பங்காளிங்க..

Thursday, December 18, 2014

தடம் மாறும் தாமரை! தத்தளிக்கும் தமிழகம்!

காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணுதுன்னு சொல்லி சொல்லித் தான் பாரதிய ஜனதா நம்மகிட்டே பிச்சை கேட்டானுங்க...ஓட்டுக்கு ஊர், ஊரா தெரு தெருவா பிச்சை கேட்டானுங்க, இன்னிக்கு சமஸ்கிருதத்தை கொண்டு வருவேன்...பகவத் கீதையை கொண்டு வருவேன் னு வசனம் பேசிகிட்டு இருக்காங்க...திடீருன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒன்னு கேள்வி பட்டது அதிர்ச்சியா இருந்தது, கிறிஸ்துமஸ் கு லீவ் கிடையாதாம். மெல்ல இந்துத்துவா தலை தூக்குதோ ங்கிற அச்சம் எல்லோருக்கும் வருது...

மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் எல்லா மொழி, மதம் பேசுறவங்களும் இருக்காங்க. அந்த நாட்டோட பெருமைய சீரழிக்கிற மாதிரி பேசிகிட்டு இருக்கிறது கண்ணியமான ஆட்சியா தெரியல...

கடந்த தேர்தல் பிரச்சாரம் அப்போ இப்போ பிரதமரா இருக்கிற  மோடி தான் மன்மோகன் சிங் பிரதமரா இருந்த போது அப்போதைய பிரதமரையே ஏக போக வசனத்துல பேசினாரு...ஆனா அதே விஷயத்தை இன்னிக்கு வைகோ செய்யுறதால அவர வீட்டுக்கு பாதுகாப்பா போக முடியாது னு பிஜேபி கட்சிக்காரர் ஒருத்தர் மறந்திட்டு பேசுறாரு...

காங்கிரஸ் செஞ்ச அதே தப்பை இப்போ பிஜேபி யும் செய்யுது....ஆனா இந்த வாட்டி மக்களோட முடிவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்...

ஆட்சிக்கு வந்ததும் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று சொன்னது என்னானது? கோர்ட்ல இருக்கு, கடையிலே இருக்கு என்று படம் காண்பிக்கின்றார்கள். அன்று ஆதார் அட்டை வீணானது என்று சொன்னார்கள்..இன்று வரை ஆதார் அட்டைக்கு மக்களை விரட்டி கொண்டுதான் இருக்கின்றார்கள்.  

தமிழ்நாட்டினில் காங்கிரஸ் ஐ ஓட ஓட விரட்டியது ஈழத் தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும்தான்...

கட்சத் தீவு மீட்பு இயக்கத்தை சீதையின் மைந்தன் என்பவர் தொடங்கி வைத்தார். அதற்கு தலைமை தாங்கியதே பிஜேபி தலைவர் ஒருவர்தான் இன்று அதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றார் என்பதே வெட்க கேடான செயல். 

தமிழர்களை கழுத்தருப்பவன் ராஜபக்சே , அந்த ராஜபக்சேவிற்கு கொடி பிடித்து கொண்டிருக்கும் எல்லாருமே தமிழர்களின் எதிரிகளே...தமிழர் நலன் காக்க அன்று முதல் இன்று வரை போராடும் வைகோவையே  அச்சுறுத்தும் ராஜா அவர்களுக்கு நமது மீனவர்கள் எல்லாம் கிள்ளுக்கீரைதான்...

ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல, நீங்கள் நடத்தும் தூய்மை இந்தியா நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க? மரம், செடி கொடிகளில் இருந்து வரும் இலைகளை குப்பை என்று பெருக்குகின்றார்கள்...இறுதியில் அந்த குப்பையை பெருக்கி பிளாஸ்டிக் கூடைகளில் போடுவார்களாம், முதலில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுங்க காவி சாமியார்களே, எல்லாமுமே தானாகவே நடக்கும்...ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் , செயல்களை செயல்படுத்தினால் மக்களும் நம்புவார்கள். நாடு அழுக்காகாமல் இருக்கிறதா என்று பார்க்காதீர்கள்? உங்கள் மனது உண்மையும், நம்பிக்கைக்கும், ஏற்றவாறு சுத்தமாக இருக்கிறதா என்று பாருங்கள்? 

வந்ததில் இருந்து எதுவுமே உருப்படியான திட்டமாக தெரியவில்லையே... தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்பு பண ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஊழலை பட்டியல் போட்டார்கள்...இன்று எந்த ஊழலும் வெளியே வர வில்லை...காரணமும் தெரியவில்லை...ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்கு, மீனவர்களுக்கு எந்த வித பாதுக்காப்பிற்கும் உத்திரவாதம் அளிக்க வக்கில்லாத அரசுதான் இந்த பிஜேபி என்பதை நிருபித்து வருகின்றது.  மோடி வந்தால் நாட்டில் அது மலரும், இது மலரும் என்று தமிழகத்தின் ஒரு பத்திரிகை ஆசிரியர் பினாத்திக் கொண்டு இருந்தார். காங்கிரசிற்கும், பிஜேபி க்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றார்கள்.

தமிழ் நாட்டு மாநகரம் போன்று இருக்கும் சிறிலங்கா நமது தமிழக மீனவர்களை பந்தாடிக் கொண்டிருக்கின்றது. அடுத்த முறை மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அந்த ஹெச்.ராஜா அவர்களை படகில் வைத்து கூட்டி செல்லுங்கள்..அவர் கண்டுபிடிக்கட்டும்..கடலில் இந்தியாவின் எல்லையை. காஸ்மீரில் அடித்தால் அது இந்தியா...அதுவே தமிழக மீனவர்களை அடித்தால் அது தமிழ் நாட்டு பிரச்சினையா?  உன் மாநிலத்து பிரச்சினைகளையே உன்னால் தீர்க்க முடியவில்லை...உன்னால் உன் தலைமையிடம் பேச முடியவில்லை...நீ இந்தியாவை சுத்தப் படுத்த போகின்றாயா? நம்புவது போல் பேசுங்கள்...அல்லது பேச முயற்சியுங்கள்...

காங்கிரஸ் ஆட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரமா என்று கேட்டார்கள்? இன்று அதே டெல்லியில் மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம்? வெட்கமாக இல்லையா? உனது ஆட்சியின் லட்சணம் ஒரு வருடத்திற்குள் பல்லை இளித்து விட்டதே...

மக்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்துங்கள்...வெட்டி பந்தா ஊரை கெடுக்கும் என்பது நிதர்சன உண்மையே!  தமிழகத்திற்கு விடிவு காலத்திற்கு மூன்றாம் அணி உருவானால் மட்டுமே முடிவு பெரும். எப்போது அடுத்த தேர்தல் வரும்?

5 comments:

 1. He came to power with full media hype. On the other hand we are seeing failures in all fronts. He doesn't have basic ethics that he should attend the parliment sessions when there are lot of open issues in the country. Pathetic.

  ReplyDelete
  Replies
  1. பார்லிமென்ட் குப்பையா கிடக்கு, வந்து தூய்மை பண்ணுங்க ன்னு சொன்ன, போட்டோ எல்லாம் எடுப்பாங்க ன்னு சொன்னா ஒருவேளை பார்லிமென்ட் பக்கம் வந்தாலும் வருவாரு ன்னு நினைக்கிறேன்...

   Delete
 2. எங்கயா போன இத்தன நாளா? இங்க பிஜேபி புராணம் பாடுற பஜனை கோஷ்டிகள் தொல்லை தாங்கமுடியலையா . அதிலும் எச்ச ராஜா , சூனா பானா எல்லாம் தமிழ்நாட்டையும் , தமிழனையும் காப்பாத்த வந்தவனுங்க மாதிரியே பேசுறானுங்க .
  இந்த மாதிரி பதிவ பாக்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அடிக்கடி எழுதுயா .

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதை எல்லாம் பார்த்து வெறுத்துத்தான் பேசாம ஒதுங்கிட்டேன்...ஆனா எங்கே நாம பேசாம போனா நம்மளையும் சாமியாரா ஆக்கி காவி வேட்டிய கொடுத்திருவானுங்களோ ன்னு பயந்துதான் திருப்பி வந்திட்டேன்.

   Delete
 3. அருமையான தகவல் சகோ ......

  மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...