பங்காளிங்க..

Friday, March 15, 2013

பாலச்சந்திரன், ராஜபக்சே அந்த 7 நிமிடங்கள்....

இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி இருக்கின்றது. அதற்க்கு ராஜபக்சே தான் காரணம் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இப்படி ஒரு  ஆயுதப் படை, மக்கள்படை போர்த் தளபதிகள் இருந்ததில்லை என்று உலகநாடுகளே ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கின்றன..இலங்கைக்கும், ஈழத்தமிழர்களுக்கும் பல்லாண்டு காலமாய் போர் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கையில் இதுவரை விடுதலைப் புலிகளை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவரது உதவியால்தான் அவர்களால் விடுதலைப் புலிகளை நெருங்க முடிந்தது என்பதை பிறந்த குழந்தையும் சொல்லிவிடும்.

இலங்கையால், நிராயுதபாணியாய் செல்லும் என் தமிழின மீனவனை மட்டுமே அழிக்க முடியும். அவனால் விடுதலை புலிகளின் நாய்க்குட்டியை கூட  நெருங்க முடியாது, அவனது பலம் அவ்வளவுதான் என்பதை அவன் இன்று காலை வரை நிரூபித்துக் கொண்டிருக்கின்றான். விடுதலைப் புலிகளை அழிக்கும் மாபெரும் சக்தி இந்தியாவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு இந்தியாவில் மடிப் பிச்சை க்கேட்டு இன்று ஈழத் தமிழர்களின் தலைவரை அழித்திருக்கின்றார்கள். ஆனால் வெட்க கேடான விஷயம் ஒரு பெண்ணாய் சோனியா காந்தி அம்மையார் ஈழத் தமிழச்சிகள் மானபங்கப்படுத்தப் பட்டதற்கு ஒருவார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

அன்னை சோனியா காந்தியே உங்கள் கணவர் படுகொலை செய்யப் பட்ட அன்று உடன் சென்ற ஒருவர் கூட இறக்கவில்லையே...அது ஏன் என்று உங்களுக்குதெரியவில்லையா...அல்லது தெரிந்தும் மறைக்கின்றீர்களா? ராஜீவ் காந்தி என்ற ஒருவரைக் கொன்றதால் விடுதலைப் புலிகளை நாங்கள்தான் அழித்தோம் என்று தைரியமாக சொல்லுங்களேன்...அது இல்லை என்றால் ராஜபக்சேதான் போர் குற்றவாளி என்று தைரியமாய் சொல்லுங்களேன்...யாரை ஏமாற்றும் முயற்சி இது....அவர்கள் ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லை என்று நிரூபித்ததாலேயே இன்று அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள். பிணத்தோடு உறவு கொண்டிருக்கின்றார்கள்.  டெல்லியில் ஒரு மாணவியை கற்பழித்துக் கொன்றதற்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க தீர்மானம் நிறைவேற்றுகிண்றீர்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கான எம்மின சகோதரிகளை வன்புணர்வு கொண்டு கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வக்கற்றுப் போய்  நிற்பதைப் பார்த்தால் யார் போர்க் குற்றவாளி என்று தெரியவில்லை.
 
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை சோனியா காந்தி நிரூபித்து விட்டார். தான் ஒரு பெண்ணாக இருந்தும் பெண் பச்சிளங்குழந்தை முதல் எல்லாப் பெண்களையும் நாயை விட கேவலமாய் சீரழித்த கொடுமைகள் நடந்திருந்தும் இலங்கை நட்பு நாடு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இப்போதாவது தமிழக மக்கள் கலைஞரின் சுயரூபத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நெருக்கடி மிகுந்த காலத்தில் கூட கூட்டணியில் இருந்து ஆதரவு வாபஸ் என்று சொல்லவில்லை. அதற்க்கு மாறாக டெசோ மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைக்கின்றார்களாம் . யார் காதில் எவ்வளவு முழம் பூ சுற்றுகின்றீர்கள். ஏற்கனவே நிறைய சுற்றி விட்டீர்கள். நீங்கள் சுற்றிய பூக்கள் எல்லாம் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றது.   ஆதரவு வாபஸ் ஒரு வார்த்தையை தவிர மற்ற எல்லா கதைகளும் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரிகள் கடைகளை அடைத்தது உங்களுக்கு ஆதரவு தெரிவித்து அல்ல...அவர்களாகவே உணர்வுபூர்வமாய் செய்து கொண்ட விஷயம் அது. இதில் கடை அடைப்பு நடந்து மாலையில் கலைஞர் அவரது சொந்த தொலைக்காட்சியில் திமுகவினர் 50000 பேர் கைது செய்து விடுதலை, வெற்றி என்று பெருமை பேசிக் கொள்கின்றார். வெற்றி என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா தலைவரே, உங்கள் டெசோ மாநாட்டு தீர்ப்பில் ஐநா எடுக்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால்தான் அதற்க்கு பெயர் வெற்றி..இல்லையேல் அது தோல்விதான்.

உண்மை நிலவரம் படி திமுக, விசிக, திக ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது. அப்படி பார்த்தால் 3 கட்சிகளை சேர்ந்த 50000 பேர்தான் இதில் கலந்து இருக்கின்றார்கள். அதில் திமுக மட்டும் 50000 பேர் என்பது மற்ற இரண்டு கட்சிகளை கேவலப் படுத்தும் விதமாய் இருக்கின்றது. அப்படி எனில் விசிக மற்றும் திகவில் இருந்து ஒரு தொண்டர்கள் கூட வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? வந்தவர்கள் அனைவருமே திமுகதானா? இதனை அந்த இரண்டு தலைவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மாலையில் 27140 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை என்று மற்றொரு தொலைக்கட்சியில் செய்தி வெளியானது. திமுக,விசிக, மற்றும் திக வை சார்ந்த 27140 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகின்றது. ஆக திமுக தொண்டர்களின் எண்ணிக்கையும் படுபாதாளத்திற்கு போய்விட்டது என்பது நிரூபணமாகின்றது.

உண்மையில் பிணத்தோடு சண்டை போடுவான் ராஜபக்சே அல்லது கையில் ஆயுதமின்றி மீன் பிடிக்க செல்லும் எங்கள் மீனவனோடு சண்டை போடுவான் ராஜபக்சே. அவனுக்கு தைரியம் அவ்வளவுதான். நம்மூரில் சொல்வோமே...பொம்பளைக்கிட்டே உன் வீரத்தை காண்பிக்காதே என்று, அதுதான் அவன்...பிரபாகரனை அழிக்கும் சக்தி அவனிடம் கிடையாது. அதற்க்கு அவன் லாயக்கானவன் இல்லை. அவனுக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இருந்து அவனை ஆட்டுவித்திருக்கின்றது. அது யார் என்று தமிழனுக்கு தெரியும்...உண்மையில் பிராபாகரனை கொல்ல உதவி செய்த அந்த கொடுங்காலனே போர்க் குற்றவாளி. அது யார் என்பது உங்களுக்கு தெரியும்? பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை கண்டு ராஜபக்சே பயந்து மூத்திரம் போனாலும் போயிருப்பான். அதனால்தான் அவனை கூட அருகில் இருந்து சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வீரமரணம் எய்திய பாலச்சந்திரனுக்கு எங்களது வீரவணக்கங்கள்.


இப்போது எங்களைப் போன்ற இளைஞர்களின் சந்தேகம் என்பது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவரை வரவேற்க சென்ற தமிழக தலைவர்களில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படாதது எப்படி? அவருக்கு பாதுகாப்ப்பை இருந்த அதிகாரிகள் 10 பேர் மரணம் வருந்தக்கூடிய செய்தியே....ஆனால் அவரை தமிழகத்திற்கு அழைத்த தலைவர்கள் எங்கே போனார்கள்?. யார் உண்மையான குற்றவாளி?  
 
உங்கள் கண்டனங்கள் எங்களுக்கு தேவையில்லை....எங்களுக்கு தேவை...ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.! இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்வளவோ தேவலை, பெண்களை, குழந்தைகளை அவர்கள் சீரழித்தது கிடையாது...அதுதான் நிசம்...

இரண்டு தினத்திற்கு முன்பு கோயம்பேட்டில் கல்லூரி மாணவர்கள் தங்கபாலுவை விரட்டி இருக்கின்றார்கள். மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தாராம், (தயவு செஞ்சு எல்லோரும் ஒருவாட்டி நல்லா சிரிச்சுக்கோங்க..இதை விட காமெடி உலகத்துல இருக்க முடியாது....)இதே மாணவர்கள் இத்தோடு நிற்காமல் இலங்கை வீரர்கள் அடுத்தது இந்தியாவில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரும்போது விரட்ட வேண்டும். அவர்கள் பங்குபெறும் போட்டிகளை நமது மாணவர்கள் உதாசீனப் படுத்த வேண்டும். தமிழகத்தை சார்ந்த விளம்பரதாரர்கள் அவர்களுக்கு சலுகைகள் அளிக்க கூடாது.  இதற்க்கு வடஇந்திய மாணவர்கள் உறுதுணையாக நிற்கவேண்டும். அப்படி நடந்தால் மாணவர்கள் ஒரு புது சரித்திரம் படிக்கலாம். காங்கிரசிற்கு முற்றுப் புள்ளி வைக்க இது ஒரு நல்ல தருணம்.
ராஜபக்சே மட்டும் போற்குற்றவாளி அல்ல! கையாலாகாத ராஜபக்சேவை போர்க்குற்றவாளி ஆக்கியிருக்கும் தீயசக்தி எது என்பதை ஆராய வேண்டும்???.

8 comments:

 1. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை கண்டு ராஜபக்சே பயந்து மூத்திரம் போனாலும் போயிருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் உண்மை...எங்கே சின்ன பிரபாகரன் உருவாகி அவனது வாரிசுகளை அழித்து விடுவானோ என்று கூட பயந்து கொன்றிருப்பான்....

   Delete
  2. தமிழினத்தின் விடியலுக்காக தானே எழுச்சி கொள்ளும் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அலறியடித்து ஓடும் தமிழின எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்ட அணி திரள்வோம்.

   தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் பாசிச சக்திகளை அடையாளம் காண்பதோடு அல்லாமல் அவர்களுக்குப் பாடை கட்டுவோம்!

   தமிழீழத்தை இந்தியா மறுக்கும் படசத்தில் இந்தியாவை எதிர்ப்போம்.
   தமிழர்களின் உரிமையான் 'தமிழ்நாட்டை' இந்திய ஒன்றியத்திலிருந்து மீட்போம்

   Delete
  3. போலி அரசியல்வாதிகள் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு மறு நல்வாழ்வு என்றுமே கிடைக்காது. தமிழகத்தில் அதற்காக போராடும் பலர் அவர்களது சொந்த அரசியல் லாபத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெளிப்படையாக சொல்வதென்றால் திமுக ஏன் மத்தியில் இருந்து வாபஸ் பெறவில்லை? ராஜபக்சேவிற்கு மத்திய அரசு உதவி செய்யும் காரணத்தால் விலகுகின்றோம் என்று அவரால் ஒரு வார்த்தை கூட ஏன் சொல்ல முடியவில்லை.

   மாணவர்கள் போராடுவது ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்காக....அந்த குற்றங்களுக்கு உறுதுணையாய் இருந்த காங்கிரசின் முன்னாள் தலைவர் தங்கபாலு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்றாராம். மக்களை முட்டாளாக்க நினைக்கின்றது காங்கிரஸ் மற்றும் திமுக....

   மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்...ஈழத்தமிழ் விரைவில் மலரட்டும்...மக்கள் அமைதி பெற வேண்டும்..தவறு செய்த ராஜபக்சேவை விட அவன் தவறு செய்ய உடந்தையாய் இருந்தவர்களுக்கு விலங்கிட்டு தூக்கில் ஏற்ற வேண்டும்...

   Delete
 2. nalla pathivu vaalththukkal tholare. please go to visit this..... http://www.sinthikkavum.net/2013/03/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், உணர்வுப்பூர்வ கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! நிச்சயம் உங்கள் பதிவினை .பார்க்கின்றேன் .

   Delete
 3. மிகவும் கொடுமையான செயல். தங்களின் ஆதங்கம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

  ReplyDelete
 4. http://www.seithy.com/breifArticle.php?newsID=70993&category=Article

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...