சாத்தானே வந்து படிக்கிறாங்க, MICR ஆர்டிகிள் பத்தி படிங்க னு சொல்லிருந்தா படிப்பாங்களா? கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 5. Nalla Padhivil thirunangaikalai patriya oru comment (Sarathkumar's picture from Kanchana) thevaiya?

  ReplyDelete
 6. எப்பா....

  தலைப்பை இப்படி வச்சிட்டு என்னய்யா கிளாஸ் எடுத்துகிட்டு இருக்கிற...

  ReplyDelete
 7. புதிய தகவல்...9? 6?

  ReplyDelete
 8. /// Priya said...

  Nalla Padhivil thirunangaikalai patriya oru comment (Sarathkumar's picture from Kanchana) thevaiya? ///
  அன்பு சகோதரிக்கு,

  நான் திருநங்கைகளை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வில்லை. அப்படி எழுதும்போது எத்தனை மக்கள் அதனை தேர்ந்தெடுத்து படிக்கின்றார்கள் என்பதனால் அவ்வாறு எழுத வேண்டிய நிர்பந்தம். ஒருவேளை அது சம்பந்தமாக யாருக்கும் வருத்தம் இருப்பின் இந்த கருத்து பின்னூட்டம் மூலமாய் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன். உங்கள் கருத்துக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  ReplyDelete
 9. /// கவிதை வீதி... // சௌந்தர் // said...

  எப்பா....
  தலைப்பை இப்படி வச்சிட்டு என்னய்யா கிளாஸ் எடுத்துகிட்டு இருக்கிற... ///
  மன்னிச்சுக்கோங்க தலைவா! அட்டைப்படம் கிளாமரா இருந்தாத்தான் சிலர் வாங்கி படிப்பாங்க. இதயம் நல்லெண்ணெய் வாங்கி குடிங்க னு ஒரு கிழவி சொன்னா வாங்க மாட்டாங்க...அதுவே ஜோதிகா ஆடிகிட்டே சொன்னா வாங்கி இட்லி பொடிக்கு ஊத்தி ஊத்தி சாப்பிடுற உலகம் இது. அது மாதிரிதான் இதுவும். MICR பற்றி ஆர்ட்டிகிள் போட்டிருக்கேன், படிங்க னு சொன்னா 10 பேருக்கு மேல படிக்க மாட்டாங்களே..

  ReplyDelete
 10. /// ரெவெரி said...

  புதிய தகவல்...9? 6? ///

  கருத்துக்கு நன்றி...ஆனா 6 ? எங்கே இருந்து வந்துச்சி?

  ReplyDelete
 11. /// மணிகண்டன்.பா said..

  நல்ல தகவல் ///

  வருகைக்கு நன்றி...கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 12. nice one... but topic and starting imagea mathinuningana innum decenta irunthirukkum :P

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...