பங்காளிங்க..

Tuesday, May 13, 2014

அவா, இவா எல்லாம் எப்படி ஜலத்தை குடிக்க போறா?

ஹார்வார்டு பல்கலைக்கழக அறிவாளிங்க அதாங்க விஞ்ஞானிங்க எல்லாம் புதுசா ஒரு விஷயத்தை ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்கா! இப்போ இருக்கிற இந்த பூலோகத்துக்கு அது ரொம்ப அவசியம்தான்...

என்னது அதுனு யோசிக்கிறீங்களா? பிளாஸ்டிக்கு பதிலா ஒரு பொருளை உருவாக்கி இருக்காங்களாம்....

வர்ற பொருள் எல்லாம் பிளாஸ்டிக்குல தான் உருவாகுது...அதுனால சவுகரியம்தான்...ஆனா உலகம் சுற்றுப்புறச் சூழல் பயங்கரமா மாசடைஞ்சு வருகுது....

நிலத்துல பிளாஸ்டிக் மக்க மாட்டேன்னு அடம்பிடிக்குது....தண்ணியில கரைய மாட்டேங்குது...எரிச்சா வாயுல கலந்து சுவாசக் கோளாறு வருது...

இதை எல்லாம் மாத்துறதுக்கு ஒருத்தன் பிறந்திட்டான் ன்னு சொல்ற மாதிரி சிட்டோசன் ன்னு ஒன்னு புதுசா உருவாக்கிட்டு வருது...

அது என்னா சிட்டோசன்??

சொல்றேன்....ஷ்ரிம்ப் செல்ஸ் னு ஒன்னு அதாவது, 

இறாலோட ஓடு மற்றும் வண்ணத்து பூச்சியோட இறகு இந்த இரண்டையும் வச்சு பிளாஸ்டிக் மாதிரி கனமான ஒரு பொருளை உருவாக்கி அதிலே வெற்றியும் கண்டிருக்காங்க...

இதுல என்ன லாபம்னா இது மண்ணுக்குள்ளே சுலபமா புதைஞ்சிடும், மக்கி போயிடும்..அது மட்டுமில்லாம செடிகளுக்கு நல்ல உரமும் கூட, தண்ணீரிலும் ஈசியா கறைஞ்சிடும், எரிக்கிற அளவுக்கு போகாது...அதான் மண்ணுலதான் சுலபமா மக்கி போகுதே....

அதுனால இதுல கொஞ்சமா கனமா செஞ்சு பிளாஸ்டிக்குக்கு பதிலா பயன்படுத்துற முயற்சியிலே தீவிரமா இருக்காங்க....நல்ல விசயம்தானே...அதுவும் இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமா இருக்கிற நாட்டுல சுற்றுப்புறச் சூழல் ரொம்ப மோசமாகிடுச்சு,  அதுனால இந்தியாவிற்கு இது ரொம்ப முக்கியமான ஒன்று...

அது சரி, இதுல தண்ணி பாக்கெட் வந்தா, தண்ணீ பாட்டில் வந்தா ?????

அவாள்  எல்லாம் கசம், கசம் னு குடிக்க மாட்டா...அப்புறம் அந்த காலம் மாதிரி எல்லாரும் மண் குவளையும், கமண்டலமும் தூக்கிட்டு போவாளோ????


அவாள், இவாள் எல்லாம் கோவிச்சுக்க கூடாது....எல்லா சைவ மக்களுக்கும் இறால் மூலமா உற்பத்தியார பொருள் நு தெரிஞ்சா வருத்தம்தான்....

9 comments:

 1. புதிய தகவல் ....அதெல்லாம் பிரச்சனை இருக்காது ..சாவும்போது வெஜிட்டேரியன் ரத்தமா கேக்க முடியும்?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

   Delete
 2. podarathulam potutu last la அவாள், இவாள் எல்லாம் கோவிச்சுக்க கூடாது....எல்லா சைவ மக்களுக்கும் இறால் மூலமா உற்பத்தியார பொருள் நு தெரிஞ்சா வருத்தம்தான்.... nu podarengalae...

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்யுறது? வேற எப்படி போடலாமுன்னு சொல்லுங்கோ...அப்படியே போட்டிடலாம்...

   Delete
 3. india la evlo per Veg food follow panaranga theriyuma... ethukku 'aval' nu mattum solrenga

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? எனக்கு தெரிஞ்சத நான் போட்டுட்டேன்...அதுமட்டுமில்லாம எல்லா சைவ மக்களும் னு சேர்த்து போட்டிருக்கேனே....இருந்தாலும் சைவம் சாப்பிடுறவா பத்தின தகவலை சொல்லுங்கோ...அதையும் அடுத்த பதிவுல போட்டிடுலாம்....

   Delete
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 5. super good news please foilow save natural

  ReplyDelete
 6. பயோ பிளாஸ்டிக் ..now வாழைபழ தோலில் இருந்து தயாரிப்பு இப்போ கண்டு பிடிச்சாச்சு .

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...