பங்காளிங்க..

Thursday, November 24, 2011

2 மணி நேரம் கூடுதலாக கிடைத்தால் எப்படி செலவழிப்பாய்?

24 மணிநேரம் என்பதை நான் 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் அலுவலக வேலைக்கு, 2 மணி நேரம் அலுவலக பயணத்திற்கு என்று ஏற்கனவே ஒதுக்கி விட்டேன். மீதமுள்ள 6 மணி நேரத்தை மட்டுமே நான் என் உறவுகளோடு கழிக்கின்றேன். அந்த 6 மணி நேரத்திற்குள் என்னை அலங்கரிக்க, என் நண்பர்களை சந்திக்க, பக்கத்து வீட்டு நண்பர்களை சந்திக்க, என்னை உங்களோடு பேசிக்கொள்ள வைத்த என் பெற்றவர்களோடு பேசிக்கொள்ள, இந்த இன்டிபிலாக்கரில் என்னை அர்ப்பணிக்க, என் வருங்காலத்தை பற்றி என் பொருளாதாரத்தை பற்றி எண்ணிப் பார்க்க, என் சேமிப்பை கணக்கு செய்ய..

இது எல்லாவற்றையும் தவிர எனது நெருங்கிய சொந்தமான என் ஆருயிர் மனைவி, தோழி, காதலி, எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், அந்த என்னில் சரிபாதிக்கு நான் ஒதுக்கும் நேரம் என்பது மிகச் சிறு சிறு மணித்துளிகளே. நாங்கள் வார்த்தைகளால் பேசி வெகுநாட்களாகி விட்டது...கண்களால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றோம். 

எல்லோருக்கும் நேரம் பொன் போன்றதுதான், நானும் அதை மனப்பூர்வமாய் ஏற்று கொள்கின்றேன். எனது உடல் அழுக்கானால் வாசனைத் திரவியங்களை பூசி ஏமாற்றி விடலாம். ஆனால் அலுவலகத்தில் எனது கௌரவம் குறையாமல் அடையாளம் காட்டும் என் ஆடைகளை எந்தவிதக் கறை படியாமலும் "சர்ப் எக்ஸ்செல்" கொண்டு என்னை பாதுகாக்கின்றாள் என் மனைவி.

ஆனால் இன்றும் என் மனது கறை படிந்து இருக்கின்றது. என்னை ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் பாதுகாக்கும், உலகிற்கு அழகானவனாய் அடையாளம் காட்டும் எனது மனைவிக்கு நான் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கின்றேன்? 

கடவுளே, இன்னும் 2 மணி நேரம் கொடு, அவளோடு, அவள் அருகினில், அவளுக்காக, அவளுக்காக மட்டும், அவளோடு மட்டும் பேசிக் கொள்ள கண்களால், வார்த்தைகளால், ஸ்பரிசங்களால் பேசிக்கொள்ள இன்னுமும் 2 மணி நேரம் கொடு.

எனது உள்ளத்தின் கறைகளை அகற்றும் ஒரே "சர்ப் எக்ஸ்செல்" அவள் மட்டுமே...எனது ஆடைகளின் கறைகளை "சர்ப் எக்ஸ்செல்" கொண்டு நீக்கும் அவளது தனிமை என்னும் கறைகளை அழிக்க எனக்கு இன்னும் 2 மணி நேரம் அதாவது 120 நிமிடங்கள்  மட்டும் கொடு.

நான் ஒன்றும் சச்சின், தோணி, பில்கேட்ஸ், அம்பானி அல்ல, ஒரு நிமிடத்திற்கு இத்தனை ஆயிரம் ரூவாய் என்று சம்பாதிக்க....சச்சின், தோணி, பில்கேட்ஸ், அம்பானிக்கு கிடைக்காத ஒரு வரம் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது உறவுகள் அதை நிறைய சம்பாதித்து விட்டேன். அந்த உறவுகளோடு பிரயாணிக்க எனக்கு 2 மணி நேரம் கூடுதலாய் கொடு. எனது சரிபாதியோடு நான் எனது கூடுதல் 2 மணி நேரத்தை செலவழிப்பேன்.

1 comment:

  1. இன்னும் ரெண்டு மணி நேரம் கிடைத்தால் ரெண்டு நாளைக்கு கூட நம்மால் அவளுடன் இருக்க மாட்டோம் என நினைக்கிறேன். அதிலும் ஏதாவது வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம்.


    நம்ம தளத்தில்:
    மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...