பங்காளிங்க..

Thursday, January 31, 2013

ஏசி காரு வச்சு படம் காட்டும் பதிவர்களுக்கு????

நம்ம ஊருல இப்போ எல்லாம் கார் வச்சிருக்கலைனா அவன பரம ஏழையா, பண்டாரப் பரதேசியாத் தான் பாக்குராக....

எங்கே வேலை பாக்குற? அட்லீஸ்ட் ஒரு மாருதி கார்?  சரி மாருதி கார் இருக்குன்னு சொன்னா, உடனே ஏசி வண்டி.................................தானே? னு ஒரு இழுவை.....

இந்த ஏசி காரை வச்சிக்கிட்டு படம் காட்டும் பதிவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை!!

ஊரெல்லாம் வெயிலுக்குள்ளே சுத்த வேண்டியது, அப்புறமா காருக்குள்ளே ஏறியதும்...ஜாக்சன் பாட்டு, இல்லேனா ஒரு ராஜா சார் பாட்டை போட்டுக்கிட்டு கூலிங் கிளாசை நல்லா ஏத்திகிட்டு அப்படியே ஏசியை போட்டுக்கிட்டு சும்மா 120 கிலோ மீட்டர் வேகத்துல சிட்டியை வலம் வந்தா எப்படி இருக்கும் தெரியுமா?

சூப்பராத்தான் இருக்கும்? நம்ம ஊருல அடிக்கிற வெயிலுக்கு இந்த சுகம் நல்லாத்தான் இருக்கும்....சொர்க்கமே வருமே....உண்மைதான் நாம கேன்சருல பரலோகம் போனா சொர்க்கமே வரத்தானே செய்யும்....

என்ன கேன்சரா? ஆமாங்க....வண்டிக்குள்ளே ஏறுனதும் கொஞ்ச நேரம் கண்ணாடி கிளாசை எல்லாம் திறந்து வச்சிட்டு அப்புறமா வண்டியை ஸ்டார்ட் செய்யணும்...அதுக்கப்புறமா ஏசியை போடுங்க...அதை விட்டுட்டு எடுத்தவுடனே கண்ணாடிய மூடிட்டு ஏசியை போட்டா சீக்கிரம் சொர்க்கம் போயிடுவீங்க.....

அமெரிக்காவுலே எடுத்த ஆராய்ச்சியிலே சொல்றது என்னானா...வண்டி போயிட்டு நிக்குரப்ப வண்டிக்குள்ளே இருக்கிற சூடு, வெப்பம், வண்டியிலே இருக்கிற பிளாஸ்டிக் ல எல்லாம் பட்டு பென்சீன் ங்கிற வேதியியல் உருவாகி இருக்கும்...இந்த பென்சீன் என்ன செய்யும்...கழுதை அதுபாட்டுக்கு உருவாகிட்டு போகுதுன்னு நினைக்காதீங்க...அது நம்மளோட எலும்பு, தோல், சருமம், மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை விசமா மாத்திடும்....அதுக்கப்புறம் என்ன? கொஞ்சம், கொஞ்சமா புற்றுநோயை உருவாக்கிடும்...இது நமக்கு தேவையா? பிறந்த எல்லாவனுக்கும் சாவு நிச்சயம்...அது எப்படி வேணுமினாலும் இருந்திட்டு போவுதுன்னு வெட்டி பந்தா பேசுறவன் எல்லாருக்கும் சொல்றது என்னானா....கருமம் நீ போறதா இருந்தா பரவாயில்லை...நம்மளோட குழந்தைங்க, இன்னமும் இந்த உலகத்தை முழுசா அனுபவிக்காதவங்க அவங்க இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு போகட்டுமே...என்ன நான் சொல்றது?

சாதாரணமா பென்சீன் அளவு காருக்குள்ளே ஒரு சதுர அடிக்கு 50 மில்லிகிராம் இருந்தா பிரச்சினை இல்லை....ஆனா நல்ல மரத்தடியிலே அல்லது கார் செட்டுக்குள்ளே...கண்ணாடி எல்லாம் மூடிட்டு நிக்குற காருக்குள்ளே...400லே இருந்து 800 மில்லிகிராம் பென்சீன் இருக்குமாம்....

இன்னும் சில இடத்துல நல்லா உச்சி வெயில்ல நிக்குற காருக்குள்ளே 2000 முதல் 8000 மில்லிகிராம் வரைக்கும் பென்சீன் இருக்குமாம்....கருவை சுமக்கிற கர்ப்பிணிங்க முதல் முப்பது நாட்களுக்கு உள்ளே இருந்தா அந்த கருவே கலைஞ்சு போகுமாம்....நாசமா போச்சு! கஷ்டப்பட்டு உருவாக்குன ஒரு கருவை இந்த பாழாய் போன ஏசி காத்து புடுங்கனுமா என்ன? கொஞ்சம் சிந்தியுங்க...உங்களை ஏசி காரு வாங்காதீங்க னு சொல்லல....ஏசி காரு வாங்கினாலும் நல்ல காத்தை கொஞ்ச நேரம் சுவாசிட்டு அப்புறமா ஏசியை போட்டுகோங்க...

உடனே ...சில லொள்ளு பிடிச்ச பதிவருங்க...என்கிட்டேதான் சைக்கிளே இல்லையே...அதுனால எனக்கு இது தேவை இல்லைன்னு சொல்வாங்க...என்னிக்காவது ஏசி காரு வாடகைக்கு எடுப்பீகளே...அப்போ இது தேவைப்படுமே.....

இன்னும் சிலரு எங்க ஊருல வெயிலே கிடையாது, நாங்க கொடைக்கானல்...ஊட்டியிலே இருக்கோம்..எங்களுக்கும் இது தேவைப்படாதுன்னு சொல்வாங்க..தெய்வமே...உங்களுக்குத்தான் பென்சீன் அளவு அதிகமா இருக்கும்....ஏன்னா வெளியிலே இருக்கிற குளிருல வண்டி அதிகமா எனெர்ஜி எடுக்கும்...அப்போ அதிக அளவுல சூடு உற்பத்தி ஆகும்...அப்போ காருக்குள்ள இருக்கிற சீட், டேஸ் போர்டு ரொம்ப சூடாகுமாம்...வேற வழியே கிடையாது...நீங்களும் இதை பாலாப் பண்ணித்தான் ஆகணும்....

பென்சீன் அதிகமா இருக்கிற நேரத்துல ஏசி காத்து பட்டதும்...அந்த இடம் அந்த பிளாஸ்டிக் குள்ள இருக்கிற பென்சீன் என்கின்ற விசத்தை தூண்டி நம்ம சுவாசிக்கிற காத்துக்குள்ள கலந்திடுது....நம்ம சந்ததி நல்லா வளரனுமினா கொஞ்சம் புரிஞ்சிகோங்க....

12 comments:

  1. பயனுள்ள தகவலை
    சுவாரஸ்யமாக சொல்லிப் போனது
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்...

      Delete
  2. என்னைத்தான் கலாய்க்கிறீங்களோன்னு குழம்பிப் போய்ட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, உங்களை போயி கலாய்ப்பேனா? வராதவங்க....வந்திருக்கீக...வாங்க, வாங்க..

      Delete
  3. //சாதாரணமா பென்சீன் அளவு காருக்குள்ளே ஒரு சதுர அடிக்கு 50 மில்லிகிராம் இருந்தா பிரச்சினை இல்லை....ஆனா நல்ல மரத்தடியிலே அல்லது கார் செட்டுக்குள்ளே...கண்ணாடி எல்லாம் மூடிட்டு நிக்குற காருக்குள்ளே...400லே இருந்து 800 மில்லிகிராம் பென்சீன் இருக்குமாம்....

    இன்னும் சில இடத்துல நல்லா உச்சி வெயில்ல நிக்குற காருக்குள்ளே 2000 முதல் 8000 மில்லிகிராம் வரைக்கும் பென்சீன் இருக்குமாம்.//


    இதெல்லாம் புள்ளையார் பால் குடிச்சார் போல கதை தான்.

    நீங்க சொன்ன ஆய்வுக்கு ஆதாரமிருக்கா?

    இது எந்த அளவுக்கு கப்சானு புரிய நீங்க சொன்ன பென்சீன் அள்வே போதும்.

    10 மில்லிகிராம்=1 கிராம்.

    அப்போ 8000 மில்லிகிராம் = 800 கிராம், ஒரு கிலோவுக்கு கொஞ்சம் கம்மி. ஒரு நாளைக்கு ஒரு காரில் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் 800 கிராம் பென்சீன் வெளியிட்டால் ஒரே மாதத்தில் காரில் உள்ள எல்லா பிளாஸ்டிக்கும் ஆவியாகி கரைஞ்சி, காரே எலும்புகூடா தான் நிக்கும் :-))

    10 வருஷம் ஆன காரில கூட எல்லா பிளாஸ்டிக் பொருளும் அப்படியே தான் இருக்குது :-))

    ஃப்ராக்‌ஷன் ஆஃப் மைக்ரோ கிராம் அளவுக்கே பென்சீனை காரில் உள்ள பிளாஸ்டிக்குகள் வெளிப்படுத்தும், அதனால் பெரிதாக பாதிப்பெல்லாம் இருக்காது.

    கார் ஓடாமல் இருக்கும் போது ஏசி போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருந்தால் சமயத்தில் எஞ்சினில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு உள்ளே வரவாய்ப்பு இருக்கு,அதான் ஆளை உடனே கொன்றுவிடும்,அந்த அபாயம் பற்றி சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பெயருக்கு ஏத்த மாதிரி தலைகீழா தொங்குறீன்களே தோழா,
      ஆதாரமில்லாமல் சொல்ல இது படைப்புகள் அல்ல, இது உடல்நலம் சம்பந்தப்பட்டது. வேறு ஒரு இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயத்தை உங்களோடு பகிர்ந்திருக்கின்றேன்...

      உங்களுக்கு நான் சொன்னதிலே சந்தேகம் இருந்தா, கீழே இருக்கிற முகவரியை தொடர்பு கொண்டு விசாரிச்சிக்கொங்க..இல்லேனா...இந்த இணையத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க...வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி...


      Agency for Toxic Substances and Disease Registry
      Division of Toxicology
      1600 Clifton Road NE, Mailstop F-32
      Atlanta, GA 30333
      Phone: 888-422-8737
      FAX: (770)-488-4178

      http://www.atsdr.cdc.gov/toxprofiles

      இப்போ சரிதானா?

      Delete
  4. பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி...

      Delete
  5. பயனுள்ள தகவல் , விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி...

      Delete
  6. நல்லதொரு எச்சரிக்கை பதிவு! என்னசொன்னாலும் அதை நடைமுறை படுத்துபவர்கள் மிக குறைவு தான்!!

    ReplyDelete
  7. நல்ல தகவல். வவ்வால் மயக்கத்துல எழுதியிருப்பார் போல. 10 மில்லி கிராம் ஒரு கிராம் அல்ல, 1000 மில்லிகிராம்தான் ஒரு கிராம்.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...