பங்காளிங்க..

Tuesday, April 1, 2014

2019 இல் நீங்கள்தான் பிரதமர்!!!

கேடு கெட்ட இந்திய அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும்...
அப்படி நடந்தால் ஒரு வேளை இந்தியர்கள், தமிழர்கள் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்....

1. 5 ஆண்டு கால ஆட்சி என்பது 3 ஆண்டுகளாக குறைக்கப் பட வேண்டும்....

2. ஒரு முறை பதவி ஏற்ற கட்சி தொடர்ச்சியாக போட்டியிடக் கூடாது....

3. எந்தெந்த திட்டம்  எவ்வளவு ரூவாயில் என்ற விளக்கம் மக்களிடம் தெரிவிக்கப் பட வேண்டும்....அதற்க்கு ஒதுக்கிய தொகை என்ன? எப்போது முடியும் என்ற விளக்கம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மிகாத திட்டமாக இருக்க வேண்டும்! 

4. ஆளும் கட்சி மந்திரியானாலும் சரி எதிர் கட்சி மந்திரியானாலும் சரி அரசு ஊழியர்களின் சம்பளமே வழங்கப் பட வேண்டும்...

5. வாரிசு அரசியலில் யாருமே வரக் கூடாது...

6. குறைந்தது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்...

7. இலவசங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்....

8. நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றா விட்டால் அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்....

9. தேர்தல் பிரச்சாரம் என்பது ஊருக்கு வெளியே மைதானத்தில்  மட்டுமே நடைபெற வேண்டும், ஊருக்குள் பிரச்சாரம் செய்தாலோ அல்லது வாக்கிற்கு பணம் கொடுத்தாலோ தேர்தல் ஆணையம் அந்த வேட்பாளரின் மனுவை நிராகரிக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்....

10. தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அமைக்க வேண்டும், 5 வாகனத்திற்கு மேல் வரும் வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்..

11. சுவர் விளம்பரங்கள், விளம்பரங்கள், தட்டி போர்டுகள் அனைத்தும் பள்ளி, கோயில்கள் இருக்கும் இடங்களில் வைத்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனை வழங்கப் பட வேண்டும்.

12. தேர்தல் பிரச்சாரம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் இருக்கும் பகுதி, வயதானவர்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் அமையக் கூடாது.

13. தேர்வு நேரங்களில் எந்த ஒரு தேர்தலும் அமையாத வண்ணம் தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளல் வேண்டும்...

14. குற்றவாளிகள்,  ஊழல் செய்தவர்கள், ஏற்கனவே போட்டியிட்டு மந்திரியானவர்கள் இவர்கள் போட்டியிட தடை விதிக்கப் பட வேண்டும்...

15. மந்திரிகள் வாங்கும் ஒவ்வொரு சொத்திற்கும் முறையான கணக்கு காண்பிக்கப் பட வேண்டும்...

16. மந்திரிகளின் தவறான போக்கிற்கு துணை போகும் அரசு ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யப் படவேண்டும்...

17. இப்படி உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்....

மேற்படியான திட்டங்கள் சட்டங்களாக வந்தால் நிச்சயம் தற்போது போட்டியிடும் யாரும் போட்டியிட மாட்டார்கள், எல்லோருமே இளைஞர்களாகவே இருப்பார்கள்...ஊழலுக்கு வழியே இருக்காதே!!!!

இப்படி எல்லாம் நடக்குமா? நடக்க விட்டு விடுவார்களா? 

7 comments:

  1. Romba Nalla Irukku. Viduvainkala?

    ReplyDelete
  2. Replies
    1. நடந்தால் நன்றாக இருக்கும்!!!

      Delete
  3. kanavu pol therikirathu.naan solvathu unmaithane.

    ReplyDelete
  4. அமெரிக்காவைப் போல, நம் பிரதமரை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப் பட வேண்டும்.

    Our prime minister is elected directly by the voters.

    ReplyDelete
  5. யாருயா நீ. எங்க பொளப்புலயே கைய வெக்கறயா. இப்டீல்லாம் பெசிட்டு எங்க ஊருக்குள்ள வந்தா திரும்பிப் போவயா - கட்சித் தொண்டாற்றும் அமைச்சர்.

    ஏனுங்க எட்டாம் வகுப்புன்னு ஆக்கிட்டீங்க. கைநாட்டுப் போடாதவராக இருக்கவேண்டும் அப்டீன்னு மாத்திராமுல்ல - உயரத் துடிக்கும் தொண்டன்

    லஞசம் வாங்கி மாட்டிக் கொள்ளும் அரசு ஊழியர்கள் அமைச்சர் தலையிடும் முன்னே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் அப்டீன்னு ஒரு லைனயும் சேத்ருங்க - நாம் ஆத்மி உறுப்பினர்

    கோபாலன்

    ReplyDelete
  6. சரி சரி தூங்குனது போதும் எந்திரிங்க. பஸ்ஸு வந்துருச்சு.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...