பங்காளிங்க..

Monday, August 25, 2014

மதுரையா? சில கேள்விகள்???

மதுரையில் நான் கண்ட பல வித மாற்றங்கள்....மாறாத மாற்றங்கள்....

காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை மாற்றிக் கொண்டார்கள்..ஆனால் இன்னமும் சில பகுதிகளில் தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறும் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்...

ஜெராக்ஸ் , செல் போன் ரீசார்ஜ், செல் போன் இரண்டாம் நிலை விற்பனை, கம்பியூட்டர் என்று இளைஞர்களின் வலை விரிகின்றது....

அதே சமயம்....பெற்றவர்கள் இன்னமும் அதே பழமை மாறாத அணுகுமுறையில் வாழ்ந்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது எனது முதல் ஆச்சரியம்....

நிறைய பேருக்கு இன்னமும் செல் போன் பற்றிய விவரங்கள் தெரியவில்லை...இணையதளம் பற்றிய விவரங்களும் தெரியவில்லை...

ஈமெயில் என்றால் என்ன என்று பலர் கேட்டது ஆச்சரியமளிக்கின்றது....

அதையும்தாண்டி பழமைகள் என்று நிறைய விஷயங்கள் இன்னமும் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.....

அந்த பழமைகளில் ஒரு சில.....

மதுரையில் 99 சதவிகிதம் பழமை மாறாத தூய தமிழ் ஊர் பெயர்களே இருப்பது...

திருமண, காதுகுத்து, மற்றும் பூப்புனித விழா என்று பழமை மாறாத குடும்ப விழாக்கள் சிறப்பாய் நடைபெறுவது....

கோவில் திருவிழாக்கள்...

சாஸ்திர சடங்குகள்...
 
பேச்சு வழக்குகள்...

மரியாதையான உறவுமுறைகள்...

இட்லி, வடை, பொங்கல் என்ற உணவு வகைகள் இப்படி பல பல விஷயங்கள்....

பிரச்சினைக்குரிய விஷயங்கள்...

அடிக்கடி சாதி மோதல்கள்...

போக்குவரத்து பிரச்சினைகள்...

குடிநீர் பிரச்சினைகள்...

சரியான பராமரிப்பின்றி செயலிழந்து நிற்கும் அரசாங்க பணிகள்...

சீரற்ற நிதி நிலை....

காவல்துறையையே அலட்சியப்படுத்தும் அச்சுறுத்தல்கள்....அலட்சியங்கள்...

உதாரணமாக, மதுரை சேர் ஆட்டோக்கள் வெளிப்படையாகவே அதிக பயணிகளை ஏற்றுகின்றனர்....ஆனால் ஆட்டோக்களில் 3 பேர் மட்டுமே என்று எழுதி விட்டு 16 பேரை ஏற்றிக் கொ(ள்)ல்கின்றார்கள்......

அந்த "3 பேர் மட்டுமே" என்ற வசனம் யாரை ஏமாற்றுவதற்கு....பயணிகளையா? போக்குவரத்துதுறை அதிகாரிகளையா ?  காவல்துறை அதிகாரிகளும் பார்த்து விட்டு பேசாமல்தான் இருக்கின்றார்கள். வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்மைப் பார்த்து என்ன  ..நினைப்பார்கள்...நமது சட்டத்திற்கு அவ்வளவுதான் நாம் அளிக்கும் மதிப்பா?

மழை இல்லை..மழை இல்லை என்று புலம்பித் தள்ளும் ஒரு சில மதுரை மக்கள்...பெய்து வரும் மழை நீரை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்றால் எதுவுமே இல்லை,  

சிவகங்கை மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் என்று மூன்றுமே பக்கம் பக்கம் இருக்கின்றது......3 மாவட்ட மக்களும் ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றார்கள்....இவர்களுக்கு பாலமாய் இருப்பது இன்னமும் அரசுப் பேருந்துகள்தான்...அந்த பேருந்துகளின் நிலையோ மிகவும் பரிதாபம்....

இவ்வளவு பெரிய மாநகரில் பொழுது போக்கு மையங்கள் எதுவும் இல்லாதது வேதனைக்குரிய விசயமே....

கோவில்கள் இருக்கின்றது, இந்த ஊரிலேயே பிறந்தவர்களுக்கு அது பழகி போன விஷயம்...அது தவிர வேறு எந்த பொழுது போக்கு விசயங்களும் இல்லாதது ஆச்சரியமே....

அனைவருக்குமே தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கண்காட்சி, பொருட்காட்சிகளே பிரதான பொழுது போக்கு மையங்கள்...இது தவிர வேறு எதுவுமே இல்லை...

அது போல ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்களுக்கு முன்னரே வியாபாரிகள் விடுமுறை எடுத்துக் கொள்ள அன்றைய தினம் பெரும்பாலான மதுரை மாநகரம் முடங்கித் தான் போகின்றது....

ஒரு காலத்தில் ஒரு சில அரசியல்வாதிகளின் கோரப் பிடியில் இருந்த மதுரை இன்று தப்பி ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கையில் சென்று கொண்டு இருக்கின்றது.

மதுரை என்றாலே வன்முறை,  கொடூரம், ரவுடி என்ற போக்கிலேயே சமீப கால சினிமாக்கள் வேறு வந்தது, மதுரையை பயங்கரமாக காட்டியது... 

இவை எல்லாம் களைந்தெடுக்கப்படும் போது தானாகவே மதுரை மாநகரம் ஜொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை....

1 comment:

  1. பொழுது போக்கு மையங்கள்...இது தவிர வேறு எதுவுமே இல்லை... But there are 41 theatres in Madurai.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...