பங்காளிங்க..

Tuesday, November 29, 2011

1 ,76 ,000 கோடியை விட பெருசு இது? யம்மாடியோவ்!!!!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை நான் எனது ஆபீசில் இருந்து கம்பெனி வண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். மிக அருமையான பாடல்களை எல்லாம் ஒலிபரப்பி கொண்டிருந்தார் வண்டி டிரைவர். திடீரென்று பாட்டு நின்று விட்டது. என்னவென்று கேட்டபோது "எப்.எம் ரேடியோ மக்கர் ஆயிடுச்சு சார்" என்று சொல்லவும் எரிச்சல் வந்தது.

ச்சே, ஐபாட் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். அப்போதுதான் நினைவிற்கு வந்தது. நான் ஏற்கனவே ஐபாட்டை வாங்கி 6 மாதத்திற்கு மேலாகி விட்டதே. ஆனால் அதிகப்படியாக இரண்டு அல்லது மூன்று முறைதானே பயன்படுத்தி இருக்கின்றேன். இப்போது அது எங்கே இருக்கின்றது? கழுதை ஐபாட்டை விட்டு தள்ளு. நான் என்னென்னவோ வாங்கி வச்சிருக்கேனே? ஆமா அதெல்லாம் இப்போ என்னாச்சு?

போன வருஷம் வந்த இங்கிரிமென்டில ஹாண்டி கேம்முனு ஒன்னு வாங்கினேன், அது இரண்டு வாரம் யூஸ் பண்ணிருப்பேன்...அதுக்கப்புறம் ஆபீசியல் டூர் போனப்ப பந்தாவா ஒரு டிஜிட்டல் கேமிரா வாங்கினேன். 18 ஆயிரம் ரூவாய்? என்னாச்சு அது?

இப்போ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எல்லா வசதியும் இருக்கிற மாதிரி ஒரு மொபைல் வாங்கினேன். எங்கே அது? சர்வீஸ் கடைல இருக்கு, இப்போ அதே பழைய நோக்கியா தான் கைல இருக்கு!!!???!!!  அப்படீனா எங்கயோ தப்பு நடக்குது? எங்கே? எப்படி? என் பிரண்ட்சு கிட்டே இல்லாதது எல்லாம் என்கிட்டே இருக்கு, ஆனாலும் மனசுக்கு நிம்மதியே இல்லை,.

உன்கிட்டே சான்ட்ரோ இருக்கும், ஆனா சிட்டி வேணும்னு எதிர்பார்ப்போம், சிட்டி வச்சிருக்கிறவன் ஸ்கோடா வை பார்ப்பான்...லேட்டஸ்ட் மொபைல் போன் வாங்கணும், சூப்பர் லேப்டாப் வாங்கணும், புது வீடு வாங்கணும், கார் வாங்கணும், பெரிய டிவி சுவத்துல மாட்டி வச்சி பார்க்கணும்...மனசு அடங்க மாட்டேங்குது...ஆனாலும் நைட்டு நிம்மதியா தூக்கம் வரமாட்டேன்குது. ஏன் இந்த தொல்லை, பணம், பணம், பணம் நு இப்படி அலைய ஆரம்பிச்சிட்டோம்.

ஆனா எந்த வசதியும் இல்லாம என்னோட அப்பா ஹாயா படுத்திருக்காரே. எனக்கும் என்னோட அக்காவிற்கும் சூப்பெரா வீடு வாங்கி ஆளுக்கொரு வீடு கொடுத்திட்டு இன்னிக்கு பேரன் கூட சந்தோசமாய் விளையாண்டுகிட்டு இருக்காரே. அவன் கூட ஐஸ்பால், கண்ணாமூச்சி விளையாடுறாரு. ஆனா நம்மால ஒரு லீவை கூட சந்தோசமா கொண்டாடமுடியலை. என்னோட அப்பா 30 வருசமா சம்பாதிச்சதை நான் 3 வருசத்துல சம்பாதிச்சிட்டேன். ஆனா அந்த பாழாய் போன நிம்மதி மட்டும் வரவே இல்லையே. என்ன வாழ்க்கைடா இது?

அவர் இன்னமும் அதே சாலிடர் டிவி யை வச்சிக்கிட்டு, நோக்கியா செங்கல் மாடல் போனையும் கைல வைச்சுகிட்டு இருக்காரு...அப்பா உனக்கு லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கித்தரவா னு கேட்டதுக்கு அதெல்லாம் வேண்டாம், யாரும் போன் பண்ணா அவசரத்துக்கு கேக்குறதுக்கு, பேசுரதுக்குத்தான், அதனால இது போதும் னு ஈசியா சொல்லிட்டு ஹாப்பியா இருக்காரே.


ஆனா நான் எல்லாம் இருந்தும், இன்னிக்கு எதுவுமே இல்லாத மாதிரி ஓடிக்கிட்டே இருக்கேனே? என் பொண்டாட்டியோட பிறந்த நாள் மறந்து போச்சு, என் பிள்ளையோட ராசி, நட்சத்திரம், பிறந்த நேரம், தேதி கூட தெரியாம ஓடிக்கிட்டு இருக்கேன்..ஆனா என் அப்பா எங்க மொத்த குடும்பத்து ஜாதகத்தை பிட்டு பிட்டு வைக்கிறாரே. அது எப்படி? கோயில்ல அர்ச்சனை பண்றப்ப அய்யர் கேக்குறப்ப ஒவ்வொருத்தர் ராசி, நட்சத்திரம் அவர்தான் சொல்றாரு. வீட்டுல யார், யாருக்கு பிறந்த நாள் னு நியாபகமா, போன் போட்டு வாழ்த்து சொல்றாரு!
எப்படி? எப்படி? எப்படி? எப்படி? எப்படி? 

நான் வீக்என்ட்டுல என்ன பண்றேன்? காலையிலே 10 மணிக்கு எந்திரிச்சி உடம்பை குறைக்க ஜிம்முக்கு போறேன், 10 மணிக்கு வந்து குளிச்சிட்டு 12 மணி வரைக்கும் டிவிய பாக்குறேன். அதுக்கப்புறம் சாப்பிட்டு விட்டு நல்லா தூங்குறேன். எப்போவாவது பிரண்ட்சு கூட வெளிய போயிட்டு வாரேன் . ஈவ்னிங் ஆனா பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு படத்துக்கு போறேன், இல்லேனா ஹோட்டல்ல போயி நல்லா நான்-வெஜ் சாப்பிட்டுவிட்டு நைட்டு வீட்டுல வந்து படுக்கிறேன். சில சமயம் பிரண்ட்சு கூட சாட்டிங், பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் னு உட்காரேன்.

உண்மையிலே இதுதானா வாழ்க்கை? நேரா வீட்டுக்கு போனதும் அம்மாவை தேடினேன்...விஷயத்தை சொல்லி அவளிடம் விவரம் கேட்டேன். அவள் சிரித்து கொண்டே பதில் சொன்னாள். டேய் மடையா, நீ உறவுகளை மறந்து பணத்தை நேசிக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டது. அதனால் உனக்கு நிம்மதி இல்லை. பணம் அவசியம்...அது சேமிப்பாய் இருக்க வேண்டும். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை உனக்கு. இந்த வாரம் ஞாயிற்று கிழமை நீ மின்னணு பொருட்களை பயன்படுத்தாமல் உனது உறவுகளை பயன்படுத்தி பார் என்று சொன்னாள். நான் புரியவில்லை என்று சொன்னதும்...நீ எல்லாம் ஒரு மேனேஜெர் என்று நக்கலாய் சிரித்து விட்டு,  அன்னிக்கு புல்லா நீ செல் போனை கையில் எடுக்காதே, டிவி, லேப்டாப் பார்க்காதே, டிவிடி பிளேயரை மறந்து விடு...உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சு, அவர்களோடு விளையாடு, மனைவியை பாரு, அப்பாவிடம் பேசு, மாலை அக்கா வீட்டிற்கு போய் அந்த பிள்ளைகளோடு விளையாடு. உனக்கு எல்லாம் கிடைச்சிடும் என்று சொன்னாள். உண்மைதான், நான் எத்தனை தூரம் என்னை, என் நிம்மதியை இழந்திருக்கின்றேன். உண்மையில் இதை விட பெரிய சொத்து எதுவுமே இருக்க முடியாதுதான்....

8 comments:

 1. பணம் சம்பாதிப்பது என்று கிளம்பினால் நிம்மதி இருக்கதுங்கோ...

  ReplyDelete
 2. Relationship is truly bigger than anything else.

  ReplyDelete
 3. இனி நிம்மதி தேடி வீட்டைச் சேர்போம்...

  ReplyDelete
 4. நிம்மதி...நிம்மதி.....நிம்மதி..உண்மையில் இதை விட பெரிய சொத்து எதுவுமே இருக்க முடியாது

  ReplyDelete
 5. பணம் ஒருவகையில் தேவைதான் .ஆனால் அதுவே நிம்மதியை தேட வைத்துவிடும் என்பதும் உண்மைதான்

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...