பங்காளிங்க..

Wednesday, January 9, 2013

அட ராமா! இதுதான் காதலா?

ஊரு உலகத்துல வர்றவன் போறவன் எல்லாம் காதல், காதல்னு பினாத்திகிட்டு இருக்கான்..

முளைச்சு மூணு இலை  விடலை.அதுக்குள்ளே காதல், கத்திரிக்காயினு   சுத்த வேண்டியது...அப்புறம் அவன் என்னை ஏமாத்திட்டான், கை கழுவிட்டானு புலம்ப வேண்டியது....
 
அல்டாப்பு காதல்

இல்லேனா ஒரு படி மேல போயி அவன் என்னை கெடுத்திட்டான், கல்யாணம் செய்வான்னு நம்பி என்னைக் கொடுத்திட்டேன்னு புலம்பவேண்டியது...

காதல்னா என்ன தெரியுமா?

இந்த லின்க்கை கிளிக் பண்ணிப் பாருங்க..

தெய்வீக காதல்

அந்த பொண்ணு ஒரு பெரிய விபத்துல அடிபட்டு கோமாவுக்கு போயிடுச்சாம்...அதுக்கு அப்புறமா அவளோட காதலன்தான் அவளுக்கு எல்லாமே... அவளை தினமும் கவனிச்சு, அவளுக்கு ஊக்கம் கொடுத்து இப்போ எவ்வளவோ முன்னேறி இருக்காளாம். விபத்து நடந்தது 2009 ஆம் வருசமாம். காதலர்களே....இந்த காணொளிக் காட்சி அனைத்து உண்மையான காதலர்களுக்கு அர்ப்பணம். ஆர்த்தி விரைவில் பூரண குணமடைந்து அவரோடு சேர்ந்து வாழ எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

என்னவோ என் மனம் மிகவும் பாதித்ததால் இதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகின்றேன்...இது ஏற்கனவே பதிவேற்றி இருந்தால் என்னை மன்னிக்கவும்..

3 comments:

  1. இப்படியும் இருகாங்க அப்படியும் இருகாங்க.. என்ன பண்றது...

    ReplyDelete
    Replies
    1. அல்டாப்பு காதல் அநேகம் பேரு இருக்காங்க..தெய்வீக காதல் ரொம்ப குறையவே இருக்காங்க...வாழ்க வளமுடன்...

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...